(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -4 ஆண்டனி & கிளியோபாத்ரா முடிவுக் காட்சி

This entry is part [part not set] of 34 in the series 20070816_Issue

சி. ஜெயபாரதன், கனடா


எடுத்துவா என் அங்கியை ! அணிந்திடு கிரீடம் !
என்னுள் மரிக்காது இருக்குது ஆசை !
எகிப்தின் திராட்சை ரசம் இனி
ஈரப் படுத்தாது என் உதடை !
அதோ, கேட்குது, ஆண்டனி அழைப்பது !
என் உயர்ந்த செயலை மெச்சிட அவர்
எழுந்து வருவது எனக்குத் தெரியுது !
பதியே ! வருகிறேன் ! அந்தப் பட்டம்
நிரூபணம் ஆக நிலைபடும் என் துணிவு !
அக்கினி நான் ! வாயு நான் ! மற்ற
நீரும் நிலமும் அடிப்படை வாழ்வுக்கு !
ஏற்றிடு இறுதியாய் என் முத்தத்தின் சூட்டை !
கனிவுள்ள ஈராஸ் ! சார்மியான் !
உம்மிட மிருந்து விடை பெறுகிறேன்,
நீண்ட விடை பெறுகிறேன் ! … (கிளியோபாத்ரா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

எத்தகை ஈனமான ஆயுதம் இது ? ஆயினுமோர்
உத்தம வினைதனைச் செய்யப் போகுது !
விடுதலை அளித்திடும் எனக்கு ! என்
முடிவு தீர்மான மானது ! என்னுள்
இருக்கும் பெண்மை எல்லாம் தீர்ந்தது !
தலை முதல் தடம்வரை பளிங்குச்
சிலையாய் அடங்கிப் போனேன் இப்போது !
மாறிப் போனது நிலா ! மற்றும் அண்டக்கோள்
வேறில்லை எனக்கு ! … (கிளியோபாத்ரா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

+++++++++++++++

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ்: ரோமின் மூன்றாம் தளபதி
எனோபர்பாஸ்: ஆண்டனியின் ஆலோசகன், பாதுகாவலன்
கானிடியஸ்: ஆண்டனியின் போர்த் தளபதி
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
•பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன், இளைய பாம்ப்பி)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -4

ரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள்.

எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீண்டு மனைவியை மறந்து கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்து மயங்கிக் கிடக்கிறான். ஆண்டனியைத் தண்டிக்க அக்டேவியஸ் ரோமானியப் படையுடன் ஆக்டியக் கடற் பகுதியில் போரிட்டு வெற்றி அடைகிறான். தோற்றுப் போன ஆண்டனி ஆக்டேவியஸ் தூதரை விட்டு அனுப்பிய நிபந்தனைகளில் கையொப்பமிடுகிறான். ஆயினும் இருவருக்குள்ளும் நிரந்தரப் பகை உண்டாகி, ஆண்டனி எகிப்தில் அடைபட்டுப் போகிறான். போரில் தோல்வியுற்று அவமானப் பட்டு வேதனையில் உள்ள போது, கிளியோபாத்ரா அவன் கவனத்தைக் கவரத் தான் செத்து விட்டதாகச் செய்தி அனுப்புகிறாள். ஆண்டனி மரணத் தகவல் கேட்டு மனமுடைந்து, தன் கத்திமேல் பாய்ந்து தன்னுயிரை மாய்த்துக் கொள்கிறான். உயிர் பிரிவதற்குள் கிளியோபாத்ராவைக் கண்டு பேசி அவள் முன்பாக ஆண்டனி உயிரை விடுகிறான். அக்டேவியஸ் ஆண்டனி இறந்த செய்தியைக் கேட்டு, கிளியோபாத்ராவைக் காண தூதனை அனுப்புகிறான். சாமர்த்தியமாகப் பேசி கிளியோபாத்ராவைச் சிறைப்படுத்துகிறார் ரோமானியப் படையினர். இறுதியாக அக்டேவியஸ் கிளியோபாத்ராவைச் சந்திக்கிறான். அதற்குள் கிளியோபாத்ரா பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறாள்.

++++++++++++++++++

கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -4

நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ராவின் தனியறை. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, ஈராஸ், சார்மியான், ஆலயப் பூசாரி, அக்டேவியஸ், தொலபெல்லா, புரோகியூலியஸ் மற்றும் ரோமானியப் படையினர்.

