தெருவும் பாடசாலையாக

This entry is part of 50 in the series 20040408_Issue

அவதானி கஜன்


அழகான தெரு
அமைதியாய் வேகத்துடன் நகரும் ஊர்திகள்
நடப்பவர்கள் குறைந்திருக்க
அவர்களிடும் பிச்சை எதிர்பார்த்து
தட்டுகளுடன் அலையும் சிறுவர்கள்

முதுகில் சுமக்க வேண்டிய புத்தகங்கள்
சில சில்லறைக் காசுகளாகி வளர்ப்புத்தாயிடம்

முதுகில் இட்ட கோடுகள் காட்டி
சமிக்கைக்கு பொறுக்கும் வாகனம் ஓட்டுவோரிடம்
வெய்யிலிலும் வெற்றுத்தட்டு நீட்டும் கூட்டம்

வேண்டாத பாடங்களைக் கற்றுத்தரும்
அழகுத் தெருவும் அத்திவாரம் இடுகின்றது
கயவர்களுக்கு

அன்புடன்
அவதானி கஜன்

avathanikajan@yahoo.ca

Series Navigation