---மதுரபாரதி இது தெரிந்த பாடல்தான் இன்று ஏன் வேறாய்ப் புரிபட்டது ? நெடுநாளாய்த் தெரிந்ததாய் முடிவுகட்டிவிட்டதுதானே. எங்கிருந்து நுழைந்தது சிலிர்க்கவைக்கும் நவமான செம்பொருள்! வார்த்தைகளில், அவை நிற்கும் வரிசையில், கோர்த்த கட்டமைப்பில் கொஞ்சமும் மாற்றமில்லை.…
புகாரி ஓ பெண்ணே நீ போகாதே பின்னே நீ பின்னுக்குப்போனால் வாழ்க்கை மண்ணாகிப் போகும் உன் கண்ணுக்கு முன்னே O போராடு யாரையும் சாகடிக்க அல்ல உன்னையே நீ வாழ வைக்க உன்னோடு இந்த…
கவிநயா அன்புதான் காரணம்... அரிதான செடி இதென்று அருகினில் சென்றேன் தொடும் முன்னே துவண்டது அந்த தொட்டாற் சுருங்கி அழகான மலர் இதென்று அதிசயித்தேன் ஸ்பரிசிக்கையில் குத்தியது ரோஜாவின் முள் பஞ்சு போல் மென்மையென்று…
-மோனிகா நறுமுகைப் பொய்கையும் நாற்புரமுயர்ந்த மலைகளும் முப்பத்து முன்னூறு தேவரும் முகிற் படுகையும் இப்பிறவியும் இன்னும் பலபிறவி கொண்டு செல்லும் நாழிகையும் தாண்டற்ப் பாடின்றி தாமெடுத்த அடி நோகாமல் இட்ட அடி இங்கே இப்புவியதனில்…
செங்காளி அன்றொருநாள் மாலையிலே அண்ணா சாலையிலே நண்பர்தனைக் கண்டுவிட்டு நான்வந்த வேளையிலே சற்றேனும் இளைப்பாற சரியான இடம்தேடி சிற்றுண்டிச் சாலைநோக்கிச் செல்லும் போதினிலே அருகில் யாரோவெனை அழைத்தகுரல் கேட்டதுவே. திரும்பிப் பார்த்தவுடன் தெரிந்தது எனக்கங்கே…
நாக.இளங்கோவன் ---- மடமை என்பதும் மயக்கம் என்பதும் கடமை என்னும் கயவர் கூட்டம்; பெருமை அறியாப் புல்லர் கூட்டம் அருமை தெரியா அற்பர் கூட்டம்; கண்ணகி சிலையை கடத்திய போதில் விண்ணது அழுதே வெட்கிப்…
நா.கண்ணன் பனியில் சிறுத்து இலைகள் உதிர்த்து மலையில் நிமிர்ந்து வானை முட்டிய மரத்தின் நுனியில் நின்றது அந்த ஒற்றைக்கூடு. ஒரு குடும்பம் வாழ்ந்த வீடு! வாழ்வு சுருங்கி சுயம் அடங்குதலும் சுழற்சியே. மீண்டும் ஒரு…
சத்தி சக்திதாசன் சுதந்திரத்தின் விலை என்ன ? சுதந்திரமான மனிதனே விடையொன்று பகர்வாய் ! சுதந்திரத்தின் விலை என்ன ? அடுப்பங்கரையினில் பானைகள் வெறுமையாய் ஆத்தங்கரையினில் வயிறுகள் வெறுமையாய் வெறுமைகள் இன்று வறுமைகளின் வாழ்க்கையாய்…
நாகூர் ரூமி ==== நா செத்துப் போயிட்டதா நெனச்சுக்குங்குங்கன்னு ரெண்டு வருஷம் கழிச்சு சொன்ன உன் குரலைக் கேட்டுத்தான் எனக்கு உயிரே வந்தது. -- 2:20 AM 04/03/04 ruminagore@yahoo.com
இராம.கி. ஓரடிக் கலங்கல் ஒட்டிய கிணற்றில்; வாரிய வழங்கலோ(1) நின்றுபல் வாரம்; புரைநீர்(2) தூர்ந்ததோ போந்த மாதமே; கண்ணிமை ஆழ்வரி; கருத்தெலாம் தேடல்; விண்ணிலே எங்கும் வெள்ளையாய்ப் பஞ்சுகள்; வாய்நகை யோடு வறட்சியை அறிதரும்,…