முடிவுக்காலமே வைட்டமின்

This entry is part [part not set] of 54 in the series 20040401_Issue

பா.சத்தியமோகன்.

எதனையும் சட்டெனத் தொடங்கித் தொடங்கிவிடு –
காத்திராத காலம்தான் எதிரே நிற்கிறது … இன்றாகி ஓடுகிறது
எதிரே ஓடுகிறது … நாளையாகிக் காய்கிறது
ரகசியமாகக் கடக்கிறது பழுக்கிறது
யாருடைய சாதனையும் அல்ல
இதுவரை தின்றவை அனுபவித்தவை எவையும் அல்ல
சன்னலை மூடும் காற்றோ புயலோ அல்ல
காலம்தான் எதிரே நிற்கிறது மர்ம நாக்குடன் சப்பு கொட்டி
சொல்லிக் கொண்டே இருக்கும்போதோ
நடந்து கொண்டே இருக்கும்போதோ
உறங்கியபடியே இருக்கும்போதோ
பயணத்தில் இருக்கும்போதோ
சிரித்துவிட்டு ஒரு பிடி உண்டபின் அயரும்போதோ
முடித்துவிடுவேன் உன்னை முடிப்பேன்
தருணம் பார்த்துக் கொண்டேயிருக்கிறது-
மரணம் பார்க்கும் காலம்
அதுதான்
இயங்கும் சக்தியும் தருகிறது
இல்லை இல்லை வைட்டமின் ஊட்டுகிறது
முடிவுக் காலம் தவிர வைட்டமினுக்கு இயக்கு சக்தி உண்டா என்ன
வாழ்த்துக்கள் கேட்கிறது மரணக்காலத்திடமிருந்து
ஓடு ஓடு உன்செயலை அடைந்துகொள்

cdl_lavi@sancharnet.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்

முடிவுக்காலமே வைட்டமின்

This entry is part [part not set] of 47 in the series 20040304_Issue

— பா.சத்தியமோகன்.

****
cdl_lavi@sancharnet.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்