ஆர் ரமேஷ்
தேர்தல் வந்து விட்டது. அரசியல் கட்சிகளினால், நாடு முழுவதும் மதச்சார்பின்மை படாத படுகிறது. பா.ஜ.க. மதவாதக்கட்சி என்று வசைமாரி பொழியப்படுகிறது.
பா.ஜ.க. ஒரு மதச்சார்புள்ள கட்சிதான் என்பதில் யாருக்கும் எள்ளளவு ஐயமும் இல்லை. தீவிர இந்துத்துவா கொள்கையுடைய ஆர்.எஸ்.எஸ். இயக்கப் பின்புலத்தில் இருந்து முகிழ்த்த கட்சி என்பதாலும், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட இந்தியா முழுவதும் ரதயாத்திரை மேற்கொண்டவர்கள் என்பதாலும், தேர்தலின்போதெல்லாம் இந்து மதத்தைக் கட்டிக் காக்க எங்களை ஆட்சியில் அமர்த்துங்கள் என்று அறைகூவல் விடுபவர்கள் என்பதாலும் அவர்களின் மதச்சார்பின்மை குறித்து எப்போதும் கேள்வி எழுந்ததில்லை.
இப்போது நம் மக்கள் உணர வேண்டிய ஒன்று, எது உண்மையான மதச்சார்பற்ற கட்சி ? மதம், ஜாதி முதலான பிற்போக்கு விஷயங்களை அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தாமல், ஜனநாயகத்தின்பால் நம்பிக்கை கொண்டு சகல மதத்தவரையும் சமமாகப் பாவித்து, அவர்களின் பொதுநன்மைக்காக பாடுபடும் கட்சியே மதச்சார்பற்ற கட்சியாகும்.
ஆனால் இவ் விஷயத்தில், இந்திய அரசியல் கட்சிகளின் நிலை என்னவென்றால், ஒரு கட்சி பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தால் அது மதச்சார்புடையது, கூட்டணியிலிருந்து விலகிவந்து விட்டால் மதச்சார்பற்றது என்பதாகும். கொன்றால் பாவம், தின்றால் போச்சு!
இந்தத் தேர்தலில், தமிழகத்தில் திமுக, மதிமுக, பா.ம.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பா.ஜ.கவுக்கு எதிராக மதச்சார்பற்ற கூட்டணி அமைத்துள்ளன.
இவை தவிர, திமுக தலைவர் கருணாநிதி அழைத்தால், மதவாதத்திற்கு எதிராகப் போராடவும், முதல்வர் ஜெயலலிதா அழைத்தால் மதச்சார்பின்மைக்கு எதிராகப் போராடவும் தாங்கள் தயாராக இருப்பதாக அறிவித்த புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு அறிவித்தன. இருவரும் அழைக்காததால் மூன்றாவது கூட்டணி அமைத்துள்ளனர்.
தமிழகத்தில் மதச்சார்பற்ற கூட்டணிக்கு திமுக தலைமை ஏற்றுள்ளது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறியதன் மூலம் திமுகவின் அடிப்படை கொள்கைகளில் ஒன்றான பகுத்தறிவு கொள்கைக்கு மூடுவிழா நடத்த பிள்ளையார் சுழி போட்டார் அறிஞர் அண்ணா. அவர் காட்டிய வழியில் பயணம் செய்வதாகக் கூறும் கருணாநிதி, பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்ததன் மூலம் பகுத்தறிவுக் கொள்கைக்கு ஏறக்குறைய மூடுவிழா நடத்திவிட்டார். இவர் தலைமையிலான திமுக மத்திய அரசில் அங்கம் வகித்தபோதுதான் குஜராத் கலவரம் நடந்தது. ராமர் கோயில் கட்டியே தீருவோம் என்ற அயோத்தியில் முழங்கிவிட்டு, கரசேவகர்கள் ரயிலில் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த ரயில் பெட்டியை முஸ்லீம் அடிப்படைவாதிகள் சிலர் எரித்ததில் கரசேவகர்கள் 40க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதனையடுத்து குஜராத் முழுவதும் மதக் கலவரம் மூண்டது.
இந்தக் கலவரத்தைத் தடுத்து நிறுத்தும் பணியைச் செய்திருக்க வேண்டிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியோ, முன்னோர்கள் செய்த பாவத்தின் பலனை இன்றைய முஸ்லீம்கள் அனுபவிக்கின்றனர் என்று திருவாய் மலர்ந்தார். கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வரத் தவறிய மோடி பதவி விலக வேண்டும் என்று கோராத கருணாநிதி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய அமைச்சரவையிலிருந்து தனது கட்சியினரை விலகச் செய்யாத கருணாநிதி இப்போது அதைச் செய்துள்ளார்.
அதுவும் மக்களவைக்குத் தேர்தல் நடத்த பா.ஜ.க. முடிவெடுத்த பின்பு, தேர்தல் ஆதாயத்திற்காக கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டு, நாங்கள் விலகியது சந்தர்ப்பவாதம் அல்ல என்கிறார். நாமும் நம்புவோம். ஆனால், இப்போது மதச்சார்பற்ற கூட்டணி அமைக்கிறோம் என்கிறார். அவரைப் பொறுத்தவரை, இப்தார் நோன்புக் கஞ்சி இனிக்கும், விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை கசக்கும். மஞ்சள் துண்டையும் மீறி அவ்வப்போது அவர் உதிர்க்கும் பகுத்தறிவுக் கருத்துக்கள், பெரியாரோடு பழகியவர் என்ற கட்டாயத்தால் கூறுபவை. இவருக்கு அடுத்து, திமுகவுக்கு தலைமையேற்கப் போவதாக உடன்பிறப்புகளால் கூறப்படும் அல்லது திணிக்கப்படும் ஸ்டாலின், நாளை கொழுக்கட்டையும் இனிக்கிறது என்று கூறினாலும், கூறலாம். அதுவும் சந்தர்ப்பவாதம் அல்ல என்றே கருதுவோம்.
காவி உடையைக் கழட்டவும் மனமில்லாமல், கருப்பு உடையை விடவும் மனமில்லாமல் குழம்பித் தவித்த வைகோ இறுதியில் கருப்பு உடைக்குள் கலந்து விட்டார். அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை. கலைஞர்தான் இனி நிரந்தரத் தலைவர் என்றும் கூறியுள்ளார். மதிமுக உதித்த வரலாற்றைப் பார்த்தோமென்றால், கருணாநிதியைக் கொல்ல சதி செய்தார் என்ற குற்றச்சாட்டுடன் திமுகவிலிருந்து வைகோ வெளியேற்றப்பட்டார். அதனையடுத்து வைகோவின் அபிமானிகள் 4 பேர் தீக்குளித்தனர். அவர்களின் இறுதிச் சடங்கில் கதறி அழுதவாறே, வைகோ வளுரைத்தது இன்னும் ஞாபகத்திலிருக்கிறது. இந்த வீரர்களின் சாம்பல் மேட்டிலிருந்து எனது புதிய பயணம் தொடங்குகிறது. எவரை எனது தலைவராக இதுவரை பூஜித்து வந்தேனோ, இனி அவரை எதிர்ப்பதே எனது வேலை என்றார்.
அந்த வளுரை என்னவாயிற்று ? பகிரங்கமாகக் குற்றம் சாட்டிய கருணாநிதி, தனிப்பட்ட முறையிலாவது அதற்கு மன்னிப்புக் கேட்டாரா ? தெரியவில்லை.
தேர்தலில் வெற்றி பெற்று, அமைச்சரவையில் இடம் பெறுவது என்ற ஒரே ஒரு உயரிய கொள்கையோடு கட்சி நடத்தி வருகிறார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ். தேர்தல் முன்னும், பின்னும் ஒரு சில அரசியல்வாதிகள்தான் கட்சி விட்டு கட்சி மாறுவார்கள். ஒரு கட்சியே இன்னொரு கட்சிக்கு மாறுவது பா.ம.க. அரசியலுக்கு வந்தபின்புதான்.
கூட்டணியில் சேர்வதிலும், பின்பு விலகுவதிலும் இவர்களும், தில்லுமுல்லு காங்கிரசும், மன்னிக்கவும், திரிணமுல் காங்கிரசும் சளைத்தவர்கள் அல்ல. இம் முறை பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளிவந்ததற்கு டெல்லியில் கொசு கடிக்கிறது என்ற ராதியில் காரணம் சொல்லியிருக்கிறார்கள் பா.ம.கவினர். இந் நிலையில் இவர்களின் மதச்சார்பின்மையைப் பற்றி பேசவும் வேண்டுமா ?
மத்தியில் மதச்சார்பற்றக் கூட்டணிக்குத் தலைமையேற்கும் காங்கிரஸ் ஆட்சியில்தான், பாபர் கோவில் இடிக்கப்பட்டது என்பதை யாரும் மறந்துவிடவில்லை.
இவை தவிர பா.ஜ.கவோடு கூட்டணி வைத்துள்ள அதிமுகவின் மதச்சார்பின்மை பற்றி சொல்லவே தேவையில்லை. மதமாற்றத் தடைச் சட்டம், அசைவம் சாப்பிடக் கூடாது என்று கடவுளர்களுக்கே தடை விதித்தது (தேர்தலுக்காக இதை விலக்கிக் கொண்டது வேறு விஷயம்) மூலம் பா.ஜ.கவிட ஒரு படி முன்னே நிற்கிறது அதிமுக. 1999ம் ஆண்டு ஜெயலலிதா பா.ஜ.க. ஆட்சியை கவிழ்த்ததை, செலக்டிவ் அம்னீஷியா நோய் உள்ள அத்வானியும், செயல்பட முடியாத பிரதமராக உள்ள வாஜ்பாயும் வேண்டுமானால் மறந்திருக்கலாம். அப்போது போயஸ் தோட்டத்து வாசலில் இரண்டு மணி நேரம் காத்திருந்த பிரமோத் மகராஜன் கூடவா மறந்து விட்டார் ?
