ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 இறுதிப் பாகம்.

This entry is part [part not set] of 26 in the series 20100620_Issue

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

“படைவீரர்களே ! நீங்கள் துவங்கப் போகும் இந்த தேச ஆக்கிரமிப்பால் நேரப் போகும் உலக நாகரீகப் பாதிப்பு, வர்த்தகப் போக்குகளின் மாற்றம் எண்ணிப் பார்க்கவே முடியாது. இங்கிலாந்து படை மீது நீங்கள் கொடுக்கும் அடி அதன் மென்மையான இடத்தில் நிச்சயம் காயப்படுத்தி விடும். விடிவதற்குக் காத்திருக்கும் போது நீங்கள் அதற்கொரு சாவு மணியை அடிப்பீர்.”

நெப்போலியன் (எகிப்து படையெடுப்பு) (1798)

“படைவீரர்களே ! நாம் பிடித்திருக்கும் இடங்கள் யாராலும் கைப்பற்ற முடியாதவை. ரஷ்யர்கள் நமது படை அணிகளை எதிர்த்து வரும் போது அவரது படைகளை நான் முன்னின்று தாக்குவேன். எல்லா போர்ப்படை அணிவகுப்பையும் நானே நேரிடையாக வழிநடத்துவேன். உங்களுக்கு தைரியம் உறுதி அளித்துப், பகைவர் அதிகாரப் பதவிகளுக்குள் நீங்கள் குழப்பம், கொந்தளிப்பு ஏற்படுத்தி, வெற்றி கிடைப்பது ஒருகணம் உறுதியற்றுப் போகாதது வரை, நான் விலகித் தூரத்தில் நிற்பேன்.

எவரும் காயமடைந்தோரைத் தூக்கிச் செல்லும் பாவனையில் போர்ப்படை அணிகளை விட்டு நீங்கக் கூடாது. நமது தேசத்தை அறவே வெறுக்கும் இங்கிலாந்தின் கூலிப் படைகளைத் தாக்கி வெற்றி அடைவது மிக முக்கியமானது என்று ஒவ்வொருவர் உள்ளத்திலும் சிந்தனைகள் நிரம்ப வேண்டும்.”

நெப்போலியன் (ரஷ்யப் படையெடுப்பு) (1805)

“படைவீரர்களே ! இதுதான் நீங்கள் பேரளவு ஆசைப்பட்டு எதிர்பார்த்த போர். ஆதலால் இதுமுதல் வெற்றி உமது தாக்குதலைச் சார்ந்தது. ஆம் வெற்றி நமக்குத் தேவை.”

நெப்போலியன் (1812)

ஆயுத மனிதன் நாடகத்தைப் பற்றித் துவக்க அறிவிப்பு :

1796 மே மாதத்தில் வட இத்தாலியில் லோதிக்கும் மிலானுக்கும் இடையே உள்ள தஸ்ஸானோ என்னும் இடத்தில் பிரென்ச் இராணுவப் படைக்கும், ஆஸ்டிரியன் இராணுவத்துக்கும் நடந்த போரில் நெப்போலியன் தனது அசுரப் பீரங்கிகளைப் பயன்படுத்தி ஆஸ்டிரியப் படைகளைத் தோற்கடித்தான். அப்போது நெப்போலியனுக்கு வயது 27. அந்த வாலிப வயதில் பீரங்கிகளை முதலில் ஆயுதமாக ஏந்திப் பராக்கிரம பீரங்கி யுத்தம் செய்து இத்தாலியை விடுதலை நாடாய் ஆக்கியவன் பிரெஞ்ச் சக்ரவர்த்தி நெப்போலியன் ! நாடக ஆரம்பத்தில் பிரான்ஸி லிருந்து வரும் அரசாங்கத் தகவல் கடிதங்களை எதிர்நோக்கி நெப்போலியன் அவனது பிரதம படைத் தளபதிகளுடன் தஸ்ஸானோவில் பழையப் பயண விடுதி ஒன்றில் தங்கி இருக்கிறான். அவனது லெ•ப்டினென்ட் அந்தக் கடிதங்களைக் அன்றைக்குக் கொண்டு வர வேண்டும். ஆனால் வரும் வழியில் சந்தித்த ஓர் இளைஞன் குதிரையையும், கடிதங்களையும் லெ•ப்டினென்டிடமிருந்து தந்திரமாய்க் களவாடிச் சென்று விட்டான் !

அன்று காலையில் மர்மாக ஓரிளம் பெண் அந்த விடுதிக்கு வந்து தங்குகிறாள்.

நாடகத்தில் பங்கெடுப்பாளர் :

1. நெப்போலியன் (Napolean Bonaparte) : பிரான்சின் போர் ஜெனரல் (27 வயது)

2. கியூஸெப் கிராண்டி (Guiseppe Grandi) : இத்தாலிய பயண விடுதி அதிபர் (Innkeeper) (40 வயது)

3. பிரென்ச் லெ•ப்டினென்ட் : (24 வயது)

4. ஹெலினா : ஓர் ஆஸ்டிரியப் பெண் (30 வயது)

காலம் / நேரம் : மே மாதம் 12, 1796 காலை நேரம்.

இடம் : வட இத்தாலியில் தவஸ்ஸானோ (Tavazzano on the Road od from Lodi to Milan) ஊரில் உள்ள ஒரு உணவுச் சாவடி (பயண விடுதி)

ஆரம்பக் காட்சி :

(விடுதி அதிபர் கியூஸெப் கிராண்டி பரவசமோடு பரப்பரபாக அங்குமிங்கும் ஓடி நெப்போலியனையும், அவனது படைத் தளபதிகளையும் உபசரிக்கிறான். அவர்கள் விடுதி மேஜைகளில் உள்ள உணவுப் பண்டங்களைத் தின்றுக் கொண்டிருக்கிறார். ஒரு மேஜைக்கு முன் நெப்போலியன் அமர்ந்திருக்கிறான். மேஜையில் ஐரோப்பிய வரைப்படம் ஒன்று விரிக்கப் பட்டுள்ளது. எதிர்ப்புறம் தூரத்தில் ஓர் இளம் பெண் முதல் முறையாக நெப்போலியனை நோக்குகிறாள். படத்தைப் பார்த்த வண்ணம் பசி பொறுக்காமல் மேஜை உண்டிகளை வேகமாய் எடுத்து விழுகிறான் நெப்போலியன். மேஜையில் அறுசுவை உணவுத் தட்டுகள் பல பரப்பிக் காணப் படுகின்றன. பழத் தட்டுகளில் கருந் திராட்சைக் கொத்துக்கள் சிறப்பு விருந்தினருக்கு வைக்கப் பட்டுள்ளன. இடையிடையே நெப்போலியன் திராட்சைக் கொத்துக்களை வாயில் தள்ளுகிறான். நெப்போலியன் தொப்பியும், உடைவாளும் மேஜை மீது தெரிகின்றன. கையில் ஒரு கரித் துண்டை வைத்துக் கொண்டு நெப்போலியன் வரைப்படத்தில் அங்குமிங்கும் வட்டமிடுகிறான். வாயிலிருந்து திராட்சைத் தோலை எடுத்துப் படத்தில் ஒட்டுகிறான். நெப்போலியன் எதிர்பார்த்த இராணுவப் படையாளி (லெ•ப்டினென்ட்) பாதையில் தகவல் கடிதங்களைப் பறிகொடுத்துத் தாமதமாக வந்து அவருக்குக் கோபத்தை உண்டாக்குகிறான்.

உள்ளே நுழைந்த இராணுவ அதிகாரி நெப்போலியனைத் தேடி அருகில் வருகிறான். வயது 24 உள்ள வாலிபன். இராணுவ உடையில் இருக்கிறான். பரபரப்பாகத் தடுமாறிய நிலையில் தயங்கிக் கொண்டு குற்ற உணர்வுடன் முன் வருகிறான். வரும் வழியில் ஒர் வஞ்சகனிடம் தன் குதிரை, கடிதங்களைப் பறிகொடுத்து நெப்போலியன் கோபத்துக்கு ஆளாகிறான். ஒற்று வேலை செய்யும் வாலிப மங்கையிடமிருந்து அரசாங்கக் கடிதங்களைப் பெற நெப்போலியன் முயற்சி செய்கிறான். அந்த முயற்சியில் இறுதியில் கடிதங்களைப் பெற்று கொள்கிறான். பிறகு லெ•ப்டினென்டை எழுப்பி அரசாங்கக் கடிதங்களைக் களவாடிய கள்வனைப் பிடித்து வர அனுப்புகிறான்.)

(முன் வாரத் தொடர்ச்சி)

நெப்போலியன்: ஓ ! உன் அன்னை ஓர் ஐரிஸ் மாதா ? நான் மறந்து போனேன் ! ஓர் ஆங்கில இராணுவத்தை வழி நடத்துவது ஓர் ஐரிஸ் ஜெனரலா ? மெச்சுகிறேன் ! அது பிரென்ச் இராணுவத்தை ஓர் இத்தாலிய ஜெனரல் நடத்துவது போலிருக்கும் !

அதிகாரி: ஜெனரல் ! உமக்கு போர்த் தொழில் தவிர வேறென்ன தெரியும் ? ஆயுதம் ஏந்தி அண்டை நாட்டை மிரட்டி அவரை ஆதிக்கம் செய்வதே உமது தொழில் ! பிற நாட்டாரைச் சீண்டுவதே உமது பிழைப்பாக இருக்கிறது ! நிம்மதியாக அவரை வாழ விடாது உமது ஆட்சி வலுவை அவர் மீது திணிக்க வேண்டுமா ? ஆங்கிலேயரை வர்த்தகக் கூட்டம் என்று திட்டுகிறீர் ! வர்த்தகராகிக் காலூன்றி மதத்தைப் பரப்பும் கர்த்தராகி மாறி விடுகிறார் ஆங்கிலேயர் ! பின்னர் நாட்டைக் கைப்பற்றி மன்னர் ஆகிறார். உமக்கும் அவருக்கும் ஒரே வேலைதான் ! போரில் பீரங்கிகளை வெடித்து நீவீர் அன்னிய தேசங்களை வீழ்த்துகிறீர்.

நெப்போலியன்: இந்தியாவிலிருந்து பிரிட்டனை விரட்டி பிரென்ச் கொடியை ஆங்கே நாட்ட வேண்டும் ! என் மூளை அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டுள்ளது. சூயஸ் கால்வாய் வெட்டும் திட்டத்தைத் துவங்க வேண்டும். அதற்காக முதலில் எகிப்து மீது படையெடுத்து அதைக் கைப்பற்ற வேண்டும். எகிப்து பிரென்ச் கைவசம் ஆனதும் எனது மாபெரும் சூயஸ் கால்வாய்த் திட்டம் வெற்றிகரமாக, வேகமாக முடியும்.

அதிகாரி: ஜெனரல் ! நானொரு திட்ட அதிகாரி அல்லன். போர்த் திட்ட மிடுவது என் தொழில்முறை இல்லை. ஆனால் நானொன்று கேட்கிறேன் : உண்ணும் போதும்,, உலாவிடும் போதும், உறங்கிடும் போதும் ஆயுதத்தைப் பக்கத்தில் வைத்துதான் வேலை செய்வீரா ? வாளில்லாத ஜெனரல் என்ன செய்வார் ? போர்க்களத்தை விட்டு ஓடுவாரா ? அல்லது வேறென்ன செய்வார் ?

நெப்போலியன்: போரில் ஓடுபவனைச் சுட்டுக் கொல்வேன் நான் !

அதிகாரி: நீவீர் தோற்று ஓடும் காலம் வரும் ! அப்போது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடுவீர் ! அப்போது உம்மைச் சுட்டுத் தள்ளுபவர் யார் ?

நெப்போலியன்: நான் எந்தப் போரிலும் தோற்ற தில்லை ! எந்தப் போரிலும் தோற்று ஓடுவதில்லை ! என்னைக் கொல்லும் புல்லட் இன்னும் உருவாக்கப் பட வில்லை ! நான் ஐரோப்பியச் சக்ரவர்த்தி ஆவேன் ! ஆசியச் சக்ரவர்த்தி ஆவேன் ! அவை என் நெடுங்காலக் கனவுகள்.

அதிகாரி: இப்போது நீவீர் ஆயுதம் ஒன்றுமில்லாத வெற்று மனிதன் !

நெப்போலியன்: யார் சொன்னது ? நான் ஓர் ஆயுத மனிதன் ! உலக நாடுகளின் விதியை நிர்ணயம் செய்யும் ஊழ்விதி மனிதன் நான் !

அதிகாரி: என் கண்களுக்குத் தெரிவது இதுதான் : நீவீர் ஆயுத மில்லாத வெற்று மனிதன் இப்போது !

நெப்போலியன்: இதோ என் உடைவாள் ! (இடுப்பைச் சுற்றித் தடவுகிறான். வாள் உறையைக் காணவில்லை) ஆ ! எங்கே என் வாள் ? (அங்குமிங்கும் தேடுகிறான், வாளைக் காணாது தடுமாடுகிறான்)

அதிகாரி: (அழுத்தமாக) ஆம் ஜெனரல் ! உமது வாள் இப்போது உன்னிடம் இல்லை !