காட்சி அமைப்பு: கிளியோபாத்ரா தப்பிச் செல்ல தொலபெல்லா முயல்கிறான். ஆனால் கிளியோபாத்ரா அரசியாக இனிமேலும் வாழ விருப்பமின்றி உயிரை மாய்த்துக் கொள்ள முனைகிறாள்.

கிளியோபாத்ரா: சார்மியான் ! போ பட்டம் சூடிய போது அணிந்த என் ஆடைகளைக் கொண்டு வா ! எனது கிரீடத்தை எடுத்து வா ! பொன் ஆபரணப் பேழையைத் தூக்கி வா ! ஈராஸ், சார்மியான் இருவரும் எனக்கு இறுதி அலங்காரம் செய்ய வேண்டும் ! (சார்மியான் போகிறாள்). ஈராஸ் நீ ஆலயப் பூசாரியை அழைத்துவா ! பூட்டி வைத்திருக்கும் பாம்புப் பெட்டியை எடுத்துவரச் சொல் ! பிரமிட் புதை அறையில் விளக்கேற்றச் சொல் ! வண்ண வண்ணப் பூக்களால் அலங்கரிக்கச் சொல் ! வாசனைப் பத்திகளைக் கொளுத்தி மணம் பரப்பச் சொல் !

ஈராஸ்: அப்படியே செய்கிறேன் மகாராணி !

(ஈராஸ் போகிறாள்)

கிளியோபாத்ரா: [தனக்குள் பேசிக் கொள்கிறாள்] நான் விடைபெறும் தருணம் வந்து விட்டது ! என்னை ஆண்டனி கூப்பிடுவது உள்ளத்தில் தெரிகிறது! என்னரிய துணிகரச் செயலைப் போற்றுவார் ஆண்டனி. ஆண்டனி என் பதி ! மனைவி என்னும் மதிப்பான பட்டத்தை எனக்கு அளித்த என் உன்னதப் பதி அவர் ! நானே அக்கினி ! நானே வாயு ! எனது மற்ற பஞ்ச பூதங்களான நீர், நிலம், வானம் ஆகியவற்றை அடிப்படை வாழ்வுக்கு விட்டுவிடுகிறேன்.

(சார்மியான் ஆடை, அணிகள், கிரீடத்துடன் வந்து கிளியோபாத்ராவுக்கு அலங்காரம் செய்கிறாள். அப்போது ஆலயப் பூசாரியுடன் உள்ளே நுழைகிறாள் ஈராஸ். பூசாரியின் கையில் பாம்புப் பெட்டி இருக்கிறது. )

சார்மியான்: [அலங்காரம் முடிந்த பிறகு பூரிப்புடன்] மகாராணியைப் பார்த்தால் மயங்கி விழாத மனிதர் இருக்க முடியாது ! எத்தனை கொள்ளை அழகு ! நமது ஓவியர் பக்கத்தில் இல்லை, படத்தை வரைவதற்கு ! ஓவியரை அழைத்து வரவா மகாராணி !

கிளியோபாத்ரா: [கவலையுடன்] வேண்டாம், கால தாமதம் ஆகக் கூடாது ! அக்டேவியஸ் வருவதற்குள் நமது வேலை முடிய வேண்டும். மரண தேவனைக் காக்க வைக்கக் கூடாது ! [பூசாரியைப் பார்த்து] மரக் கூடையை என் கையில் கொடு ! (ஆலயப் பூசாரி மரக் கூடையை மேஜையில் வைக்கிறார். அதை இலேசாகத் திறந்து உள்ளே நெளியும் பாம்புக் குட்டிகளைப் பார்க்கிறாள்) உள்ளே நஞ்சிருப்பது தெரியாமல், வெளியே கொஞ்சிக் கொண்டிருக்கும் நல்ல பாம்புக் குட்டிகள் ! எத்தகைய ஈனமான ஆயுதம் இது ! எனக்கு விடுதலை அளிக்கும் கருவி இது ! உன்னத ராணியின் ஒப்பிலா வரலாற்றை முடிக்கப் போகும் சின்னப் புழுக்கள் இனம் ! ஈராஸ் ! எனது தீர்மானம் உறுதியாகி விட்டது ! அதை முன்னோக்கிப் பார்க்கிறேன். பின்னோக்கிப் பார்ப்பதால் ஒளிமிகுந்த என் வாழ்க்கை முன்னோக்கி மீளாது ! என்னுள்ளே இனி எனது பெண்மை இல்லாமல் போனது ! நானோர் ஆத்மா இழந்த கூடுதான் ! இந்தக் கூடு இருந்தால் என்ன ? மரித்தால் என்ன ? ஆவி போயினும் என் ஆத்மா எகிப்தில் நிலைத்து நிற்கும். [பூசாரியைப் பார்த்து] நாகக் குட்டி கொட்டினால் வலிக்குமா ? வலி உணராமல் உயிர் போக வழியுண்டா ?

