“படித்ததும் புரிந்ததும்”.. (4) ராமர் சேது-ஆதம்ஸ்பாலம்-பந்த்-உயர்நீதிமன்றம்-உச்சநீதிமன்றம்

This entry is part of 32 in the series 20071004_Issue

விஜயன்கடந்த சில வாரங்களாக சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இந்த ஐந்து விஷயங்களில் புரியாத சில விஷயங்கள் இருப்பதாயும் அதை புரிய வைக்கும்படி என் நண்பர்கள் கேட்டுக் கொண்டதால் சில உண்மைகள்;

“நான் சொல்வதனைத்தும் உண்மை உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை” ராமர் சேது என்பது ஒரு சமஸ்கிருத சொல் (சேது என்றால் – பாலம் என்று பொருள்) ராமருக்கு பொருள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ராமாயண இதிகாசம் (காலம் கிமு 500லிருந்து – 100 வரை) ராமர் சீதையை மீட்க, வானரப் படைகளுடன் கல் பாலம் அமைத்து இலங்கைக்கு சென்றதாக புராணம்.
ஆதம்ஸ் பாலம் (காலம் 1000 ஏடி) ஒரு இஸ்லாமிய புராணமனிதர் ஹஆதம்’ ஒற்றைக்காலில் ஆயிரம் வருடம் தவமிருந்து அந்த ஹபாதக் குழிச்சுவடு’, ஆதம்ஸ் சிகரத்தில் உள்ளதாக அவர் இலங்கைக்கு செல்ல உபயோகித்த பாலம் என்று மற்றொரு புராணம்.
உண்மையில் ராமர் பாலம் என்பது இலங்கை, மன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையே உள்ள ஒரு தொடர் பாறை மற்றும் கற்களால் ஆன கடல் மூடிய ஒரு பாதை.

ராமர் பாலம் பற்றிய நவீன ப+கோலத்தின் முதல் பதிவு மேஜர் ஜேம்ஸ்தேனல் என்பவரின் பதிவு, அந்த நபரின் முக்கியத்துவமற்ற பர்ஸனாலிட்டி, காரணமாக அது கண்டு கொள்ளப்படவில்லை. பின்னர் 1822ல் ஆர்த்தர் காட்டன் என்பவரின் தலைமையில் மேஜர் சிம் என்பவர் ஒரு கப்பல் வழிப்பாதை ஏற்படுத்த முயன்று ஓரிரண்டு பாறைகளை வெடி வைத்து தகர்த்தி பின் கைவிடப்பட்டது.
இதற்கு பின்னால் 1837ல் லெப்டினன்ட் எப்.டி. போவல் பரிந்துரையில் ராமர் சேது கால்வாய் அமைந்தால் அது இலங்கையைச் சுற்றிவராமல் இந்திய கிழக்கு கடற்கரையில் ஒரு குறுக்கு வழி பயணம் மேற்கொள்ள முடியும் என்பதாகும். இது ப+கோள சரித்திரம். 1911ல் பாரதியார் கூட “சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம் சேதுவை மேடுறுத்தி வீதிசமைப்போம்” என்று பாடியுள்ளார் அப்போது யாரும் பாரதியை ராமர் சென்டிமெண்ட் சொல்லி எதிர்க்கவில்லை.

