சில்லறை கவிஞர்கள்

This entry is part [part not set] of 45 in the series 20110130_Issue

பேபி



கொடி நாள்

இமயம் முதல் குமரி வரை
அரபிக்கடல் முதல் வங்காளம் வரையுள்ள அகணட மாதாவை காப்போம்
இலஞ்சத்துடன் இலட்சிய கூட்டுக்கொண்டு
தவறாமல் கொடிக்கு வணக்கம் செலுத்தி
தர்ம சக்கரத்தை பூ போட்டு வானில் பட்டொளி பறக்க செய்தோம்
பாவம் பாரதியும் பகத்சிங்கும் பொழைக்கத் தெரியாதவர்கள்
உச்சுக் கொட்டி நினைத்தோம்.
இந்‌நாளில்

சங்கமம்
சென்னையில் சங்கமம் என்ன
நமக்கு இருக்கும் செம்மொழில்
சியாட்டிலில் கூட சங்கமம் நடத்தலாம்
கிளிண்டனிடம் ( ஹிலாரி) கூட இங்கிலீஸில் பேசி
தமிழனின் சாகத்தை காட்டலாம்.
வடக்கும் தெற்கும் இங்கு சங்கமம்.
மேற்கும் கிழக்கும் இங்கு சங்கமம்.
மனிதனை பசியில் சாக அடிப்பதில் .

விரல்லப்பா

சீறு நடைபோட்டு சிகரத்தில் ஏறு ,
சிகரத்தில் ஏறி சில்லறை சேரு,
2G சொல்லி போன் பேசப்பா.
தலை குனிந்தது தமிழ் நாடப்பா.

உன்னிடம் உள்ளத்தோ ஒரு விரல்ப்பா,
அதையும் கரும்புள்ளி வைத்து
சுப்பிக்கொள்ளப்பா
படம் பார்த்து பசியாறப்பா
ரோபொ படம் பார்த்து.

கவிஞர்கள்
பாரதியும், தாசனும் இங்கு பகடைகாய் ஆனார்கள்
வைரங்களும் இங்கே கரியானது,,
வாலில்லா வானரங்களும் இங்கே கையில் தங்க வளை போட்டது
பாவம் பாரதி போல பசியில்லை இவர்களுக்கு

சில சில்லறை காசு உண்டு
தமிழையும் தமிழனின் மானத்தை விற்ற

Series Navigation

பேபி

பேபி