ஒரு நூலும் மூன்று வெளியீட்டு நிகழ்வுகளும் சென்னையில் “எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா

This entry is part [part not set] of 33 in the series 20100815_Issue

எஸ். நரசிம்மன்

டிசம்பர் 31, 2009 அன்று சென்னைப் புத்தகக் கண்காட்சி வளாகத்தில், காலச்சுவடு அரங்கில் செ.முஹம்மது யூனுஸ் அவர்களின் “எனது பர்மா குறிப்புகள்” நூல் வெளியிடப்பட்டது.

ஹாங்காங் இந்தியர்களால் ‘யூனூஸ் பாய்’ என்று அன்போடு அழைக்கப்படும் யூனூஸ் அவர்கள், 43 ஆண்டுகளுக்கு முன்னால் பர்மாவிலிருந்து ஹாங்காங்கிற்குப் புலம் பெயர்ந்தவர். அதற்கு முன்னர், அவர் 42 ஆண்டுகள் வாழ்ந்த, பிறந்து வளர்ந்த ‘பர்மியத் திருநாட்’டைப் பற்றி இந்த நூலில் சொல்கிறார். இந்த நூல் பர்மீயத் தமிழர்களின் வாழ்வு, கலாச்சாராம், கலை, அரசியல், இலக்கியம் அனைத்தையும் தொட்டுச் செல்கிறது.

புத்தகக் கண்காட்சி அன்றும் ஜனத்திரள் மிகுந்து காணப்பட்டது. இப்போதெல்லாம் எல்லா கண்காட்சிக்கும் வந்து சுற்ற நிறையப் பேர் இருக்கிறார்கள். என்றாலும், இங்கே ஆர்வலர்களின் எண்ணிக்கை அதிகம் . நூல் விற்பனையும் அதிகம் என்கிறார்கள்.

காலச்சுவடு இதழும் அதன் பதிப்புகளும் மட்டுமல்ல, அப்பதிப்பகத்தின் நூல் வெளியீடும் வித்யாசமாகத்தான் இருக்கிறது. கண்காட்சி நடந்த டிசம்பர் 30, 2009 முதல் ஜனவரி 10, 2010 வரை, ஒவ்வொரு தினமும் ஒன்றோ இரண்டோ நூல்கள் வெளியிடப்பட்டன. இந்த வெளியீட்டு நிகழ்வுகள் காலச்சுவடு அரங்கிலேயே நடந்தன. விளம்பரங்கள் கிடையாது, விழா மேடை இல்லை, பொன்னாடையும், மாலை மரியாதையும் இல்லை, வார்த்தைப் பந்தல்கள் இல்லை.

“எனது பர்மா குறிப்புகள்” வெளியிடப்பட்ட டிசம்பர் 31 அன்று ஹாங்காங் இலக்கிய வட்டத்தின் (www.ilakkyavattam.com) உறுப்பினர்கள் பத்துப் பேர்- தற்போது சென்னையில் வசிப்பவர்கள், அல்லது விடுமுறைக்குச் சென்னை வந்திருந்தவர்கள்- நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள். மற்றபடி கண்காட்சிக்கு அந்நேரம் வந்திருந்தவர்களே பார்வையாளர்களாய் அமைந்தனர்.

காலச்சுவடு ஆசிரியர் தேவிபாரதி தனது வரவேற்புரையில் நூலைக் குறித்தும் தொகுப்பாசிரியரைக் குறித்தும் சுருக்கமாகப் பேசினார். சென்னை வங்கி ஒன்றின் மேலாளர் எஸ். நரசிம்மன் நூலை வெளியிட்டு மதிப்புரை வழங்கினார், ‘மதுரை பிரஸ்’ கே. முரளிதரன் நூலைப் பெற்றுக்கொண்டார். தொகுப்பாசிரியர் மு இராமனாதன் ஏற்புரை நிகழ்த்தினார். எளிய,ஆனால் ஒரு நிறைவான நிகழ்வாக அமைந்தது.

எண்பத்தைந்து வயது இளைஞர் யூனுஸ் பாயின் அர்த்தம் தோய்ந்த பர்மீய வாழ்க்கையின் சில பக்கங்களை புரட்டிக் காட்டுகிறது இந்நூல். நூலை வெளியிட்ட எஸ்.நரசிம்மன், முன்பே, ஹாங்காங்கில் யூனுஸ் பாயுடன் பழகியிருந்தாலும், இந்நூலைப் படித்தபோது தனக்குத் தோன்றிய புதிய பரிமாணங்களைப் பற்றிப் பேசினார்.

