சென்னை

This entry is part of 36 in the series 20030911_Issue

ஹைக்கூ கணேஷ்


நன்னீர் நதி கூவத்தை இங்கே சாக்கடையாகிப் புட்டாக
கூவத்துல முன்னாடி கொசு மட்டும் தான் பறந்தது ..
இப்போ ரயிலு கூட கூவம் மேல
ஜோராத்தான் பறக்குது ! ஜோராத்தான் பறக்குது !

நடை வண்டி நான் பழக ..
தட்டுத் தடுமாறி கீழ விழ
தூக்கி விட எங்க ஊருல யிரம் பேரு
ஓடி வருவாக ! ஓடி வருவாக !

தண்ணி லாரி ஏறி உசுரு போன
ளப் பார்த்து ‘ அய்யோ பாவம் ‘ சொல்லக் கூட
இந்த சென்னை ஊருல
ஒரு ‘வாய் ‘ இல்லேங்க ! ஒரு ‘வாய் ‘ இல்லேங்க !

சர் புர்னு சீறிப் பறக்குது காரு !
செயற்கைப் பனிப் போர்வையை துப்புது பாரு ..
மூச்சு முட்டுதுங்க ! மூச்சு முட்டுதுங்க !

எங்க ஊரு குமரிக என் எதிரே வந்துப்புட்டா ..
வெட்கி வெட்கி சிவந்து போவாக ! வெட்கி வெட்கி சிவந்து போவாக
!

சென்னைப் பட்டணம் பொன்னுக
சிவப்பழகு பசைய பூசிக்கிட்டு
என்ன சீண்டக் கூட மாட்டுறாக ! என்ன சீண்ட கூட மாட்டுறாக !

சிங்காரச் சென்னையின்னு தப்புத் தப்பா சொல்லுறாக !

என்னத்தைச் சொல்லி என்னத்தைச் செய்ய
புழப்பு தேடி வந்தாச்சு பொறுத்துத்தானே போகனும் !

haikooganesh@yahoo.com

Series Navigation