கடற்கரை காதல்

This entry is part of 45 in the series 20110130_Issue

ஷம்மி முத்துவேல்நிலவும் கடலும்
சங்கமித்ததில்
பிறந்து சிரித்தது
வெள்ளிச் சதங்கையென
கடலலைகள் …..

உன் பாதச் சுவடுகளில்
நான் தடம் பதிக்க
நிகழ்ந்தது அக்கினியற்ற
ஹோம வலம்…….

கரைசேரும்
காதல் கட்டுமரம்
என் கனவுகளோடு ……
வாழ்த்தின அலைகள்
வேகமாய் ஒன்றன் பின் ஒன்றாய்…….

உருவம் இல்லாதபடி
நம் காதலும் ,,,,,,,
நுரை தப்பியபடி ……
தனித்து அறியப்படாமல் ……..

வலைகளில் சிக்காத மீன்களாய்
ஆழ்கடலில் முத்தெடுப்போம்
என்றும் இணைந்தபடி…..
பிரிவிலும் கூட ,,,,,,,

Series Navigation