ஆலயப் பூசாரி: [தடுமாறிக் கொண்டு] மகாராணி ! குட்டி நாகத்தின் நச்சுப் பல்லில் வெளிவருவது துளி விஷமே ! முதலில் முள் குத்துவதுபோல் தெரியும். குருதியில் நஞ்சு கலக்கும் போது வலி உண்டாகும். பிறகு பொழுது அடைவது போல் சிறுகச் சிறுக ஒளிமங்கி இருளாகிவிடும் !

கிளியோபாத்ரா: [ஆர்வமாக] இந்தக் குட்டி நாகம் கொட்டி யாராவது சாவதைப் பார்த்திருக்கிறாயா ?

ஆலயப் பூசாரி: ஆமாம் மகாராணி ! நேற்று நிகழ்ந்த சம்பவம் ஒன்று ! கணவனால் துரத்தப் பட்ட நடு வயது மாதொருத்தி உயிரை மாய்த்துக் கொள்ள என்னிடம் வந்தாள் ! கண்ணை மூடிக் கொண்டு பெட்டிக்குள் கையை விடு என்று சொன்னேன் ! வலது கையை விட்டவள் அலறினாள் ! தரையில் விழுந்து துள்ளினாள் ! அவ்வளவுதான், சிறிது நிமிடங்களில் அவள் வாழ்வு முடிந்தது !

கிளியோபாத்ரா: [சற்று எரிச்சலுடன்] சரி, சரி, மரப் பெட்டியை வைத்து விட்டுப் போ ! இங்கு நடப்பதை யாரிடமும் சொல்லாதே ! பின்வழியாக ரோமானியப் படைக் கண்ணில் படாமல் வெளியே செல் ! போ ! பிரமிட் புதை அறை பூக்களால் அலங்கரிக்கப்பட வேண்டும். வாசனைப் பத்திகளின் மணம் மூக்கைத் துளைக்க வேண்டும். போ எல்லாவற்றையும் தயார் செய் !

[ஆலயப் பாதிரி நடுங்கிக் கொண்டு விரைகிறான்]

கிளியோபாத்ரா: எனது நீண்ட கால இறப்பில்லா வாழ்வு தொடங்கப் போகிறது ! விடை பெறுகிறேன் என்னினிய எகிப்த் நாடே ! இனி உனது திராட்சை ரசம் என் உதடுகளை ஈரப் படுத்தாது !
உன் புனித பூமிமேல் என் பூப்பதங்கள் இனி நடக்கா ! உன் நைல் நதி இனி என் தாகத்தைத் தீர்க்காது ! உன் பரந்த பாலைவனப் பசுஞ்சோலை எனக்கு பஞ்சணை தராது ! விடை பெறுகிறேன் எகிப்த் நாடே ! [நாகப் பெட்டியைப் பார்த்துச் சிந்தித்து] நானிந்த நச்சுக் குட்டிகளைச் சோதிக்க வேண்டும் ! சாவது சீக்கிரமா அல்லது தாமதிக்குமா என்று நான் இப்போது காண வேண்டும் ! அக்டேவியஸ் வருவதற்கு முன்னே நான் போக வேண்டும் ! உயிரற்ற உடலைத்தான் அவர் காண வேண்டும் !

ஈராஸ்: மகாராணி ! நான் சோதனைக்குத் தயார் ! மகாராணி மரிப்பதை நான் என் கண்ணால் பார்க்க மாட்டேன் ! உங்களுக்கு முன்பே நான் சாக வேண்டும் !

கிளியோபாத்ரா: [பாம்புப் பெட்டியைத் திறந்து] என்னிடமிருந்து விடை பெறு ஈராஸ் ! வா ! வந்து வலது கரத்தைப் பெட்டிக்கு உள்ளே விடு !

