விதுரநீதி விளக்கங்கள் – 4 இறுதிப் பகுதி:

This entry is part [part not set] of 45 in the series 20110130_Issue

சேஷாத்ரி ராஜகோபாலன்


‘மனித எண்ண மறுமலர்ச்சி’யை (human thought evolution process), ஆழ்ந்து ஆராய்ந்தால் பக்குவமுறாத செயல்பாட்டு களிலிருந்து, படிப்படியாகப் பண்பாடுகள், நாகரிகங்கள் உருவாயின என உணரலாம் (Progress from crudeness to present sophistication). இந்த இயல் வளர்ச்சி வருங்காலத்தில் ஏதாவது ஒரு விதத்தில், (நல்லதிலோ, அல்லது கெட்டதிலோ =+-), தொடருமே தவிர, என்றுமே ஒரு நிலையில் நின்று விடாது. இன்றைய மனித இன எண்ணத் தொகுப்பு களுடன், மகா பாரத நாட்களுக்கும் முன்னாலிருந்த வேதகால சனாதன தர்ம எண்ணத் தொகுப்பை ஒப்பிடும் போது, வேதகாலங்களில் சனாதன தர்ம எண்ணம், எவ்வாறு முதிர்ச்சி அடைந்து இருந்தது என நமக்குப் புலப்பட்டு விடும். எந்த எண்ணமும், மனதில் ஆழமாகப் பதிய, அதில் அனுபவம் இருந்திருக்க வேண்டும். அப்படி பல்வகை வேறுபட்ட நிலையில், பல்வேறு மனிதர்களுடைய அனுபவத்தால் அன்றே முதிர்ச்சி அடைந்து, அதனால் எழுந்த ஒத்த எண்ண அலைகளை, எழுத்துக்களில் எழுதி வைத்து, நிரந்தரமாக நிலை நாட்டிய கோட்பாடுகளே, வேதகால சனாதன தர்ம கோட்பாடுகள் (அதாவது ஹிந்து மத கோட்பாடுகள்) எனலாம்.

‘மனித எண்ண மறு மலர்ச்சி’களில், விதுர நீதியும் மிக முக்கிய சம்ஸ்கிருத பங்களிப்புத் தொகுப்பாகும்.
சிந்தனை, சொல் செயல் ஆகியவைகளில் விதுரருக்கு எப்போதுமே நேர்வழி-நாட்டம் இருந்ததால், அவர் வெளிப்படுத்தும் ஒவ்வொன்றிலும், அவருடைய மனசாட்சியே, பிரதிபலித்தது, இவைகளை வெளிப்படையாக, விதுரர் சொல்லச் சொல்ல, திருதராஷ்ட்ரன் கேட்டு, பழைய நிகழ்ச்சிகளை நினைவில் கொண்டு வரும் போது, அவனது மனசாட்சியும் அவனையே, உலுக்கி உருத்திக் கொண்டிருந்தது. குற்றம் புரிந்தவன், வாழ்க்கையில் நிம்மதி என்பது ஏது?
இதற்கெல்லாம் விதுரர் கூறும் ஒரே உபாயம்: — நம் எண்ணம், உரையாடல், உழைப்பு, ஆகியவைகளில் நேர்மை பிரதிபலிக்க வேண்டும். இன்று இவைகளையெல்லாம் கூட நடைமுறைச் சாராக் கோட்பாடுகளென – “சர்க்கரை என எழுதி அதை நாவினால் நக்கிச் சுவைத்தால் இனிக்குமா?” அல்லது ‘ஏட்டுச் சுரைக்காய்’ என சிலர் நகைப்பதுண்டு. இன்று உண்மை என நிரூபிக்கப் பட்ட பல கருத்துகள் கூட, ஆரம்பகாலத்தில் வெளியிடும் போது அவைகளைப் பயனற்றது என தூக்கி, வீசி எறிந்திருக்கிறார்கள். மேலாக, புதிய அக்கருத்துக்களை வெளியிட்டவர் களுக்குத் தண்டனையும் வழங்கப்பட்டது. இருந்தாலும், எண்ணம், உரையாடல், உழைப்பு, ஆகியவைகளில் நேர்மையைப் பற்றி, யாராவது அவ்வப்போது, செல்லிக் கொண்டிருந்தால் தான், சில நேரங்களில் சில மனிதர்களுக்கு, என்றாவது மனதில், இதிலுள்ள உண்மைகள், ஆழமாகப் பதியலாம்.

விதுரர் இனி கூறும் நல்லுரைகள் தொடர்கின்றன:

உலகில் தாங்கள் எடுத்துக்கொண்ட கடு முயற்சியாலும் அவைகள் நிறைவேறாது போகும் போது பதினேழுவித மாந்தர்களுக்கேற்படும் விபரீத விளைவுகள் என்பது பற்றிப் பார்ப்போம்.

