இருக்கை

This entry is part [part not set] of 49 in the series 20110320_Issue

தேனம்மை லஷ்மணன்


இருக்கை..:-
**************

எனக்கென சில தானியங்கள்
சிதறிக் கிடக்கின்றன
அங்கங்கே..

குளிரிலும் இருளிலும் கூட
கதகதப்பாய் ஒரு கூடும்..

அமரும் மரங்கள் தோறும்
பழங்களோ பூக்களோ
ரசிக்க., ருசிக்க..,

இலைகளோ ஏன்
கிளைகளோ மட்டுமே கூட
என்னை ஏந்தி..

கூலி கொடுக்காது
காற்றிலேறி அவ்வப்போது
விண்ணைச் சாடி..

குடல்கள் குதறும்
சில காகங்கள் கண்டு்
வெறுப்பு …
அவை ஆகாயத் தோட்டி
என அறியும்வரை..

பேர் எழுதிக் கிடக்கும்
தானியங்கள் இருக்கும்
காலம் வரை..பறக்கவும்..
பறத்தலைக் கற்பிக்கவும்..

Series Navigation

தேனம்மை லஷ்மணன்

தேனம்மை லஷ்மணன்

இருக்கை

This entry is part [part not set] of 30 in the series 20090219_Issue

ஹெச்.ஜி.ரசூல்


முன்கூட்டி வந்தவர்கள்
பலமிக்கவர்கள்
ஆக்ரமித்துக் கொண்டார்கள்
நின்று கொண்டும்
காத்துக் கொண்டும்
நகர்த்த வேண்டும் பொழுதுகளை
இருக்கைகள் காலியாகும்வரை.

உட்கார்ந்த பிம்பத்திற்கு
ஓடுவதான உணர்தல்
புயலில் சாய்ந்துவிழும்
ஒற்றைப் பனமரங்களின்
தலைவிரி கோலம்
தீமழையில் நனைந்து பொசுங்கும் உடல்களில்
இடைவெளியற்ற மரணத்தின் தீண்டுதல்
கட்டுச் சங்கிலிகள் அறுபட
வாதைகள் எழுப்பும் சத்தம்.
அடவெடுத்த ஆட்டம் தொடரும்.
திமிறல் தீராத முடிவற்றதொரு தொனியில்

இருந்த இடம் அப்படியே
ஏறவும் இறங்கவும் செய்தவர்கள்
பேசிக் கொண்டே திரும்பினார்கள்
கீறல் விழுந்து
இடையே சிதறிப் போன
இருக்கைகளின் வடிவம் பற்றி
முக்கியமானது
உடைபடாத அதன் வடிவங்களின் அழகென்று
.


Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்