பின்னர் 2001 ப.ஜா.க. அரசியல்தான் முதலில் “சேது சமுத்திர கப்பல் கால்வாய்த் திட்டம்” அறிவிக்கப்பட்டது. இது குறித்து ஜெயலலிதாவும், வைகோவும், அன்று, அதை தங்கள் சாதனையாக கூறிக் கொண்டார்கள்! இப்போது திமுக உள்ளடக்கிய மத்திய அரசு சுமார் 2400 கோடி செலவில் திட்டம் தொடங்கி 6 மாதங்கள் ஓடிவிட்டது. ப+கோள ரீதியாக இந்தியக் கடலோரத்தில் மேற்கே தொடங்கி கிழக்கு முடிய இந்திய எல்லைக்குட்பட்ட கடலில் பயனிப்பது வியாபாரம் மற்றும், எல்லைப் பாதுகாப்புக்கு உதவியளிப்பது. சுற்றுச் சூழல், பொருளாதார சாத்தியங்கள் எல்லாம் முன்பே கண்டறியப்பட்டு திட்டம் தொடங்கி, 2008ல் கப்பல் விடுவதாய் பேச்சு. இடையில் ‘சுப்ரமணிய சாமி’ பொது நல வழக்கு தொடர்ந்து ப.ஜா.க. ராமரைத் துணைக்கு அழைத்து ஒரு கேலி கூத்து நடந்து முடிந்துவிட்டது. இந்த இடத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ‘அடிப்படை கடமை’ பகுதி 4ஏ, ஆர்டிக்கல் 51ஏல் கவனிக்க வேண்டிய ஒரு விஷயத்தை எல்லோரும் புறக்கணித்துவிட்டனர் அதில் “51ஏ(எச்)ல் விஞ்ஞான ரீதியான உணர்வுகள், மனிதநேயம், கேள்வி கேட்கும் உணர்வு மற்றும் சீரமைப்பு குணங்களை வளர்க்க வேண்டியது, ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் என்கிறது” இதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்தார்களா என்று பார்ப்போம்.

இந்தப் பிரச்சினை முதலில் சென்னை உயர்நீதி மன்றத்தில் சுப்பிரமணிய சுவாமியின் பொது நல வழக்காகத் தொடரப்பட்டது. அதில் சுவாமியின் வாதம் என்னவென்றால் ராமர் பாலம் ஒரு புராதன சின்னம் அதை தொல்பொருள் ஆராய்ச்சி சட்டத்தில் புராதனச் சின்னமாக அறிவித்து ராமர் பாலம் உடைத்து கால்வாய் அமைப்பதை தடை செய்ய வேண்டும் என்பதாகும். சென்னை உயர்நீதி மன்றமும் கால்வாய் திட்டப் பணிக்கு இடைக்கால உத்தரவு வழங்க மறுத்தாலும் ‘புராதன சின்னம்’ வாதத்தில் அர்த்தமிருப்பதாய் கூறி வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றிவிட்டது. இந்த தீர்ப்பில் உயர் நீதிமன்றத்தின் தவறு என்னவென்றால், முதலில் இன்றுவரை ராமர் பாலம் மத்திய அரசால் புராதன சின்னம் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கு சட்ட ரீதியான பாதுகாப்பு தரவில்லை, என்பதையும் 51ஏல் சொன்ன அடிப்படைக் கடமையான விஞ்ஞான அணுகுமுறையை மறந்ததும் ஆகும். அதைவிட பல கோடி ரூபாய் திட்டத்திற்கு திட்டம் நடக்கும்போது முட்டுக்கட்டை போட வழி வகுத்ததாகும்.
இதற்கிடையில் உச்சநீதிமன்றத்தில் மாற்றப்பட்ட வழக்கில் மத்திய அரசு ‘தொல்பொருள் புராதன சின்னம்’ அமைச்சகத்தின் பிரமாணப் பத்திரத்தில் ராமர் பாலம் என்பது இயற்கையான ஒரு ப+கோள அமைப்பு, ராமர் பாலத்தை கட்டியதற்கோ ராமர் என்பவர் இருந்ததற்கோ ஆதாரப் ப+ர்வமான தடயம் ஏதுமில்லை என்று கூறினார்கள். “கடவுள் பற்றிய சித்தாந்தத்தில்” கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை என்ற கூற்று உண்மை. மேற்கு, கிழக்கு திசைகள், அட்சரேகை, மகர ரேகை போன்று “கடவுள்” என்பது ஒரு கற்பனைக் கோட்பாடு அதில் தவறேதுமில்லை. அது வேறொன்றை உணர்ந்து கொள்ள ஏற்படுத்தப்பட்ட ‘கோட்பாடு’.