மொத்தத்தில் மதச்சார்பின்மை என்பது இங்கு தேர்தல் நேர கோஷமே. அத்தகைய கூட்டணி அமைத்து விட்டதாகக் கூறுபவர்கள், முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஒரு இந்துவையோ, இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஒரு முஸ்லீமையோ நிறுத்தட்டும் பார்க்கலாம்.
ஒரு மேல்நாட்டு அறிஞர் சொன்னார், Patriotism is the resort for culprits என்று. இனி அதில் secularismயும் சேர்த்துக் கொள்வோம்.
***
ramesh.r@team.indiainfo.com
- ….நடமாடும் நிழல்கள்.
- நாற்சந்தியில் நாடகம்
- முரண்பாடுகள்
- வணக்கம்
- ரகசியமில்லாத சிநேகிதனுக்கு…
- மேகங்கள்
- நினைவின் கால்கள்
- துளிகள்.
- நிஜக்கனவு
- அம்மா தூங்க மறுக்கிறார்
- ஏழாவது வார்டு
- அந்தி மாலைப் போது
- ‘கவி ஓவியம் ‘
- அவளும்
- கணக்கு
- மின்மீன்கள்
- எங்கே போகிறேன் ?
- சீறும் எனக்குள் சில கவிதைகள் துளியாய்..
- காயப்பட்ட அகதியின் கண்ணீர்க் கசிவு….
- தேர்வு
- அமெரிக்காவில் ஒரு ‘தனுஷ் ‘
- வைரமுத்துவின் இதிகாசம்
- யானை பிழைத்த வேல்
- ஜலாலுத்தீன் ரூமியின் வாழ்க்கைக் குறிப்பு – 02
- கால்வினோ கதைகள் – பிரம்மராஜன் மொழிபெயர்ப்பு- முன்னுரை
- A Mighty Wind (2003)
- கடிதங்கள் மார்ச் 18 2004
- கருத்தரங்கம் – கவியோகி வேதம் அவர்களின் புத்தகம் பற்றி
- Saiva Conference 2004 Youth Forum
- கடிதம் – அரவிந்தன் நீலகண்டன், தலிபன் , ஜெயமோகன் ஸ்ரீதரன் பற்றி
- சாதிப்பிரச்சனையின் ஆழங்கள் (1)
- பதிப்பகங்களா மிதிப்பகங்களா ?
- பிரபஞ்சத்தில் பால்மய வீதி கோடான கோடிப் பரிதிகள் கொண்ட ஒரு விண்வெளித் தீவு (Our Milky Way Galaxy)
- வளரிளமை அல்லது புதுமலர்ச்சிப் பருவம்
- ஜெய்ப்பூரின் செயற்கைக்கால்கள்
- திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 16
- உலகம் : ஒரு பெரிய எழுத்து கதை
- கேண்மை
- நான் ஊட்டிக்கு வரமாட்டேன்..
- ஆத்தி
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐம்பது
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 11
- எதிர்ப்பு
- கனவான இனிமைகள்
- ஒ போடாதே, ஒட்டுப் போடு
- பெண் கவிஞர்களின் மீது விமர்சனம்: சமயத்தளையா ? எந்த சமயத்தளை ?
- நூல் அறிமுகம்: புற்றுநோயை வெல்லுங்கள். ஆசிரியர்: மா.செ.மதிவாணன்
- தமிழினக் காவலர் பில் கேட்ஸ்
- சிந்தனை வட்டம் நியூ ஜெர்ஸி வழங்கும் தமிழ் குறும்பட விழா
- இந்தியா இருமுகிறது!
- வாரபலன் – மார்ச் 18- எழுத்தாணி தொழில், வழக்கு, பெக்கம், சமணச்சிலை, கோடாலித்தைலம்
- தமிழிசையும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் – 1
- அவுட்-சோர்சிங்கும், அரசியல் சதுரங்கமும்
- மதச்சார்பின்மையும், அரசியல் கட்சிகளும்
- ஆண்களுக்கு உத்தியோகம் கொடுக்கக்கூடாது
- தமிழ் எழுத்தாளன் : ஓர் அவல வரலாறு
- முரண்புதிரான சவுதி அரேபியா – பகுதி 1
- பிசாசின் தன்வரலாறு – 1 (நெடுங்கவிதை)
- முற்றுப் பெறாத….
- அன்புடன் இதயம் – 11 – தண்ணீர்
- உயர்வு