நெப்போலியன்: (அலறிக் கொண்டு) கியூஸெப் ! எங்கே என் வாள் ? மேஜையில்தான் வைத்தேன் ! யாரோ திருடி விட்டார் ! அந்த மாயக்காரியாக இருக்கலாம் ! தேடிப்பார் கியூஸெப் !

அதிகாரி: (தன் உடை வாளை உருவி) ஜெனரல் ! இதோ என் கையில் உள்ளது வாள் ! இப்போது நான்தான் ஆயுத மனிதன் ! நான் நினைத்தால் இப்போது உம்மைச் சிறைப் படுத்தலாம் ! ஏன் வாளால் கொன்று விடலாம் !

நெப்போலியன்: (நடுநடுங்கி) (அங்குமிங்கும் நடந்து வாளைத் தேடுகிறான்.) கியூஸெப் ! எங்கே எனது உடைவாள் ? பதிலைக் காணோம் ! எங்கே இருக்கிறாய் ?

அதிகாரி: ஒற்றனாகிய நான் இப்போது உம்மைக் கொல்ல விரும்புகிறேன் ! உன்னைக் கொல்வதால் பிரிட்டன் பிழைத்துக் கொள்ளும் ! ரஷ்யா பிழைத்துக் கொள்ளும் ! எகிப்து பிழைத்துக் கொள்ளும் ! இந்தியா பிழைத்துக் கொள்ளும் ! (நெப்போலியனை நெருங்குகிறான்)

நெப்போலியன்: (பயத்தோடு) வேண்டாம் ! என்னை விட்டு விடு ! (அலறிக் கொண்டு) கியூஸெப் ! என் உயிருக்கே ஆபத்து ! எங்கே எனது வாள் ? கியூஸெப் !

அதிகாரி: நீங்கள் ஊழ்விதி மனிதனா ? நீங்கள் ஆயுதம் இழந்த காயித மன்னன் ! குறைபாடு நிறைந்த மனிதன் ! உம்மை உயிருடன் விடக் கூடாது !

நெப்போலியன்: கியூஸெப் ! கியூஸெப் ! உடைவாளைக் கொண்டு வா ? மேஜையில் நான் தூக்கிப் போட்ட வாளை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய் ? (நெப்போலியன் வேகமாக உள்ளே ஓடுகிறான்)

அதிகாரி: ஊழ்விதி மனிதன் படும்பாடு பரிதாபமாய் உள்ளது ! நெப்போலியனைத் துடிக்க வைத்து விட்டேன் ! என் வேலை முடிந்து விட்டது ! நான் போகிறேன் ! (அதிகாரி சட்டென வெளியேறுகிறான்)

(உள்ளே இருந்து நெப்போலியன் குரல் கேட்கிறது. கியூஸெப் ! வாள் எங்கே ? என் உடைவாள் எங்கே ?)

(முற்றியது)

***************************

தகவல் :

Based on The Play :

(A) The Man of Destiny – Plays Pleasant By : Bernard Shaw, Penguin Plays (1966)

(B) The Life & Times of Napoleon -Curtis Books (1967)

(C) The Horizon Book of The Age of Napoleon (1963)

(D) The Age of Napoleon By : Alistair Horne (2004)

(E) Call To The Arms – Great Military Speeches By : Julian Thompson (2009)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 15, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -8

This entry is part [part not set] of 31 in the series 20100312_Issue

ஆங்கில மூலம் : ஜியார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

Fig. 1
Image of Napoleon

“மதம் என்பது கற்பனையில் வந்த ஓர் ஊசி மருந்து (Vaccine of Imagination) ! அம்மருந்து அறிவுக்கு ஒவ்வாத ஆபத்தான நம்பிக்கைகளிலிருந்து காப்பாற்றுகிறது. அறைகுறை அறிவுள்ள ஒரு குரு ஊழியம் செய்யும் ஒருவனை இந்த வாழ்வு வெறும் பயணம் தவிர வேறில்லை என்று சொல்லும் அளவுக்குத் திறமை பெற்றுள்ளான். நன்னம்பிக்கையை மாந்தரிடமிருந்து நீக்கினால்
முடிவாக வழிப்பறிக் கொள்ளைக்காரரை நீ உருவாக்குவாய்.”

நெப்போலியன் (Declaration at the Council of State) (1804)

“நாங்கள் எதிர்பார்த்ததற்கு மேலாகச் சாதித்து விட்டோம். பிரான்சுக்கு ஓர் அரசனை நிலைநாட்ட நினைத்தோம். ஆனால் நிலைபெற்றவர் ஒரு சக்ரவர்த்தி.”

ஜார்ஜெஸ் கடவ்தால் (Georges Cadoudal, Royalist Conspirator)

ஆயுத மனிதன் நாடகத்தைப் பற்றித் துவக்க அறிவிப்பு :

1796 மே மாதத்தில் வட இத்தாலியில் லோதிக்கும் மிலானுக்கும் இடையே உள்ள தஸ்ஸானோ என்னும் இடத்தில் பிரென்ச் இராணுவப் படைக்கும், ஆஸ்டிரியன் இராணுவத்துக்கும் நடந்த போரில் நெப்போலியன் தனது அசுரப் பீரங்கிகளைப் பயன்படுத்தி ஆஸ்டிரியப் படைகளைத் தோற்கடித்தான். அப்போது நெப்போலியனுக்கு வயது 27. அந்த வாலிப வயதில் பீரங்கிகளை முதலில் ஆயுதமாக ஏந்திப் பராக்கிரம பீரங்கி யுத்தம் செய்து இத்தாலியை விடுதலை நாடாய் ஆக்கியவன் பிரெஞ்ச் சக்ரவர்த்தி நெப்போலியன் ! நாடக ஆரம்பத்தில் பிரான்ஸிலிருந்து வரும் அரசாங்கத் தகவல் கடிதங்களை எதிர்நோக்கி நெப்போலியன் அவனது பிரதம படைத் தளபதிகளுடன் தஸ்ஸானோவில் பழையப் பயண விடுதி ஒன்றில் தங்கி இருக்கிறான். அவனது லெ·ப்டினென்ட் அந்தக் கடிதங்களைக் அன்றைக்குக் கொண்டு வர வேண்டும். ஆனால் வரும் வழியில் சந்தித்த ஓர் இளைஞன் குதிரையையும், கடிதங்களையும் லெ·ப்டினென்டிடமிருந்து தந்திரமாய்க் களவாடிச் சென்று விட்டான் !

அன்று காலையில் மர்மாக ஓரிளம் பெண் அந்த விடுதிக்கு வந்து தங்குகிறாள்.

Fig. 2
Napoleon & Young Lady

நாடகத்தில் பங்கெடுப்பாளர் :

1. நெப்போலியன் (Napolean Bonaparte) : பிரான்சின் போர் ஜெனரல் (27 வயது)

2. கியூஸெப் கிராண்டி (Guiseppe Grandi) : இத்தாலிய பயண விடுதி அதிபர் (Innkeeper) (40 வயது)

3. பிரென்ச் லெ·ப்டினென்ட் : (24 வயது)

4. ஹெலினா : ஓர் ஆஸ்டிரியப் பெண் (30 வயது)

காலம் / நேரம் : மே மாதம் 12, 1796 காலை நேரம்.

இடம் : வட இத்தாலியில் தவஸ்ஸானோ (Tavazzano on the Road od from Lodi to Milan) ஊரில் உள்ள ஒரு உணவுச் சாவடி (பயண விடுதி)

ஆரம்பக் காட்சி :

(விடுதி அதிபர் கியூஸெப் கிராண்டி பரவசமோடு பரப்பரபாக அங்குமிங்கும் ஓடி நெப்போலியனையும், அவனது படைத் தளபதிகளையும் உபசரிக்கிறான். அவர்கள் விடுதி மேஜைகளில் உள்ள உணவுப் பண்டங்களைத் தின்றுக் கொண்டிருக்கிறார். ஒரு மேஜைக்கு முன் நெப்போலியன் அமர்ந்திருக்கிறான். மேஜையில் ஐரோப்பிய வரைப்படம் ஒன்று விரிக்கப் பட்டுள்ளது. எதிர்ப்புறம் தூரத்தில் ஓர் இளம் பெண் முதல் முறையாக நெப்போலியனை நோக்குகிறாள். படத்தைப் பார்த்த வண்ணம் பசி பொறுக்காமல் மேஜை உண்டிகளை வேகமாய் எடுத்து விழுகிறான் நெப்போலியன். மேஜையில் அறுசுவை உணவுத் தட்டுகள் பல பரப்பிக் காணப் படுகின்றன. பழத் தட்டுகளில் கருந் திராட்சைக் கொத்துக்கள் சிறப்பு விருந்தினருக்கு வைக்கப் பட்டுள்ளன. இடையிடையே நெப்போலியன் திராட்சைக் கொத்துக்களை வாயில் தள்ளுகிறான். நெப்போலியன் தொப்பியும், உடைவாளும் மேஜை மீது தெரிகின்றன. கையில் ஒரு கரித் துண்டை வைத்துக் கொண்டு நெப்போலியன் வரைப்படத்தில் அங்குமிங்கும் வட்டமிடுகிறான். வாயிலிருந்து திராட்சைத் தோலை எடுத்துப் படத்தில் ஒட்டுகிறான். நெப்போலியன் எதிர்பார்த்த இராணுவப் படையாளி (லெ·ப்டினென்ட்) பாதையில் தகவல் கடிதங்களைப் பறிகொடுத்துத் தாமதமாக வந்து அவருக்குக் கோபத்தை உண்டாக்குகிறான்.

உள்ளே நுழைந்த இராணுவ அதிகாரி நெப்போலியனைத் தேடி அருகில் வருகிறான். வயது 24 உள்ள வாலிபன். இராணுவ உடையில் இருக்கிறான். பரபரப்பாகத் தடுமாறிய நிலையில் தயங்கிக் கொண்டு குற்ற உணர்வுடன் முன் வருகிறான். வரும் வழியில் ஒர் வஞ்சகனிடம் தன் குதிரை, கடிதங்களைப் பறிகொடுத்து நெப்போலியன் கோபத்துக்கு ஆளாகிறான். ஒற்று வேலை செய்யும் வாலிப மங்கையிடமிருந்து அரசாங்கக் கடிதங்களைப் பெற நெப்போலியன் முயற்சி செய்கிறான்.)

(முன் வாரத் தொடர்ச்சி)

Fig. 3

Young Spy Woman

நெப்போலியன்: (வெடுக்கென) மறுபடியும் என்னிடம் பொய் பேசுகிறாய் பெண்ணே ! பயத்தைப் பற்றி நான் சொல்கிறேன். போரில் பயப்படாத மனித ஆத்மாவே இல்லை. என் கடிதங்களை இரட்டையர் நீவீர் ஒளித்து வைத்து ஒரு சிங்கத்தோடு விளையாடுகிறீர் ! எனக்குப் பயங்காட்ட என் பகைவர் உம்மை அனுப்பியுள்ளார் ! உலக மெங்கும் நிலவிடும் ஆவேச உணர்ச்சி ஒன்றே ஒன்று ! அதுதான் பயம் என்பது ! ஒருவனிடம் உள்ள ஆயிரக் கணக்கான பண்பாடுகளில் உறுதியாக ஓர் இராணுவ முரசடிக்கும் சிறுவனும், என்னைப் போலவே, பயத்தோடுதான் உள்ளான் ! அந்தப் பயமே அவனைப் போரிடத் தூண்டும் ! அக்கறையின்மையே அவரை ஓட வைக்கிறது ! போரை நடத்தும் உந்து விசையே பயம்தான் ! பயம் ! பயமென்றால் நான் அறிவேன் ! உன்னை விடப் பயத்தை நான் நன்கு அறிந்தவன் ! பாரிசில் ஒருமுறை பலம் மிகுந்த சுவிஸ் இராணுவத்தினர் குழாம் முழுவதும் படுகொலை செய்யப்பட்டது ஒரு கலவரக் கூட்டத்தால் ! காரணம் நான் பயத்தால் தலையிடாமல் போனது. நானொரு கோழையாய் அப்போது எனக்கே நான் காணப் பட்டேன் ! ஏழு மாதங்களுக்கு முன்னால் அந்த வெட்கக் கேட்டைப் பழிவாங்கினேன், என் பீரங்கியால் அந்தக் கலவரக் கூட்டத்தைத் தூளாக்கி.

ஹெலினா: போர்முனையில் எப்போதும் வாய்திறந்து பேசுபவை உமது பீரங்கிகள் மட்டும்தான் ! மற்றவை யெல்லாம் அவை பின்னால் அணிவகுத்துச் செல்பவை.