அன்பு என்ற ஒரே ஆயுதம் கொண்டு தன் வாழ்வைச் சிறப்பாக நடத்த முடியும்

என்று வாழ்ந்து காட்டிய யூனுஸ் பாய், பர்மாவில் தமிழர்கள் சிறப்பாக வாழ்ந்த காலம் தொடங்கி, கண்ணீரும் கவலையும் கொண்டு வெளியேறிய அனுபவங்கள் வரை, மிகை இன்றி, நேர்மையாக,ஒரு வரலாற்றுச் சாட்சியமாக பதிவு செய்திருக்கிறார்.

யூனுஸ் பாய் ஒரு வித்தியாசமான மனிதர் என்றால், அவரது பர்மிய வாழ்க்கை ஒரு நூல் வடிவானது இன்னொரு வியப்பான நிகழ்வு. இதற்கான பெருமை ஹாங்காங்கில் பொறியாளராகப் பணியாற்றிக்கொண்டே தமிழிலும் எழுதி வரும் மு இராமனாதன் அவர்களைச் சேரும்.

யூனஸ் பாயைப் பல முறை சந்தித்து, அவர் சொன்னவற்றை ஒலிப்பதிவு செய்து, ஆர்வமுள்ள நண்பர்களைக் கூட்டி, ஒரு குழு அமைத்து, ஒலிவடிவத்தை எழுத்துக்கு கொணர்ந்து, மீண்டும் அவற்றை வகைப்படுத்தி, எடிட் செய்து, இனம் பிரித்து, நூலாகத் தொகுத்த அனுபவத்தை இராமனாதன் தனது ஏற்புரையில் பகிர்ந்து கொண்டார். அதையே தனி நூலாக எழுதலாம் போல் இருந்தது.

இப்படிப்பட்ட ஒரு மாமனிதரின் வாழ்க்கையின் சில பகுதிகளைச் சிறப்பாகத் தொகுத்த இராமனாதனுக்கும், செம்மையாக வெளியிட்டிருக்கும் காலச்சுவடு கண்ணனுக்கும் நன்றி.

snntamil@gmail.com

சென்னை வங்கி ஒன்றின் மேலாளர் எஸ். நரசிம்மன் நூலை வெளியிட, ‘மதுரை பிரஸ்’ கே. முரளிதரன் நூலைப் பெற்றுக்கொண்டார். நடுவே தொகுப்பாசிரியர் மு இராமனாதன் (மேலதிகப் படங்களுக்கு:

http://picasaweb.google.com/yoonusbhai.function/ChennaiBookLaunch#)

*****************

காரைக்குடியில் “எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா

ரெ.சந்திரமோகன்

பிப்ரவரி 13, 2010 சனிக்கிழமையன்று காரைக்குடிப் புத்தகத் திருவிழாவில் செ.முஹம்மது யூனூஸ் அவர்களின் “எனது பர்மா குறிப்புகள்” நூலின் வெளியீட்டு விழா நடைபெற்றது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினரும், தொழிலதிபருமான சக்தி அ.திருநாவுக்கரசு தலைமை வகித்து நூலினை வெளியிட்டார். பேராசிரியர் டாக்டர் அய்க்கண் முதல் பிரதியை பெற்றுக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். இராமசாமி தமிழ்க் கல்லூரி முதல்வர் முனைவர் நா.வள்ளி திறானாய்வுரை நிகழ்த்தினார். நூலின் தொகுப்பாசிரியர் மு இராமனாதன் ஏற்புரை வழங்கினார்.

ஆசிரியர்கள் தாம் நூலை நேராக எழுதுவார்கள். ஆனால் இந்த நூலில் முஹம்மது யூனூஸ் பேசப் பேச அதைக் கேட்டு, எழுதி, தொகுத்து வெளியிட்டிருக்கிறார் இராமனாதன்; இதற்காக இரண்டாண்டு காலம் உழைத்திருக்கிறார், இந்த முயற்சி பாரட்டப்பட வேண்டியது என்று பேசினார் சக்தி அ.திருநாவுக்கரசு. இது நூல் தயாரிப்பில் ஒரு புதிய முறை. இதே முறையில் வள்ளல் அழகப்பச் செட்டியாரின் வரலாற்றை அவரது சமகாலத்தில் வாழ்ந்தவர்களிடம் கேட்டறிந்து ஆவணப்படுத்த வேண்டும் என்கிற விருப்பத்தையும் தெரிவித்தார்.

