ருத்ரா
‘இறந்து போன பூமியா இது ?
கல்லறைத்தோட்டங்களில்
என்ன முளைத்துவிடப்போகிறது ?
எங்கு பார்த்தாலும்
ஆளுயரக் க்கள்ளிகள்.
போலீஸ்காரன் கையைக்காட்டி
போக்குவரத்தை
ஒழுங்குபடுத்துவது போல..
சவமாகி விழுவதில் கூட
நொிசல்கள்..தள்ளு முள்ளுகள்.
நினைவுச் சடலங்களின்
நீள் வாிசையில்..
இங்கு ‘ட்ராஃபிக் ஜாம் ‘.
அந்தக் கைகளில்
ரோமங்களுக்குப் பதில்
முட்கள் .
தினவுகொண்ட
இந்த கூாியமுட்கள்
அந்த நீலவானத்தை
காயப்படுத்தி
வானம் எங்கும் மெளன ரத்தம்.
சிவப்பில் நனைந்த சூாியன். ‘
‘அங்கும் இங்கும்
கல்லின் உருவங்கள்.
கும்பிடுவதற்கு
உயர்ந்த கைகளில் எல்லாம்
புடைப்பதற்கு நரம்புகள் இல்லை.
செத்துப்போன முகங்களை
புதைத்துக்கொண்டு
கைகள் மட்டும் எப்படி இங்கு…. ?
விடைகள் தொிந்துகொள்ள
விரும்பாத வினாக்கள்
எப்படி இங்கு முளத்தன ? ‘
‘சாக்ரடாஸ் ஏந்திய
நஞ்சுக்கோப்பைகளின்
நிழல்கள் பூக்கும்
இந்த கள்ளிக்காட்டுக் கிளைகள்…!
அந்த குச்சியெலும்புகளின்
கூழைக்கும்பிடுகளில்
மயான சாயம்பூசிய
மலைப்பிரசங்கங்கள்.
மண்டையோடுகளைக் குவிக்க
சங்கு ஒலிக்கும்
‘பாஞ்ச ஜன்யங்கள் ‘.
கரப்பான் பூச்சிகளின்
குருட்சேத்திரத்தில்
பல்லிகளின் வியூகங்கள்.. ‘
‘ வழிபாட்டின்
கூப்பாடுகள்..கூவல்கள்..
அவை எல்லாம்
அண்டவெளியில்
கேளா ஒலிக்குப்பைகளின்
ஆயிரம் பின்னல்கள்.
தொலைவில்
கண்சிமிட்டி கண்சிமிட்டி
கரைந்துபோகும்
நட்சத்திரங்களின் கண்காணிப்பில்
இந்த கூக்குரல்கள் எல்லாம்
வானத்தில்
தங்கள் சவக்குழியை
தோண்டிக்கொள்கின்றன. ‘
‘ மரணத்தின் முகத்திற்கும்
மறுபக்கம் உண்டா ?
எல்லைகளை எல்லாம்
தாண்டிய ராஜ்யம்
அந்த ராஜ்யம்.
கனவு விளிம்புகளில்
தினம் தினம்
நனவுகளின் கொடியேற்றம்.
நம்மைச் சுற்றிக்கிடக்கும்
தொப்பூள் கொடியின்
இந்த முனைக்கும்
அந்த முனைக்கும்
நடுவே
உயிாியல் விஞ்ஞானத்தின்
கணித சமன்பாடுகள் நடத்தும்
கயிற்று இழுப்பு போராட்டம்.
அச்சம் எனும் முரசு
நடு நடுங்க ஒலியெழுப்ப
ஆத்மாவின் கீதம்
அங்கு தேசீயகீதம். ‘
‘ திடாரென்று
விழித்துக்கொள்கிறோம்
அந்த நடுநிசியில் கடிகார முட்கள்
ஒன்றோடொன்று விலகிக்கொண்டே
தழுவிக்கொள்கின்றன.
விலுக் விலுக்கென்று
சிலிர்த்துக்கொள்கிறோம்.
பூக்களின் சொட்டு சொட்டாய்
மணித்துளிகள்
நடுங்கிக் கொண்டே உதிர்கின்றன.
முத்தமிட குவியும் உதடுகள்
முணு முணுப்புகளாய்
கரைந்து போகின்றன.
நொறுங்கிக் கிடக்கும்
கல்லுருவங்களை நோக்கி
தொழுதிட
கைகள் குவிகின்றன.
* * * * * * * * * * * * * *
மானுடத்தின்
உள்விசை தேடி
உடுக்கை அடித்துக்கொண்டு
உலா புறப்பட்டவன் டி.எஸ்.எலியட்.
இரண்டாம் உலக யுத்தம்
மனித முகத்தைக்
கிழித்துப்போட்டுவிட்டது.
வறட்டுத்தனமான ஒரு எந்திரத்தனம்
மனிதநேயத்தை
கசாப்பு செய்துவிட்டது.
மனத்தின் பாழ்வெளியில்(waste-land)
உள்ளீடு அற்ற எலும்புக்கூடுகளாய்
இற்றுவிழும்
வெற்றுமனிதர்களை(hollow men)க்கண்டு
உள்ளம் வெதும்பி…
அந்த அவஸ்தைகளின்
ரசம் பிழிந்து
பருகத் தந்தவன் டி.எஸ்.எலியட் !
அவஸ்தைகள் மூன்றுவகை.
அந்த அவஸ்தைகளின் முக்கூட்டுச் சந்திப்பு
எங்கு நிகழ்கிறது ?
உயிாின் முற்றுப்புள்ளியைக்
குறிப்பது அல்ல மரணம்.
உயிரும் உடலும்
நசுக்கிக்கொண்டேயிருக்கிற
அவஸ்தைநிலைகளில்
கடைந்து கடைந்து
கிடைக்கும் அமுதநிலை யை
உங்கள் ‘சுரைக்கூடுகளில் ‘
அடைத்துக்கொள்ளுங்கள்.
அதிலிருந்து ஒரு ஆகாய கங்கையை
சுரக்கச் செய்யுங்கள்.
விழிப்பு எனும் ஜாக்ரதம்
உயிர்-உடம்பிலிருந்து
ஆத்மாவை உாித்துவைத்து
உற்று நோக்குகிறது.
கஞ்சிக்கவலைகளையும்
இன்ப துன்பங்களையும்
தராசு தட்டுகளில் வைத்து
வியாபாரம் செய்கிறது.
இது முதல் அவஸ்தை.
அத்மா எனும் அடி நாதத்தோடு
ஆணி அடித்துக்கொண்டு
கனவு பலூன்களை
உள்மனத்தில் நங்கூரம் பாய்ச்சிக்
கிடக்கும் நிலையே
ஸ்வப்னம் எனும்
இரண்டாவது அவஸ்தை.
கனவையும் நனவையும்
கலந்து கதம்பமாக்கி..அதில்
ஆத்மாவைக்குழைத்து
ஐஸ் க்ாீம் சாப்பிட முயல்வது
ஷுஷுப்தி எனும்
மூன்றாவது அவஸ்தை.
உங்களுக்கு புாியவில்லையா
இந்த மூன்றுஅவஸ்தைகளூம் ?
ஒரே அவஸ்தையில்
அந்த மூன்றுவர்ணக் கலவைகளின்
அவஸ்தையே…காதல்..
இறந்து கொண்டே பிறப்பது..
இறந்துகொண்டே வாழ்வது..
இறந்து கொண்டே ..
மீண்டும் பிறப்பது…என்றால்
என்னவென்று புாிந்துகொண்டிருக்கிறீர்களா.. ?
காதலித்துப்பாருங்கள் !
துாீயம் எனும்
நான்காவது அவஸ்தை
இங்கு ஒரு ‘பாய்ச்சலை ‘க்குறிக்கிறது.
காதல் வழியே பாயும்
உயிாின் மின்சாரம் அது.
கூடு விட்டு கூடு பாயும்
கூடுகளின் பாய்ச்சல் அது.
உள்ளீடு அற்று கூடுகளாகிப்போன
மானிடர்களே !
வாழ்வின் உந்துவிசையாய்
இந்த அவஸ்தைகளைக் கொண்டு
உங்களைத்திணித்துக்கொள்ளுங்கள்.
கற்றாளைக்காட்டின்
அந்த ‘பாலைத்திணையிலும் ‘
வானவில்லே முட்களாகி
வசந்தம் காட்டுவது
உங்களுக்கு புலப்படவில்லையா ?
என்கிறார் எலியட்.
அந்த கற்பாளத்திலிருந்து
ஒரு பெண்ணை செதுக்குங்கள்.
அங்கே
இருக்கின்ற பெண்ணிடம்
இல்லாத காதல்..அல்லது
இல்லாத பெண்ணிடம்
இருக்கின்ற காதல்..
எதுவானாலும்
அதுவே உங்களூக்கு
அர்த்தங்கள் துளிர்க்கின்ற விடியல் !
கள்ளிப்பூக்களிடையேயும்…
காதல் எனும்
கள்ளின் பூக்களும்
மகரந்தம் தூவக்காத்திருக்கின்றன.
புலம்பல்களிடையேயும்
புளகாங்கிதம் கொள்ளும்
தருணங்கள்
இறைந்துகிடக்கின்றன..என்று
காட்டும் சொற்சித்திரம்
எலியட்டின் எழுத்துச்சித்திரம்.
(தொடரும்)
=====================================================ருத்ரா
- புரியவில்லை
- ஐந்து தி.கோபாலகிருஷ்ணன் கவிதைகள்
- இரண்டு கரிகாலன் கவிதைகள்
- பாலமாகி சிறந்து நிற்கும் பணி
- தினம் ஒரு கவிதை – கலந்துரையாடல்
- காலந்தோறும் கலந்துறவாடும் மொழிகள்
- பிரிவினையின் ஞாபகமும், நாவல்களும்.
- குறள்- கவிதையும் நீதியும்
- உசிலி உப்புமா.
- ரவா பொங்கல்
- ஒரு புது அதிவேக கணினி (Supercomputer) கட்ட அமெரிக்க அறிவியல் தளம் பணம் தருகிறது
- உப்பு நிலத்தில் வளமையாக வளரும் மரபணு மாற்றப்பட்ட தக்காளி
- ஒரு தண்ணீர் தண்ணீர் கதை – சுப முடிவுடன்
- வேகவேகமாக வாழ்வு
- ஆறு சேவியர் கவிதைகள்
- விசாரணை
- எதிாியிடம் ஒரு வேண்டுகோள்
- அன்புத்தங்கைக்கு………
- டூக் ரெட்பேர்ட் மற்றும் மெல் டாக் எழுதிய கனேடியக் கவிதைகள்
- சிதைந்த இரவிலொன்று
- டி.எஸ் எலியட்டும் உள்ளீடு அற்ற மனிதர்களும் (3)
- ஒரு பேறு
- திக்குத் தொியாத கட்டடக் காட்டினிலே…
- பாலமாகி சிறந்து நிற்கும் பணி
- பிரிவினையின் ஞாபகமும், நாவல்களும்.
- இஸ்லாமிய அடிப்படைவாதமும் இந்துத்துவமும்
- இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 19, 2001 (ஜெயலலிதா, தி.க, வரவு செலவு, மனித உரிமைகள்)
- வெற்றியும் அதிர்ஷ்டமும்
- முதல் மனிதனும் கடைசி மனிதனும்
- கேட்டால் காதல் என்பீர்கள்…