நெப்போலியன்: என்னாசைகள் நிறைவேறும் வரை என் பீரங்கிகள் கண்ணை மூடாது ! வாயை மூடாது ! சுழலும் சக்கரங்களும் ஓயாது ! பய உணர்ச்சி மனிதன் விரும்பிடும் எதையாவது அடையாமல் அவனைத் தடைசெய்கிறதா ? வா என்னோடு, உனக்குக் காட்டுகிறேன் ஒரு கிண்ணப் பிராந்தி வெகுமதிக்கு உயிரையே பணயம் வைக்கும் ஓராயிரம் கோழைகளை ! நீ நினைக்கிறாயா பட்டாளத்தில் மனிதனை விட தைரியமுள்ள மாதர் இல்லை என்று ? மாதரின் மதிப்பும் தகுதியும் மனிதனை விட மிகையானது ! பயமில்லாமல்தான் நீயும் உன் இரட்டைத் தமையனும் எங்கள் அரசாங்கக் கடிதங்களைக் களவாடி என்னைத் திண்டாட வைத்தீர் ?

ஹெலினா: (சிரித்துக் கொண்டு) அப்போது நான் தைரியசாலி என்று பாராட்டுகிறீரா ? அல்லது நீங்கள் கோழையாகி விட்டீர் என்று காட்டுகிறீரா ?
நெப்போலியன்: நான் மகா தீரன் என்று சொல்லமாட்டேன் ! மற்றவர் அப்படிச் சொல்லுவதைக் கேட்கும் என் காதுகள் ! அது உண்மையாக இருக்க வேண்டும் ! இல்லாவிட்டால் பிரென்ச் ஏகாதிபத்தியம் இத்தாலி வரை வந்திருக்காது ! நான் இப்போது பயத்தைப் பற்றி உனக்கு விளக்கம் தர முடியாது !

ஹெலினா: நீங்கள் ஒரு தீரர், வீரர், சூரர் ! அதை நான் சொல்வேன் ஆயிரம் முறை ! ஐரோப்பிய வரலாற்றில் மகா அலெக்ஸாண்டருக்குப் பிறகு எழுந்த போர்த் தளபதி நீங்கள்தான் !

நெப்போலியன்: ஆசியாவின் மீதும் எனக்கோர் கண்ணுள்ளது ! அதற்குத்தான் சூயஸ் கால்வாய் வெட்டும் திட்டமும் உருவாகி வருகிறது ! இந்தியாவில் பிரிட்டீஷ் ஆதிக்கத்தை நான் ஒழித்தாக வேண்டும்.

ஹெலினா: நீங்கள்தான் உலகத்தை விடுவிக்க அளிக்க வந்த ஊழ்விதி மனிதர் !
நெப்போலியன்: ஊழ்விதி மனிதன் ! நல்ல பட்டப் பெயர் ! ஆனால் அப்படி ஒருவன் பூமியில் பிறப்பதில்லை !

ஹெலினா: ஆமாம் உதிப்பதில்லை ! ஆனால் உருவாக முடிகிறது ! அசுர வல்லரசுதான் பிறரது தலைவிதியை எழுதி வைக்கிறது ! எப்படி நீவீர் மாவீரராக மாறினீர் ?

Fig. 4
Napoleon’s Cannon War

நெப்போலியன்: எப்படி நான் மாவீரன் ஆனேன் என்பது எனக்குத் தெரியாது. என் படையாட்கள்தான் என்னை வெற்றி வீரனாய் ஆக்கியவர் !

ஹெலினா: இல்லை ! நீங்கள்தான் பச்சை மனிதரைப் படை வீரராய் மாற்றினீர் ! லோதிப் போரில் வெற்றி அடைந்தீர். அந்த வெற்றி உங்களுக்கா ? அல்லது வேறு யாருக்குமா ?

நெப்போலியன்: ஆம் எனக்குத்தான் ! (சற்று சிந்த்தித்து) இல்லை, இல்லை ! பிரென்ச் குடியரசு மக்களின் ஊழியன் நான் ! அந்நாட்டின் பூர்வீக வரலாற்று நாயகர் வைத்த தடத்தில் நடந்து வந்தவன் நான் ! நான் வெல்வது குடிமக்களுக்கு ! என் நாட்டுக்கு ! வெற்றி எனக்காக இல்லை !

ஹெலினா: அப்படியானால் நீவீர் ஒரு பெண்மைத்தன தீரர்தான் !

நெப்போலியன்: (சற்று கோபத்துடன்) என்ன ? பெண்மைத்தனமா ?
ஹெலினா: என்னைப் போல ! (வருத்தமாக) அரசாங்கக் கடிதங்களை நான் அபகரித்தாகச் சொல்கிறீர் ! அப்படியானால் அது நான் எனக்காகச் செய்தேனா ? அல்லது நாட்டுக்காகச் செய்தேனா ?

நெப்போலியன்: உன் வீரத்தைக் காட்ட நீ செய்தது ! உனக்காகச் செய்தது நீ !
ஹெலினா: ஜெனரல் ! உங்கள் கடிதங்களால் தனிப்பட்ட எனக்கு எந்தப் பயனும் உண்டாகாது ! அப்படி அவை எனக்குப் பயன் தந்தால் நான் உங்களைப் பார்க்கத் தைரியமாய் இந்த விடுதிக்கு வந்திருப்பேனா ? எனது தைரியம் ஓர் அடிமைத்தனமே ! எனக்கு அதில் பலாபலன் ஏதுவும் இல்லை !

நெப்போலியன்: (வெறுப்புடன்) அப்படியானால் ஏன் எங்கள் கடிதங்களைப் பறித்துச் சென்றாய் ?

ஹெலினா: கடிதங்களைக் களவாடியன் என் சகோதரன் ! என்னை ஓர் உதாரணத்துக்கு எடுத்துச் சொன்னேன்,

நெப்போலியன்: மறுபடியும் பொய் பேசுகிறாய் பெண்ணே ! எனக்குக் குழப்பத்தை உண்டாக்கி உள்ளூரக் குதூகலம் அடைகிறாய் நீ !

ஹெலினா: ஒருவனை நான் நேசித்தால், அவனும் என்னை நேசித்தால் மட்டுமே நான் துணிந்து எதையும் செய்வேன் ! தைரியமாய்ச் செய்வேன் ! பொய் சொல்வேன் ! வஞ்சம் செய்வேன் ! ஆனால் உண்மை சொல்வேன் பொய்யை மறைக்க !

நெப்பொலியன்: இல்லை பெண்ணே ! பொய் சொல்கிறாய் நீ உண்மையை மறைக்க ! நீ சொல்வது எது உண்மை, எது பொய்யென்று என்னால் அறிய முடியவில்லை !

ஹெலினா: அது உங்கள் இயலாமை ! எனக்குள்ள ஓர் வல்லமை ! நீங்கள் எத்தனைப் போரில் வெற்றி பெற்றாலும் பெண்ணிடம் தோற்றுத்தான் போகிறீர் ! குடிமக்களுக்காக வெற்றி பெறுவதாய்க் கூறும் நீங்கள் உண்மையில் உங்கள் தலையில் கிரீடத்தை ஏற்றிக் கொள்கிறீர் ! குடிமக்கள் தலையில் முடி சூட்டுவதில்லை ! முத்திரை அடித்த முன்மாதிரி பிரென்ச் மானிடன் நீங்கள் !

நெப்பொலியன்: கீரிடம் ஜிகினா ஒட்டிய ஓர் மர வளையம் ! கீழே குனிந்தால் விழுந்து விடும் ஒரு போலித் தோரணம் ! நிலையற்றது ! நான் பிரென்ச் மானிடன் இல்லை !

ஹெலினா: (ஏளனமாய்) நீங்கள் வெற்றி பெற்றது நாட்டுக்கு என்று சொல்லவில்லையா ? அதனால் உங்களைப் பிரெஞ்சுக்காரர் என்று கூறினேன் !

நெப்பொலியன்: (வெகுண்டு) என் பொறுமையைச் சோதிக்கிறாய் பெண்ணே ! நானொரு பிரெஞ்ச் குடிமகன் ! ஆனால் பிரான்சில் பிறந்தவன் அல்லன் !
ஹெலினா: என்ன ? நீங்கள் பிரான்சில் பிறக்க வில்லையா ? பின் எதற்காக பிரான்சுக்காக போரிடப் போகிறீர் ? எனக்குப் புரியவில்லை ஜெனரல் !

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Play :

(A) The Man of Destiny – Plays Pleasant By : Bernard Shaw, Penguin Plays (1966)

(B) The Life & Times of Napoleon -Curtis Books (1967)

(C) The Horizon Book of The Age of Napoleon (1963)

(D) The Age of Napoleon By : Alistair Horne (2004)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 11, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -7

This entry is part [part not set] of 35 in the series 20100305_Issue

ஆங்கில மூலம் : ஜியார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

“எனக்குக் குறிக்கோள் ஒன்றே ஒன்றுதான். அனைவரையும் ஐக்கியமாக்குவது, ஒத்திசைவு செய்வது, எல்லா வெறுப்புகளையும் மறக்கச் செய்வது, யாவரையும் ஒருமைப் படுத்துவது, வெவ்வேறு இனத்தாரை இணைத்து ஒருங்கே வரச் செய்வது, முழுமையாக எல்லோரையும் புதுப்பிப்பது, ஒரே பிரான்ஸ் ! ஒரே கட்சி !”

நெப்போலியன் (செயின்ட் ஹெலினா தீவிலிருந்து)

Fig. 1
Napoleon Going to War

ஆயுத மனிதன் நாடகத்தைப் பற்றித் துவக்க அறிவிப்பு :

1796 மே மாதத்தில் வட இத்தாலியில் லோதிக்கும் மிலானுக்கும் இடையே உள்ள தஸ்ஸானோ என்னும் இடத்தில் பிரென்ச் இராணுவப் படைக்கும், ஆஸ்டிரியன் இராணுவத்துக்கும் நடந்த போரில் நெப்போலியன் தனது அசுரப் பீரங்கிகளைப் பயன்படுத்தி ஆஸ்டிரியப் படைகளைத் தோற்கடித்தான். அப்போது நெப்போலியனுக்கு வயது 27. அந்த வாலிப வயதில் பீரங்கிகளை முதலில் ஆயுதமாக ஏந்திப் பராக்கிரம பீரங்கி யுத்தம் செய்து இத்தாலியை விடுதலை நாடாய் ஆக்கியவன் பிரெஞ்ச் சக்ரவர்த்தி நெப்போலியன் ! நாடக ஆரம்பத்தில் பிரான்ஸிலிருந்து வரும் அரசாங்கத் தகவல் கடிதங்களை எதிர்நோக்கி நெப்போலியன் அவனது பிரதம படைத் தளபதிகளுடன் தஸ்ஸானோவில் பழையப் பயண விடுதி ஒன்றில் தங்கி இருக்கிறான். அவனது லெ·ப்டினென்ட் அந்தக் கடிதங்களைக் அன்றைக்குக் கொண்டு வர வேண்டும். ஆனால் வரும் வழியில் சந்தித்த ஓர் இளைஞன் குதிரையையும், கடிதங்களையும் லெ·ப்டினென்டிடமிருந்து தந்திரமாய்க் களவாடிச் சென்று விட்டான் !

அன்று காலையில் மர்மாக ஓரிளம் பெண் அந்த விடுதிக்கு வந்து தங்குகிறாள்.

நாடகத்தில் பங்கெடுப்பாளர் :

1. நெப்போலியன் (Napolean Bonaparte) : பிரான்சின் போர் ஜெனரல் (27 வயது)

2. கியூஸெப் கிராண்டி (Guiseppe Grandi) : இத்தாலிய பயண விடுதி அதிபர் (Innkeeper) (40 வயது)

3. பிரென்ச் லெ·ப்டினென்ட் : (24 வயது)

4. ஹெலினா : ஓர் ஆஸ்டிரியப் பெண் (30 வயது)

காலம் / நேரம் : மே மாதம் 12, 1796 காலை நேரம்.

இடம் : வட இத்தாலியில் தவஸ்ஸானோ (Tavazzano on the Road od from Lodi to Milan) ஊரில் உள்ள ஒரு உணவுச் சாவடி (பயண விடுதி)

ஆரம்பக் காட்சி :

(விடுதி அதிபர் கியூஸெப் கிராண்டி பரவசமோடு பரப்பரபாக அங்குமிங்கும் ஓடி நெப்போலியனையும், அவனது படைத் தளபதிகளையும் உபசரிக்கிறான். அவர்கள் விடுதி மேஜைகளில் உள்ள உணவுப் பண்டங்களைத் தின்றுக் கொண்டிருக்கிறார். ஒரு மேஜைக்கு முன் நெப்போலியன் அமர்ந்திருக்கிறான். மேஜையில் ஐரோப்பிய வரைப்படம் ஒன்று விரிக்கப் பட்டுள்ளது. எதிர்ப்புறம் தூரத்தில் ஓர் இளம் பெண் முதல் முறையாக நெப்போலியனை நோக்குகிறாள். படத்தைப் பார்த்த வண்ணம் பசி பொறுக்காமல் மேஜை உண்டிகளை வேகமாய் எடுத்து விழுகிறான் நெப்போலியன். மேஜையில் அறுசுவை உணவுத் தட்டுகள் பல பரப்பிக் காணப் படுகின்றன. பழத் தட்டுகளில் கருந் திராட்சைக் கொத்துக்கள் சிறப்பு விருந்தினருக்கு வைக்கப் பட்டுள்ளன. இடையிடையே நெப்போலியன் திராட்சைக் கொத்துக்களை வாயில் தள்ளுகிறான். நெப்போலியன் தொப்பியும், உடைவாளும் மேஜை மீது தெரிகின்றன. கையில் ஒரு கரித் துண்டை வைத்துக் கொண்டு நெப்போலியன் வரைப்படத்தில் அங்குமிங்கும் வட்டமிடுகிறான். வாயிலிருந்து திராட்சைத் தோலை எடுத்துப் படத்தில் ஒட்டுகிறான். நெப்போலியன் எதிர்பார்த்த இராணுவப் படையாளி (லெ·ப்டினென்ட்) பாதையில் தகவல் கடிதங்களைப் பறிகொடுத்துத் தாமதமாக வந்து அவருக்குக் கோபத்தை உண்டாக்குகிறான்.