सप्तद्शेमान् राजेन्द्र मनु: स्वयंभुव: आब्रवीत् |
वैचित्रवीर्य ! पुरुषानाकाशं मुष्टिभिर्घ्नत: ||
ஸப்தத்³ஸே²மாந் ராஜேந்த்³ர மநு: ஸ்வயம்°பு⁴வ: ஆப்³ரவீத் |
வைசித்ரவீர்ய புருஷாநாகாஸ²ம்° முஷ்டிபி⁴ர்க்⁴நத: ||
तानेवेन्द्रस्य च धनुरनाम्यं नमत: आब्रवीत् |
अथ: मरीचिन: पादानाग्राह्यान् गृह्ण्तोब्र्वीत् ||
தாநேவேந்த்³ரஸ்ய ச த⁴நுரநாம்யம்° நமத: ஆப்³ரவீத் |
அத²: மரீசிந: பாதா³நாக்³ராஹ்யாந் க்³ரு«ஹ்ண்தோப்³ர்வீத் ||

நாமே சில சமயம், நம் இயலாமையால் ஏற்படும் சினத்திற்கு வடிகாலாக நம் முன்னிருக்கும் சூனிய பரந்த வெளியில் (நிரப்பிடம் = room / on open space) வெற்றுக் கைமுட்டியால் ஓங்கி குத்து விடுவது போல மடித்துத் தாக்கிப் பார்ப்போமல்லவா?. சிலர் வானவில்லையும் வளைத்து ஒடித்து விட முயற்சி செய்வார்கள்! மேலும், இவர்கள் சூரிய, சந்திர ஒளிகளையும் தன் கை கட்டுப்பாடுக்குள் வைத்துக் கொள்ள எண்ணுபவர்கள். இதெல்லாம் நடக்கும் காரியமா? இப்படிப்பட்ட மானிடரும் உலகில் உண்டு.

यच्चाशिष्यं शास्ति वै, यच्च तुष्येत्, यच्चातिवेलं भजते द्विषन्तम् |
स्त्रियच्च यो रक्षति भद्रमश्नुते यच्चायाच्यं याचते कत्थते त्थ्ते वा ||
யச்சாஸி²ஷ்யம்° ஸா²ஸ்தி வை, யச்ச துஷ்யேத், யச்சாதிவேலம்° ப⁴ஜதே த்³விஷந்தம் |
ஸ்த்ரியச்ச யோ ரக்ஷதி ப⁴த்³ரமஸ்²நுதே யச்சாயாச்யம்° யாசதே கத்த²தே வா ||

இனி அப் பதினேழுவித மானிடர்கள்:

1. தன்னிடம் கற்க விரும்பாத மாணவனுக்கு வலுக்கட்டாயமாகக் கற்பிப்பிக்க விழையும் ஆசிரியர்
2. அப்படி கறபிக்க்கப்படும் மாணவனுக்கு படிப்பில் எண்ணம் லயிக்குமா? மாணவனுக்கு, இந்த ஆசிரியரை விட்டு எப்படி எப்போது ஓடிவிடுவோம் என்ற எண்ணம் தான் ஓங்கும்.
3. தேவையின்றி பகைவரை உபசரிக்கும் மானிடன்
4. கெட்ட எண்ணத்துடன் மாதருக்கு உதவும் மனிதன்
5. தகுதி இல்லாதவனுக்கு கொடு எனும் சொல்பவன்
6. தற்புகழ்ச்சி செய்துகொண்டிருப்பவன்
यच्चाभिजात: प्रकरोत्यकार्यं यच्चाबलो बलिना नित्यवैरी |
अश्रद्दधानाय च यो ब्रवीति यच्चाकाम्यं कामयते नरेन्द्र ||
யச்சா பி⁴ஜாத: ப்ரகரோத்யகார்யம்° யச்சாப³லோ ப³லிநா நித்யவைரீ |
அஸ்²ரத்³த³தா⁴நாய ச யோ ப்³ரவீதி யச்சாகாம்யம்° காமயதே நரேந்த்³ர ||
7. நற்குலத்தில் பிறப்பினும், கெட்ட செய்கையில் ஈடுபடுபவன். (மது, மாது முதலியன)
8. தனக்கு வலுவில்லாத போது வலு நிறைந்தவனுடன் தெரிந்தும் மோதுபவன்
9. தன்னைக் கேட்க விரும்பாதவன் புறக்கணித்தாலும் அவனுக்கு சொல்பவன்
10. தேவையில்லாதவைகளில், ஆசைகொள்பவன்
वध्वावहासं श्वशुरो मन्यते यो वध्वावसन्न्भयो मानकाम: |
परक्षेत्रे निर्वपति यच्च बीजं स्त्रियं च य: परिवदनेतिवेलम् ||
வத்⁴வாவஹாஸம்° ஸ்²வஸு²ரோ மந்யதே யோ வத்⁴வாவஸந்ந்ப⁴யோ மாநகாம: |
பரக்ஷேத்ரே நிர்வபதி யச்ச பீ³ஜம்° ஸ்த்ரியம்° ச ய: பரிவத³நேதிவேலம் ||
11. மாமனார், மாமியார் தகுதியிலிருந்தும், மருமகளை பரிகசிப்பது
12. தனக்கு வேண்டும்போது, உதவியடைந்து பின் அதே மருமகளிடம் மோசமாக நடப்பதும்
13. மாற்றான் மனைவியை அடைய விரும்புபவன்;
14. பொதுவாக பெண்களை இழிவாக பேசுபவன்
यच्चापि लब्ध्वा न स्मरामीति वादि दत्वापि च य: कत्थति याच्यमान: |
यच्चासत: सान्त्वमुपानयीत एतान्नयन्ति निरयं पाशहस्ता: ||
யச்சாபி லப்³த்⁴வா ந ஸ்மராமீதி வாதி³ த³த்வாபி ச ய: கத்த²தி யாச்யமாந: |
யச்சாஸத: ஸாந்த்வமுபாநயீத ஏதாந்நயந்தி நிரயம்° பாஸ²ஹஸ்தா: ||
15. ஒருவனிடமிருந்து கை நீட்டி வாங்கிய எதையும் அதை மறுப்பவன்
16. ஒருவனுக்குத் தான் செய்த உதவி மிக அற்பமாக இருப்பினும், அதையே பெரிதாகப் பேசிக்கொள்பவன்.
17. மடையர்களிடம் சமாதானமாகப் பேசுபவன்
இப்பேற்பட்டவனை, எமனின் வேலைக்காரர்கள் பாசக் கயிற்றால் கோரமாக இழுத்து அழைத்துச் செல்வர்.