[ஈராஸ் கையைப் பெட்டிக்குள் விட்டுச் சட்டென எடுக்கிறாள். வலி ஏறிச் செல்ல கையைப் பிடித்துக் கொண்டு தரையில் சாய்கிறாள். சில நிமிடங்களில் மரணம் அடைகிறாள்]

கிளியோபாத்ரா: [பாம்புப் பெட்டியை நோக்கி] பயனுள்ள ஆயுதம்தான் ! பாம்பென்றால் படையும் நடுங்கும் ! ஆனால் •பரோ பரம்பரைப் பாவை கிளியோபாத்ரா பயப்பட மாட்டாள் ! பாம்புதான் என்னைக் கண்டு பயப்பட வேண்டும் ! [பெட்டியைத் திறந்து ஒரு குட்டிப் பாம்பைக் கையில் எடுக்கிறாள்] குட்டி நாகமே ! உன் நச்சுப் பையைக் காலி செய் ! உன்னை ஊட்டி வளர்த்த இந்த அரசிக்கு விடுதலை அளித்திடு ! நானிந்த உலகை விட்டு நீங்கி விட்டேன் என்று அக்டேவியசுக்கு எடுத்துச் சொல் ! [பாம்பைத் தன் முலை மீது தீண்ட விட்டு] ஈதோ என் மார்பு ! இதன் வழியாக உன் விஷத்தை என் குருதியில் ஊட்டு ! எனக்கொரு நிம்மதி நிலையைக் காட்டு ! எகிப்த் அரசியை யாரும் கைப்பற்ற முடியாதென நிலைநாட்டு ! [பாம்புக் குட்டியை விட்டெறிகிறாள்] உனக்கும் விடுதலை இன்று ! ஓடிப் போ ! [நெளிந்து நெளிந்து குட்டி நாகம் விரைகிறது]

[கிளியோபாத்ரா வலியுடன் தள்ளாடிக் கொண்டு பள்ளியறைப் படுக்கையில் சாய்கிறாள். சிறிது நிமிடங்களில் அவள் உயிர் பிரிகிறது]

சார்மியான்: மகாராணி ! மகாராணி ! ஈதோ நானும் வருகிறேன் [பாம்புப் பெட்டியைத் திறந்து கையை விடுகிறாள். சிறிது நேரத்தில் கிளியோபாத்ரா அருகிலே அவளும் மரிக்கிறாள். அப்போது தொலபெல்லா, ரோமானியக் காவலருடன் உள்ளே நுழைகிறான்.]

தொலபெல்லா: [ஆச்சரியமுடன்] என்ன அமைதி ! ஒரே அமைதி ! ஓர் அரவங் கூடக் கேட்கவில்லை. [தரையில் நெளிந்தோடும் குட்டிப் பாம்பைப் பார்த்து நடுங்குகிறான்] அரண்மனையில் பாம்புக் குட்டி ஏன் வந்தது ? எங்கே இங்கிருந்த கிளியோபாத்ரா ? எங்கே ஈராஸ் ? எங்கே சார்மியான் ?

முதல் காவலன்: [உள்ளே தேடிச் சென்று] ஈதோ ஈராஸ் ! செத்துக் கிடக்கிறாள் ! அதோ சார்மியான் அவளும் செத்துப் போய்விட்டாள் !

தொலபெல்லா: [மிக்க கவலையுடன்] எங்கே எகிப்த் மகாராணி ?

இரண்டாம் காவலன்: [படுத்திருக்கும் கிளியோபாத்ராவைப் பார்த்து] ஈதோ அலங்கார உடையில் மகாராணி தூங்குகிறார்.

தொலபெல்லா: [ஓடிவந்து பார்த்து] அந்தோ தெய்வமே ! தப்பிச் செல்ல யோசனை கூறினேன் ! இப்படியா மகாராணி மரிக்க வேண்டும் ? யாரும் சிறைப்பிடிக்க முடியாத உலகத்துக்குப் போய் விட்டார் மகாராணி !

[அப்போது அக்டேவியஸ் ரோமானியப் படையுடன் உள்ளே நுழைகிறார்]

மூன்றாம் காவலன்: ரோமானியத் தளபதி அக்டேவியஸ் வருகிறார். ஒதுங்கி நிற்பீர் !

அக்டேவியஸ்: தொலபெல்லா ! எங்கே கிளியோபாத்ரா ?

தொலபெல்லா: [மனக் கவலையுடன்] தளபதி ! மகாராணியை என்னால் காப்பாற்ற முடியவில்லை !
மகாராணியாகவே மரித்து விட்டார்.

அக்டேவியஸ்: எப்படி மரித்தாள் ? ஒருதுளி இரத்தம் கூடச் சிந்தவில்லையே !

தொலபெல்லா: [பாம்புப் பெட்டியைக் காட்டி] அதோ அவள் ஆயுதப் பெட்டி ! கிளியோபாத்ராவைத் தீண்டிய நாகக் குட்டி என்னைத் தாண்டித்தான் ஓடியது !

அக்டேவியஸ்: [கிளியோபாத்ராவின் அருகில் வந்து] எகிப்து ராணி ! பகட்டான உடை ! பளிச்சென மின்னும் கிரீடம் ! சாவிலும் தேவதையாய்க் காட்சி அளிக்கிறாள் ! ராஜ குடும்பத்தில் பிறந்தாள் ! ராஜ குடும்பத்தில் வளர்ந்தாள் ! ராணியாக ஆண்டாள் ! ராணியாகவே மாண்டாள் ! மெய்யாக வென்றவள் கிளியோபாத்ரா ! அவளை ரோமாபுரி வீதியில் இழுத்துச் சென்று வேடிக்கை புரியலாம் என்று நினைத்திருந்தேன் ! அந்த திட்டத்தில் தோல்வி அடைந்தது நான் ! ஆண்டனி புதைக்கப்பட்ட இடத்தருகில் அவளையும் அடக்கம் செய்வீர் ! ரோமாபுரி ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், எகிப்துக்காக இப்படிச் செய்கிறேன். ஆண்டனி கிளியோபாத்ரா இருவரும் வரலாற்றுக் காதலர்கள் ! ஒரே இடத்தில் இருவரும் அடக்கம் ஆகட்டும் ! துன்ப முடிவாகப் போகும் என்று நான் நினைக்க வில்லை ! ரோமாபுரி இராணுவ மரியாதையுடன் ஆண்டனியும் கிளியோபாத்ராவும் அடக்கம் ஆவார் ! நமது கடமை இது. ஏற்பாடு செய் தொலபெல்லா ! அதற்குப் பிறகு நாம் ரோமுக்குத் திரும்புவோம் !

[ரோமானியர் மூன்று சடலங்களையும் தூக்கிக் கொண்டு செல்கிறார்]

(கிளியோபாத்ரா நாடகம் முற்றுப் பெறும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]

10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]

11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (Aug 14, 2007)]

Series Navigation

(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -3 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)

This entry is part [part not set] of 36 in the series 20070809_Issue

சி. ஜெயபாரதன், கனடாபூரிப்போடு அளிக்கிறாய் உன் பொன் ஆரங்களை !
ஆயினும், அக்டேவியஸ் வாணிபன் அல்லன் !
விற்கிறாய் உன் உடமைகளை விருப்போடு !
அருமை ராணி ! உண்பாய் ! உறங்குவாய் !
சிந்தனையில் நீ உனைச் சிறைப் படுத்தாதே !
உந்தன் விருப்பப் படியே நடப்போம் எமது,
கண்காணிப்பு, கவலை மிகுதி உன்மேல் !
நண்பராய் வாழ்வோம் ! வந்தனம் ! செல்கிறேன் ! .. (அக்டேவியஸ்)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

என்ன நினைக்கிறாய் ஈராஸ் இப்போது ?
உன்னை, என்னை எகிப்த் பொம்மையாய்
ரோமாபுரி வீதிகளில் காட்டிச் செல்லவா ?
பொதுநபர், ஊழியர் அழுக்கு உடையில்
கம்பு, சுத்தியலுடன் கைகளை உயர்த்தி
ஆரவாரம் செய்ய, அவரது அருவருப்பு
வேர்வை ஆவியை சுவாசிக்கவா ? அதோ
“வேசி போகிறாள்” என்றவர் ஒன்றாய்த்
தூசிப்பதை நம் காதில் கேட்பதா ? (கிளியோபாத்ரா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

+++++++++++++++


Fig. 1
Am I Prisoner ?

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ்: ரோமின் மூன்றாம் தளபதி
எனோபர்பாஸ்: ஆண்டனியின் ஆலோசகன், பாதுகாவலன்
கானிடியஸ்: ஆண்டனியின் போர்த் தளபதி
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
·பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன், இளைய பாம்ப்பி)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

Fig. 1A
Cleo, Iras, Charmian
Last day

கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -3

ரோமா புரியின் நிலைமை: ·பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி ·புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள்.

எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீண்டு மனைவியை மறந்து கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்து மயங்கிக் கிடக்கிறான். ஆண்டனியைத் தண்டிக்க அக்டேவியஸ் ரோமானியப் படையுடன் ஆக்டியக் கடற் பகுதியில் போரிட்டு வெற்றி அடைகிறான். தோற்றுப் போன ஆண்டனி ஆக்டேவியஸ் தூதரை விட்டு அனுப்பிய நிபந்தனைகளில் கையொப்பமிடுகிறான். ஆயினும் இருவருக்குள்ளும் நிரந்தரப் பகை உண்டாகி, ஆண்டனி எகிப்தில் அடைபட்டுப் போகிறான். போரில் தோல்வியுற்று அவமானப் பட்டு வேதனையில் உள்ள போது, கிளியோபாத்ரா அவன் கவனத்தைக் கவரத் தான் செத்து விட்டதாகச் செய்தி அனுப்புகிறாள். ஆண்டனி மரணத் தகவல் கேட்டு மனமுடைந்து, தன் கத்திமேல் பாய்ந்து தன்னுயிரை மாய்த்துக் கொள்கிறான். உயிர் பிரிவதற்குள் கிளியோபாத்ராவைக் கண்டு பேசி அவள் முன்பாக ஆண்டனி உயிரை விடுகிறான். அக்டேவியஸ் ஆண்டனி இறந்த செய்தியைக் கேட்டு, கிளியோபாத்ராவைக் காண தூதனை அனுப்புகிறான். சாமர்த்தியமாகப் பேசி கிளியோபாத்ராவைச் சிறைப்படுத்துகிறார் ரோமானியப் படையினர். இறுதியாக அக்டேவியஸ் கிளியோபாத்ராவைச் சந்திக்கிறான்.

++++++++++++++++++

கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -3

நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ராவின் தனியறை. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, ஈராஸ், சார்மியான், புரோகியூலியஸ், அக்டேவியஸ், தொலபெல்லா, மற்றும் ரோமானியப் படையினர்.

காட்சி அமைப்பு: அக்டேவியஸின் தூதன் புரோகியூலிஸ் சிறைப்படுத்திய கிளியோபாத்ராவை இறுதியாகக் கண்டுபேசி அக்டேவியஸ் அவளை ரோமாபுரிக்கு வருமாறு அழைக்கிறான்.

Fig. 1B
Cleo’s Killer

கிளியோபாத்ரா: [ஆழ்ந்து சிந்தித்து] நானிதை எப்படி நம்புவது ? சிஸேரியனை ரோம் செனட்டார் எவருக்குமே பிடிக்காது ! சீஸருக்கு நேர்ந்த அதே கதிதான் அவரது மகனுக்கும் கிடைக்கும். ஓநாயிடம் எப்படி முயல் குட்டியை ஒப்படைப்பது ? சிஸேரியனுக்கு ரோமில் யார் பாதுகாப்பு அளிப்பது என்று கூறுவீரா ? என்னருமைச் சிறுவனை உங்கள் கையில் ஒப்படைக்க மனம் ஒப்பவில்லை !

அக்டேவியஸ்: சிஸேரியன் சிறுவன் ! அவனை எகிப்துக்கு அரசனாக ஆக்குவதில் அவனுக்கும் ஆபத்து விளையலாம் ! எகிப்துக்கும் அபாயம் நேரலாம் ! பெரியவனாக ஆகும்வரை அவனை எங்களிடம் ஒப்படைத்தால் நாங்கள் போர்ப் பயிற்சி அளிப்போம். பிறகு அவனை யாரும் மிஞ்ச முடியாது.

கிளியோபாத்ரா: (ஆங்காரமாக) உங்கள் கையில் அவன் சிக்கிக் கொண்டால் அவன் கதி என்னவாகும் என்று சொல்ல முடியாது ! சிஸேரியன் தாய் நாடான எகிப்திலேதான் வளர்வான் ! எகிப்தையேதான் ஆளுவான் ! எகிப்திலேதான் மாளுவான் !