உள்ளே நுழைந்த இராணுவ அதிகாரி நெப்போலியனைத் தேடி அருகில் வருகிறான். வயது 24 உள்ள வாலிபன். இராணுவ உடையில் இருக்கிறான். பரபரப்பாகத் தடுமாறிய நிலையில் தயங்கிக் கொண்டு குற்ற உணர்வுடன் முன் வருகிறான். வரும் வழியில் ஒர் வஞ்சகனிடம் தன் குதிரை, கடிதங்களைப் பறிகொடுத்து நெப்போலியன் கோபத்துக்கு ஆளாகிறான். ஒற்று வேலை செய்யும் வாலிப மங்கையிடமிருந்து அரசாங்கக் கடிதங்களைப் பெற நெப்போலியன் முயற்சி செய்கிறான்.)

(முன் வாரத் தொடர்ச்சி)

Fig. 2
Spy Woman

ஹெலினா: ஜெனரல் ! என்னிடம் உள்ளது ஒரே ஒரு கடிதம் ! அதுவும் தனிப்பட்ட கடிதம். அரசாங்கக் கடிதமில்லை அது. அதை நான் வைத்திருக்க எனக்கு உரிமை இல்லையா ? ஒன்றே ஒன்று ! நான் வைத்துக் கொள்ள நீங்கள் அனுமதிக்கக் கூடாதா ?

நெப்போலியன்: (சற்று கடுமையாக) நியாயமான வேண்டுகோள்தான் ! உன் தனிப்பட்ட கடிதத்தைப் பற்றி எனக்குக் கவலை இல்லை ! ஆனால் உன் சகோதர ஒற்றன் களவாடிய என் அரசாங்கக் கடிதங்கள் எங்கே உள்ளன ? அதைச் சொல் எனக்கு !

ஹெலினா: எனக்குத் தெரியாது. உங்கள் வற்புறுத்தல் தேவையற்றது. உங்கள் போர் வெற்றிக்காக ஆயிரக் கணக்காக உயிர்ப் பலிகளைச் செய்பவர் நீங்கள் ! அஞ்சாமல் நோகாமல் நீங்கள் செய்யும் கொலைகள் அவை ! உங்கள் பேராசைக்கோர் அளவில்லை ! எல்லை இல்லை ! ஊழ்விதி நிர்ணயம் செய்யும் மாவீரர் நீங்கள் ! ஆயுத மனிதன் என்று நான் சொல்வது ! என் மீது கருணை காட்டுங்கள் பிரபு ! பலவீனப் பெண் நான் ! அஞ்சா நெஞ்சர் நீங்கள் ! (பரிவோடு மண்டியிட்டு நெப்போலியனை நோக்குகிறாள்).

நெப்போலியன்: (வாஞ்சையோடு) எழுந்திடு பெண்ணே ! எழுந்திடு ! (அவளை விட்டு சற்று அகன்று திரும்பிப் பார்த்து) அறிவில்லாமல் பேசுகிறாய் நீ ! அதுவும் தெரிந்தே பேசுகிறாய் ! (ஹெலினா மெதுவாகப் பெஞ்சில் அமர்கிறாள். நகர்ந்து சென்ற நெப்போலியன் திரும்பி வந்து அவள் அருகில் அமர்கிறான். ஹெலினா பயந்து போய்ச் சற்று நகன்று உட்காருகிறாள்.) பெண்ணே ! நான் பலசாலி என்று எப்படி உனக்குத் தெரியும் ?

ஹெலினா: என்ன ? நெப்போலியன் பௌனபார்ட்டா இப்படிக் கேட்பது ?

நெப்போலியன்: தப்பாக உச்சரிக்கிறாயே ! நெப்போலியன் போனபார்ட் !

ஹெலினா: எப்படிக் கேட்கலாம் இந்தக் கேள்வியை நீங்கள் ? இரண்டு நாட்களுக்கு முன்னால் நீங்கள் வட இத்தாலிய எல்லைப் பகுதியில் லோதி பாலத்தின் (Lodi Bridge Near Miland, Italy) மீது நின்று, பீரங்கிகள் சுட்டுப் பொசுக்கும் மரண நாற்றத்தைச் சுவாசித்துக் கொண்டிருந்தீர் ! வல்லமை இல்லாத ஒரு ஜெனரலா இப்படித் தீரச்செயலைச் செய்ய முடியும் ?

நெப்போலியன்: பலே பலே வாலிப் பெண்ணே ! நீயும் உன் சகோதரன் போலோர் ஒற்று வேலை செய்பவள் என்பதை நிரூபித்து விட்டாய் ! நான் சந்தேகப் பட்டது சரியாய்ப் போனது ! என்னிடமே என் கதையைச் சொல்லும் ஒரு துணிச்சல்காரி நீ ! என்னை விடப் பலசாலி நீதான் !

ஹெலினா: நான் பலசாலியா ? (சற்று சிந்தித்து) அப்படியானால் நீங்கள் ஒரு கோழையா என்று நான் கேட்பேன் !

நெப்போலியன்: (கடுமையாய்ச் சிரித்துக் கொண்டு தன் தொடையைத் தட்டி) அப்படி ஒரு வினாவை மாவீரன் ஒருவனிடம் நீ கேட்கக் கூடாது ! படை வீரரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரி உயரம், எடை, வயதை மட்டுமே கேட்பான்; ஆனால் மனிதன் வல்லமையைக் கேட்பதில்லை. படை வீரனுக்குப் பயம் உள்ளதா என்று கேட்பதில்லை !

Fig. 3
Impatient Napoleon

ஹெலினா: (சற்று கேலியாக) : ஆஹா ! நீங்கள் பயத்தை எள்ளி நடையாடுகிறீர் ! அச்சம் என்பதை அறியாதவரா நீங்களா ?

நெப்போலியன்: (துடுக்காக) ஒருவேளை நீயே அந்தக் கடிதங்களைப் பறித்து நான் லோதி பாலத்தில் நின்ற போது பீரங்கி வெடிக்குத் தப்பி ஓடி வந்திருந்தால் அஞ்சி இருப்பாயா ?

ஹெலினா: (நெஞ்சில் கைவைத்து) ஐயோ ! பீரங்கி வெடியா ? என் நெஞ்சே வெடித்துப் போயிருக்குமே ! சாதாண மனிதனைக் கொல்ல இத்தனை பெரிய சாதனம் எதற்கு ? உங்கள் பராக்கிரம் வெறும் பீரங்கி வெடியில்தான் இருக்கிறது ! உங்களிடம் இல்லை என்று தெரிகிறது ! பீரங்கிகள் இல்லாமல் போனால் நீங்கள் வெற்று வெடிதான் !

நெப்போலியன்: லோதிப் பாலத்தில் நீ பயமின்றி வந்து எங்கள் கடிதங்களைக் களவு செய்திருப்பாயா ?

ஹெலினா: (அழுத்தமாக) நிச்சயமாகச் செய்திருப்பேன் ! என் வேலையே அது ! உங்கள் பீரங்கி வெடிக்கு நான் பயந்திருக்க மாட்டேன் !

நெப்போலியன்: (வெடுக்கென) மறுபடியும் என்னிடம் பொய் பேசுகிறாய் பெண்ணே ! பயத்தைப் பற்றி நான் சொல்கிறேன். போரில் பயப்படாத மனித ஆத்மாவே இல்லை. என் கடிதங்களை இரட்டையர் நீவீர் ஒளித்து வைத்து ஒரு சிங்கத்தோடு விளையாடுகிறீர் ! எனக்குப் பயங்காட்ட என் பகைவர் உம்மை அனுப்பியுள்ளார் ! உலக மெங்கும் நிலவிடும் ஆவேச உணர்ச்சி ஒன்றே ஒன்று ! அதுதான் பயம் என்பது ! ஒருவனிடம் உள்ள ஆயிரக் கணக்கான பண்பாடுகளில் உறுதியாக ஓர் இராணுவ முரசடிக்கும் சிறுவனும், என்னைப் போலவே, பயத்தோடுதான் உள்ளான் ! அந்தப் பயமே அவனைப் போரிடத் தூண்டும் ! அக்கறையின்மையே அவரை ஓட வைக்கிறது ! போரை நடத்தும் உந்து விசையே பயம்தான் ! பயம் ! பயமென்றால் நான் அறிவேன் ! உன்னை விடப் பயத்தை நான் நன்கு அறிந்தவன் ! பாரிசில் ஒருமுறை பலம் மிகுந்த சுவிஸ் இராணுவத்தினர் குழாம் முழுவதும் படுகொலை செய்யப்பட்டது ஒரு கலவரக் கூட்டத்தால் ! காரணம் நான் பயத்தால் தலையிடாமல் போனது. நானொரு கோழையாய் அப்போது எனக்கே நான் காணப் பட்டேன் ! ஏழு மாதங்களுக்கு முன்னால் அந்த வெட்கக் கேட்டைப் பழிவாங்கினேன், என் பீரங்கியால் அந்தக் கலவரக் கூட்டத்தைத் தூளாக்கி !

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Play :

(A) The Man of Destiny – Plays Pleasant By : Bernard Shaw, Penguin Plays (1966)

(B) The Life & Times of Napoleon -Curtis Books (1967)

(C) The Horizon Book of The Age of Napoleon (1963)

(D) The Age of Napoleon By : Alistair Horne (2004)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 4, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -6

This entry is part [part not set] of 28 in the series 20100227_Issue

ஆங்கில மூலம் : ஜியார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

“மதத்தின் உதவியின்றி எப்படி ஒரு நாட்டை ஆட்சி செய்வது ? செல்வீகச் சமத்துவமின்மைத் (Inequality of Fortune) தவிர்த்துச் சமூகம் நிலைத்திருக்க முடியாது ! ஆனால் செல்வீகச் சமத்துவமின்மை மதத்தின் துணையின்றி வரவேற்கப்பட மாட்டாது ! நானொரு காத்தலிக் மதத்தினனாக மாறிய பிறகுதான் வெண்டீ (Vendளூe)* இனத்தாரைச் சாமாதானப் படுத்த முடிந்தது. நான் யூதரை ஆட்சி செய்ய நேர்ந்தால் சாலமன் ஆலயத்தை மீண்டும் கட்டிப் புதுப்பிப்பேன் ! சொர்க்கம் என்பது மனித ஆத்மாக்கள் வெவ்வேறு பாதைகளில் சென்றடையும் ஓர் மைய அரங்கம் !”

நெப்போலியன் (வெண்டீ யுத்தம்) (1800-1815)

Fig. 1
Impatient Napoleon

ஆயுத மனிதன் நாடகத்தைப் பற்றித் துவக்க அறிவிப்பு :

1796 மே மாதத்தில் வட இத்தாலியில் லோதிக்கும் மிலானுக்கும் இடையே உள்ள தஸ்ஸானோ என்னும் இடத்தில் பிரென்ச் இராணுவப் படைக்கும், ஆஸ்டிரியன் இராணுவத்துக்கும் நடந்த போரில் நெப்போலியன் தனது அசுரப் பீரங்கிகளைப் பயன்படுத்தி ஆஸ்டிரியப் படைகளைத் தோற்கடித்தான். அப்போது நெப்போலியனுக்கு வயது 27. அந்த வாலிப வயதில் பீரங்கிகளை முதலில் ஆயுதமாக ஏந்திப் பராக்கிரம பீரங்கி யுத்தம் செய்து இத்தாலியை விடுதலை நாடாய் ஆக்கியவன் பிரெஞ்ச் சக்ரவர்த்தி நெப்போலியன் ! நாடக ஆரம்பத்தில் பிரான்ஸிலிருந்து வரும் அரசாங்கத் தகவல் கடிதங்களை எதிர்நோக்கி நெப்போலியன் அவனது பிரதம படைத் தளபதிகளுடன் தஸ்ஸானோவில் பழையப் பயண விடுதி ஒன்றில் தங்கி இருக்கிறான். அவனது லெ·ப்டினென்ட் அந்தக் கடிதங்களைக் அன்றைக்குக் கொண்டு வர வேண்டும். ஆனால் வரும் வழியில் சந்தித்த ஓர் இளைஞன் குதிரையையும், கடிதங்களையும் லெ·ப்டினென்டிடமிருந்து தந்திரமாய்க் களவாடிச் சென்று விட்டான் !

