அன்புள்ள ஆசிரியருக்கு

This entry is part [part not set] of 41 in the series 20091009_Issue

அப்துல் அஸீஸ்


அன்புள்ள ஆசிரியருக்கு

அரிஸ்டாட்டில் பூமி உருண்டை என்று அறிவித்தார் என்று வஹ்ஹாபி திண்ணையில் எழுதியுள்ளார். ஆனால், அவர் பூமியை சூரியன் சுற்றிவருகிறது என்றும் அறிவித்ததாக எழுதியுள்ளார்.

அரிஸ்டாட்டில் அறிவித்தபின்னரும் பூமியை ஒரு இடத்தில் கூட நேரடியாக குரான் உருண்டை என்று கூறவில்லை என்ற என் வாதம் அப்படியே இருக்கிறது. ஒரு இடத்தில் கூட நேரடியாக பூமியை சூரியன் சுற்றிவரவில்லை. பூமிதான் சூரியனை சுற்றி வருகிறது என்று கூறவில்லை.

அவர் கூறப்போகும் தலையைச் சுற்றி மூக்கைதொட்டு தரை உருண்டையானது, தரையை சூரியன் சுற்றவில்லை, சூரியனைத்தான் தரை சுற்றுகிறது என்ற விளக்கங்களை எல்லாம் நானும் படித்துள்ளேன்.

உதாரணமாக, சந்திரனும் சூரியனும் தத்தம் வரையறை செய்யப்பட்ட வழியில் நீந்திச்சென்றுகொண்டிருக்கின்றன என்று இருக்கும் இடத்தில், இவர்களாக தரையையும் சேர்த்துகொண்டுவிடுவார்கள். சூரியன் பூமியை சுற்றி வருகிறது என்னும் பொருளில் எழுதப்பட்டுள்ள வசனத்தை இவர்கள் விளக்கம் கொடுக்கும்போது சூரியன் அண்டவெளியில் பால்வீதியில் சுற்றிவருகிறதை கண்டு சொன்னதாக எழுதிக்கொள்வார்கள். ஆனால், அந்த வசனங்களை பார்க்கும்போது தரையை சூரியனும் சந்திரனும் சுற்றிவருவதைத்தான் அல்லாஹ் கூறுகிறான் என்று தெளிவாக புரிந்துகொள்ளலாம். அப்படி வேறுவிதமாக இருக்கவேண்டுமென்றால் எப்படி இருக்கவேண்டும்? சந்திரன் தரையை சுற்றுகிறது. பூமி சூரியனை சுற்றுகிறது. சூரியனோ பால்வீதியில் சுற்றுகிறது. இவையெல்லாம் அல்லாஹ் செய்த வரைமுறையில் நீந்திக்கொண்டிருக்கின்றன என்றல்லவா இருக்கவேண்டும்? அதுதான் உண்மையென்றால், அதனை அவ்வாறு இறக்க அல்லாஹ்வுக்கு என்ன தடை? அல்லாஹ் அவ்வாறு இறக்கவில்லை என்பதிலிருந்தே உங்களுக்கு தெரியவில்லையா?

“அவை ஒவ்வொன்றும் தனக்கு வரையறை செய்யப் பட்ட வழியில் நீந்திச் சொன்று கொண்டிருக்கின்றன” [021:033] என்று இவர் குறிப்பிடும் இடத்தில் தெளிவாக தரையும் அப்படியே சூரியனை சுற்றி வருகிறது என்று எழுதியிருக்கிறதா என்று படித்து சொல்ல வேண்டுகிறேன். அல்லாஹ் தெளிவான அல்குரானை இறக்கியிருக்கிறான். இவர்கள் சொல்வது போல பொருள் கொள்ளவேண்டுமென்றால், எப்படி தலையை சுற்றி மூக்கை அல்ல இன்னொருவர் மூக்கை தொடுகிறார்கள் என்று அவர்கள் கூறும் விளக்கங்களிலிருந்தே படித்து தெரிந்துகொள்ளலாம். நான் கேட்டது எதற்கும் பதிலில்லாமல் ஏற்கெனவே மற்றவர்களால் எழுதப்பட்டுள்ளதை மறுபடி திண்ணையில் மறுபதிப்பு செய்யமுனைகிறார். ஆகவே அவரது மறுபதிப்புகளுக்கு நான் பதில் சொல்வது வீண். பலர் அரைத்த மாவையே திரும்ப அரைப்பதால், அரையவியல் என்று தனது கட்டுரைக்கு பெயர் வைத்திருக்கிறார் போலிருக்கிறது.

நிரூபிக்கப்பட்ட அறிவியலோடு குரான் மோதாது என்று கூறிக்கொள்கிறார். இவராக ஒரு ரூல் இங்கே எழுதியிருக்கிறார். அதாவது நாளை பரிணாமவியல் நிரூபிக்கப்பட்டுவிட்டால், இவர் அல்குரானில் பரிணாமவியல் இருப்பதை தலையைச் சுற்றி மூக்கை தொடும் விதத்தில் கண்டுபிடித்துவிடுவார் என்று உறுதியாக நம்பலாம். இன்றைக்கு எத்தனை விஞ்ஞானிகள் பரிணாமவியல் நிரூபிக்கப்படவில்லை என்று சொல்கிறார்கள், எத்தனை விஞ்ஞானிகள் பரிணாமவியல் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானம் என்று சொல்கிறார்கள் என்று ஒரு சர்வே எடுத்து, அதில் எது மெஜாரிட்டியோ அதனை வைத்து அல்குரானை விளக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஆனால் பிரச்னை என்னவென்றால், அறிவியலில் எதுவுமே நிரூபிக்கப்பட்டவை அல்ல என்று விஞ்ஞானிகளே சொல்கிறார்கள். நியூட்டன் சொன்னதை ஐன்ஸ்டீன் தப்பு என்று சொல்கிறார். ஐன்ஸ்டீன் சொன்னதை இன்னொருவர் வந்து தப்பு என்று ”நிரூபிப்பார்”. எல்லாம் ”நிரூபிக்கப்பட்ட உண்மைதான்”! இதே போலத்தான் பிக் பேங் தியரி என்ற ஒன்றை அல்குரானில் சொல்லப்பட்டதாக சொல்லிக்கொண்டிருந்தார்கள். இப்போது அப்படி ஒரு பிக் பேங் இல்லை என்று ஒரு கூட்டத்தார் சொல்கிறார்கள். மற்றொரு கூட்டத்தார் ஏராளமான பிக்பேங் நடந்திருக்கலாம் என்று கூறுகிறார்கள். இப்போது அந்த விளக்க உரையை என்ன பண்ணலாம். அல்குரான் தவறு என்று சொல்வார்களா அல்லது தான் எழுதிய விளக்க உரை தவறு என்று சொல்வார்களா?

நான் கேட்ட எந்த கேள்விக்கும் அவர் பதில் கூறவில்லை

1) எந்த இடத்திலாவது நேரடியாக, சூரியன் தரையை சுற்றவில்லை, தரைதான் சூரியனை சுற்றுகிறது என்று அல்லாஹ் இறக்கியுள்ளானா?
2) தரை சமதளம் அல்ல, விரிப்பு அல்ல, அது உருண்டை என்று இறக்கியுள்ளானா?
3) நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தினந்தோறும் அர்ஷுக்கு கீழ் சென்று அல்லாஹ்விடம் அனுமதி பெற்று அடுத்த நாள் உதயமாவதாக அறிவித்துள்ளார்கள். உருண்டை தரையில், சூரியன் மறையுமா? அப்போது நபிகள் நாயகம் (ஸல்) சொன்னது தவறா? அப்படி நபிகள் நாயகம் கூறியது தவறு எனில் அல்லாஹ் உடனே வஹி மூலமாக அதனை திருத்தியிருப்பான். சிந்தித்துப்பாருங்கள்.

