ஆரம்பம்

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

செண்பக ஜெகதீசன்


குற்றமில்லாக் குழந்தை
குதூகலிக்க
கொடுக்கிறோம் இனிப்பு..
ஆரம்பம் இதுதான்-
அது வளர்ந்து கைநீட்டி
அதிக லஞ்சம் கேட்க..
அரசியலில் சேர்ந்து
அனைவரையும் ஏய்க்க..
ஆன்மீக குருவாகி
ஆசிகள் வழங்கி
ஆசையில் கொஞ்சி
அகப்பட்டுக்கொள்ள..
ஆன பலவற்றிற்கும்
அடிப்படை இதுதான் !

Series Navigation

செண்பக ஜெகதீசன்

செண்பக ஜெகதீசன்