டாக்டர் அய்க்கண் தனது சிறப்புரையில், இந்த நூலின் நாயகன் முஹம்மது யூனூஸ் ஒரு சாமானியன்தான். ஆனால் இந்த நூலில் அவர் உண்மையைச் சொல்கிறார், ஒளிவு மறைவின்றி நேர்மையோடு சொல்கிறார், எளிமையாகச் சொல்கிறார், நினைவாற்றலோடு சொல்கிறார், இவையே இந்த நூலை வெகு சிறப்பான ஒன்றாக ஆக்கியிருக்கிறது என்றார். நூலின் ஒவ்வொரு வரியிலும் உயிரோட்டம் இருக்கிறது, பல்வேறு அரிய பதிவுகளும், அனுபவத்தில் தோய்ந்த யதார்த்தமான விமர்சனங்களும், அவை அக்கால சாமானியனின் உணர்வுகளாகவும், எந்தவிதச் சார்பும் இல்லாமல் அமைந்திருப்பதையும் பாராட்டினார். ஒரு தமிழ் நூல் மிகச் சிறந்த கட்டமைப்போடு வெளியாகியிருக்கிறது என்று கூறி நூலை வெளியிட்டிருக்கும் காலச்சுவடு பதிப்பகத்தையும் பாராட்டினார்.

பர்மீயர்கள் எவ்வளவு அன்பாக நம்மை நடத்தினர் என்றும், காலப்போக்கில் அது எப்படி வெறுப்பாக மாறியது என்றும், இந்தியாவின் பல பகுதிகளைச் சார்ந்தவர்கள் பர்மாவில் எவ்வாறு வாழ்ந்தனர் என்றும், நூலில் இடம் பெறும் பல பதிவுகளைக் குறித்து விரிவாகப் பேசினார் காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரி முதல்வர் முனைவர் நா.வள்ளி. இந்த நூல், யூனூஸ் அவர்களைச் சந்திக்க வேண்டும் என்கிற ஆவலை அவருக்கு ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறினார். இது புரட்டிக் கொண்டு போக வேண்டிய நூலல்ல, எழுத்து எண்ணிப் படிக்க வேண்டிய நூல் என்று பாராட்டினார். தொகுப்பாசிரியர் முன்னுரையோடு விலகி நின்று கொண்டாலும் அவரது உழைப்பை நூல் நெடுகிலும் பார்க்க முடிகிறது என்றார்.

தனது ஏற்புரையில் தொகுப்பாசிரியர் மு. இராமனாதன், யூனூஸ் பாய் ஒரு மகத்தான மனிதர் என்றும், இந்த நூலைத் தொகுக்கும் எண்ணம் தனக்கு எவ்விதம் ஏற்பட்டது என்றும், அது நண்பர்களின் உதவியோடு எவ்விதம் சாத்தியமானது என்றும் விளக்கினார். கரைபுரண்டு சுழித்துக் கொண்டு ஓடும் யூனுஸ் பாயின் அனுபவங்களிலிருந்து தான் முகர்ந்திருப்பது ஒரு குடம் நீர்தான் என்றார். தான் பிறந்த வளர்ந்த மண்ணில், தமிழ் கற்ற கம்பன் மணிமண்டப முற்றத்தில் இந்த நூல் வெளியிடப்பட்டதில் தான் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.

தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி இயற்பியல் துறைப் பேராசிரியர் முனைவர் ரெ.சந்திரமோகன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

chandramohan@rediffmail.com

சக்தி அ. திருநாவுக்கரசு நூலை வெளியிடபேராசிரியர் டா க்டர் அய்க்கண் பெற்றுக் கொள்கிறார். மற்றவர்கள் (இ-வ) இராம. நாராயணன், மு இராமனாதன் (தொகுப்பாசிரியர்) மற்றும் பேராசிரியர் முனைவர் நா.வள்ளி ஆகியோர் (மேலதிகப் படங்களுக்கு: http://picasaweb.google.com/yoonusbhai.function/KaraikudiBookLaunch#)

*****************

ஹாங்காங்கில் “எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா

காழி அலாவுதீன்

செ முஹம்மது யூனூஸ் அவர்களின் “எனது பர்மா குறிப்புகள்” நூலின் ஹாங்காங் வெளியீட்டு விழா சனிக்கிழமை, 20 பிப்ரவரி 2010 அன்று நடைபெற்றது. ஹாங்காங் இந்திய முஸ்லிம் சங்கம், தமிழ்ப் பண்பாட்டுக் கழகம், ஹாங்காங்கில் தமிழ் வகுப்புகள் நடத்தி வரும் இளம் இந்திய நண்பர்கள் குழு மற்றும் இலக்கிய வட்டம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த விழா, யூனூஸ் அவர்களின் பாராட்டு விழாவாகவும் அமைந்தது.

ஹாங்காங்கின் பிப்ரவரிக் குளிரைப் பொருட்படுத்தாமல் வந்திருந்த 350க்கும் மேற்பட்ட அன்பர்களால் அரங்கு நிரம்பியிருந்தது. யூனூஸ் பாய் தன் அன்பாலும் பண்பாலும் அவர்கள் மனதில் இடம் பெற்றிருப்பதை உணர முடிந்தது. அன்பர்களின் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தொடர்ந்து ப குருநாதன் மற்றும் நளினி ராஜேந்திரன் ஆகியோர் நூலின் சிறப்புகளைக் குறித்துப் பேசினார்கள்.

மு இராமனாதன் இப்படியான நூலுக்குத் தமிழில் முன்மாதிரி உள்ளதா என்று தனக்குத் தெரியவில்லை என்றார். இதில் ஒரு காலகட்டத்தின் வரலாறு, சமூகம், கலை, இலக்கியம், சமயம் என்று பலவும், சமூக அக்கறை மிகுந்த ஒரு தனிமனிதரின் பார்வை வழியாக விரிகிறது என்றார். நூலின் உள்ளடக்கத்தைப் போலவே இது உருவாக்கப்பட்ட முறையும் புதுமையானது என்றார். யூனூஸ் பாயின் நேர்காணல்களை இலக்கக் கோப்புகளாகப் பதிவு செய்து, தான் அவற்றை நண்பர்களுக்குப் பகிர்ந்தளித்ததையும், நண்பர்கள் அவற்றைக் கேட்டு, கூகிள் ஆவணங்களில் தட்டச்சு செய்ததையும், பிறப்பாடு இவை இயல் வாரியாகத் தொகுக்கப்பட்டு எடிட் செய்யப்பட்டதையும் விளக்கினார்.

நூலை வெளியிட்ட ஹாங்காங் இந்தியத் தூதர் மாண்புமிகு எல்.டி. ரால்டே, இந்த அரிய நூலை ஆங்கிலத்தில் பெயர்க்க வேண்டுமென்றார். யூனூஸ் பாய் ஹாங்காங்கைப் பற்றிய தமது அனுபவங்களையும் நூலாக எழுதி வெளியிட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

நூலைப் பெற்றுக் கொண்டு சிறப்புரை ஆற்றிய பேராசிரியர் சுப வீரபாண்டியன் இணையத்தை வெகு சிறப்பாகப் பயன்படுத்தியமையும் ஒரு குழுவாக இயங்கி நூலை உருவாக்கிய முறையும் புதுமையானது என்று பாராட்டினார். இந்த நூல் புனைவற்றவை(non fiction) என்ற வகையிலேயே வரும், என்றாலும் ஒரு புனைவைப் போல சுவையாகச் சொல்லப்பட்டிருக்கிறது என்றார். நூலில் உள்ள பல பதிவுகள் வேறெங்கும் வாசிக்கக் கிடைக்காதவை, இந்த நூல் தமிழ்ச் சமூகத்திற்கு யூனூஸ் பாய் வழங்கும் கொடை என்று பாராட்டினார். நூலில் இருந்து பல மேற்கோள்களைச் சுட்டிக் காட்டி யூனூஸ் பாயின் நினைவாற்றலையும், தன்னடக்கத்தையும் போற்றினார். நூலில் உள்ள இரண்டொரு தவறுகளைச் சுட்டிக் காட்டவும் அவர் தவறவில்லை

யூனூஸ் பாய் யாவர்க்கும் நன்றி கூறினார். இந்த நூலைப் படித்தவர்கள் சொல்லும் பாராட்டுரைகள் தனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்றும், நண்பர்களின் ஒத்துழைப்பு இருந்தால் அடுத்த நூலையும் எழுதலாம் என்றார்.