முழு ஆயுளான நூறு வருடங்கள் முழுதும் வாழாது மக்கள் அல்பாயுசில் ஏன், மரிக்கின்றனர், அதன் காரணம்,
अतिमान: अतिवाद:च तथात्याग: नराधिप |
क्रोधच्चात्मविधित्सा च मित्रद्रोहश्च तानि षट् ||
அதிமாந: அதிவாத³:ச ததா²த்யாக³: நராதி⁴ப |
க்ரோத⁴ஸ்²சத்மவிதி⁴த்ஸா ச மித்ரத்³ரோஹஸ்²ச தாநி ஷட் ||
இவர்கள் முழு ஆயுளான நூறு வருடங்கள் முழுதும் வாழாது அல்பாயுளில், மரிக்கும் கெட்ட குணமுடையோர்களுக்கு உடன் பிறந்த வியாதிகள்.
1. கர்வம்; 2. தகாத சொல் 3. தியாக உணர்ச்சியற்று இருத்தல்; 4. மிகச் சினம்; 5. போகத்தில் நாட்டம்; 6. நண்பனுக்கே துரோகமிழைத்தல்

சுவர்க்கம் இவர்களுக்குக் கிடைக்கும்:
गृहीतवाक्य: नयविद् वदान्य: शेषान्न भोक्ता ह्यविहिंसकष्च |
नानर्थकृत्याकुलित: कृतज्ञ: सत्य: मृदु: स्वर्गमुपैति राजन् ||
க்³ரு«ஹீதவாக்ய: நயவித்³ வதா³ந்ய: ஸே²ஷாந்ந போ⁴க்தா ஹ்யவிஹிம்°ஸகஷ்ச |
நாநர்த²க்ரு«த்யாகுலித: க்ரு«தஜ்ஞ: ஸத்ய: ம்ரு«து³: ஸ்வர்க³முபைதி ராஜந் ||
1. நல்ல போதனையை ஏற்று நடப்பவன்; 2. நேர்மையுள்ளவன்; 3. பரோபகாரி; 4. கடவுளுக்குப் படைத்து, பின் பசித்தவர்களுக்குப் புசிக்கவைத்து, அதன் பின் தான் உண்பவன்; 5. கடுஞ்சொல் சொல்லாதவன்; 6. பயனில்லா காரியங்களைச் செய்யாதவன்; 7 . நன்றி உணர்ச்சியுள்ளவன்; 8. நெஞ்சில் ஈரமுள்ளவன்’ 9. கற்றறிவாளன்; (கசடறக் கற்று, அதன்படி நிற்பவன்)

ஏற்ற ஆலோசகன்
கீழ்க்காணும் செய்யுள் முதல் பகுதி இறுதியில் கொடுத்து இருந்தேன். அதையே, இங்கு தருகிறேன். இத்துடன் அடுத்த ஸ்லோகத்திலும் விதுரர் திருதராஷ்ரனுக்கு அளித்த நீதி ஆலோசனை..
सुलभा: पुरुषा: लोके सततं प्रियवादिन: |
अप्रियस्य च पथ्यस्य वक्ता श्रोता च दुर्लभ: ||
ஸுலபா⁴: புருஷா: லோகே ஸததம்° ப்ரியவாதி³ந: |
அப்ரியஸ்ய ச பத்²யஸ்ய வக்தா ஸ்²ரோதா ச து³ர்லப⁴: ||
நமக்கு விரும்பியவைகளை மட்டுமே கூறும், மாந்தர்களை உலகில் காண்பது மிக எளிது; கிடைப்பதும் ஏராளம். தனக்கு உட்கொள்ள விருப்பமில்லாத ஆனால், நன்மை பயக்கும் கசப்பு மருந்து போன்ற நல்லுரைகளை சொல்லிக் கொடுப்பவர்களும் மிக அரிது; அதைக் கேட்டு பயனடைய விரும்புபவர்களும் அதைவிட மிக மிக அரிது. [அரசவையில் அன்று, மன்னனுக்கு விரும்பாத புத்திமதிகளை அளித்து, அதனால், தனக்கு அவமானம் ஏற்படும் என தெரிந்தே நல்ல அறிவுரைகளை விதுரன் அளித்துள்ளார்].
यो हि धर्म समाश्रित्य हित्वा भर्तु: प्रियाप्रिये |
अप्रियाण्याह पथ्यानि तेन राजा सहायवान् ||
யோ ஹி த⁴ர்ம ஸமாஸ்²ரித்ய ஹித்வா ப⁴ர்து: ப்ரியாப்ரியே |
அப்ரியாண்யாஹ பத்²யாநி தேந ராஜா ஸஹாயவாந் ||
தன்னிடம் நல்ல ஆலோசனை கேட்பவர்களிடம், நல்லதை மொழிவதோடு மட்டுமல்லாமல்; உண்மையான ஆனால், கேட்பவனுக்கு விருப்பமில்லாத உண்மைகளையும், தயங்காமல் சொல்பன் தான் உற்ற ஆலோசகன்.

இக்கருத்துகளை திருவள்ளுவரும் பொருட்பாலில் உள்ள-அமைச்சியலில், “மன்னரைச் சேர்ந்தொழுகல்” எனும் 10 குறட்களில் (691-700) கூறியுள்ளார்.

தூதனுக்கு இருக்க வேண்டிய பண்புகள்,
अस्तब्धं अक्लीबं अदीर्घसूत्रं सानुक्रोशं श्र्लक्ष्णं अहार्यमन्यै: |
अरोगजातीयं उदारवाक्यं दूतं वदन्त्यष्टजुणोपपन्नम् ||

அஸ்தப்³த⁴ம்° அக்லீப³ம்° அதீ³ர்க⁴ஸூத்ரம்° ஸாநுக்ரோஸ²ம்° ஸ்²ர்லக்ஷ்ணம்° அஹார்யமந்யை: |
அரோக³ஜாதீயம்° உதா³ர வாக்யம்° தூ³தம்° வதந்த்யஷ்டஜுணோ பபந்நம் ||
விதுர நீதியில் உள்ளபடி: தூதருக்கு வேண்டிய பண்புகள்:
1. சந்தர்ப்ப சூழ் நிலையை அறிந்து சமயோசிதமாக எடுத்துரைப்பவர்; பொது அறிவுள்ளவர்;
2. மன உரமுள்ளவர்; (துணிச்சல் மிகுந்தவர்);
3. பேசுவதில் ஐயப்பாடில்லாதர்; (தயக்கமில்லாது சொல்ல வேண்டியதை பேசுபவர்;)
4. அதே சமயத்தில், மிருதுவானவர், வளைந்து கொடுக்கும் சுபாவமுள்ளவர்;
5. எளிமை, அடக்கம், பண்பு நயம், மரியாதையுடவர்;
6. கையூட்டில் நாட்டமில்லாதவர்; (லஞ்ச லாவண்யத்தில் ஈடுபடாதவர்)
7. விரும்பத் தக்க தோற்றமுடியவர்;
8. எடுத்துரைப்பதில் மிக கெட்டிக்காரர்; நன்கு கல்வி பயின்றவர்.

இக்கருத்துகளை திருவள்ளுவரும் பொருட்பாலில் உள்ள-அமைச்சியலில், “தூது” எனும் 10 குறட்களில் (681-690) கூறியுள்ளார்.

அடுத்து யார் யாரிடம் கொடுக்கல் வாங்கல் வைத்து கொள்ளக் கூடாது என்பது பற்றி:

घृणी राजा पुंश्चली राजभृत्य: पुत्रो भ्राता विधवा बालपुत्रा |
सेनाजीवी चोद्धृतभूतिरेव व्यवहारेषु वर्जनीया स्युरेते ||
க்⁴ரு«ணீ ராஜா பும்°ஸ்²சலீ ராஜப்⁴ரு«த்ய: புத்ரோ ப்⁴ராதா வித⁴வா பா³லபுத்ரா |
ஸேநாஜீவீ சோத்³த்⁴ரு«த பூ⁴திரேவ வ்யவஹாரேஷு வர்ஜநீயா ஸ்யுரேதே ||

1. மிருதுவான (soft) மனதுடைய அரசன் / தலைவன்; 2, விலை மாதர்; 3. தலைவனின் வேலைக்காரன்; 4. மகன்; 5. சகோதரன்; 6. குழந்தைகளுள்ள விதவை; 7. நாட்டு சேனையில் இருப்பவன்; 8. முன்னர் மிக பணக்காரனாக இருந்தவன் ஆகியோர்.

பெண் இனத்திடம் மரியாதையைப் பற்றி:

पूजनीया महाभागा: पुण्याश्च गृहदीप्तय: |
स्त्रिय श्रिय गृहस्योक्ता: तस्माद्र्क्ष्या विशेषत: ||
பூஜநீயா மஹாபா⁴கா³: புண்யாஸ்²ச க்³ரு«ஹதீ³ப்தய: |
ஸ்த்ரிய ஸ்²ரிய க்³ரு«ஹஸ்யோக்தா: தஸ்மாத்³ர்க்ஷ்யா விஸே²ஷத: ||

எந்த வயதினரானாலும், நல்ல குணமுள்ள பெண்மணி யாரைக்கண்டாலும், கை கூப்பி வணக்கம் செலுத்தும்படி நமக்கே பல சமயம் தோன்றி விடும். இதை அவர்களுடைய தோற்றம், நடத்தை ஆகியவைகளே சொல்லும். இவர்கள் எந்த வீடுக்கும், நாட்டுக்கும் மிக விலைமதிக்கமுடியாத சொத்து. இப்பேற்பட்டவர் நம் வீடுகளிலேயே இருந்துவிட்டால், அது ஒரு தெய்வீக நற்பேறாகும்.
இப்பேற்பட்டவர்களை, – உஷா என்பர். சூரியோதயம் போன்றவர்கள். இவர்களை வைகறை, விடியற்காலையுடன் ஒப்பிடுவது சாலப்பொருந்தும். விடியற்காலையில் எங்குமே ஓர் புனிதமிருக்கும்; உயர்ந்த எண்ணங்கள் உருவாகும், மங்கையரே உளக் கனிவுடையோர்; அன்பு, பாசம் இவைக ளைக் கொண்டவர்கள். பொறுமையின் பிறப்பிடம்; தன் நலம் கருதாது பிறர் நலனில் அக்கறை கொண்டவர்கள். “ரிக்” வேத நூல்களிலும் இவர்களைப் பற்றி மிக உயர்வாகப் போற்றப்படுகிறது.
இவர்களுக்கு பலவித பொறுப்புப் பணி உண்டு. முதலில், குழந்தை பருவ, முதல் ஆசான்; குழந்தைகளின் தாய்; தாய்போன்று எல்லோரையும் பேணுபவர்; இவர்கள் இனத்தில் ஒருவர் தான் அன்பான மனைவி; எந்த நற்காரியங்களிலும் நமக்கு உடன் இருப்பவர்; எச்சமயத்திலும் இப்பேற்பட்டவர்களை தாழ்வாக மதிப்பிடக் கூடாது. பேசக் கூடாது. பெண்ணை துக்கப்படுத்தியவர் எவரும் நிம்மதியாக வாழ்ந்ததில்லை.

அடுத்து, நற்குடியில் பிறந்தோரின் இயல்பு:

नित्यं सन्त: कुलेजाता: पावकोपमतेजस: |
क्षमावन्त: निराकारा: काष्टेग्निरिव शेरते ||
நித்யம்° ஸந்த: குலே ஜாதா: பாவகோபமதேஜஸ: |
க்ஷமாவந்த: நிராகாரா: காஷ்டேக்³நிரிவ ஸே²ரதே ||
கட்டைக்குள் இருக்கும் அக்னி போன்று, நற்குடியில் பிறந்தோர் தங்களைப் பற்றி தகைமை இருந்தும், பறைசாற்றிக் கொண்டிருக்க மாட்டார்கள்; கீழ்குடியோர் தான் தங்களைப் பற்றி தற்புகழ்ச்சியில் ஈடுபடுவர்.

இனி, அமைச்சராக யாரை ஆக்க வேண்டும் என்பது பற்றி:
नापरीक्ष्य महीपाल: कुर्यात् सचिवमात्मन: |
अमात्ये ह्यर्थलिप्सा च मन्त्र रक्षणमेव च ||
நாபரீக்ஷ்ய மஹீபால: குர்யாத் ஸ²சிவமாத்மந: |
அமாத்யே ஹ்யர்த²லிப்ஸா ச மந்த்ர ரக்ஷணமேவ ச ||

எந்த அமைச்சர் பதவி அளிக்குமுன், அம்மனிதரின் பின்னணியை நன்கு பரிசீலனை செய்து, அதில் திருப்தி அடைந்த பின், பணியில் அமர்த்த வேண்டும். (நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட எந்த கொலையாளிக்கும், அயோக்கியனுக்கும், கூட்டுக் கட்சியைச் சேர்ந்த,வன் என்பதால் மட்டுமே, பதவியை அள்ளிக் கொடுக்கலாகாது). அமைச்சருக்கு நாட்டின் கஜானாவைக் காக்கும் கடமையுண்டு. மேலும், இக் கருவூலங்களில், தகுந்த வழிகளில் நிரப்புவது; இவைகளைக் காக்க நல்ல ஆலோசனை வழங்குதல், முதலிய பணிக்களுக்காகத் தான் அவர்கள் அமைச்சராக்கப் படுகிறார்கள். ஆனால், ஒரு சில தற்கால இந்திய அமைச்சர்கள், நாட்டிற்காக கருவூலத்தை (கஜானா) நிரப்புவதைக் கூட முன் நின்று தடுத்து, அந்த நிரப்புதலைத் தன் சொந்த கருவூலத்திற்கு வெவ்வேறு வழிகளில் திசை திருப்பி சொந்த ரகசியக் கணக்கில், பாதுகாப்பாகக் கிடைத்த இடத்தில் கோடிகோடியாக, நிரப்புவதை (in tax havens) இன்று காண்கிறோம். இப்பேற்பட்டவர்கள் ஒரு நாட்டின் அமைச்சராகாமலிருந்தாலே, அது அந்த நாட்டு மக்கள் செய்த மகா பாக்கியம். .

எவன் சிறந்த தலைவன்/ அரசன்? என்பது பற்றி விதுரரின் நீதி:
कृतानि सर्वकर्माणि यस्य परिषदा विद: |
धर्मे च अर्थे च कार्ये च स राजा राजसत्तम: ||
க்ரு«தாநி ஸர்வகர்மாணி யஸ்ய பரிஷதா³ வித³: |
த⁴ர்மே ச அர்தே² ச கார்யே ச ஸ ராஜா ராஜஸத்தம: ||
நாட்டு நலனில் எண்ணம் கொண்டு, விருப்பு வெறுப்பின்றி, மிக நேர்மையுடன் நாட்டின் வளம் கருதி, காரியத்திலும் இறங்கிய பின்னர், தனது நாட்டு சபை முன் தான் செயத ஏற்பாடுகளை ஓளிவு மறைவில்லாமல், தெரிவிக்கிறானோ, அவனே நாட்டிற்குத் தக்க தலைவன் / அரசன் எனக் கொள்ளவேண்டும்.

அடுத்து, நாட்டுமக்களுக்கு துரோகம் செய்து, அதற்கான மிகக் கடுமையான மரண தண்டனையை, ஒரு தலைமை நீதிபதியாக, சட்டப்படி தீர்ப்பளித்த பிறகு, அதை உடனே நிறைவேற்றவும் வேண்டும்.
न शत्रुवशमापन्न: मोक्तव्य: वध्यतां गत: |
न्यग्भूत्वा पर्युपासीत वध्यं ह्यन्याद्बले सती |
अहताद्धि भयं तस्मात् जायते न चिरादिव ||
ந ஸ²த்ருவஸ²மாபந்ந: மோக்தவ்ய: வத்⁴யதாம்° க³த: |
ந்யக்³பூ⁴த்வா பர்யுபாஸீத வத்⁴யம்° ஹ்யந்யாத்³ப³லே ஸதீ |
அஹதாத்³தி⁴ ப⁴யம்° தஸ்மாத் ஜாயதே ந சிராதி³வ ||
நாட்டு எதிரி என நிரூபிக்கப்பட்டு பின், அளிக்கப்பட்ட மரண தண்டனையை உடன் நிறைவேற்ற வேண்டும். அப்படிப்பட்ட கொடியவனை உடனுக்குடன் தூக்கிலிட வேண்டும். இல்லை யெனில், அவன் போன்று, இன்னும் நாட்டு எதிரிகள் பலர் துரோகச் செயல்களால், நிரபராதிகளான மக்கள் மேலும் மடிந்து போகலாம். கொல்லப் படாத, அவனாலும், அவன் தோழர்களுமாகச் சேர்ந்து, நாட்டுக்குள் இன்னும் பெருங்குழப்பம், பேரழிவு, அவமானம், சட்டத்திற்கு பயமில்லாமல் போகும் மன உணர்வு, என அனேக நிகழக்கூடாத நிகழ்ச்சிகள், கூடிய சீக்கிரமே ஒன்றுக்கொன்று தொடர்புடன், ஏற்பட்டுவிடும். இந்திய நாட்டில் இச்செயல்களை நம் கண் முன்னே காண்கிறோம். ‘அஃப்சல் குரு’ எனும் தேசத் துரோகிக்கு வெகு நாட்களாக முன், உச்ச நீதி மன்றமே தூக்கு தண்டனையை தீர்ப்பளித்துவிட்டது. அதை இன்னும் நிறைவேற்றாமல், அவன் அரசு சிறையில் அரசமரியாதையுடன் நடத்தப்படுவதை இன்றும் காண்கிறோம்!

இனி, ஒரு நாட்டுத் தலைவன் எவ்வாறு தகுதியற்றவனாகிறான் என்பது பற்றியும் மிக அருமையாக விதுரர் கூறி இருக்கிறார்.

प्रसादो निष्फलो यस्य क्रोधश्चापि निरर्थक: |
न तं भर्तार मिच्छन्ति षण्डं पतिमिव स्त्रिय: ||
ப்ரஸாதோ³ நிஷ்ப²லோ யஸ்ய க்ரோத⁴ஸ்²சாபி நிரர்த²க: |
ந தம்° ப⁴ர்தார மிச்ச²ந்தி ஷண்ட³ம்° பதிமிவ ஸ்த்ரிய: ||
எந்த பெண்ணும் ஒரு ஆண்மையற்றவனை (நபும்சகனை) கணவனாக நினைத்துப் பார்க்க மாட்டாள். அஃதே போன்று, ஒரு தலைவன் பயந்து செயற்திறனின்றி, பலனற்றவைகளில், தன் நேரத்தை வீணாக்கு கிறானோ அவனை நாட்டு மக்கள் மதிக்க மாட்டார்கள். மனதார மதிக்காத தலைவனைக் கோண்ட எந்த நாடு உருப்படும்?

न बुद्धिर्धनलाभाय न जाडयं असमृद्ध्ये |
लोकपर्यायवृत्तान्तं प्राज्ञो जानाति न इतर: ||
ந பு³த்³தி⁴ர்த⁴நலாபா⁴ய ந ஜாட³யம்° அஸம்ரு«த்³த்⁴யே |
லோகபர்யாயவ்ரு«த்தாந்தம்° ப்ராஜ்ஞோ ஜாநாதி ந இதர: ||
எந்த புத்திசாலியும், எப்போதும் எதிலும் வென்றதில்லை, மடையனும் ஏழையாகவும், சக்தி யில்லாதவனாகவும் என்றும் இருப்பதில்லை. ஆனால், ஒவ்வொருவனுடைய மேன்மைக்கும், தாழ்மைக்கும் அவனவன் செயல் பாணியே வழி வகுக்கிறது. இதற்கு உதாரணமாக நம்மிடையே வாழும் பலரைக் குறிப்பிடலாம். முன் வகித்த பதவிகளில் தன் திறமையை நிரூபித்து இருந்தாலும், தற்போது உள்ள கால கட்டத்தில், அத்திறன் படைத்தவைகளைச் செய்ய இயலாது போகலாம். அதற்காக பல உண்டாக்கப்பட்ட நிர்பந்தங்களும் இருக்கலாம். இக் குறைபாடுள்ளவரை நாட்டுமக்கள் நலம் கருதி, பணி நீக்கம் செய்வதே நல்லது.

अनार्यवृत्तं अपाज्ञं असूयकं अधार्मिकम् |
अनार्था: क्षिप्रमायान्ति वाग्दुष्टं क्रोधनं तथा ||
அநார்யவ்ரு«த்தம்° அபாஜ்ஞம்° அஸூயகம்° அதா⁴ர்மிகம் |
அநர்தா²: க்ஷிப்ரமாயாந்தி வாக்³து³ஷ்டம்° க்ரோத⁴நம்° ததா² ||
எவனுக்கு துரதிருஷ்டம் சீக்கிரமே வந்தடையும் என விதுரர் விளக்குகிறார்.
1. நிர்வாகம் செய்ய இயலாதவனையும், 2. புத்திசாலியானாலும், மிக மடையனாகத் தன்னைக் காட்டிக்கொள்பவனையும், 3. பொறாமை குணமுள்ளவனையும், 4. அருளிரக்கம் இல்லாதவனை யும், 5. பிறர் மனம் நோகும்படி நடப்பவனையும், 6. சடுதியில் சினங் கொள்பவனையும், கூடிய சீக்கிரம் கெட்ட ஊழ்க்கூறு வந்தடையும்.

விதுர நீதியில், கூறப்பட்ட வலுவில்லாத மனித இடங்கள்:
मदं स्वप्नं अविज्ञानं आकारं चात्मसंभवम् |
दुष्टामात्येषु विस्रंभं दूताच्चाकुशलादपि ||
மத³ம்° ஸ்வப்நம்° அவிஜ்ஞாநம்° ஆகாரம்° சாத்மஸம்°ப⁴வம் |
து³ஷ்டாமாத்யேஷு விஸ்ரம்°ப⁴ம்° தூ³தாச்சாவாகுஸ²லாத³பி ||

1. குடிமயக்கம்; 2. கனவுகள் நிறைந்த உறக்கம்; 3. பின்விளைவுகளைப் பற்றித் தெரியாத மடமை;
4. ஒருவரைப் பற்றி மதிப்பிடத் தெரியாத நிலை; 5. எடுப்பார் கைப்பிள்ளைத்தனம்; (கபடுடன் சிரிக்கச் சிரிக்கச் சொன்னால் அதை நம்பும் தன்மை); 6. பயனற்றவர்களை பணியில் நியமித்தல்

द्वाराण्येतानि यो ज्ञात्वा संवृणोति सदा नृप |
त्रिवर्गाचरणे युक्त: स शत्रूनधितिष्टति ||
த்³வாராண்யேதாநி யோ ஜ்ஞாத்வா ஸம்°வ்ரு«ணோதி ஸதா³ ந்ரு«ப |
த்ரிவர்கா³சரணே யுக்த: ஸ ஸ²த்ரூநதி⁴திஷ்டதி ||

மேற்கூறிய ஆறு குணங்கள் நல்ல வலுவான சங்கிலியின் வலுவில்லாத வளையங்கள். எவன் இவ்வலுவிழந்த சங்கிலித் தொடர்களை வெட்டி விடுத்து, அந்த இடங்களில் புது வளையங்களால் இணைத்து, வலுவுள்ளதாக்கி விட்டால், இவனுக்கு மூன்றுவித நன்மைகள் வந்தடையும். இம்மூன்றுகள்: எல்லா உலகியல் வாழ்க்கையில் எல்லொரைக் காட்டிலும் விஞ்சியிருத்தல்; நற்செல்வம்; சிக்கலற்ற நேர்மையான செயல்பாணி போன்றவை.

ஒவ்வொருவருக்கும் இரு வித இந்திரியங்கள் உண்டு. ஒன்று கர்ம இந்திரியம், மற்றொன்று, ஞான இந்திரியம். கர்ம இந்திரியத்தால் கண்ணால் காண முடியும். ஞான இந்திரியத்தால் உணரத்தான் முடியும். இதைப்பற்றி விதுரரின் கருத்து:
इन्द्रियाणामनुत्सर्गो मृत्यूनापि विशिष्यते |
अत्यर्थं पुनरुत्सर्ग: सादयेद् दैवतानपि ||
இந்த்³ரியாணாமநுத்ஸர்கோ³ ம்ரு«த்யூநாபி விஸி²ஷ்யதே |
அத்யர்த²ம்° புநருத்ஸர்க³: ஸாத³யேத்³ தை³வதாநபி ||
இவ்விரண்டு இந்திரியங்களின் உந்துதலால் மானிடர் செயல்களில் ஈடுபடுகின்றன்ர். இதில் கெட்ட
உந்துதல்களும், நல்ல உந்துதல்களும் உண்டு. எவரும் தன் உள் மனதில் உள்ள வக்ர எண்ணங்களையும், கைகளால் செய்து மனதால் திருப்தி படுகிறார்கள். அதற்காக மனம் போன போக்கில் மானிடரும் செயல் படலாமா? இம்மாதிரி கெட்ட உந்துதலால், உலகில் அனேகர் எல்லாவற்றையும் இழந்துள்ளனர். எல்லாம் இழந்தபின் வருந்தி என்ன பயன்?
இனி, எதெதை விட்டொழிக்க வேண்டும் என்பது பற்றி விதுர நீதி:
दु:खातेषु प्रमत्तेषु नास्तिकेष्वलसेषु च |
न श्रीर्वसत्यदान्तेषु ये चोत्साह विवर्जित: ||
து³:கா²தேஷு ப்ரமத்தேஷு நாஸ்திகேஷ்வலஸேஷு ச |
ந ஸ்ரீர்வஸத்யதா³ந்தேஷு யே சோத்ஸாஹ விவர்ஜித: ||
1. எப்போதும் துயரில் மூழ்குவது. 2. அடிக்கடி தவறுகளையே செய்தல்; 3. இறைவன் ஒருவன் உள்ளான் என்ற எண்ணத்தை இழப்பது; 4. சோம்பேறித்தனம்; 5. தற்கட்டுப்பாடில்லாமை; 6. கடு முயற்சி இன்மை ஆகியவைகளை ஒருவர் விட்டொழிக்க வேண்டும்.
இதில் விதுரர், பாம்பின் மேலிருக்கும் சட்டையையும், மனிதன் தனக்கு சேர்த்துக் கொள்ளும் செல்வத்துடன் ஒப்பிடுகிறார்.
महान्तमप्यर्थमधर्मयुक्तं य: सन्त्यजत्यनपाकृष्ट एव |
सुखं स दुखान्यवमुच्य शेते जीर्णां त्वचं सर्प इवामुवाच्य ||
மஹாந்தமப்யர்த²மத⁴ர்மயுக்தம்° ய: ஸந்த்யஜத்யநபாக்ரு«ஷ்ட ஏவ |
ஸுக²ம்° ஸ து³கா²ந்யவமுச்ய ஸே²தே ஜீர்ணாம்° த்வசம்° ஸர்ப இவாமுவாச்ய ||
விதுரர் திருதராஷ்ட்ரனுக்கு சொல்ல விழைவது, துரியோதனன், அநியாயமாக பாண்டவர்களிடமிருந்து பிடுங்கிக் கொண்ட அரசைப் பற்றி சொல்கிறார். பாம்பு தன் மேலிருக்கும் தற்காலிக சட்டை தனக்கு பாதுகாப்பு அளிக்காது என உணர்ந்த போது அதை உதரிவிடும். அஃதேபோல, மனிதன், தனக்கு பாதுகாப்பு அளிக்கும் என எண்ணியிருக்கும் செல்வம் தாற்காலிகமானது என உணர்ந்தவுடன் அதன் பின் ஓட்டிக் கொண்டு இருக்கமாட்டான். அதிலும் அநியாயமாக சம்பாதித்த செல்வம் நிலைத்தும் நிற்காது. இந்நிலையில் திருதராஷ்ட்ரனுக்கு விதுரர் சொல்வது., அநியாயமாக சம்பாதித்த ராஜ்யம் கௌரவர்களுடன் நிலைத்திராது என சொல்கிறார். அவர் சொன்ன வண்ணமே, நடைமுறையில் பின்னர் நடந்தது.

கீழேகொடுக்கப்பட்டிருக்கும் செய்யுளில் மிக முக்கியமான போதனை உள்ளது:
आत्मा नदी भारत! पुण्यतीर्था सत्योदका धूतिकूला दयोर्मि: |
तस्यां स्रात: पूयते पुण्यकर्मा पुण्यो ह्यात्मा नित्यमलोभ एव ||
ஆத்மா நதீ³ பா⁴ரத! புண்யதீர்தா² ஸத்யோத³கா தூ⁴திகூலா த³யோர்மி: |
தஸ்யாம்° ஸ்ராத: பூயதே புண்யகர்மா புண்யோ ஹ்யாத்மா நித்யமலோப⁴ ஏவ ||
நமது ஆன்மா ஒரு ஜீவ நதி போன்றது. ஜீவ நதி என்றும் வற்றாது. அதில் தண்ணீர் பெருகிக் கொண்டு தான் இருக்கும். அஃதேபோன்று நம் ஆன்மா என்றும் நிரந்தரம். எந்த ஜீவ நதிக்கும் தண்ணீர் அவசியம் போல, நம் ஆன்மாவுக்கு உண்மை (சத்தியம்) முக்கியம்; ஜீவ நதியிலுள்ள நற் செயல்கள் தான், குளிக்கும் இடம் போன்றது. ஆக, அந்த குளிக்கும் இடங்களில், புலனடக்கத்தால், ஆன்மாவை நனைப்பதே, என்றும் நோக்கமாக இருக்க வேண்டும். ஜீவ நதியில் தினமும் குளிக்கும் போது ஏற்படும் அலைகள், ஆன்மாவின் கருணைக்கு ஒப்பாகும். எவ்வாறு ஜீவ நதியில் நீராடி, நம்மை சுத்தமாக்கிக் கொள்வது போல, நம் ஆன்மாவை புலனடக்கத்தில் இறக்கி, சத்தியத்தால் புனிதமாக்கிக் கொள்ள வேண்டும். சுருக்கமாக, எப்போதும் ஆத்ம ஞானம் இருக்க வேண்டும்.
இதுவரை கொடுத்த நான்கு பகுதிகளில் உள்ள ஸ்லோகங்கள், விதுரர் திருதராஷ்ரனுக்கு அளித்த நல்லுரைகளில் சில செய்யுட்கள் மட்டுமே தான் கொடுக்கப்பட்டுள்ளன. முழுவதும் இங்கு கொடுக்க இயலவில்லை. இத்தொகுப்பு மொத்த விதுர நீதிகளுக்கும் ஒரு சிறு அறிமுகம் தான். இனிக்கும் பழத்தைக்கூட விற்கும் போது, அதற்காக அப்பழப்பகுதியை மாத்திரம் சுவைக்க மாதிரியாக வெட்டிக் கொடுத்து, (sample), பின் பரிந்துரைப்பது போல, இங்கு சிறு விளக்கத்துடன், சிறு பகுதிகளாகப் பிரித்துக் கொடுத்திருந்தேன். இனி, விதுர நீதியை முழுதும் படித்துணர்ந்து பயனடைய உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

(முற்றும்)

Series Navigation

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்