எங்கள் தேசம் இந்திய தேசம்!

This entry is part of 61 in the series 20040805_Issue

நா.முத்து நிலவன்


(NCERTவெளியிட்டுள்ள ‘ஹிந்த் தேஷ்கீ நிவாஷி ‘ எனும் இந்திப் பாடலின் ‘இசைபெயர்ப்பு ‘ )

–பல்லவி–
எங்கள் தேசம் இந்திய தேசம்
வாழ்க வாழ்க வாழ்கவே!
இந்து முஸ்லீம் கிறிஸ்துவர்கள்
எல்லாரும் சகோதரர்கள்!

–சரணங்கள்–

வேறு வேறு வண்ணப் பூக்கள்
சேர்ந்த வாச மாலை நாங்கள்!
வண்ணம் வேறு வேறென் றாலும்
வாசம் நெஞ்சில் ஒன்றுதான்! –1
(எங்கள் தேசம்…
சிந்து கங்கை பிரம்ம புத்ரா
கிருஷ்ணா காவேரி
சென்று சேரும் கடலில் என்றும்
நீரின் தன்மை ஒன்றுதான்! –2
(எங்கள் தேசம்…
பேசும் மொழியும் வாழும் இடமும்
வேறு வேறு னால் என்ன ?
பாச உணர்வும் பண்பும் அன்பும்
தேசம் முழுதும் ஒன்றுதான்! –3
(எங்கள் தேசம்…
இமயத் தலையில் பனிப்பூ மேகம்
குமரி அலையில் கொலுசுகள் நாதம்
குஜரத் வங்கத் தோளில் மோதும்
கொஞ்சும் தாயின் ஒற்றுமை கீதம்! –4
(எங்கள் தேசம்…

(இந்தப் பாடல், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., தமிழ் இலக்கிய வகுப்பிற்குப் பாட
நூலாக வைக்கப்பட்டுள்ள கவிஞரின் ‘புதிய மரபுகள் ‘ எனும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அருப்புக்கோட்டை
ம.தி.தா. தேவாங்கா அரசுக் கலைக்கல்லூரி மாணவர்களால் பாடப்பட்டு, அனைத்துக்கல்லூரிப் பாடல்
போட்டியில் முதல் பரிசு பெற்று, மதுரை வானொலியின் தேசபக்திப் பாடல் வரிசையில் அடிக்கடி
இசைக்கப்பட்டு வருகிறது)

—-
muthunilavan@yahoo.com

Series Navigation