நிதர்சனம்

This entry is part [part not set] of 28 in the series 20050506_Issue

இளைய அப்துல்லாஹ்


பூட்டோடு வரும்
எவரையும் நிராகரிக்கிறேன்
ஒரு நெருக்குதலையும் சேர்த்து
ஒரு கொலை அல்லது மிரட்டல் அல்லது துப்பாக்கி
எல்லாவற்றையும் மூடி விடும்
என்பது பற்றிய கனவுக்குள் இன்னும்
நான் புதைந்து விடுவதாக இல்லை
ஒரு கண்ணிமைப்புக்குள்
எல்லாம் முடிந்தது என்றுவிட்டு
புறம் தள்ள மனம் ஒப்புதில்லை
ஒரு சக்கரத்தின் இறுக்கத்தில்
மன இழையோடு ஓடும்
வரிகளை அதட்ட மொட்டையாய் சொல்ல
மனம் ஒப்புதில்லை
அந்த திணிப்பு ஒரு கொலை

அது உயிரின் வரிகள் இதயத்தின் ஒழுக்கு
எனக்கான உரிமை என் உணர்வு
எனது எல்லாமே எனக்கானவை

ஒரு கொலைகாட்டி ஒரு பயம் காட்டி
என்னை அச்சுறுத்த உனக்கு யார் உரிமை தந்தது ?
நான் எப்பொழுதும் நானேதான்
அது உன் கண்ணாடியிலும்
முகத்திலும்

26.02.2005
இளைய அப்துல்லாஹ்

Series Navigation

இளைய அப்துல்லாஹ்

இளைய அப்துல்லாஹ்

நிதர்சனம்

This entry is part [part not set] of 28 in the series 20020518_Issue

எஸ். வைதேஹி.


அக்கறையிலும் இக்கரையிலுமாய்
நானும் நீயும்
பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள
நாம் விட்ட காகிதக்கப்பல்கள்
கூழாங்கற்கள் இடித்து
கரை பல தாண்டி
கடந்து போயின.

சுவர் கோழி கூவி
மணற்துகள் உதறி
விடியும் பொழுதில் நான்
விழிக்கையில்
பச்சையம் மாறி
என்னிடமிருந்து
உதிர்ந்து போயிருந்தாய் நீ.
**********

Series Navigation

எஸ். வைதேஹி.

எஸ். வைதேஹி.

நிதர்சனம்

This entry is part [part not set] of 14 in the series 20010129_Issue

ஆகேஷ்


‘வாடா வாடா அம்பி , ஆத்துல என் மருமகள் செளக்கியமா ? , எங்கே என் பேரக் குழந்தைகள் , கூட்டிண்டு வரலையா ? ‘ , கிருஷ்ணய்யாின் குரல் ஓங்கி ஒலித்தது. ‘சாத்தான், காலங்காத்தால ஆரம்பிச்சுட்டான் ‘ என்று

திரும்பி படுக்கப் போன நான் ஹாரன் சத்தத்தில் படக்கென்று விழித்தேன். எதிரே வந்த லாாியை தவிர்க்க ரோட்டின் ஓரமாக் சென்று, பிரேக் போட்டு மீண்டும் லாவகமாக கியர் மாற்றி ஓட்டத் தொடங்கினாள் என் மனைவி. தலைக்கு மேலே இருந்த கண்ணாடியை லேசாக என்னை நோக்கி திருப்பி முகம் நோக்கினேன். லேசாக வியர்த்திருந்தது.

‘என்ன நல்ல தூக்கமா ? ஊருக்கு போகும் சந்தோஷம் என்ன !!! ‘ என்றாள் இவள். பல ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊருக்கு செல்வதில் எனக்கு சந்தோஷம் தான். ஆனால் ஏதோ நரகத்துக்கு கூட்டி செல்வது போல் இவளுடன் ஒரே போராட்டம். ‘திருச்சிக்கா !!.. யப்பா என்ன வெயில்.. அதுவும் இந்த Summer லே எந்த மடையனாவது அங்க போவானா ? ? ‘