ஆகவே மற்றவர்கள் எழுதிய புத்தகங்களிலிருந்து அவர் எடுத்து மறுபதிப்பு செய்வதற்கு நான் பதில் ஏதும் கூறப்போவதில்லை. இங்கே கூறியிருக்கும் கருத்துக்களுக்கு பதில் எழுதினால் மட்டுமே நான் பதில் கூற இருக்கிறேன். விஞ்ஞானம் தக்காளி நல்லது என்று சொன்னால் அதுவும் அல்குரானில் இருக்கிறது. தக்காளி கெட்டது என்று சொன்னால் அதுவும் அல்குரானில் இருக்கிறது என்று வாதம் புரிவதற்கு நான் ஒரு பதிலும் சொல்லபோவதில்லை. அப்படி வாதம் புரிவதுதான் சரி என்று அவர் கருதிக்கொண்டால், அவருக்கே வெற்றி என்று அளித்து இந்த விவாதத்தினை இத்துடன் முற்றுபெற்றுக்கொள்கிறேன்.

வஸ்ஸலாம்
அப்துல் அஸீஸ்
azizabdul1973@yahoo.com

Series Navigation

அப்துல் அஸீஸ்

அப்துல் அஸீஸ்

அன்புள்ள ஆசிரியருக்கு

This entry is part [part not set] of 38 in the series 20090820_Issue

சி.சேகர்.


அன்புள்ள ஆசிரியருக்கு

இந்த வார திண்ணை சில நல்ல கட்டுரைகளுடன் இறுந்தது.

1.காங்கிரஸ் கவனிக்க – சின்ன கட்டுரையானாலும், நல்ல சில பாயிண்டுகளை விளக்கியது. சிதம்பரத்துக்கு வக்காலத்து வாங்குவது டில்லிக்கு ஏன் முக்கியமானது என்பது நல்ல விவாதம்.

2.பொறித்த அப்பள பொறியல் நட்பு – நல்ல கவிதையின் துவக்கம் – உதட்டளவு நட்பில், விரிசல் வருவது அதிசியம் – போன்ற வரிகளைத் தவிர்த்தால் நல்ல கவிதையாய் இருந்திருக்கும்.

3. ஜிக்ஸா விளையாட்டு – சுடோகு,ஜிக்ஸா வழியாக ஒரு கதை சொல்ல முடியும் என ஆச்சர்யமாக இருந்தது..ரா.கிரிதரன் எழுதும் கதைகள் வித்தியாசமான வார்த்தைகளும் நல்ல கருக்களாக இருக்கின்றன.படிக்கவும் சுவாரசியமாக இருக்கிறது.

4. அதிரை தங்க செல்வராஜின் கட்டுரைகள்/கதைகள் எல்லாமே சரியாக format செய்யாததுபோல் வரிகள் இருக்கின்றன.சரி செய்தால் படிக்க சுலபமாக இருக்கும்.காடு குறித்த கட்டுரை – எளிய அறிமுகம் போல் இருந்தாலும் நல்ல பார்வை.

5. பேய் பயம் பற்றி கே.பாலமுருகனின் கட்டுரை நன்றாக இருந்தது.அமானுட குரலாக இருக்கக் கூடாதென எண்ணுகிறேன்.

என் தரப்பிலிருந்து சில கோரிக்கைகள்.

அ. சில விமர்சனங்களைப் போட கதை, கட்டுரைகளுக்கு வசதியிருந்தால் உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளலாம்,
ஆ. சி.ஜெயபாரதன், ரா.கிரிதரனின் தமிழாக்கங்கள் நன்றாக இருந்தாலும் மூல நூல்கள் இணையத்தில் இருந்தால் பகிர்ந்து கொள்ளலாமே? தமிழக்கம் செய்ய விருப்பமுள்ளவர்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம்.

