பிரியம் சுமக்கும் சொற்களால்…..

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

சக்தி



பிரியம் சுமக்கும் சொற்கள்
கொண்டு உனக்காய்
வடிப்பேன் ஒரு கவிதை….

மெளனக்கிடங்கில் மறைக்கப்பட்ட
மனதின் மென்மைகளை
அதில் பொதித்து
நீ அண்மிக்கையில்
பரிசளிப்பேன்
வெட்கம் குமிழ் குமிழாய்
உடைத்தபடி……

உன் நயன பாஷைகள் கண்டு
அந்தரங்கத்தில் மலரும்
சித்திரங்களின் மொழி
நானறிவேன்…..

மென்று விழுங்கும்
பார்வையுடன் நீ
என் முன் நிற்க
எல்லாம் புரிந்தும்
ஏதுமறியாச் சிறுமியாய்
நான் நிற்பேன்….

மறுதலிக்கப்படும் அன்பின் வலி
என்றும் நான் உணராதிருக்கவேண்டும்
என பிரார்த்தித்துக்கொண்டே…..

Series Navigation

சக்தி

சக்தி