அன்று காலையில் மர்மாக ஓரிளம் பெண் அந்த விடுதிக்கு வந்து தங்குகிறாள்.

நாடகத்தில் பங்கெடுப்பாளர் :

1. நெப்போலியன் (Napolean Bonaparte) : பிரான்சின் போர் ஜெனரல் (27 வயது)

2. கியூஸெப் கிராண்டி (Guiseppe Grandi) : இத்தாலிய பயண விடுதி அதிபர் (Innkeeper) (40 வயது)

3. பிரென்ச் லெ·ப்டினென்ட் : (24 வயது)

4. ஹெலினா : ஓர் ஆஸ்டிரியப் பெண் (30 வயது)

காலம் / நேரம் : மே மாதம் 12, 1796 காலை நேரம்.

இடம் : வட இத்தாலியில் தவஸ்ஸானோ (Tavazzano on the Road od from Lodi to Milan) ஊரில் உள்ள ஒரு உணவுச் சாவடி (பயண விடுதி)

ஆரம்பக் காட்சி :

(விடுதி அதிபர் கியூஸெப் கிராண்டி பரவசமோடு பரப்பரபாக அங்குமிங்கும் ஓடி நெப்போலியனையும், அவனது படைத் தளபதிகளையும் உபசரிக்கிறான். அவர்கள் விடுதி மேஜைகளில் உள்ள உணவுப் பண்டங்களைத் தின்றுக் கொண்டிருக்கிறார். ஒரு மேஜைக்கு முன் நெப்போலியன் அமர்ந்திருக்கிறான். மேஜையில் ஐரோப்பிய வரைப்படம் ஒன்று விரிக்கப் பட்டுள்ளது. எதிர்ப்புறம் தூரத்தில் ஓர் இளம் பெண் முதல் முறையாக நெப்போலியனை நோக்குகிறாள். படத்தைப் பார்த்த வண்ணம் பசி பொறுக்காமல் மேஜை உண்டிகளை வேகமாய் எடுத்து விழுகிறான் நெப்போலியன். மேஜையில் அறுசுவை உணவுத் தட்டுகள் பல பரப்பிக் காணப் படுகின்றன. பழத் தட்டுகளில் கருந் திராட்சைக் கொத்துக்கள் சிறப்பு விருந்தினருக்கு வைக்கப் பட்டுள்ளன. இடையிடையே நெப்போலியன் திராட்சைக் கொத்துக்களை வாயில் தள்ளுகிறான். நெப்போலியன் தொப்பியும், உடைவாளும் மேஜை மீது தெரிகின்றன. கையில் ஒரு கரித் துண்டை வைத்துக் கொண்டு நெப்போலியன் வரைப்படத்தில் அங்குமிங்கும் வட்டமிடுகிறான். வாயிலிருந்து திராட்சைத் தோலை எடுத்துப் படத்தில் ஒட்டுகிறான். நெப்போலியன் எதிர்பார்த்த இராணுவப் படையாளி (லெ·ப்டினென்ட்) பாதையில் தகவல் கடிதங்களைப் பறிகொடுத்துத் தாமதமாக வந்து அவருக்குக் கோபத்தை உண்டாக்குகிறான்.

உள்ளே நுழைந்த இராணுவ அதிகாரி நெப்போலியனைத் தேடி அருகில் வருகிறான். வயது 24 உள்ள வாலிபன். இராணுவ உடையில் இருக்கிறான். பரபரப்பாகத் தடுமாறிய நிலையில் தயங்கிக் கொண்டு குற்ற உணர்வுடன் முன் வருகிறான். வரும் வழியில் ஒர் வஞ்சகனிடம் தன் குதிரை, கடிதங்களைப் பறிகொடுத்து நெப்போலியன் கோபத்துக்கு ஆளாகிறான்.)

(முன் வாரத் தொடர்ச்சி)

Fig. 2
Spy Woman Helena

ஹெலினா: உங்கள் குதிரையில் என் சகோதரன் எங்கே சுற்றித் திரிகிறான் என்பது எனக்குத் தெரியாது. லெ·ப்டினென்ட் ஒருவருக்குத்தான் அவன் இருப்பிடம் தெரியும். அவர்தான் என் சகோதரனைப் பிடிக்க முடியும்.

நெப்போலியன்: நீவீர் இருவரும் இரட்டையர் அல்லவா ? எப்படி உனக்குத் தெரியாமல் இருக்கும் ? ஆனால் பெண்கள் துணிந்து பொய் சொல்வார் ! உண்மை எப்போதாவது பேசுவாயா ? என்னிடம் யாரும் பொய் பேசக் கூடாது ! நான் யார் தெரியுமா ?

ஹெலினா: (இத்தாலியர் உச்சரிப்பில்) ஓ எனக்குத் தெரியுமே ! நீங்கள் உன்னதப் புகழ் பெற்ற ஜெனரல் நெப்போலியன் பௌனபார்ட் !

நெப்பொலியன்: (சற்று கோபத்துடன்) பௌனபார்ட் இல்லை ! போனபார்ட் மேடம் போன்பார்ட் ! எங்கே ஓவென்று வாயைப் பிளந்து சரியாக உச்சரி !

ஹெலினா: (உதாசீனமாக) நாங்கள் எல்லாம் பௌனபார்ட் என்றுதான் சொல்வோம் ! எப்படி உச்சரித்தாலும் நெப்போலியன் நெப்போலியன் தானே ! யார் உங்களை வெல்ல முடியும் ?

நெப்பொலியன்: நான் பெண்களிடம் தோற்றுப் போகிறேன் ! என் பேரைச் சரிவரச் சொல்ல உன்னை வற்புறுத்த முடியவில்லை என்னால் ! என் கடிதங்களை உன் சகோதரனிடமிருந்து பெற்று வரச் சொன்னேன் ! நீ மறுக்கிறாய் ! கொண்டு வந்தால் உனக்குச் சன்மானம் கிடைக்கும் ! (கைக்குட்டையை எடுத்து நுகர்ந்து கொண்டு) இந்த நறுமணம் உன் மீதும் வீசுகிறது ! இந்தக் கைக்குட்டை எனக்குக் கொடுத்தவன் எனது லெ·ப்டினென்ட் ! அவனுக்கு இதைக் கொடுத்தவன் உன் வஞ்சகச் சகோதரன் ! (அதட்டலோடு) அவனைப் பிடித்து என்னிடம் கொண்டு வருவாயா ?

ஹெலினா: (கம்பீரமாக நிமிர்ந்து) ஜெனரல் ! பெண்டிரை நீங்கள் மிரட்டுவது உண்டா ? உங்களுக்குக் கடிதங்கள் தேவையென்றால் என்னை ஏன் மிரட்டுகிறீர் ? ஏமாந்தது உங்கள் லெ·ப்டினென்ட். ஆனால் மிரட்டுவது நீங்கள் !

நெப்பொலியன்: (அழுத்தமாக) ஆமாம் ! அதுவும் பொய் பேசும் பெண்ணை அறவே பிடிக்காது !

ஹெலினா: (அசட்டையாக) எனக்குப் புரிய வில்லை நீங்கள் சொல்வது ! உண்மை எதுவென்று தெரியாத நீங்கள் பொய்யை எப்படிக் கண்டுபிடித்தீர் ?

நெப்பொலியன்: இந்தக் கைக்குட்டை நறுமணத்தில் ! உன் அழகு மேனியில் இதே நறுமணம் வீசுகிறது ! நீ இங்கு வந்திருக்கும் காரணம் எனக்குத் தெரியும். நீ ஒற்று உளவு செய்யும் ஒர் ஆஸ்டிரிய மாது ! ஊழியத்துக்கு உன்னை வைத்திருக்கும் உன் அதிகாரிகளுக்குத் தெரியம், நான் ஆறு மைல் தூரத்தில் இருக்கிறேன் என்று. என் பகைவர் எதிர்பாராத இடத்தில் நான் காணப் படுபவன் ! இப்போது நீ சிங்கத்தின் குகையில் நுழைந்திருக்கிறாய் பெண்ணே ! வரவேற்கிறேன் உன்னை ! நீ மிக்கத் தைரியசாலி ! அறிவோடு நடந்து கொள் ! விரையம் செய்ய நேர மில்லை எனக்கு ! எங்கே இருக்கும் என் கடிதங்கள் ?

ஹெலினா: (கண்களில் கண்ணீருடன் மனமுடைந்து) நானா தைரியசாலி ? உங்கள் சிறுஅதட்டலே என் கண்களைக் குலுக்கி விட்டது ! கொஞ்சமும் தெரிவில்லை உமக்கு ! இன்றைய நாள் பூராவும் நான் மனமுடைந்து பயத்தில் மூழ்கிக் கிடக்கிறேன். ஒவ்வொரு சந்தேக நோக்கும் பளுவோடு என் நெஞ்சைத் தாக்கிறது ! பயமுறுத்தலும், அதட்டலும் இதயத்தைப் புண்ணாக்குகிறது ! உம்மைப் போல் ஒவ்வொருவனும் நெஞ்சுறுதியோடு இருக்க முடியுமா ? நானொரு பெண் ! ஓர் ஆண் தளபதியைப் போல் பெண் ஒருத்தி தீரமாய் இருப்பாளா ? நானொரு கோழைப் பெண் ! வன்முறைக்கு அஞ்சி ஒளிபவள் நான் ! அபாயத்துக்குள் சிக்கிக் கொள்வது எனக்கு வேதனை அளிக்கும்.

நெப்போலியன்: பிறகு ஏன் அபாயத்தில் நுழைந்திருக்கிறாய் ? பிரெஞ்ச் நாட்டின் புனித நங்கை ஜோன் ஆ·ப் ஆர்க்கைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்காயா ? அந்தப் பெண்ணைப் போலொரு வாளேந்திய வீர மங்கை இதுவரைப் பிறக்க வில்லை ! அவள் ஒரு போர்த் தளபதி ! பிரெஞ்ச் ராணுவத்தை முன்னடத்திச் சென்று பிரிட்டனை விரட்டிய வீராங்கனை அவள் ! நீ ஒற்று வேலை புரியும் உளவுப் பெண் ! சிங்கத்திடம் சிக்கிக் கொண்ட செம்மறி ஆடு !

ஹெலினா: வேறு வழியில்லை எனக்கு ! யாரையும் நம்ப முடியவில்லை ! எனக்குத் தெரியும். இப்போது நான் தப்ப முடியாது ! எல்லாம் உம்மால்தான் ! உமக்கோ அச்சமில்லை ! நெஞ்சில் இரக்க மில்லை ! உயிர்கள் மீது பரிவில்லாத் தளபதி ! (தள்ளாடி வீழ்ந்து மண்டி இடுகிறாள்.) ஜெனரல் ஸார் ! என்னைப் போக அனுமதி செய்வீர் ! வினாக்களில் என்னைத் துளைக்காமல் விட்டுவிடுவீர் ! உங்கள் கடிதங்களை உமக்குக் கொண்டு வந்து சேர்க்கிறேன் ! நிச்சயமாய் ! சத்தியமாய் !

நெப்போலியன்: (மனமிரங்கி) சரி ! நான் அவற்றுக்குக் காத்திருக்கிறேன் ! போய்க் கொண்டுவா !

Fig. 3
Napoleon’s Italian War

ஹெலினா: (பெருமூச்சு விட்டு மெதுவாக எழுந்து) கனிவான மொழிக்கு என் பணிவான நன்றி ! அவற்றைக் கொண்டுவந்து சேர்க்கிறேன் ! என் அறையில்தான் உள்ளன ! நான் போகலாமா ?

நெப்போலியன்: நானும் உன் கூட வருகிறேன் !

ஹெலினா: என் பின்னால் நீங்கள் வருவதை நான் விரும்பவில்லை ஜெனரல் ! நம்புங்கள் என்னை ! தனிப்பட்ட என் அறைக்கு ஓர் ஆடவன் வருவதை நான் அனுமதிக்க மாட்டேன் !

நெப்போலியன்: அப்படியானால் நீ இங்கே இரு ! நான் உன் அறையில் தேடி எடுத்துக் கொள்கிறேன்.

ஹெலினா: (அறுவறுப்புடன்) தேடி ஏமாந்து போவீர் ஜெனரல் ! அந்தக் கடிதங்கள் மெய்யாக என் அறையில் இல்லை !

நெப்போலியன்: என்ன சொன்னாய் ? இருக்கு என்பது உண்மையா ? இல்லை என்பது உண்மையா ? என்னைக் குழப்பி அடிக்கிறாய் பெண்ணே !