என்னவள் குடுத்த செல்லப் பட்டத்தை சட்டை செய்யாமல் ‘ என்னமா நீ !! … 3 நாள் தானே .. ஓடிப் போயிடும் பாரு… அதுவும் முக்கொம்பு ஒரு Famous Tourist Spot , அங்கே போனால் ஒரு நாள் ஓடிப் போயிடும் , உனக்கு கண்டிப்பா பிடிக்கும் பாரு !!! ‘

பேச்சினாலே Business ஐ ஓட்டும் எனக்கு இவளை மாற்றுவதில் நேரம் அதிகம் செல்லவில்லை. ‘சாி சாி …

சொந்த ஊர் புராணம் போதும், ஆரம்பிச்சுடிவிங்களே !! ‘ என்று நான் எப்பொழுதும் தடுக்கி விழும் உதட்டோர சிாிப்பு ஒன்றை உதிர்த்து விட்டு சென்றாள். ஒரு ஊாில் பிறந்து வாழ்நாளை பல நாடுகளில் செலவிட்ட இவளுக்கு என் சந்தோஷம் புாிய வாய்ப்பில்லைதான். கண்ணாடியை இறக்கி வெளியே பார்க்கத் தொடங்கினேன். ஏதோ இப்போதே உச்சி பிள்ளையார் கோயிலில் வரும் காவோியின் காற்றை சுவாசிப்பது போல் உண்ர்ந்தேன்.

மனம் லேசாக லேசாக நான் கண்ட கனவோடு சம்பந்தப் பட்ட நினைவுகள் வரத் தொடங்கின. புத்தூர் அக்ரஹாரத்திற்குள் மூன்றாவதோ நான்காவதோ படிக்கும் போதுதான் வாடகைக்கு நுழைந்தோம். வீட்டின் வாசாலிலேயே கடன் சொல்லி பெற ஒரு பலசரக்குக் கடை , போர் தண்ணீர், என்று சொர்க்கமாகவே அந்த வீடு என் Middle Class பெற்றோருக்கு காட்சியளித்து ஆச்சாியமில்லைதான். ‘வாங்கோ வாங்கோ .. இதுதான் என் பேரனா !!!… சமத்து ‘ என்று கன்னத்தில் கிள்ளிய அந்த வீட்டு ஓனரை ஏனோ பார்த்த முதல் முறையே வெருப்பாக வந்தது . அவர் தான் கிருஷ்ணய்யர், House Broker, மனைவி இறந்து பல வருடம் ஆகி விட்டது, ஒரே பெண் மதுரையில் கணவன் இரண்டு பிள்ளைகளோடு இருக்கிறாள் என்ற மாதிாி உபாி தகவல்கள் என் அம்மாவின் மூலம் தொிந்தது.

‘வாம்மா வாம்மா, என்ன அப்பாவை மறந்திட்டியா ? ? எங்கே என் பேரக் குழந்தைகள் ? ? ‘ என்று தான் அவர் வியாபாரம் ஆரம்பிக்கும். பேச்சுதான் அவர் மூலதனம், எவரையும் மயக்கி காசை கறந்து விடும் , பணத்திற்காக எதையும் செய்யும் ஒரு ஜ ‘வனை அந்த வயதில் அருகே அறியும் பாக்கியம் எனக்கு கிடைத்திருந்தது பொிய வரம் தான். இருந்த சொந்த வீட்டை பணம் தரும் மரமாக மாற்றிய entrepreneur அவர். வாசலில் பலசரக்கு கடை, நான்கு குடித்தனங்கள், பின்புறம் தோசை மாவு விற்பனை என்று எங்கும் வியாபாரம். வீடு வாங்க விற்க , போர் போட்டு கொடுக்க, ஆள் வைத்து குடியிருக்கும் ஆட்களை விரட்ட என்று எதற்கும் ஆட்கள் அவரை தேடி வருவார்கள்.

அவாிடம் எனக்கு என்ன அப்படி ஒரு வெறுப்பு என்று தொியவில்லை. சொல்லப் போனால் அவாிடம் இருந்து நான் கற்றது தான் அதிகம். ‘அந்த பேச்சு, நடிப்பு ‘ எல்லம் பணத்திற்காக என்பதில் ஏதோ ஒரு வெறுப்பு. நான் அவர் மேல் கொண்டது பொறாமையாக கூட இருந்திருக்களாம்.

ஒரு ஞாயிறு என்று நினைக்கிறேன். வாசலில் ஒரே சத்தம்.

‘ நீ நல்லாயிருப்பாயா .. என் குடும்பத்தை நாசமாக்கிட்டயே பாவி !! ‘ ஒரு 45-50 வயது மதிக்கத்தக்க பெண்மணி கண்ணீருடன் கத்திக் கொண்டிருந்தாள். ‘என்னம்மா நீ , என் பொண்ணு மாதிாி நீ.. உனக்கு கெடுதல் செய்வேனா நான் ? ? ‘ கிருஷ்ணய்யாின் குரல் ஓங்கி ஒலித்தது.

‘அட பாவி ! இப்படித்தான் அன்னிக்கும் சொன்னியேடா … காலி பண்ண இன்னும் ஒரு வாரம் கொடுங்கன்னு சொன்னேடா பாவி,. அதுக்குள்ள ஆள் வைச்சு சாமான் எல்லாம் வெளியே எாிஞ்சிட்டியேடா பாவி ..

நாங்க எங்கடா போவோம் உடனே !!!…

வயித்தொிஞ்சு சொல்றேன் .. உன் குடும்பமே அழிஞ்சு போக ‘

‘மாாியம்மா மேலே சத்தியமாக சொல்றேன்டா .. நீ நல்லா இருக்க மாட்டே… நாசமா போவ… ‘ ஏதோ சாமி வந்தது போல் மண்ணை வாறி வாறி இறைத்து விட்டு சென்றாள் அவள்.

அந்த வயதுக்கே உாிய ஆர்வத்துடன் பயத்துடன் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு இதே மாதிாி பல சம்பவங்கள் , பல சாபங்கள் , நடக்கும். ஆனால் கிருஷ்ணய்யாிடம் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கவலை , ஒரு சோகம் , ஏதும் கண்டதில்லை.

‘என்ன மீண்டும் கனவுலகுக்கு போயாச்சா ? ? இதோ அரை மணி நேரத்தில் ஊர் வந்திடும் .. உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்ன வெக்கை அதுக்குள்ள !!!! ‘

ஏஸாயை அதிகமாக்கி விட்டு Pepsi ஐ பருக ஆரம்பித்தாள். சிறிது நேரம் அவளையே இமைக்காமல் பார்த்திருந்தேன்.

‘போதும் ஜொள்ளு விட்டது … அப்புறம் திருச்சிக்கு மிதந்து கிட்டு தான் போகணும் …: ‘

ரோட்டை விட்டு கவனத்தை திருப்பாமல் நக்கலடித்தாள். வாழ்க்கையில் பொிய வரம் கஷ்டமே அறியாமல் வளர்வது தான். என் கதைகளை கேட்டு என் சிறு வயதில் கஷ்டத்துக்கு உதவ விரல் கூட நீட்டாத என் பொியப்பா&Co மேல் இவளுக்கும் வெறுப்பு. ஆனால் திருமணம் முடிந்து மறு விருந்துக்கு வந்த அழைப்பை நான் நிராகிக்கவில்லை. திருச்சியை பார்க்கும் ஆசை, அதோடு அவர்களுக்கு

‘ பாருங்கள் .. நானும் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டேன் ‘ என்று உண்ர்த்தி காட்டும் அல்ப ஆசையும் காரணமாக இருக்கலாம்.

மீண்டும் கிருஷ்ணய்யாின் நினைவு வந்தது. ஒரு நாள் நான் பாஸாகி விட்ட விஷயத்தை சொல்ல வேகமாக வந்த நான் சைக்கிளை நிறுத்தும் போது அங்கே அருகில் நின்ற கிருஷ்ணய்யாின் வண்டியை இடித்து விட்டேன். வாசலில் பேசி கொண்டிருந்த அவர் அருகே வந்து ,

‘ அறிவில்லே ? ? ஸ்கூல் போய் படிக்கிற , நீயெல்லாம் எங்கே முன்னேறப் போற.. !!! ‘.

