பசுபதி கவிதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20110213_Issue

பசுபதி


இறை நாடிய பறவை

யுக யுகமாய்
இரை தேடி பயணிக்கும்

தனிப் பறவை.

ஒற்றை மரத்தில்

துளிர்த்தாடிடும் பச்சை இலைகள்.

வந்தமரும் பறவையின் பேரதிர்வில்

சிலிர்த்துதிரும் இலைகள்.

சிறகடித்துப் பறக்கும் பச்சைக் கிளிகள்.

பெருவெளியில்

தனித்து நிற்கும்

இலை யுதிர் மரமும்

இரை நாடிய பறவையும்.

 ****

யுக யுகாந்தமாய்

வரைபட வழிசெல் காலம்.

திசைகள் குழம்ப

தடங்கள் தன்னிலை இழக்கும்.

தடுமாறி

தடம் மாறி

முற்றற்ற திசைகளில்

யுகங்கள் தொலையும்.

தறி கெட்டுத் திரியும்

தடங்களில்

காலம் மொட்டவிழும்.

– பசுபதி.

****
pasupathi.film@gmail.com

Series Navigation

பசுபதி

பசுபதி