+++++++++
(Vendளூe)* : The Vendளூe (French) is a Region in west central France, on the Atlantic Ocean. The name Vendளூe is taken from the Vendளூe River which runs through the south-eastern part of the Region. The Hundred Years’ War (1337-1453) turned much of the Vendளூe into a battleground.
Since the Vendளூe held a considerable number of influential Protestants, including control by Jeanne d’Albret the region was greatly affected by the French Wars of Religion which broke out in 1562 and continued until 1598.
In 1815, when Napoleon returned from Elba for his Hundred Days, La Vendளூe refused to recognise him and stayed loyal to King Louis XVIII . General Lamarque led 10,000 men into La Vendளூe to pacify the Region.
+++++++++

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Play :

(A) The Man of Destiny – Plays Pleasant By : Bernard Shaw, Penguin Plays (1966)

(B) The Life & Times of Napoleon -Curtis Books (1967)

(C) The Horizon Book of The Age of Napoleon (1963)

(D) The Age of Napoleon By : Alistair Horne (2004)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 24, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -4

This entry is part [part not set] of 26 in the series 20100212_Issue

ஆங்கில மூலம் : ஜியார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

"அரசக் கிரீடம் என்பது வெல்வெட்டுத் துணியால் சுற்றப்பட்ட ஒரு வெறும் மரக்கட்டை !"

"போரில் தோல்வி அடைவதற்குக் காரணம் போரிடும் படைவீரர் அல்லர். அவரை வழி நடத்திச் செல்லும் போர்த் தளபதிகள்தான்."

"போர்ப் படை வீரர்கள் தமது வயிறு நிரம்பியதைப் பொருத்தே போரில் தீவிரப் பங்கு கொள்வார்"

"போரின் வெற்றிக்குப் படைவீரர் போர்க் குணமும் ஒருவருக் கொருவர் இணைந்த தொடர்பும் முக்கால் பங்கு. படையாளர் எண்ணிக்கையும், தளவாடச் சாதனங்களும் மீதிக் கால் பங்கு."

நெப்போலியன்,

Fig. 1
Napoleon Waiting for the Soldier

நாடக ஆசிரியர் பெர்னாட் ஷாவைப் பற்றி:

ஜியார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜியார்க் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர். அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வியுற்ற வணிகத்துறையாளர். வறுமையி லிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர். இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார். அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார். நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வி நாடகங்களை எழுதினார். பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களைக் கண்டு 1894 இல் "சனிக்கிழமை கருத்திதழில்" (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து எழுதி வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார்.

அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), ஆனந்த நாடகங்கள் (Plays Pleasant), தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), இதயத்தைப் பிளக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898) போன்றவை. ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.

ஆயுத மனிதன் நாடகத்தைப் பற்றித் துவக்க அறிவிப்பு :

1796 மே மாதத்தில் வட இத்தாலியில் லோதிக்கும் மிலானுக்கும் இடையே உள்ள தஸ்ஸானோ என்னும் இடத்தில் பிரென்ச் இராணுவப் படைக்கும், ஆஸ்டிரியன் இராணுவத்துக்கும் நடந்த போரில் நெப்போலியன் தனது அசுரப் பீரங்கிகளைப் பயன்படுத்தி ஆஸ்டிரியப் படைகளைத் தோற்கடித்தான். அப்போது நெப்போலியனுக்கு வயது 27. அந்த வாலிப வயதில் பீரங்கிகளை முதலில் ஆயுதமாக ஏந்திப் பராக்கிரம பீரங்கி யுத்தம் செய்து இத்தாலியை விடுதலை நாடாய் ஆக்கியவன் பிரெஞ்ச் சக்ரவர்த்தி நெப்போலியன் ! நாடக ஆரம்பத்தில் பிரான்ஸிலிருந்து வரும் அரசாங்கத் தகவல் கடிதங்களை எதிர்நோக்கி நெப்போலியன் அவனது பிரதம படைத் தளபதிகளுடன் தஸ்ஸானோவில் பழையப் பயண விடுதி ஒன்றில் தங்கி இருக்கிறான். அவனது லெ·ப்டினென்ட் அந்தக் கடிதங்களைக் அன்றைக்குக் கொண்டு வர வேண்டும். ஆனால் வரும் வழியில் சந்தித்த ஓர் இளைஞன் குதிரையையும், கடிதங்களையும் லெ·ப்டினென்டிடமிருந்து தந்திரமாய்க் களவாடிச் சென்று விட்டான் !

அன்று காலையில் மர்மாக ஓரிளம் பெண் அந்த விடுதிக்கு வந்து தங்குகிறாள்.

நாடகத்தில் பங்கெடுப்பாளர் :

1. நெப்போலியன் (Napolean Bonaparte) : பிரான்சின் போர் ஜெனரல் (27 வயது)

2. கியூஸெப் கிராண்டி (Guiseppe Grandi) : இத்தாலிய பயண விடுதி அதிபர் (Innkeeper) (40 வயது)

3. பிரென்ச் லெ·ப்டினென்ட் : (24 வயது)

4. ஹெலினா : ஓர் ஆஸ்டிரியப் பெண் (30 வயது)

காலம் / நேரம் : மே மாதம் 12, 1796 காலை நேரம்.

இடம் : வட இத்தாலியில் தவஸ்ஸானோ (Tavazzano on the Road od from Lodi to Milan) ஊரில் உள்ள ஒரு உணவுச் சாவடி (பயண விடுதி)

ஆரம்பக் காட்சி :

(விடுதி அதிபர் கியூஸெப் கிராண்டி பரவசமோடு பரப்பரபாக அங்குமிங்கும் ஓடி நெப்போலியனையும், அவனது படைத் தளபதிகளையும் உபசரிக்கிறான். அவர்கள் விடுதி மேஜைகளில் உள்ள உணவுப் பண்டங்களைத் தின்றுக் கொண்டிருக்கிறார். ஒரு மேஜைக்கு முன் நெப்போலியன் அமர்ந்திருக்கிறான். மேஜையில் ஐரோப்பிய வரைப்படம் ஒன்று விரிக்கப் பட்டுள்ளது. எதிர்ப்புறம் தூரத்தில் ஓர் இளம் பெண் முதல் முறையாக நெப்போலியனை நோக்குகிறாள். படத்தைப் பார்த்த வண்ணம் பசி பொறுக்காமல் மேஜை உண்டிகளை வேகமாய் எடுத்து விழுகிறான் நெப்போலியன். மேஜையில் அறுசுவை உணவுத் தட்டுகள் பல பரப்பிக் காணப் படுகின்றன. பழத் தட்டுகளில் கருந் திராட்சைக் கொத்துக்கள் சிறப்பு விருந்தினருக்கு வைக்கப் பட்டுள்ளன. இடையிடையே நெப்போலியன் திராட்சைக் கொத்துக்களை வாயில் தள்ளுகிறான். நெப்போலியன் தொப்பியும், உடைவாளும் மேஜை மீது தெரிகின்றன. கையில் ஒரு கரித் துண்டை வைத்துக் கொண்டு நெப்போலியன் வரைப்படத்தில் அங்குமிங்கும் வட்டமிடுகிறான். வாயிலிருந்து திராட்சைத் தோலை எடுத்துப் படத்தில் ஒட்டுகிறான். நெப்போலியன் எதிர்பார்த்த இராணுவப் படையாளி (லெ·ப்டினென்ட்) பாதையில் தகவல் கடிதங்களைப் பறிகொடுத்துத் தாமதமாக வந்து அவருக்குக் கோபத்தை உண்டாக்குகிறான்.

உள்ளே நுழைந்த இராணுவ அதிகாரி நெப்போலியனைத் தேடி அருகில் வருகிறான். வயது 24 உள்ள வாலிபன். இராணுவ உடையில் இருக்கிறான். பரபரப்பாகத் தடுமாறிய நிலையில் தயங்கிக் கொண்டு குற்ற உணர்வுடன் முன் வருகிறான். நெப்போலியனைக் கண்டதும் நிமிர்ந்து நின்று சல்யூட் செய்கிறான்.)

(முன் வாரத் தொடர்ச்சி)

நெப்போலியன்: (பொறுமை இழந்து) கடைசியாய் வந்து சேர்ந்தாயே ! என்ன ஆயிற்று ? ஏனிந்தத் தாமதம் ? காலையில் வர வேண்டிய கடிதங்கள் பகல் பொழுது கடந்தும் எனக்கு வரவில்லையே ? ஏன் தடுமாறுகிறாய் ? என்ன நடந்தது ? குதிரையில் போனவன் கால் நடையில் வந்தாயா ? விரைவாய்ப் போகும் குதிரையை ஓட்டிச் சென்றாய் நீ ! குதிரைக்கு ஒரு கால் போனதா ? அல்லது உனக்கு ஒரு கை போனதா ?

லெ·ப்டினென்ட்: (நடுங்கிக் கொண்டு) குதிரை காணாமல் போனது பிரபு ! நடந்து வர வில்லை ! ஓடி வந்தேன் ! களைத்துப் போய் வாய் குழறுகிறது.

நெப்போலியன்: எங்கே இராணுவக் கடிதங்கள் ? குதிரை எப்படிக் காணாமல் போகும் ?

லெ·ப்டினென்ட்: (தடுமாற்றமுடன்) கடிதங்கள் களவு போய் விட்டன பிரபு !

நெப்பொலியன்: கடிதங்களுக்கு இறக்கை இல்லை ! அவை எப்படிக் களவு போகும் ?

லெ·ப்டினென்ட்: எனக்குத் தெரியாது பிரபு !

நெப்போலியன்: உனக்குத் தெரியாமல் களவு போனது என்று தெளிவாகச் சொல்கிறாய் ?

லெ·ப்டினென்ட்: நான் பண்ணியது தவறுதான் பிரபு ! தண்டனை கொடுப்பீர் முதலில் எனக்கு ! படைக்குழு மன்றக் கூண்டில் நிறுத்தித் தண்டிப்பீர் என்னை ! அதுதான் எனக்கு உகந்தது பிரபு !

நெப்போலியன்: என் வேலையை நீ எனக்குச் சொல்லாதே ! உன் வேலை என்ன ?

லெ·ப்டினென்ட்: தகவல் கடிதங்களைத் தவறாமல், தாமதிக்காமல் கொண்டுவந்து தருவது !

நெப்போலியன்: அதை ஏனின்று செய்யத் தவறினாய் ?

லெ·ப்டினென்ட்: பிரபு ! என்னை ஒரு கயவன் ஏமாற்றிவிட்டான். அவன் என் கையில் கிடைத்தால் அவன் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவேன் ! வஞ்சகன், வாயாடி, மோசக்காரன் அவன் ! பார்த்தால் ஆடு போல் தெரிவான் ! பாசாங்குக்காரன் !

நெப்போலியன்: எப்படி நீ ஏமாந்தாய் என்று சொல் ? குதிரை எப்படிக் காணாமல் போனது ? இரகசியக் கடிதங்கள் எப்படிக் களவு போயின ? அந்தக் கயவன் ஓர் ஒற்றன் போல் தெரிகிறது ! ஒற்றனிடம் எல்லாக் கடிதங்களையும் இழந்து விட்டு நீதான் வெட்கமின்றி ஆடு போல் வந்து நிற்கிறாய் !

லெ·ப்டினென்ட்: அந்த வஞ்சகனைப் பிடித்து உங்கள் முன் நிறுத்துகிறேன் பிரபு ! அதுதான் எனது முதல் வேலை !

நெப்போலியன்: உன் முதல் வேலை இரகசியக் கடிதங்களை என்னிடம் கொண்டு வருவது. போ முதலில் அதைச் செய் ! நான் காத்திருக்கிறேன். போ ! நில்லாதே என் முன்பு !

லெ·ப்டினென்ட்: அந்தக் கயவன் என் சகோதரன் போல் நடித்தான். அவன் சகோதரியின் கண்கள் போல் என் கண்கள் இருக்கிறதாம் ! என் காதலி அஞ்சலிகா பிரிந்து போனதைக் கேட்டு உண்மையாகக் கண்ணீர் வடித்தான் அந்த வஞ்சகன் ! ஹோட்டலில் என்னுடன் உள்ள போது என் ஒயின் மதுவுக்கும் காசு கொடுத்தான் அந்தக் கயவன் ! ஆனால் உண்ணும் போது பிரெட்டை மட்டும் தின்று ஒயினை அவன் குடிக்கவில்லை ! அதையும் நீயே குடியென்று அன்பாகக் கொடுத்தான் எனக்கு அந்தப் பாசாங்குக்காரன் !

நெப்போலியன்: அதாவது உனக்கு ஒயினை ஊற்றிக் குடிபோதையை உண்டாக்கி விட்டான் அந்த ஒற்றன் !

லெ·ப்டினென்ட்: அது மட்டுமில்லை ! அவனது கைத் துப்பாகி, குதிரை, கடிதங்களை என் கையில் கொடுத்தான் !

நெப்போலியன்: ஏன் அப்படிக் கொடுத்தான் உன்னிடம் ?

லெ·ப்டினென்ட்: என் நம்பிக்கையைச் சம்பாதிக்க பிரபு !

நெப்போலியன்: அறிவு கெட்டவனே ! உன் மூஞ்சில் ஒற்றன் ஒருவன் கரியைப் பூசி உன் கண்களைக் கட்டுவது எப்படித் தெரியாமல் போனது ?