உடனே என் கண்களில் கண்ணீர். ‘பொண்ணு மாதிாி அழுகறத பாரு !! உடனே மூக்கைச் சிந்திக்கிட்டு அழறான் !! ‘ என்றார். சத்தம் கேட்டு வெளியே வந்த அம்மாவிடம் ஒப்பாாி வைக்க ஓடினேன் . என் பின்னேயே வந்த கிருஷ்ணய்யர்

‘ வண்டியை இடிச்சுட்டாம்மா , மேலே விழுந்திருந்தா குழந்தைக்கு என்ன ஆயிருக்கும், அதான் சொன்னேன் !! .. நம்மாத்து புள்ளை இல்லையா !!

எல்லாம் அவன் நல்லதுக்குதான் ஒரு வார்த்தை சொன்னேன். ‘ என்று கூறி விட்டு சென்றார். நான் சிலையாகி நின்றேன் அவர் நடிப்பையும் பேச்சையும் கண்டு. சில நாள் யோசித்து இருக்கிறேன்

‘நீ இருவரை சுட்டு கொல்லலாம் ‘ என்று கவர்ன்மென்ட் அதிகாரம் கொடுத்திருந்தால் அன்றே இவரையும் என் பொியப்பாவையும் சுட்டுக் கொண்டிருப்பேன்.

தாயுமானவர் கோயிலுக்கு அம்மாவுடன் செல்லும் போது பல சமயம், ‘கிருஷ்ணய்யர் வீட்டிலா குடியிருக்கேள் ? ? , மகா பாவியில்ல அவன் !!! இல்லாத அனியாயமெல்லாம் செஞ்சுண்டு அலையறான் பாவி… ‘ என்று மாமிகள் என் அம்மாவிடம் கூறக் கேட்டு இருக்கிறேன். அப்பொழுதெல்லாம் இனம் புாியாத ஒரு சந்தோஷம் எழுந்ததை மறுக்க முடியாதுதான்.

மீசை முளைக்க பார்த்த அந்த நாட்களில் , நண்பர்களுடன் நடந்த உரையாடல்கள் இன்னும் நினைவிருக்கின்றன. கிருஷ்ணய்யரை அவர் வீட்டில் சமையல் பார்த்த விமலா மாமியுடன் இணைத்தும், அந்த மாமியின் கணவர் இதனால் ஓடி விட்டார் என்றும் பல சபல பேச்சுகள் கற்பனைக்கு உரமிட்டன.

பின்பு வேறு வீட்டிற்கு மாறிய பின்பும் , படிப்புக்காக அதன் பின்பு வேலைக்காக திருச்சியை பிாிந்த பின்பும் கிருஷ்ணய்யரை பற்றிய செய்திகள் காதில் அவ்வப்போது விழத்தான் செய்தன. அவர் பெண் வீட்டிற்கு யாரோ செய்வினை செய்து விட்டார்கள் , அதனால் அவள் வீட்டில் துணிகளெல்லாம் தீடிரென்று தீப்பற்றி எாிகின்றது, ஏதெதோ நடக்கிறது என்று செய்திகள்.

ஒரு சமயம் பள்ளி நண்பன் குமாரை பார்த்த போது கூட சொன்னான், ‘தொியுமாடா உனக்கு ? ? , கிருஷ்ணய்யாின் பொண்ணு இங்கேயே வந்துட்டாள். அவள் புருசன் யார் கூடயோ கூத்தடிக்கிறானாம். ஆனால் இந்த மனுஷந்தான் இன்னும் அராஜகம் பண்ணிக்கிட்டு அலையறான்… ‘

‘ஊருக்குள் நுழைங்சாச்சு , உம்ம்ம்ம் ரூட் சொல்லுங்கோ… நீங்க ஒண்ணும் ஓட்ட வேண்டாம் , நானே ஓட்டறேன் ….. சே என்ன ஊரோ .. யப்பா யப்பா… ‘ நினைவுலகுக்கு மீண்டும் என்னை அழைத்து வந்தாள் என் மனைவி.

‘ஹே ! தெப்பக்குளம் , ஷ ‘ரங்கம் , உச்சி பிள்ளையார் கோயில், Raghunath Restnt சாம்பார் இட்லி, You will like everything பாரு ! ‘ . ஏதோ சொன்னாலும் மனதில் ஒரு நெருடல் இருக்கத்தான் செய்தது.

ஊரை ரசித்துக்கொண்டே வழி சொல்ல ஆரம்பித்தேன்.

‘வாம்மா வாம்மா … வாடா வாடா ‘ வரவேற்பு பலமாகாத்தான் இருந்தது பொியப்பா வீட்டில்.

‘என்னமோப்பா இப்பவாது வழி தொிஞ்சுதே !!.. ‘ தஞ்சாவூர் நக்கல் நெடியும் கூடவே இருந்தது.

பின் குளித்து விட்டு சாப்பிடும் போது ,

‘ ஏதோப்பா , உன் தம்பி இந்த வருஷம் Bishop ல MCA முடிக்கிறான். ஏதோ நீதான் பார்த்து ஏதாவது Company ல்ல சேர்த்து விடணும். வெளி நாட்டுக்கு அனுப்பிச்சாலும் சாி. நீயாச்சு உன் தம்பியாச்சு… ‘.

வாழ்க்கையின் திருப்பங்கள் ரசிக்கும் மாதிாி தான் இருந்தது. ஏதோ வாழ்க்கையில் சாதித்து விட்டது போன்ற ஒரு சந்தோஷம்.

லேசான தூக்கம் போட்டு விட்டு , உச்சி பிள்ளையாரை பார்க்க சென்றேன் மனைவியுடன். ஏதோ பழைய நண்பனை பார்க்கப் போகும் சந்தோஷம் எனக்குள். ‘என்ன மனுசங்க , பாசம் எல்லாம் நடிப்பு… பிள்ளைக்கு வேலை வேணுங்கறதுக்காக…… ‘ என்று பொியப்பாவின் குடும்பத்தின் மேல் அர்ச்சனை தொடர்ந்தது. எனக்கு ஏதோ ஒரு திருப்தி. தாயுமானவரை தாிசித்து விட்டு , படிகளிகளில் உட்கார்ந்து ஊர் பெருமையை விளக்க ஆரம்பித்தேன். அப்போது, இரண்டு படி தள்ளி அமர்ந்திருந்த ஒரு வயதானவர் எழுந்து வந்து ,

‘அடேடே , எப்படியிருக்கப்பா ? ? அம்மா அப்பா எல்லோரும் நல்லாயிருக்கால்ல ? ? ‘ என்று விசாாித்தார். தலைவலி என்று கூட சொல்லி அறியாத கிருஷ்ணய்யரை , நைந்து போன துணிகளுடன் கைத்தடியுடன் கண்ட போது அடையாளம் கண்டு கொள்ள சிறிது நேரம் பிடித்தது.

‘எப்படி இருக்கேள் மாமா ? ? இது என் மனைவி அகிலா .. அகிலா இது கிருஷ்ணய்யர் மாமா.. Family Friend ‘ என்று பரஸ்பரம் அறிமுகம் செய்து வைத்தேன். ‘ஓ !! இதுதான் என் மருமகளா ? ? என்ன அழகு… என் கண்ணே பட்டுடும் போலியிருக்கு… .. ‘.

எனக்கு ஏனோ சம்மட்டியால் அடித்தது போலிருந்தது. இன்னும் கொஞ்சமும் மாறாத அவரையும் அவர் பேச்சையும் காணப் பிடிக்காமல் , உச்சிப் பிள்ளையாரை பார்க்கப் போகலாம் என்றேன் என் மனைவியிடம்.

‘ கால் வலிக்கிறது.. நீங்க மட்டும் போயிட்டு வாங்களேன்… ‘ என்று விட்டு ஆர்வத்துடன் கிருஷ்ணய்யாிடம் பேசத் தொடங்கினாள்.

நெடுங்கால நண்பனை சந்தித்து விட்டு , படிகளில் இறங்கி வரும் போது பொியம்மா சொன்னதெல்லாம் நினைவுகளில் ஓடியது. ‘கேள்விப்பட்டியே !! நீங்க குடியிருந்தேளே !! அந்த வீட்டு கிருஷ்ணய்யரை பெண் நாலு வருசத்துக்கு முன் தற்கொலை செஞ்சிகிட்டா ….. ‘

‘ அவள் புருஷன் வேறு யாருடனோ தொடர்பு வைத்திருந்தானாம்… அதனால் தான் இவ தற்கொலை செய்து கிட்டான்னு சொன்னா !! ‘

