இயற்கையே இன்பம்

This entry is part [part not set] of 46 in the series 20030822_Issue

சத்தி சக்திதாசன்


சிங்காரச்சோலைகள் அவைகள் எல்லாம்
சித்திரக்கூடங்களே – இவ்வையகத்தே
கடலோரக் காட்சிகள் அனைத்தும் வண்ண
கவிதை மலர்களே – எண்ணத்தில் சிறகடிக்கும்
சுதந்திரச் சிந்தனைகள் எல்லாமே ஒரு
சுவையான அனுபவம் தான் புவியில்
வானத்தின் நீலநிறமும் அதனிடையே விளையாடும்
வெண்மேகங்களும்
வகையாக இயற்கை போட்டதொரு கோலம்தான்
மஞ்சளான அந்திப் பொழுதின் மயக்க நிலை என்றும்
மனதை விட்டகலா ஓர் அருமை உணர்ச்சிதான்
இயற்கையை ரசிக்கா வாழ்வு என்றுமே
இதயமற்ற உணர்ச்சியற்ற ஓர் ஜடம்தான்

sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்