கவிதா குமார் மற்றும் ஆர்.அலமேலு ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.

kazhi.mms@gmail.com

மாண்புமிகு எல். டி. ரால்டே, ஹாங்காங் இந்தியத் தூதர் நூலை வெளியிட பேராசிரியர்.சுப வீரபாண்டியன் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார். இடது புறம் செ. முஹம்மது யூனூஸ், வலதுபுறம் நூலின் தொகுப்பாசிரியர் மு இராமனாதன் (மேலதிகப் படங்களுக்கு: http://picasaweb.google.com/yoonusbhai.function/HongKongBookLaunch?feat=directlink)

**************

(எனது பர்மா குறிப்புகள், செ.முஹம்மது யூனூஸ், தொகுப்பு: மு.இராமனாதன், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோயில். விலை.ரூ165)

Series Navigation

எஸ். நரசிம்மன்

எஸ். நரசிம்மன்

ஒரு நூலும் மூன்று வெளியீட்டு நிகழ்வுகளும் சென்னையில் “எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா எஸ். நரசிம்மன்

This entry is part [part not set] of 44 in the series 20100807_Issue

ஒரு நூலும் மூன்று வெளியீட்டு நிகழ்வுகளும்
சென்னையில் “எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா
எஸ். நரசிம்மன்

டிசம்பர் 31, 2009 அன்று சென்னைப் புத்தகக் கண்காட்சி வளாகத்தில், காலச்சுவடு அரங்கில் செ.முஹம்மது யூனுஸ் அவர்களின் “எனது பர்மா குறிப்புகள்” நூல் வெளியிடப்பட்டது.

ஹாங்காங் இந்தியர்களால் ‘யூனூஸ் பாய்’ என்று அன்போடு அழைக்கப்படும் யூனூஸ் அவர்கள், 43 ஆண்டுகளுக்கு முன்னால் பர்மாவிலிருந்து ஹாங்காங்கிற்குப் புலம் பெயர்ந்தவர். அதற்கு முன்னர், அவர் 42 ஆண்டுகள் வாழ்ந்த, பிறந்து வளர்ந்த ‘பர்மியத் திருநாட்’டைப் பற்றி இந்த நூலில் சொல்கிறார். இந்த நூல் பர்மீயத் தமிழர்களின் வாழ்வு, கலாச்சாராம், கலை, அரசியல், இலக்கியம் அனைத்தையும் தொட்டுச் செல்கிறது.

புத்தகக் கண்காட்சி அன்றும் ஜனத்திரள் மிகுந்து காணப்பட்டது. இப்போதெல்லாம் எல்லா கண்காட்சிக்கும் வந்து சுற்ற நிறையப் பேர் இருக்கிறார்கள். என்றாலும், இங்கே ஆர்வலர்களின் எண்ணிக்கை அதிகம் . நூல் விற்பனையும் அதிகம் என்கிறார்கள்.

காலச்சுவடு இதழும் அதன் பதிப்புகளும் மட்டுமல்ல, அப்பதிப்பகத்தின் நூல் வெளியீடும் வித்யாசமாகத்தான் இருக்கிறது. கண்காட்சி நடந்த டிசம்பர் 30, 2009 முதல் ஜனவரி 10, 2010 வரை, ஒவ்வொரு தினமும் ஒன்றோ இரண்டோ நூல்கள் வெளியிடப்பட்டன. இந்த வெளியீட்டு நிகழ்வுகள் காலச்சுவடு அரங்கிலேயே நடந்தன. விளம்பரங்கள் கிடையாது, விழா மேடை இல்லை, பொன்னாடையும், மாலை மரியாதையும் இல்லை, வார்த்தைப் பந்தல்கள் இல்லை.