லெ·ப்டினென்ட்: அவன் என் மீது நம்பிக்கை காட்டியதும் நான் பதிலுக்கு என் நம்பிக்கையை அவன் மீது காட்டினேன் ! என் குதிரை, கைத் துப்பாக்கி, கடிதங்களை எல்லாம் அவனிடம் கொடுத்தேன் !

நெப்போலியன்: மதி கெட்டவனே ! அவன் உன்னை ஒரு மந்தியாக மாற்றியது கூடத் தெரிய வில்லையே உனக்கு ! உன் கடிதங்களை அபகரிக்க ஒற்றன் செய்த தந்திரம் கூடத் தெரிய வில்லையே ! எங்கே காட்டு, அவன் உனக்குக் கொடுத்த கடிதங்களை ?

லெ·ப்டினென்ட்: அவற்றையும் அந்தக் கயவனே திருடி விட்டான் பிரபு ! அந்த வாலிபன் ஒரு நய வஞ்சகன் ! அகப்பட்டால் அவன் கையை முறித்து அடுப்பில் போடுவேன் ! காலை முறித்துக் கழுக்குக்கு இரையாக்குவேன் !

நெப்போலியன்: அதை எத்தனை முறைச் சொல்லுவாய் ? போ போய் அவன் காலில் விழுந்து நமது கடிதங்களைப் பெற்று வா ! கையை முறிக்கவும் வேண்டாம். காலை வெட்டிக் கழுகுக்கு இடவும் வேண்டாம் ! அந்த ஒற்றன் யார் என்றாவது தெரிந்து கொண்டாயா ?

Fig. 2
Napoleon with his soldiers

லெ·ப்டினென்ட்: அவனைப் பிடித்து வந்தவுடன் கேட்டுச் சொல்கிறேன் பிரபு ! அவனைப் பிடித்து வராமல் அதை எப்படி என்னால் சொல்ல முடியும் ?

நெப்போலியன்: ஒற்றன் ஒருபோதும் தான் யாரென்று சொல்ல மாட்டான் ! அவன் நகத்தை உரித்தாலும் சரி அல்லது தோலை உரித்தாலும் சரி யாருக்கும் சொல்ல மாட்டான் ! நீதான் மூடத்தனமாக ஒற்றனிடம் மாட்டித் தோல்வி அடைந்திருக்கிறாய் !

லெ·ப்டினென்ட்: அத்தனை பழியையும் என்மேல் போடாதீர் பிரபு ! அவன் எப்படிப் பட்டவன் என்று முதலிலே நான் எவ்விதம் அறிய முடியும் ? நான் இரண்டு நாள் பட்டினி பிரபு ! எதுவும் உண்ணாமல், இரவில் உறங்காமல் கால் நடையில் இங்கு வந்திருக்கிறேன் (பெஞ்சில் மயங்கி உட்காருகிறான்.)

நெப்போலியன்: (உரக்கப் பேசி) கியூஸெப் ! இங்கே வா ! உடனே வா !

கியூஸெப்: (ஓடி வந்து பணிவுடன்) அழைத்தீரா பிரபு ?

நெப்போலியன்: (ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு) இந்த அதிகாரியை உள்ளே அழைத்துச் செல் ! முதலில் உண்பதற்கு உணவைக் கொடு ! ஓய்வெடுக்க அறையை ஏற்பாடு செய் ! இரண்டு நாள் பட்டினியாய் நடந்திருக்கிறான்.

கியூஸெப்: அப்படியே செய்கிறேன் பிரபு ! வாருங்கள் தளபதி ஐயா !

(லெ·ப்டினென்ட் மேஜை மீது உடைவாளைப் போட்டு விட்டு கியூஸெப் பின்னால் செல்கிறான்.)

லெ·ப்டினென்ட்: (தனக்குள் முணுமுணுத்து) முதலில் உண்பதா ? அல்லது படுக்கையில் விழுவதா ?

கியூஸெப்: முதலில் உங்கள் அறையைக் காட்டுகிறேன் ! படுக்கையில் விழுந்தால் உமது பட்டினி வயிறு தூங்க விடாது. உண்ட பிறகு உறங்கலாம் !

லெ·ப்டினென்ட்: உண்ணும் போதே மேஜையில் நான் உறங்கி விடுவேன் !

கியூஸெப்: தளபதியாரே ! ஆஸ்டிரியன் யாராவது உம்மைத் தாக்கியுள்ளானா ?

லெ·ப்டினென்ட்: என்னைத் தாக்குவானா ஓர் ஆஸ்டிரியன் ? அவன் முதுகெலும்பை முறித்து விட மாட்டேனா ? என்னை ஏமாற்றியவன் ஓர் ஆஸ்டிரியனாக இருக்கலாம் ! என்னை உயிர் தோழன் என்று வாய்ச் சொற்களால் குளிப்பாட்டினான் ! என்னைப் போல் ஒருவனைச் சந்திக்க வில்லை என்று இனிமையாய்ப் பேசிக் கவர்ந்தான். தன் கைக் குட்டையால் என் கழுத்தைச் சுற்றி அணிந்தான் ! இதோ அந்தக் கைக்குட்டை ! (பையிலிருந்து எடுத்துக் காட்டுகிறான்.)

கியூஸெப்: (கைக்குட்டையை உளவி, மோந்து பார்த்து) கமகமவென மணக்கிறது. ஒரு பெண்ணின் கைக்குட்டைபோல் தெரிகிறது !

நெப்போலியன்: (நடந்து போய் கைக்குட்டையை வாங்கி, முகர்ந்து) ஆமாம் ! நறுமணமுள்ள இது ஒரு பெண்ணின் கைக்குட்டைதான் ! (முன் பைக்குள் அதை வைத்துச் சிரித்துக் கொண்டு) என் காதலியை நான் மறக்காமல் இருக்கக் கைக்குட்டை நறுமணம் நினைவூட்டும் !

லெ·ப்டினென்ட்: ஜெனரல் ! என் உறுதி மொழி இது! அந்த வாலிபன் மட்டும் என் கையில் அகப்பட்டால் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது !

மாடியிலிருந்து பெண்ணின் குரல்: கியூஸெப் ! மேலே சற்று வருவீரா ?

லெ·ப்டினென்ட்: யார் அரவம் அது ? குரல் இனிமையாக உள்ளது !

Fig. 3
The Young Lady Helena

கியூஸெப்: அது மாடிப் பெண்ணின் இசைக் குரல் தளபதி !

லெ·ப்டினென்ட்: யார் அந்த மாடிப் பெண் ?

மாடிப் பெண்: எங்கே இருக்கிறாய் கியூஸெப் ? மேலே வா ?

லெ·ப்டினென்ட்: (கியூஸெப்பைத் தொடர்ந்து லெ·ப்டினென்ட் மாடிப்படியில் ஏறி) கியூஸெப் ! மேஜை மீதுள்ள என் வாளை எடுத்துக் கொடு !

கியூஸெப்: சொல்வது உமது காதில் விழவில்லையா ? அவள் ஓரிளம் மங்கை ! உடைவாள் எதற்கு ?

லெ·ப்டினென்ட்: அவன் குரல் போல் கேட்கிறது ! என்னை ஏமாற்றியவன் ! என் குதிரையைக் களவாடியவன் ! அரசாங்கக் கடிதங்களை அபகரித்தவன் ! (வாளை உருவிக் கொண்டு அறை திறப்பதைப் பார்க்கிறான்.)

(நெப்போலியன் மாடிப் படி அருகில் நின்று நோக்குகிறான். அறைக்கதவு திறந்ததும் ஓரிளம் அழகி மெல்ல வருகிறாள். ஒய்யாரமாக நிமிர்ந்து நிற்கிறாள். நல்ல உயரம். பளிங்குச் சிலைபோல் எடுப்பான தோற்றம். கண்களில் அறிவுச்சுடர் வீசுகிறது. அவளது பொங்கும் இளமை மேனியில் பெண்மை பளிச்செனத் தெரிகிறது. கவர்ச்சியான உடை அணிந்திருக்கிறாள். கம்பீரமாக நடந்து வருகிறாள். மங்கையின் மயக்கும் விழிகளைக் கண்டதும் நெப்பொலியனின் மனம் வல்லமை இழந்து அவளிடம் சரண்டைகிறது ! வாளை ஓங்கி வந்த லெ·ப்டினென்ட் வாளைத் கீழே தணித்துக் கொள்கிறான். அவன் கண்களை அவன் நம்ப முடியவில்லை. மங்கை அவனைக் கண்டும் காணாத போல் முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள். அவள் லெ·ப்டினென்ட் முகத்தைக் கூர்ந்து நோக்கியதும் அவன் மூஞ்சில் கோபம் கொதித்தெழுகிறது. எதையும் காட்டிக் கொள்ளாமல் இளம் மங்கை அவனைக் கடந்து செல்கிறாள்.)

கியூஸெப்: மிஸ் மேடம் ! நீ ஓர் அழகி ! வந்தனம் ! சக்ரவர்த்தி நெப்போலியன் சார்பாக உன்னை நான் வரவேற்கிறேன்.

மாடிப் பெண்: நன்றி கியூஸெப் ! பிரெஞ்ச் சக்ரவர்த்தியா இந்த விடுதியில் தங்கியுள்ளார் ?

கியூஸெப்: (சிரித்துக் கொண்டு) ஆமாம் மிஸ் மேடம் !

மாடிப் பெண்: என் பெயர் ஹெலினா !

நெப்போலியன்: (முணுமுணுத்து) ஹெலினா ? தோற்றத்தைப் போல் இனிய பெயர் !

(நெப்போலியன் புன்னகை செய்கிறான். பையிலிருந்த கைக்குட்டையை எடுத்து நுகர்ந்து பார்க்கிறான்.)

லெ·ப்டினென்ட்: (ஆவேசமாய்) ஆகா ! அகப்பட்டுக் கொண்டாய் அயோக்கிய வாலிபனே ! பெண்ணைப் போல் வேடம் போட்டாலும் நீ தப்ப முடியாது ! உன் வேடத்தைக் கலைத்து உன் கழுத்தை நெரிக்கிறேன். (கோபமாய்ப் பெண்ணை நெருங்குகிறான்)

கியூஸெப்: பொறுப்பீர் தளபதி ! என்ன சொல்கிறீர் ? அவளொரு வனிதை ! வாலிபன் என்று ஏன் சொல்கிறீர் ?

ஹெலினா: (பயந்து போய் நெப்போலியன் பின்னால் ஒளிந்து கொண்டு) ஜெனரல் ஸார் ! காப்பாற்றுவீர் என்னை ! இந்தப் பயங்கரவாதி என்னைச் சீண்டுகிறான் ! நான் ஓர் அப்பாவிப் பெண் ! யாரையோ நினைத்து என்னை ஆடவனாய் நினைக்கிறான் ! காப்பாற்ற மாட்டீரா என்னை ?

நெப்போலியன்: நெருங்காதே அவளை ! அறிவு கெட்டவனே ! கத்தியைக் கீழே போடு ! புத்தியின்றி ஒரு பெண்ணிடமா உன் வீரத்தைக் காட்டுகிறாய் ! வழியில் எல்லாவற்றையும் பறிகொடுத்து விட்டு வனிதை மேல் ஏன் பாய்கிறாய் ? எட்டி நில் ! அவளைப் பார்த்தால் ஆணைப் போல் தெரிய வில்லை ! அவள் ஓர் அழகிய மாது ! நமது மதிப்புக்கும் பரிவுக்கும் உரிய மங்கை அவள் ! (பெண்ணைப் பார்த்து) கவலைப் படாதே ஹெலினா ! அவன் மதி இல்லாத லெ·ப்டினென்ட் ! குதிரையைப் பறிகொடுத்துப் பட்டினியோடு கால் நடையில் வந்திருக்கிறான் !

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Play :

(A) The Man of Destiny – Plays Pleasant By : Bernard Shaw, Penguin Plays (1966)

(B) The Life & Times of Napoleon -Curtis Books (1967)

(C) The Horizon Book of The Age of Napoleon (1963)

(D) The Age of Napoleon By : Alistair Horne (2004)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 11, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -1

This entry is part [part not set] of 35 in the series 20100121_Issue

ஆங்கில மூலம் : ஜியார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

Primary Image.
Napoleon on the Horse

“எனது ஓய்வு காலத்தில் நான் எனது உடைவாளை மயிலிறகாக மாற்றிக் கொள்வேன். என் அரசாட்சி வரலாற்றில் அது வியப்பூட்டலாம். இதுவரை அவர் எனது போலி நிழல் வடிவை மட்டுமே கண்டிருக்கிறார். இப்போது என் நிஜ உருவத்தைக் காட்டப் போகிறேன். எத்தனை தோற்றங்களைத்தான் நான் வெளிப்படுத்த முடியும் ? பல மனிதருக்கு என் பொய்யுருவே தெரிந்திருக்கிறது. ஆயிரக் கணக்காக நான் வெறுக்கத் தக்கவற்றை நாட்டுப் பாரமாக நிரப்பி வந்திருக்கிறேன். முடிவில் எனக்கு அவை என்ன செய்துள்ளன ? என்னை நயவஞ்சகத்தில் எல்லாம் தள்ளிவிட்டன !”

