பூங்கொடியாய்

This entry is part [part not set] of 40 in the series 20101114_Issue

செண்பக ஜெகதீசன்


புயற்காலத்தில்
பூக்கள் சிதறிப்போய்விட்டாலும்
போகவில்லை நம்பிக்கை
பூங்கொடிக்கு..
தாங்கிக்கொள்கிறது இடரை,
துவங்கிவிட்டது துளிர்த்துப் படர,
இனி,
குவிந்திடும் பூக்கள்
கூடைகள் நிறைய-
கூட இருந்தது நம்பிக்கை !

வாடிடும் மனிதனே
வந்து பார்
இந்தப் பூங்கொடியை !

-செண்பக ஜெகதீசன்

Series Navigation

செண்பக ஜெகதீசன்

செண்பக ஜெகதீசன்