“எனது பர்மா குறிப்புகள்” வெளியிடப்பட்ட டிசம்பர் 31 அன்று ஹாங்காங் இலக்கிய வட்டத்தின் (www.ilakkyavattam.com) உறுப்பினர்கள் பத்துப் பேர்- தற்போது சென்னையில் வசிப்பவர்கள், அல்லது விடுமுறைக்குச் சென்னை வந்திருந்தவர்கள்- நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள். மற்றபடி கண்காட்சிக்கு அந்நேரம் வந்திருந்தவர்களே பார்வையாளர்களாய் அமைந்தனர்.

காலச்சுவடு ஆசிரியர் தேவிபாரதி தனது வரவேற்புரையில் நூலைக் குறித்தும் தொகுப்பாசிரியரைக் குறித்தும் சுருக்கமாகப் பேசினார். சென்னை வங்கி ஒன்றின் மேலாளர் எஸ். நரசிம்மன் நூலை வெளியிட்டு மதிப்புரை வழங்கினார், ‘மதுரை பிரஸ்’ கே. முரளிதரன் நூலைப் பெற்றுக்கொண்டார். தொகுப்பாசிரியர் மு இராமனாதன் ஏற்புரை நிகழ்த்தினார். எளிய,ஆனால் ஒரு நிறைவான நிகழ்வாக அமைந்தது.

எண்பத்தைந்து வயது இளைஞர் யூனுஸ் பாயின் அர்த்தம் தோய்ந்த பர்மீய வாழ்க்கையின் சில பக்கங்களை புரட்டிக் காட்டுகிறது இந்நூல். நூலை வெளியிட்ட எஸ்.நரசிம்மன், முன்பே, ஹாங்காங்கில் யூனுஸ் பாயுடன் பழகியிருந்தாலும், இந்நூலைப் படித்தபோது தனக்குத் தோன்றிய புதிய பரிமாணங்களைப் பற்றிப் பேசினார்.

அன்பு என்ற ஒரே ஆயுதம் கொண்டு தன் வாழ்வைச் சிறப்பாக நடத்த முடியும்
என்று வாழ்ந்து காட்டிய யூனுஸ் பாய், பர்மாவில் தமிழர்கள் சிறப்பாக வாழ்ந்த காலம் தொடங்கி, கண்ணீரும் கவலையும் கொண்டு வெளியேறிய அனுபவங்கள் வரை, மிகை இன்றி, நேர்மையாக,ஒரு வரலாற்றுச் சாட்சியமாக பதிவு செய்திருக்கிறார்.

யூனுஸ் பாய் ஒரு வித்தியாசமான மனிதர் என்றால், அவரது பர்மிய வாழ்க்கை ஒரு நூல் வடிவானது இன்னொரு வியப்பான நிகழ்வு. இதற்கான பெருமை ஹாங்காங்கில் பொறியாளராகப் பணியாற்றிக்கொண்டே தமிழிலும் எழுதி வரும் மு இராமனாதன் அவர்களைச் சேரும்.

யூனஸ் பாயைப் பல முறை சந்தித்து, அவர் சொன்னவற்றை ஒலிப்பதிவு செய்து, ஆர்வமுள்ள நண்பர்களைக் கூட்டி, ஒரு குழு அமைத்து, ஒலிவடிவத்தை எழுத்துக்கு கொணர்ந்து, மீண்டும் அவற்றை வகைப்படுத்தி, எடிட் செய்து, இனம் பிரித்து, நூலாகத் தொகுத்த அனுபவத்தை இராமனாதன் தனது ஏற்புரையில் பகிர்ந்து கொண்டார். அதையே தனி நூலாக எழுதலாம் போல் இருந்தது.

இப்படிப்பட்ட ஒரு மாமனிதரின் வாழ்க்கையின் சில பகுதிகளைச் சிறப்பாகத் தொகுத்த இராமனாதனுக்கும், செம்மையாக வெளியிட்டிருக்கும் காலச்சுவடு கண்ணனுக்கும் நன்றி.

snntamil@gmail.com

சென்னை வங்கி ஒன்றின் மேலாளர் எஸ். நரசிம்மன் நூலை வெளியிட, ‘மதுரை பிரஸ்’ கே. முரளிதரன் நூலைப் பெற்றுக்கொண்டார். நடுவே தொகுப்பாசிரியர் மு இராமனாதன் (மேலதிகப் படங்களுக்கு: http://picasaweb.google.com/yoonusbhai.function/ChennaiBookLaunch#)

அறிவிப்பு

அறிவிப்பு