தேனம்மை லெக்ஷ்மணன்கனவுகள் மேலிமைக்குள்ளிருந்து கீழிமைவழி கசிந்தன. புத்தக வாசத்தோடே பலகனவுகளும். அச்சிலிடப்பட்ட சிறுபத்ரிக்கையும் ஆளையடித்துத் திரிசங்காக்குகிறது இன்னும் பேர்காணும் பேரின்பம் வேண்டி. பெரிய விதையாயிருந்தும் கிளைப்பது சின்னச்செடி தலை சுற்றிப் பார்க்கிறது சிறு விதை…
சி ஹரிஹரன்தினம் தினம் தேடப்படும் நினைவுகளின் வழியே ஊடுருவிசெல்லும் பார்வைகள் அவளுடயதாகின் நேரங்கள் பார்வைக்கு சற்று அப்பாற்பட்டவையாக தோன்றுகின்றன. கரையும் நேரங்களின் கடைசி துளியின் ஓரத்தில் தேடப்படும் அவளின் முகங்கள் ஓவியதீட்டை போலவே இருக்கின்றன…
ரவிஉதயன்மிருதுவாக்கிய அடி நுனி ஆணியை நடுநாக்கில் தொட்டெடுத்து சொடுக்கிச் சுழற்ற தரையில் மிதக்கிறது வண்ணக் குமிழி. சாட்டைக் கையிற்றில் எத்திஎடுத்து உள்ளங்கையில் விடுகிறான். அட்சய ரேகையிலிருந்து இடம் மாறி சிறுவனது ஆயுள்ரேகையின் மீது பயணிக்கிறது…
இளங்கோ வார்த்தைகளின் வேலிப் படலைத் திறந்து வைத்திருக்கிறேன் என் மனவெளியை சூறையாடிக் கொள் நேற்றிரவு உரையாடலின் குளம் இன்னும் தளும்பிக் கொண்டிருக்கிறது அதில் உன் மௌனக் கொக்கு ஒற்றைக் காலில் நி ற் கி…