முடிவற்ற பயணம் …

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

ஷம்மி முத்துவேல்



நிறமற்ற அமானுஷ்ய வெளியில்
நீந்தி செல்கிறது ஓர் உடலற்ற அருவம்
திரவமெனவும் , ஜந்து எனவும்
வரையறுக்க இயலாமல் ….

ஏதோ ஒளி பிரள்கள்
கண்கள் கூசி நிற்க
உருவாக்கம் எளிதாய் …

மெல்ல உட் பதிந்து
பதிப்பித்து ….ஒட்டி நின்று ஒதுங்கி
மெல்ல இருள் தின்று
உதிரம் குடித்து உயிர் வளர்த்து
ஓர் மரணக் கதறலோடு ஜனித்தது
மீண்டும் ஒரு பயணம் …மீளாமல்

Series Navigation

ஷம்மி முத்துவேல்

ஷம்மி முத்துவேல்