இங்குதான் வந்தது வம்பு ‘தென்ன மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறிகட்டும்’ என்பது போல ராமர் நம்பிக்கையுள்ளவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் இடையேயான அரசியல், மத்திய அரசும் தேவையின்றி தான் சட்டப்படி தாக்கல் செய்த பிராமனத்தை வாபஸ் பெற்றதாகக் கூறி மாற்று திட்டம் பற்றி பரிசீலிக்க 3 மாதம் அவகாசம் கேட்டு, இந்துக்களின் உணர்வை அரசியல் ரீதியாக ப.ஜா.காவுக்குப் போட்டியாய் அங்கீகாரம் செய்து,” அடிப்படை கடமையான ‘சைன்டிபிக் டெம்பரை’ தாரைவார்த்தது.
இதோடு நிற்காமல் வாதப் பிரதிவாதம், வன்முறை என்று பரவி கலைஞர் பந்த் அறிவிக்க அதை எதிர்த்து அதிமுக வழக்குத் தொடர ஹபந்த்’ சட்ட ரீதியாக தவறு என்று உச்ச நீதிமன்றம் முன்பே தீர்ப்பளித்துள்ளபோதும் கூட, பட்டும் படாமல் ஆட்சியாளர்களைப் பகைக்காமல் ஒரு வழ வழா குழ குழாத் தீர்ப்பை சென்னை உயர்நீதி மன்றம் வழங்க அதை மேல் முறையீடு செய்த வழக்கில் உச்சநீதிமன்றம், ஹஇரும்புகை’ உறுதியுடன் 30 செப்டம்பர் ஞாயிற்றுக்கிழமை தடை செய்து; நீதிமன்ற ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட் பதிலுக்கு கலைஞரும் அக்டோபர் 1ம் தேதி உண்ணாவிரதம் அறிவிக்க, அதைக் கண்டிக்கும் விதமாய் உச்ச நீதிமன்றம் தன் எல்லையை மீறி திமுக அரசை கலைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்க எங்கோ தொடங்கி, எங்கோ முடிந்த ஒரு கேலிக்கூத்து அரங்கேறியது. ஆக இதில் தேசிய நலன் மற்றும் மக்கள் நலன் இரண்டாம் பட்சமாகிப் போனது.

சரி இதில் உண்மை எது ‘விஞ்ஞானம், தொழில், பொருளாதாரம் இவைசார்ந்து ராமர் சேது கால்வாய் ‘ கிழக்குக் கடற்கறை கப்பல் வழிப்பாதை திட்டம்’ 2000 முதல் 4000 கோடி செலவில் தொடங்கி, முக்கால்வாசி முடிந்து அற்பத்தனமாய் ஒரு பொது நல? வழக்கில், மத உணர்வு புகுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. விரையமானது யார் பணம்? யார் நேரம்? அண்டை நாடான சீனாவிற்கு நான் விஜயம் செய்தபோது கடைசி நாள் கூட்டத்தில் சீன, இந்திய வித்தியாசத்தை பேசியபோது “சீனாவில் நிர்வாகம் தேசிய மயமாக்கப்பட்டு, அரசியல் உள்@ர் மயமாக்கப்பட்டதே, அதன் வளர்ச்சியின் ரகசியம்; மாறாக இந்தியாவில் அரசியல் தேசியமயமாக்கப்பட்டு, நிர்வாகம் உள்@ர் மயமாக்கப்பட்டதே, அதன் மித வளர்ச்சிக்கு காரணம்” இந்தியாவின் தடைக்கல்லே அதன் அரசியல் தான் என்பது என் கூற்று. உள்ளாட்சி தேர்தல் தொடங்கி, நாடாளுமன்றத் தேர்தல் வரை நம் நேரம் பெரிதும் அரசியலில் வீனாகிப்போகிறதே தவிர, நிர்வாகத்தில் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. இதை மீறியும் இந்தியா முன்னேறினால் அதற்கு காரணம் ‘டெக்னாலஜி பிரேக் த்ரூவே’ தவிர அரசியலோ, நிர்வாகமோ அல்ல!


kmvijayan@gmail.com

Series Navigation