‘அது மாதிாியே அவ புருஷனும் ஆறு மாசத்துக்குள்ள அவன் Office Secretary ஐ கல்யாணம் செஞ்சிண்டான். இவர் வீட்டையும் எழுதி வாங்கிட்டு கிருஷ்ணய்யரை விரட்டிட்டான். இப்ப விமலா ஆத்தின் பின் ரூமில தான் இந்த மனுஷன் இருக்கான்… எல்லா செஞ்சா பாவம் தான்.. ‘

‘சும்மாவா சொன்னா பொியவா… தெய்வம் நின்னு கொல்லும்னு… ‘

எனக்கு ஏனோ சிாிப்பு தான் வந்தது… ‘ அப்படின்னா உங்களுக்கு என்ன ஆகும் பொியம்மா ? ? ‘ என்று கேட்கத் தோணிய போது….

கீழே இறங்கிய போது , படியில் தனியாக உட்கார்ந்து பொறி சாப்பிட்டு கொண்டியிருந்தாள். ‘என்ன நல்ல மனுசர் இல்ல ? ? என்ன பாசமா பேசறார் !! பாவம் சாப்பாட்டுக்கு கூட கஷ்டமாம். மாசத்துக்கு ஒரு முறை தாயுமானவரை பார்க்க வருவாராம். ஆனாலும் சீக்கிறம் பகவான் அழைச்சிக்க மாட்டேங்கிறான்னு அழுதார். இருட்டிடும்னு இப்பத்தான் போறார்…

நல்ல மனுசங்களை எப்போதும் சோதிக்கிறான் இல்ல ஆண்டவன் ? ? ‘ என்றாள் என் மனைவி.

கீழே சிறிது தூரத்தில் நோஞ்சானாக ஒரு உருவம், ஒரு கையால் சுவற்றை பிடித்துக் கொண்டு மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தது தொிந்தது. செய்த பாவமா , இல்லை மற்றவர்கள் இற்ற சாபமா என்று தொியவில்லை. ஆனால் ஏனோ பொியப்பா குடும்பத்தை பார்த்து எனக்குள் எழுந்த சந்தோஷம் திருப்தி இப்போது இல்லை.

நான் மட்டும் இவரை விட என்ன விசயத்தில் நல்லவன் ? ? எதோ திடாரென்று ஒரு எண்ணச் சிதறல். IT Consultant என்ற பெயாில் , பேச்சுத் திறமையால் பலரை மயக்கி வெளிநாடுகளுக்கும் இங்குள்ள நிறுவனங்களுக்கு விற்று கொண்டு இருக்கிறேன். Contract என்ற பெயாில் எத்தனை பேரை பணத்தாசை காட்டி ஆடு மாடு போல் விற்று இருக்கிறேன். அவர்கள் வீட்டிலும் , தன் பிள்ளையை ஏமாற்றியவனுக்கு சாபங்கள் கொடுக்கப் பட்டு இருக்கும். படிப்பு இல்லாமல் கிருஷ்ணய்யர் செய்ததை நான் இப்போது படித்து, பொிய அளவில் வியாபாரமாக்கி இருக்கிறேன். ஆனால் எல்லாம் பணத்துக்காக ஏமாற்றும் வேலைதான் , ஆனால் செய்யும் அளவில் தான் வித்தியாசம்.

எல்லோரும் வாழ்க்கையில் சிலரை பார்த்து , ‘சே !! !இவன் நாசமாக போகணும்.. அழிஞ்சு போகணும் ‘ அப்படின்னு நினைக்கிறது சகஜம். ஆனால் நாம் அவர்களை விட அதிக வித்தியாசத்தில் இல்லை என்பதை உணர சிறிது நேரம் ஆகிறது…. ‘ ‘

ஏதோ சம்மட்டியால் அடித்தது போல் ஒரு உணர்வு.

சந்தோஷத்திற்கு மாறாக நெஞ்சில் ஏதோ ஒரு வலி தான் மிஞ்சி இருந்தது.

தலை வலிப்பது போல் இருந்தது.

‘இன்னிக்கு நைட்டே ஊருக்கு கிளம்பலாம் !!! ‘ என்ற என்னை அதியசமாக பார்த்தாள் என் மனைவி.

**

Series Navigation

ஆகேஷ்

ஆகேஷ்