நெப்போலியன் (1769–1821)

நாடக ஆசிரியர் பெர்னாட் ஷாவைப் பற்றி:

ஜியார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜியார்க் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர். அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வியுற்ற வணிகத்துறையாளர். வறுமையி லிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர். இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார். அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார். நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வி நாடகங்களை எழுதினார். பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களைக் கண்டு 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து எழுதி வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார்.

அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), ஆனந்த நாடகங்கள் (Plays Pleasant), தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), இதயத்தைப் பிளக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898) போன்றவை. ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.

Fig. 1
Napoleon in the Peterloo War

ஆயுத மனிதன் நாடகத்தைப் பற்றித் துவக்க அறிவிப்பு :

1796 மே மாதத்தில் வட இத்தாலியில் லோதிக்கும் மிலானுக்கும் இடையே உள்ள தஸ்ஸானோ என்னும் இடத்தில் பிரென்ச் இராணுவப் படைக்கும், ஆஸ்டிரியன் இராணுவத்துக்கும் நடந்த போரில் நெப்போலியன் தனது அசுரப் பீரங்கிகளைப் பயன்படுத்தி ஆஸ்டிரியப் படைகளைத் தோற்கடித்தான். அப்போது நெப்போலியனுக்கு வயது 27. அந்த வாலிப வயதில் பீரங்கிகளை முதலில் ஆயுதமாக ஏந்திப் பராக்கிரம பீரங்கி யுத்தம் செய்து இத்தாலியை விடுதலை நாடாய் ஆக்கியவன் பிரெஞ்ச் சக்ரவர்த்தி நெப்போலியன் ! நாடக ஆரம்பத்தில் பிரான்ஸிலிருந்து வரும் அரசாங்கத் தகவல் கடிதங்களை எதிர்நோக்கி நெப்போலியன் அவனது பிரதம படைத் தளபதிகளுடன் தஸ்ஸானோவில் பழையப் பயண விடுதி ஒன்றில் தங்கி இருக்கிறான். அவனது லெ·ப்டினென்ட் அந்தக் கடிதங்களைக் அன்றைக்குக் கொண்டு வர வேண்டும். ஆனால் வரும் வழியில் சந்தித்த ஓர் இளைஞன் குதிரையையும், கடிதங்களையும் லெ·ப்டினென்டிடமிருந்து தந்திரமாய்க் களவாடிச் சென்று விட்டான் !

அன்று காலையில் மர்மாக ஓரிளம் பெண் அந்த விடுதிக்கு வந்து தங்குகிறாள்.

நாடகத்தில் பங்கெடுப்பாளர் :

1. நெப்போலியன் (Napolean Bonaparte) : பிரான்சின் சக்ரவர்த்தி (27 வயது)

2. கியூஸெப் கிராண்டி (Guiseppe Grandi) : இத்தாலிய பயண விடுதி அதிபர் (Innkeeper) (40 வயது)

3. பிரென்ச் லெ·ப்டினென்ட் : (24 வயது)

4. ஹெலன் : ஓர் ஆஸ்டிரியப் பெண் (21 வயது)

காலம் / நேரம் : மே மாதம் 12, 1796 காலை நேரம்.

இடம் : வட இத்தாலியில் தவஸ்ஸானோ (Tavazzano on the Road od from Lodi to Milan) ஊரில் உள்ள ஒரு உணவுச் சாவடி (பயண விடுதி)

ஆரம்பக் காட்சி :

(விடுதி அதிபர் கியூஸெப் கிராண்டி பரவசமோடு பரப்பரபாக அங்குமிங்கும் ஓடி நெப்போலியனையும், அவனது படைத் தளபதிகளையும் உபசரிக்கிறான். அவர்கள் விடுதி மேஜைகளில் உள்ள உணவுப் பண்டங்களைத் தின்றுக் கொண்டிருக்கிறார். ஒரு மேஜைக்கு முன் நெப்போலியன் அமர்ந்திருக்கிறான். மேஜையில் ஐரோப்பிய வரைப்படம் ஒன்று விரிக்கப் பட்டுள்ளது. எதிர்ப்புறம் தூரத்தில் ஓர் இளம் பெண் முதல் முறையாக நெப்போலியனை நோக்குகிறாள். படத்தைப் பார்த்த வண்ணம் பசி பொறுக்காமல் மேஜை உண்டிகளை வேகமாய் எடுத்து விழுகிறான் நெப்போலியன். மேஜையில் அறுசுவை உணவுத் தட்டுகள் பல பரப்பிக் காணப் படுகின்றன. பழத் தட்டுகளில் கருந் திராட்சைக் கொத்துக்கள் சிறப்பு விருந்தினருக்கு வைக்கப் பட்டுள்ளன. இடையிடையே நெப்போலியன் திராட்சைக் கொத்துக்களை வாயில் தள்ளுகிறான். நெப்போலியன் தொப்பியும், உடைவாளும் மேஜை மீது தெரிகின்றன. கையில் ஒரு கரித் துண்டை வைத்துக் கொண்டு நெப்போலியன் வரைப்படத்தில் அங்குமிங்கும் வட்டமிடுகிறான். வாயிலிருந்து திராட்சைத் தோலை எடுத்துப் படத்தில் ஒட்டுகிறான்.

கியூஸெப்: (மலர்ந்த முகத்தோடு) இன்று எங்களுக்கு ஒரு பொன்னாள் ! மேன்மை தங்கிய சக்ரவர்த்தி தங்கள் வருகையால் எங்கள் விடுதி பெருமைப் படுகிறது !

Fig. 2
Napoleon Bonaparte Portait

நெப்போலியன்: (படத்தில் முழுக் கவனத்தைச் செலுத்திக் கொண்டு) எதுவும் பேசாதே ! என் கவனத்தைக் கலைக்காதே !

கியூஸெப்: தங்கள் ஆணைப்படி செய்கிறேன் பிரபு .

நெப்போலியன்: (சட்டெனத் திரும்பி) கொஞ்சம் சிவப்பு மை கொண்டு வா !

கியூஸெப்: ஐயோ சக்ரவர்த்தி ! என்னிடம் சிவப்பு மை இல்லையே !

நெப்போலியன்: (கடுமையாக) எதையாவது கொன்று குருதியைக் கொண்டு வா !

கியூஸெப்: (தயங்கிக் கொண்டு) மேதகு சக்ரவர்த்தி ! என்னிடம் எதுவும் இல்லை ! வெளியே உங்கள் குதிரை ! சிப்பாய் ! விடுதியில் என் மனைவி ! மாடி அறையில் ஓரிளம் பெண் !

நெப்போலியன்: (கோபத்துடன்) உன் மனைவியைக் கொல் !

கியூஸெப்: மேதகு சக்ரவர்த்தி ! அது முடியாத காரியம் ! என் மனைவிக்கு என்னை விடப் பலம் உள்ளது ! அவள்தான் என்னைக் கொன்று போட்டு விடுவாள் !

நெப்போலியன்: அப்படியானாலும் சரி ! அல்லது போ வெளியே சிட்டுக் குருவி, காக்கா எதையாவது சுட்டுக் கொண்டு வா ?

கியூஸெப்: எனக்குச் சுடத் தெரியாது பிரபு ! துப்பாக்கியும் கிடையாது ! நான் கொஞ்சம் சிவப்பு ஒயின் கொண்டு வரட்டுமா ?

நெப்போலியன்: ஒயினா ? வேண்டாம். அதை வீணாக்கக் கூடாது !

கியூஸெப்: ஒயின் குருதியை விட மலிவானது பிரபு !

நெப்போலியன்: (ஒயினைக் குடித்துக் கொண்டு) உன்னைப் போன்றவர்தான் உலகில் அதிகம். ஒயினை வீணாக்காதே !

(உருளைக் கிழங்கு மேல் ஊற்றிய குழம்பை எடுத்து வரைப்படத்தில் குறியிட்டுக் கொள்கிறான். வாயைத் துண்டால் துடைத்துக் கொண்டு காலை நீட்டிச் சாய்கிறான்.)

Fig. 3
Napoleonic Wars

கியூஸெப்: (மேஜைத் தட்டுகளை எடுத்துக் கொண்டு) எங்கள் விடுதியில் ஒயின் பீப்பாய்கள் நிறைய உள்ளன. நாங்கள் எதையும் வீணாக்குவ தில்லை. உங்களைப் போன்ற உயர்ந்த ஜெனரல்கள் மலிவான குருதியை நிரம்ப வைத்திருப்பீர் ! ஆனால் நீங்களும் இரத்தம் சிந்துவதில்லை !

(மேஜை மீது யாரோ விட்டுச் சென்ற ஒயின் மிச்சத்தைக் குடிக்கிறான்)

நெப்போலியன்: கியூஸெப் ! குருதிக்குப் பண மதிப்பில்லை ! அதுதான் மலிவு ! ஆனால் பணம் கொடுத்துத்தான் ஒயினை வாங்க வேண்டியுள்ளது ! (கனல் அடுப்பு அருகில் செல்கிறான்)

கியூஸெப்: நான் கேள்விப் பட்டிருக்கிறேன் ! நீங்கள் எதன் மீதும் கவனமாக இருப்பீராம் மனித உயிரைத் தவிர !

நெப்போலியன்: (புன்னகையுடன்) தோழனே ! மனித உயிர் ஒன்றுதான் தானே தன்னைக் கவனித்துக் கொள்கிறது ! (ஆசனத்தில் அமர்கிறான்) உயிருக்குப் பயந்தவன் வாழ முடியாது. சுதந்திரம் வேண்டுமென்றால் கில்லட்டினால்தான் முடியும் ! அமைதியை நிலைநாட்டப் புரட்சியை உண்டாக்க வேண்டும் ! பிரெஞ்ச் புரட்சி நினைவிருக்கிறதா ?

கியூஸெப்: எங்களுக் கெல்லாம் அறிவு மட்டம் உங்களோடு ஒப்பிட்டால் ! வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் உங்கள் சாதிப்புகளின் ரகசியம் என்ன ? தெரியாது எங்களுக்கு !

நெப்போலியன்: நீ இத்தாலியின் சக்ரவர்த்தியாய் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள் ! என்ன புரியுதா ?

Fig. 4
Napoleon European War Lord

கியூஸெப்: அது நிரம்பத் தொல்லை சக்ரவர்த்தி ! அரசாங்கப் பொறுப்பு வேலை யெல்லாம் உங்களுக்குத்தான் ! நான் இத்தாலிக்குச் சக்ரவர்த்தி யானால் என் விடுதியை யார் நடத்துவது ? நான் பரபரப்பாய் விடுதியில் வேலை செய்வது உங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. தாங்கள் ஐரோப்பாவுக்கே மகா சக்ரவர்த்தியாகி இத்தாலிக்கும் வேந்தரானால் அது எனக்கு மிகவும் பிடிக்கும் !

நெப்போலியன்: (புன்னகை புரிந்தவாறு) என் மனதில் உள்ளதை அப்படியே படம் பிடித்துக் சொல்கிறாயே ! ஐரோப்பியச் சக்கரவர்த்தியா ? ஐரோப்பாவுக்கு மட்டும்தானா ?

கியூஸெப்: தவறிச் சொல்லி விட்டேன். உலகத்துக்கே சக்ரவர்த்தியாக வர வேண்டும் தாங்கள் ! ஒருத்தனைப் போல் மற்றொருவன் ! ஒரு நாட்டைப் போல் மற்றொரு நாடு ! ஒரு போரைப் போல் மற்றொரு போர் ! உங்களுக்கு இருக்கும் போர் அனுபவம் யாருக்குள்ளது ? ஒரு நாட்டை முறியடிப்பது போல்தான் அடுத்த நாட்டை பிடிப்பதும் !

நெப்போலியன்: கியூஸெப் ! நீ எனக்கு மந்திரியாக இருக்கத் தகுதி உள்ளவன் ! போரிட்டு அடிமையாக்க வேண்டும் நான் எல்லா நாடுகளையும் ! ஒவ்வொரு நாட்டுக்கும் நான் அதிபதியாய் ஆக வேண்டும் ! ஆசிய நாடுகள் மீதும் எனது கண்ணோட்டம் உள்ளது ! குறிப்பாக பிரிட்டீஷ்காரரை விரட்டி இந்தியாவுக்கும் வேந்தனாக வேண்டும் ! அதற்காக சூயஸ் கால்வாயை வெட்ட நான் திட்டங்கள் தீட்டி வருகிறேன் ! இந்தியாவின் ஏகச் சக்ரவர்த்தி நெப்போலியன் ! மகா அலெக்ஸாண்டர் அப்படித்தான் செய்தார் ! அவர் தரை வழியாகப் போனார் ! நான் கடல் வழியாகப் போகத் திட்டமிடுகிறேன் !

கியூஸெப்: நல்ல யோசனை பிரபு ! ஆனால் அதற்கு முதலில் கால்வாய் வெட்ட வேண்டுமே எகிப்தில் !

Fig. 5
Napoleon Cannon War

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Play :

(A) The Man of Destiny – Plays Pleasant By : Bernard Shaw, Penguin Plays (1966)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 21, 2010)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா