மழையே நீ பெண்தான் !!

This entry is part [part not set] of 40 in the series 20101114_Issue

எல்கே


மழையே …
நீ ஆணா இல்லை பெண்ணா ??
வருவது போல்
கண்ணாமூச்சி ஆட்டம்
ஆடுகிறாய் – எதிர்பாராமல்
வந்து திகைப்பில்
ஆழ்த்துகிறாய் !!!!

வரவேண்டிய
தருணத்தில் ஏமாற்றுகிறாய் – வந்தால்
வெள்ளப் பிரவாகமாய்
அடித்து செல்கிறாய் !!!

நீ
பெண்தான் – காதலியும்
அப்படிதானே – வருவதாய்
குறுந் தகவல் – வானம்
இருட்டுவதை போல் – நீயும்
வரமாட்டாய் – அவளும்
அப்படித்தான்!!!
எங்கும் தருணத்தில்
பாராமுகமாய் இருப்பாள் – எதிர் பாரா
சமயத்தில் காதலாய்
கசிந்துருகுவாள் – நீ
பருவம் மாறி
வருவது போல் !!

மழையே
நீ பெண்தான் !!!

-எல்கே

Series Navigation

எல்கே

எல்கே