This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue
விக்ரமாதித்யன் நம்பி
ஒரு பட்டாசு வெடிப்பது போலில்லை மைனா வளர்ப்பது ஒரு சினிமாவுக்குப் போவது மாதிரி அல்ல முயல் வளர்ப்பது நாய்வளர்ப்பது ஒரு சர்க்கஸ் பார்ப்பதொப்ப கிடையாது நிச்சயம் பசுவளர்ப்பதென்ன ஒரு டிராமா காண்பது அன்னவா என்ன
இதிகாச நாயகர்கள் யாரும் எதையும் வளர்த்ததாகத் தெரியவில்லை
மாதவி கிளி வளர்த்திருப்பாளாய் இருக்கும்
கண்ணகி என்ன வளர்த்திருக்கக் கூடும்
பாடிக்கொண்டே போன ஒளவை கவிதைதான் வளர்த்தியிருக்கிறாள்
பாண்டியர்கள் தமிழும் சைவமும் வளர்த்தார்கள்
தேவாரம் பாடிய மூவர் திருமூலர் மணிவாசகர் எல்லோரும் வளர்த்தெடுத்தது சைவமும் தமிழும்தாம்
சிலம்பில் வளர்ந்த தமிழ் சிந்தாமணியில் வளர்ந்த தமிழ் ஆதிசங்கத்தில் திமிர்ந்துநின்ற தமிழ்
ஆண்டாளிடம் பூத்துப் பொலிந்த தமிழ்
பாரதியிடம் பொங்கி வந்த தமிழ் கண்ணதாசனிடம் களைகட்டி நின்ற தமிழ்
மலைகள் வளர்கின்றன மான்கள் வளர்கின்றன முலைகள் வளர்கின்றன முத்தங்கள் வளர்கின்றன பிள்ளைகள் வளர்கிறார்கள் பெண்கள் வளர்கிறார்கள் கவிஞர்கள் வளர்கிறார்கள் கலைஞர்கள் வளர்த்தெடுக்கிறார்கள்
This entry is part [part not set] of 42 in the series 20031030_Issue

****************************************************** கொஞ்சம் தள்ளிப்போனால்
விக்ரமாதித்யன் நம்பி
சிட்டுக்குருவிகள் புணர்வதை பார்த்திருக்கக்கூடும் நீங்கள் அணில்கள் போகம் செய்வதும் கண்ணில் பட்டிருக்கலாம் எப்பொழுதாவது பூனைகள் கூடுவது கொஞ்சம் பகிரங்கமானது ஜீவராசிகள் சேர்வது சாலவும் இயல்பானது பின்னே எப்படி நவீனகவிதையில் இல்லாமல் போயிற்று
கடைதிறப்பு படிக்காது கவிதை எழுதுகிறார்கள் ஆண்டாள் பாசுரம் அறியாது பாலியல் பேசுகிறார்கள் சங்கம் தெரியாது இலக்கியம் செய்கிறார்கள்
என்னேடா என்னேடா இலண்டனும் பாரிஸ்உமா தமிழ்க்கலைஞன் லட்சியம் மானஸரோவர் இருக்கிறது தேக்கடி இருக்கிறது மைசூர் காடுகள் முக்கடல் சங்கமம் இன்னும் நிறையவே
இவைதெரியாது என்ன எழுதுவாய்
கண்டதும் கொஞ்சம் கேட்டதும் குறைவு கற்றதும் சிறிது கவனிப்பதும் அபூர்வம் பின்னே எப்படி எழுத வரும்
ஸ்தலபுராணக்கதைகள் அளவுக்குக்கூட சொல்லமுடியாது நவீன இலக்கியத்தை சொலவடைகளின் கவித்துவத்துக்கு கிட்டேவராது இன்றைய கவிதை தென்னாட்டுப் பழங்கதைகளே தேவலை நவீன சிறுகதைகளைக் காட்டிலும் தினத்தந்தியில் காணும் தமிழ்வாழ்வுகூட சமகால எழுத்தில் இல்லாமல் போனதேன்
தெருவில் நிற்கிறது தேர் நிலையத்திலிருந்து வெளிக்கிளப்பி வடம்பிடித்து இழுத்து வந்து இரதவீதிகளில் வலம் வரவைத்து பக்தர்களுக்குக் காட்சி தரச்செய்து எல்லாம் முடிந்து இன்னமும் நிலைக்குக் கொண்டுவந்து சேர்க்காது நிற்கிறது தேர் நடுத்தெருவில்
புறப்பட்டு வந்த அன்று இருந்த உற்சாகம் இன்று இல்லை ஜனங்களுக்கு என்று நிலைக்கு வந்து சேருமென்று யாராலும் சொல்ல முடியவில்லை தேர் தெருவில் நிற்கிறது
இதோ இங்கே இருக்கிற கங்கைகொண்ட சோழபுரத்துக்கு இன்னும் போகமுடியவில்லை திருநாளைப் போவார் கதைபோல தொடர்கிறது இவன் போவது இராஜராஜன் கட்டியபிறகு இராஜேந்திரன் கட்டவேண்டிய அவசியமென்ன ஐயா சொல்லிக்கொடுத்த வழியா ஐயாவைத் தாண்டி நிற்க வேண்டுமென்ற வெறியா அப்படியெல்லாம் இருக்காதுதான் அதுபோல இருந்தால் அப்பாவை மாதிரியே கட்டியிருக்குமா பிள்ளை அப்பன் மகன் உறவு ஆதியிலிருந்தே சிக்கல்தான் அப்பாக்கள் பிள்ளைகள்மீது எந்நாளும் ஒரு கண்ணாகவே இருக்கிறார்கள் பிள்ளைகளோ அப்பாவின் ஆவியை ஆவாஹனம் செய்துவைத்துக் கொள்கிறார்கள் பிருகதீஸ்வரரை வந்து வழிபட நாளும் ஒரு நானூறு பேராவது தேறுவார்கள் நாதியற்றுப் போய்க் கிடக்கிறதாம் இராஜேந்திரன் எழுப்பிய கோயில் படையெடுத்து வெற்றிகொண்ட பின்னே வந்த பவிகில் நிர்மாணித்த கோயிலது ஒரு காலத்திய வெற்றிகள் இன்னொரு காலத்தில் இப்படியாகுமோ
பாதங்களுக்குக் கீழ் பூமி ஏறிட்டுப் பார்த்தால் வானம் காற்று வீசுகிறது உலைத்தீ எரிகிறது கொண்டல்கள் கொட்டுகின்றன பூமி தந்துகொண்டேயிருக்கிறது சூரியனோ சந்திரனோ வானத்தில் நட்சத்திரங்கள் சுடர்விட்டதும் சாப்பிட்டுவிட்டுத் தூங்கலாமே பாப்பா நமக்கென்ன பிரச்னை வேறே
மலை வளரும் என்கிறார்கள் நம்ப முடியவில்லை கடல்கொண்டது என்கிறார்கள் நம்ப முடியவில்லை வெள்ளம் வந்து அழித்தது என்பார்கள் நம்பத்தான் வேண்டியிருக்கிறது தீ அழித்தது எத்தனையோ என்பார்கள் சூறாவளி இழப்பு என்பார்கள் தெரியும்
எந்தப் பக்கமாய் விலகியிருக்கும் இடதுபுறமா வலதுபுறமா எப்படி இருந்த இடத்திலிருந்து எழுந்து இன்னோரிட்டத்தில் அமர்வது மெனக்கிடவில்லையோ நந்தனிடமிருந்து சிவனை மறைத்துக்கொண்டிருந்த குற்றவுணர்வு தோன்றியிருக்கக் கூடுமோ அப்பொழுது
ஆதிதிராவிடர்களைக் கோயிலுக்குள் விடாததுகுறித்து நந்தியெம்பிரான் என்ன கருதியிருப்பார் அன்று