இணையம்

This entry is part of 55 in the series 20031211_Issue

பவளமணி பிரகாசம்


அல்லும் பகலும் தூங்காதிருக்கும்,
ஆணையும் பெண்ணையும் கவர்ந்திடும்,
இண்டு இடுக்கிலும் நீக்கமற நிரையும்,
ஈர்க்கும் விதத்திலே போதைபழக்கமொக்கும்,
உலகை விரல் நுனியில் நிற்க வைக்கும்,
ஊர் வம்பிற்கும் உகந்ததோர் மேடை,
எண்ணங்களின் ஒப்பற்ற வாகனம்,
ஏவல் முடித்திடும் அற்புத பூதம்,
ஐயங்கள் தீர்த்திடும் அதிசய ஆசான்,
ஒலியும் ஒளியும் விருந்திடும் ஊடகம்,
ஓய்வு உழைப்பு இரண்டிற்கும் களம்,
ஒளடதமாகும் தனிமைத் துயருக்கு,
அஃறிணை என்றதை எண்ண முடியவில்லை.
———
pavalamani_pragasam@yahoo.com

Series Navigation