கட்சி

This entry is part of 50 in the series 20040408_Issue

நெப்போலியன் சிங்கப்பூர்


சில
சமயங்களில்
உண்மைகளும்
பல
வேளைகளில்
பொய்களுமாய்
புளித்துப்போன
நம்
உறவின்
கல்லறையில்
எழுதப்படுவதற்கான
கவிதை இது.

நேற்றும்
நாளையும்
இறந்ததின்
கரைப்புகளை
இன்றின்
தருணக்
குழம்புகளில்
கலக்காதே.

நம்
நிகழ் போலி
நாம்
வேஷதாரிகள்
அவர்களைப்
பரிகசிக்காதே.

விரட்டாதே
பகலின்
வெளிச்சங்களை
நாம்
இரவின்
ரகசியங்களாய்
மல்லாந்ததின்
பூட்டுகள்
உடைக்கப்பட்டு
கதவுகளும்
களவு போய்
காலம்
கதவோடிவிட்டது.

ஒன்று
ஒழி
இல்லை
இலைகளைப்
பிய்த்துப்போட்டு
வேர்களைக்
கூறிட்டதாய்
கூறித் திரியாதே.

நாம்
நம்
மலங்களுக்கும்
கீழானவர்கள்
எனவேதான்
நம்
நாற்றங்களை
இனிமேலும்
தோண்டாதே
என்ற
வேண்டுகோளுடன்
நம் உறவின்
கல்லறையில்
காறிச் சிரிக்குது
இந்தக்கவிதை.

— நெப்போலியன்
சிங்கப்பூர்

kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation