ஞானம்

This entry is part [part not set] of 40 in the series 20050630_Issue

எஸ்ஸார்சி


கணபதி ஹோமத்திற்கு சென்று திரும்பிக்கோண்டிருந்தார் தருமங்குடி ராமுடு சாஸ்திரி. அவருக்குத்துணையாய் எப்போதும் போல் அவரின் மனைவி. இந்த சுலோசனா மாமி இருந்தால்தான் ராமுடுவுக்கு நவதானியங்ளைச் சரியாய் அதன் அதன் ஸ்தானங்களில் அடுக்கவரும்.. ஒரு முறை கோதுமையை சனீஸ்வரனுக்கு பரப்பி எக்கச்சக்கமாய் மாட்டி மொத்து பட்டது நிஜம் தான்.

அது நல்ல மழைக்காலம்.வானம் இருண்டு மிரட்டிக்கொண்டிருந்தது. அடிக்கொரு

தரம் இடிஒசை மின்னல் கண்ணைப்ப்றித்துக்கொண்டு,: அட போங்கடா சின்னப்பயலுவளா ?,

என்று கோஷம் கொடுத்தது

கண்ண புடிங்கிண்டு பூடுமோ

‘கண்ண எருக்கி மூடினூடுங்கோ ‘ என்றாள் மாமி

மின்சாரம் நின்று வெகுநேரம் ஆகியிருக்கலாம். ஒளரிரு கடைகளில் மாற்று ஏற்பாட்டு விளக்குகள் ஜீவனம் செய்தன. ஹோமம் முடிந்து சுருட்டிய மூட்டைகள் பத்திரமாக இருந்தன.

.மூட்ட கட்டறதுக்கு ஜவ் தாள் புரோகிதனுக்கு எவ்ளோ சவுக்ரியும்ங்கறே ?

போரும்னா ?

ஒளட்டல்ல பார்சல் என்ன அழகா கட்டறா பாத்திருக்கியோ

வேற பேசலாம், மாமி சொன்னாள்.

சாலையில் எப்போதும் நிற்கும் ஆட்டோக்காரர்களின் பர்துகளைக்காணமுடியவில்லை.ஒரு ஆட்டோக்காரன் மட்டும் படுதாவை இறக்கிவிட்டு பத்திரமாய் உள்ளே அமர்ந்துகொண்டிருந்தான்.

ராமுடு சாஸ்திரி அவனிடன் சென்று

தருமங்குடி வரைக்கும் போகணும்

மழையா இருக்குது கரண்டு இல்லே ரோடும் பேஜாரு.ஆமாம் சாமி அந்த பெரிய ஏரி புட்டுகிச்சின்னானுவ

என்ப்பா சொல்லுற நீ

ஆம்மாண்றேன்

என் வீடு மிின்னால இருக்குது

அப்ப,போனது தான்

என்னவோ சொல்லுற நீ வண்டியெ எடு மொதல்ல

ரூவா அம்பது

முப்பதுக்கு போவறது எப்பவும் இண்ணிக்கி நான் மட்டும் தான் வவுத்து பொழப்புக்கு நிக்குறன்

தெனம் ஆட்டோகார சாமிக்கி நான் நூறு கட்டியாவுணும்,மேலவர்ரது தான் எனக்கு

ஆட்டோகாரசாமியா

துட்டு தெனம் வந்தா என்னா செய்யிவ.நீ உள்ளூரு குருக்களுவாங்கிவுட்டுகிற வண்டி இது

அப்பிடியா சேதி

நீ எதனா ஆட்டோ வாங்கி உட்றியா

ரொம்ப தெவலாம்பா. தமா ?,பண்னுற தருமங்குடி போகணும் சரி ஒரு அம்பது வாங்கிகு ஆன

ஊட்டுல கொண்டுபொயி விடணும்

அந்த ஏரி சமாசாரம்

மிரட்டாதெ அத வுட்டுடுப்பா

நீ தான் சாமி மெரட்டுற நானு சொல்லிபுடுணும்ல.

இருவரும் ஆட்டோவில் ஏறி அமர்ந்துகொண்டனர். சம்பாதித்து கொண்டுவந்த மூட்டையை பின்பக்கமாய் கிடத்தினார். சா ?திரி.

சாமான காப்பாத்தி கொண்டுண்டு பொகணும்

அன்ணைலேந்து இதான்சொல்லியார்ரது நேக்கு தெரியாது

தெரியர்து அதான் ஒரு வெற்றில என்ன வெலன்னு சொல்லுவியா

இந்த பீத்தல எத்தன நாளா சொல்லிண்டு

ஆட்டோ நகர்ந்தது.

வெற்றில அது தேவலோக சமாசாரம். இதுல வச்சிதான் கொண்டு வந்தா

போறும் விடுங்கோ அசடுமாதிரி. ஏரி உடப்புன்னு சொன்னேள்

நம்ம தெரு வேற மின்னாடியெ இருக்கு

நேக்கு பயம்மா .மென்னிய அடைக்கிறமாதிரி இருக்கு

மாமி சுதாரித்துக்ண்டாள்

ஆட்டோக்காரரே அப்பிடியா

ஆமாம் மாமி ஏரி புட்டுகிட்டு வெள்ளமாம் பெசிக்கிட்டது சனங்க

சரிதான்

மாமி ஏதும் பேசாமல் இருந்தாள் ஆட்டோ பிராண்டிக்கொண்டே சென்றது.குண்டும் குழியுமாய் சாலை.அங்கங்கே தண்ணீர் தேங்கி இருந்தது.ஆகாயம் மின்னி மின்னி கண்ணாமூச்சி விளையாடியது தூறல் விடவே இல்லை. ஒரே இருள் ஆட்டோவின் விளக்கு மட்டும் மஞ்சளாய் மங்கலாய் கொஞ்சம் நம்பிக்கை தந்தது ?

தருமங்குடி எல்லைஅம்மன் கோவில் வந்தாயிற்று. வண்டி நிின்றது.

ஏன் என்ன ஆச்சு

இதற்கு மேலே ஒரே தண்ணீர்.வெள்ளையாய் தெரியுது.அங்கன பாருங்க சாமி

ஒரே இருட்டாக தெரிந்தது வானத்தின் கருமை இன்னும் அச்சம் தருவித்தது.

மழை விட்டபாடில்லை.தொடர்ந்துகொண்டுதான் இருந்தது அகண்டு தெரியும்

தண்ணீர் பரப்பின் அக்கரையில் தீவட்டிகள் ஒன்றிரெண்டு உலாவந்ததாய் கண்ணில்

பட்டது..

இதே ஆட்டோவிலேயே திரும்பிபூடுவம்

வேண்டாம்

நேக்கு பயமா இருக்கு

எல்லை அம்மன் கோவிலிலேயே இருப்பம் ஒண்ணும் ஆயிடாது

எப்படி சொல்றே

ஏரி தண்ணீர்தானே எவ்வளவு ஓடிடும்

வேற ஏரி எதானா ஒடஞ்சி இருந்தா

கற்பனையா பண்ணுவா இப்பிடி நாம எல்லைஅம்மன் கோவில் தேரு மேல ஏறி நின்னுகலாம்ஒண்ணும் ஆயிடாது

இருவரின் சம்பாஷணையைக்கேட்டுக்கொன்டிருந்த நாயொன்று தேரடியை காலி செய்தது. ஆட்டோகாரன் தன் வண்டியை கிளப்பிக்கொண்டிருந்தான்

ஒண்ணும் வேணாம் சாமி

இல்ல வாங்கிக நீ வந்தது தான் பெரிசு

நாயம் இல்லெ சாமி நான் வற்றேன்

ராமுடுவும் சுலோசனாவும் ஆடித்தான் போயினர் ஆட்டோாக்காரன் எங்கோ தூரத்தில் சென்று கொண்டு இருந்தான் வெள்ள நீர் இன்னும் சீற்றத்துடன் பாய்ந்துகொண்டிருந்தது. அந்த தருமங்குடி

தன் வீடு தன் உடமைகள் தனது இருப்பு. ராமுடு சாஸ்திரி அங்கேயே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தார்.

நாம திரும்பி பேடுவம்டி.சோதன போறும்

ஒண்ணும் இல்லே

சாகறதுண்ணு உனக்கு முடிவோ. சரி நம்ப வீடு என்ன ஆகியிருக்கும்

ஒண்ணும் ஆகியிருக்காது

பசுவும்,கன்னுக்குட்டியும்

செளக்கியமா இருக்கும்

எனக்கு பயம்மா இருக்கே

வானம் ஒரு முறை இடித்து தன்னிருப்பை அறிவித்தது.

தண்ணீ கூட கூட ஆயிண்டுருக்குடா பைத்தியமே.

ஒவ்வொரு மின்னலுக்கும் நான் பாத்துண்டுதான் இருக்கென், அந்த புளி மரத்து வேரோட தண்ணீ போறது. மேல ஏறல

நாளைக்கி ருத்ரம் பாரயணம் இருக்கு ஈ ?வரன் கோவில்ல

ரொம்ப முக்கியம்

அட்வான்ஸ் குடுத்திருக்கனே மண்டகப்படிகாரன் ?

வெடியட்டும் சுவாமி முதல்ல

தவளைகளின் அரட்டை ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது. சர்ப்பவாய் அகப்பட்டவை உயிர் பிச்சை கேட்டு தோற்றுப்போயின.

பயமில்லையே

பயப்டு என்ன ஆகும்னா

பேய் பிசாசும்பாளே அது நி ?மாடி

நி ?மா இருந்தா அதுவே பதில் சொல்லதா

ஹோமத்தில் சுருட்டிக்கட்டிக்கொணர்ந்தவைகள் பத்திரமாக உள்ளதை ஒருமுறை உறுதி செய்துகொண்டார் ராமுடு.

எல்லாம் சரியாத்தான் இருக்கு

‘ஜீவனம் ‘ நொள்ளயாய் சிரித்துக்கொண்டார்

கிழக்கே வெல்ளி முளைத்து வெகு உயரம் வந்துவிட்டிருந்தது.

தண்ணீயே ரொம்ப குறஞ்சிபேட்து

திடார்னு ஏறிிடுமோ

அப்டியெல்லாம் ஆகாது

காகங்கள் கரைந்து கதிரவன் வரவை அரிவித்தன

வெள்ள நீர் சலசலத்துக்கொண்டிருந்தது. தூரத்தில் அக்ர ?ாரம் தெரிந்தது. சிறு சிறு வீடுகள் வரிசையாய்த் தெரிந்தன

நம் வீடு தெரியர்துடி பாரு பாரு

நீங்க பாருங்கன்னா

ஒண்ணும் ஆகல்லெ போல

.சொல்லிய சாஸ்திரி கீழே விழுந்து ‘எல்லம்மா தாயே ஜகந்மாதா ‘ என்றும் கூறிக்கொன்டார்.

.மூட்டையை தலையில் தூக்கி க்கொண்டார்

பாத்து வா தெரியர்தா

சுலோசனா மாமி சிரித்துக்கொன்டாள் ஏரி தண்ணீர் சென்ற இடங்களிலெல்லாம் தரை கொழ கொழ புசு புசு சொதக் சொதக் என்றிருந்தது நிலங்கள் நீராடி முடித்திருந்தன. அக்கிரஹாரம்

அப்படியே கலையாமல் இருந்தது

தெருவு காஞ்சி கிடக்குடி

மாமி பதில் சொல்லாமல் நடந்தாள்

வீட்டுத்திண்ணையில் தருமங்குடிக்காரர்கள் நால்வர் அமர்ந்திருந்தனர்.

நமஸ்காரம்.சாமி

ம ?ரா ?னா இருங்கோ என்ன சேதி

ஏன் நம்ப ஆறாபுரி ஏரி உடஞ்சிது ஊரு குத்தம் ஏதும் உண்டுங்களா தெரிஞ்சி ஆவுணுமே சாமி

அதுக்குள்ளயிமா

இன்னும் ஏதும் ஆயிட்டா தாங்காதுங்களே சாமி அதான் பாக்குறம்

ஏண்டி பாத்துண்டு நிக்குற அந்த பாம்பு பஞ்சாங்கத்த எடுத்துண்டு வரப்பிடாதோ

எல்லாரும் உக்காந்துகுகோங்கோ

சரிங்க சாமி

பஞ்சாங்கத்தனை அடியிலிருந்து புரட்டி கொண்டு வந்தார். அதுதான் முறை என்பதுபோல.

ஒரு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டார். அமைதி காத்தார்.

என்னா தெரியுது சாமி

அமைதி காக்க கைகளால் ஜாடை காட்டினார்.

பசுமாடு ஒண்ணு , தான் போட்ட கண்ணு குட்டியோட, செத்துபோயிருக்கு

பிரசவத்தில அதான் விஷயம். வருஷம் முடியறதுக்குள்ள கெடுபலன காட்டியிருக்கு;

எங்கெ சாமி

நடு ஆறாபுரி ஏரிக்குள்ளார தான் குத்தம் நடந்த குத்தம்

இப்ப என்ன செய்யிறது சாமி

கறக்கிற பசுவை கன்ணுக்குட்டியொட குளிப்பாட்டி ஏரிய ஒரு சுத்து சுத்தியாந்து தானம் கொடுத்தா தோஷம் நீீங்கிடும்.வேற எதுவும் செய்ய வக தொக இல்லெ.

ராமுடு சாஸ்திரி கண்களைத்திறந்துகொண்டார்.

போதும் சாமிபோதும் சாமி அப்பிடியே செஞ்சி புடுவோம் என்றனர் நால்வரும்.

நல்லது.

மாமி சாஸ்திரி யை நோக்கிக்கொண்டே இருந்தார்.

இந்த பஞ்சாங்கத்த உள்ளாற வைய் சுலோசனா அதட்டினார்

காலவேளை சும்மா எப்பிடிஅய்யாவை வுட்டுட்டு நாம போவுறது, எதுக்கும் மொறண்ணு ஒண்ணு இருக்குல்ல ?

ஒரு ஐம்பது ரூபாய் நோட்டினை சாஸ்திரியிடம் தருமங்குடிக்காரர்கள் வணக்கமாய் வைத்து க்கொடுத்தனர்.

ஆவட்டும் இதுக்கெல்லாம் ஒரு தட்சணை வேணுங்கறது இல்லே ;.கண்களில் நோட்டினை ஒற்றிக்கொண்டார்.

டா சுலோசனா இதை வச்சிகோ. ஆசப்படறா. அந்த ரூபாய் நோட்டினை ஒப்படைத்தார்.

அவர்கள் விடைப்பெற்றுக்கொண்டு கிளம்பினர்.

.இவா எல்லாம் நீங்க நேத்து ராத்திரி தேர்மேல உக்காண்டு கண்ணால ?லம் விட்டத பாக்கணும்

எப்படி பாக்கமுடியும். நேக்கு பன்னெண்டுல கேது ஆட்சின்னா

தெளிவா சொல்லுங்கோ;

டா. ஞானம். அவ்வளவும்ஞானம் .நேக்கு மறுபிறவியே கெடயாது தெரியுமோ

மாமி அந்த ரூபாய்நோட்டினை பத்திரப்படுத்திக்கொண்டு வேகமாய் இடத்தைக்காலிசெய்தாள்

மண்டூகமே, பஞ்சாங்கத்த எடுத்து உள்ளாற வக்கறது ?. சாதித்துமுடித்த ராமுடு சாஸ்திரி விட்டத்தைப்பார்த்து நீட்டிப்படுத்துக்கொண்டார்.

essarci@yahoo.com

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி

ஞானம்

This entry is part [part not set] of 37 in the series 20030104_Issue

புதிய பாணன்


அன்புக்காக ஏங்கிய ஆழப்பார்வை
கண்டுபலஆண்டுகளாகியும் ஆற்றமுடியாமல்
தயங்கி தயங்கி தைரியம் கொண்டு
தன் அன்பைச் சொன்னான்
அவள் சொன்னாள் அசாதாரணமாக
‘என்னவரிடமே ‘ பேசுங்களேன்!
விரைத்த குறி வீரியத்துடன்
நெஞ்சம் கணத்தது காதலுடன்
மனம் மட்டும் அம்மணமாய்!

புதிய பாணன்

msksam@hotmail.com

Series Navigation

புதிய பாணன்

புதிய பாணன்