நன்றி.
சி.சேகர்.
csekhar151@googlemail.com

Series Navigation

சி.சேகர்

சி.சேகர்

அன்புள்ள ஆசிரியருக்கு

This entry is part [part not set] of 41 in the series 20050415_Issue

அருளடியான்


அன்புள்ள ஆசிரியருக்கு,

அரவிந்தன் நீலகண்டன், ‘ஈ.வெ.ரா. பித்தம் தெளிய சோ என்ற மருந்தொன்று இருக்குது ‘ என்று எழுதியுள்ளார். மறைந்த கவிஞர் குடியரசு, துக்ளக் ஆசிரியர் சோவை ‘துளி விஷம் ‘ என்று ஒரு கவியரங்கத்தில் குறிப்பிட்டார். சோவின் ஓரெழுத்துப் பெயருக்கு துளி என்ற சொல் என்றால், அவரது எழுத்துக்களைச் சுட்ட விஷம் என்ற சொல். முழு உணவையும் நஞ்சாக்க துளி விஷம் போதுமே! தமிழனின் கலை, பண்பாடு என்ற உணவில் சோ, தன் திரைப்பட நடிப்பு, நாடகம், பத்திரிக்கை, அரசியல் பங்கேற்பு என துளி துளியாய் விஷம் கக்கியவர். அந்த விஷமே அரவிந்தன் நீலகண்டனுக்கு மருந்தாய் தெரிவது வியப்பில்லை. சிறுபான்மையினர் மீதான வெறுப்பில், சோவுக்கு அண்ணன் தானே அரவிந்தன் நீலகண்டன் ? சோ, மாநிலங்களவை உறுப்பினராய் தமிழ் நாட்டுக்கும், தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும் என்ன நன்மை செய்தார் ? தமிழ் நாட்டுக்கு காவிரி நீரில் உள்ள உரிமையை நிலை நாட்ட என்ன செய்தார் ? தமிழர்கள் வெறுத்த வகுப்புவாதத்தை இந்திய தேசியத்தின் பெயரால் அவர்கள் மீது திணித்ததைத் தவிர சோ தமிழ் மொழிக்கும், தமிழ் நாட்டுக்கும், தமிழர்களுக்கும் செய்தது என்ன ? தமிழுக்கு செம்மொழி தகுதி தரப்பட்டதை கிண்டல் செய்தார். தனித் தமிழ் ஈழம் அமைவதை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். இந்தித் திணிப்பை ஆதரித்து எழுதினார். மண்டல் குழு அறிக்கையை எதிர்த்தார். நள்ளிரவு கலைஞர் கைதை தமிழகமே கண்டித்த போது, அதை ஆதரித்தார். சங்கராச்சாரி

கைதை தமிழகமே ஆதரித்த போது, அதைக் கண்டித்தார். பெண்கள் வேலைக்கு செல்வதை சங்கராச்சாரியாரைப் போலவே கிண்டல் செய்தார். பெண்ணடிமையை வலியுறுத்தி கேள்விகளுக்கு பதிலாகவும், கட்டுரைகளாகவும் எழுதியவர். நடிகர் எஸ்.வி.சேகர், ஆர். எஸ். எஸ், இந்து முண்ணணி ஆதரவாளராகவும், சங்கராச்சாரியாரின் சேவகராகவும் இருந்தார். இப்போது, ஜெயலலிதாவின் தொண்டராக மாறி விட்டார். எஸ்.வி. சேகர், தன் நகைச்சுவைப் பேச்சால் கூட்டம் சேர்க்கிறார். சற்று வயதான எஸ்.வி. சேகர் தான் சோவே தவிர, சோ ஓர் அறிஞரோ, தமிழர்களுக்கு நன்மை செய்தவரோ கிடையாது. பரினாம வளர்ச்சி என்பது டார்வினின் ஒரு கோட்பாடு தானே தவிர நிரூபிக்கப் பட்ட அறிவியல் உண்மை அல்ல. பரினாம வளர்ச்சிக் கோட்பாடு மீது ஆழ்ந்த காதல் உள்ள இந்துத்துவவாதியான அரவிந்த நீலகண்டனைப் போல, பரினாம வளர்ச்சிக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாத நாத்திகர்களும் உள்ளனர். பரினாம வளர்ச்சிக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்பவர்களுடன் மேடையை பகிர்ந்து கொள்வது பிற்போக்குத் தனம் அல்ல. மாறாக, திராவிட இயக்க எதிர்ப்பு என்ற ஒற்றை நோக்கத்துக்காக, சோ போன்றவர்களை தலை மீது வைத்து தூக்கிக் கொண்டாடுவது தான் பிற்போக்குத் தனம்.

நன்றி!

அன்புடன்

அருளடியான்

Series Navigation

அருளடியான்

அருளடியான்