அக்டேவியஸ்: ஆனால் சிஸேரியனின் தந்தை நாடு ரோமாபுரி சாம்ராஜியம் ! ரோமானிய கலாச்சாரத்திலும் அவன் மூழ்க வேண்டும். சிறுவனுக்கு ஒன்றும் நேராது. மகாராணியின் கடின எதிர்ப்பு எமக்குப் புரியவில்லை.

(அப்போது கிளிபோபாத்ராவின் நகைப் பெட்டியை அடிமைகள் தூக்கிக் கொண்டு வருகிறார்கள்.)

கிளியோபாத்ரா: [பெட்டியைத் திறந்து காட்டி] ஈதோ எகிப்த் அரச பரம்பரையின் தங்க ஆபரணங்கள் ! இந்த வைர ஆரத்தை உங்கள் அருமை மனைவி லிவியாவுக்கு என் அன்பளிப்பாகத் தருகிறேன்.. இந்த நீலக்கல் ஆரம் உங்கள் தங்கை அக்டேவியாவுக்கு ! ஈதோ பரம்பரையாக ·பாரோ மன்னர் பயன்படுத்திய பொன் உடைவாள் ! இது உங்களுக்கு என் அன்பளிப்பு !

Fig. 2
Cleo’s Last Moments

அக்டேவியஸ்: [கையில் அவற்றை வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியுடன்] நன்றி மகாராணி ! லிவியா இத்தனை அழகான ஆபரணத்தைக் கண்டிருக்க மாட்டாள் ! நிச்சயம் பூரித்துப் போவாள் !
நன்றி. ஆண்டனி மரித்த செய்தி கேட்டு மயங்கிக் கிடக்கும் அக்டேவியா கூட இந்த நீலக்கல் கழுத்தணியைக் கண்டதும் உயிர்த்து எழுந்து விடுவாள் ! வரலாற்றுப் புகழ் பெற்ற இந்த பொன்வாள் ரோமாபுரியின் கண்காட்சியை அலங்கரிக்கும். [சற்று கடுமையாக] ஆனால் கிளியோபாட்ரா ! நான் விரும்புவது இவை அல்ல ! விலை மதிப்பில்லா இரண்டு எகிப்த் வைரங்கள் !

கிளியோபாத்ரா: (வியப்புடன்) என்ன ? எகிப்த் வைரங்களா ? பேழையில் இல்லாத பெரு வைரங்களா ?

அக்டேவியஸ்: (புன்னகையுடன்) சிஸேரியனை அழைத்துக் கொண்டு மகாராணி ரோமாபுரிக்கு வரவேண்டும் ! அதுதான் என் இச்சை ! செனட்டாருக்குப் பிடிக்கா விட்டாலும், ரோமானியப் பொது மக்கள் உங்கள் இருவரையும் காண ஆவலாய் இருக்கிறார் ! என் பெரியப்பா சீஸரைக் காண ரோமுக்குக் கோலாகலமாய் நீங்கள் இருவரும் வந்ததுபோல், என்னைக் காண மகாராணி மகனுடன் வருகை தர வேண்டும் ! அதுதான் நீங்கள் எனக்களிக்கும் வெகுமதி ! ஆங்கே உம்மைப் பாதுகாப்பது எம்முடைய பணி !

கிளியோபாத்ரா: (சற்று சிந்தித்து) பொறுப்பை ஏற்றுக் கொண்டால் ரோமுக்கு வருவது பற்றி நான் சிந்திக்கலாம் ! ஆனால் நான் மட்டுமே வருகிறேன் ! என் மகனை அழைத்து வர விருப்பமில்லை எனக்கு ! எனது பட்டத்து ஆடை ஆரங்கள் அணிந்து மகாராணியாக வருகிறேன் ! படாடோபமாக, கோலாகலமாக ·பாரோ அரசியாகப் பள்ளக்கில் வருகிறேன் !

அக்டேவியஸ்: (பூரிப்புடன்) மகாராணி ! அழைப்பை ஏற்றுக் கொண்டதற்கு மகிழ்ச்சி அடைகிறேன் ! எகிப்துக்கு நான் வருகை அளித்ததின் குறிக்கோள் நிறைவேறியது ! உங்களை அரசாங்க விருந்தினராய் அழைத்துச் செல்ல வந்தேன் ! வெற்றி எனக்கு ! வெற்றி உமக்கு ! அரண்மனைக்கு வெளியே படையுடன் காத்திருக்கிறேன் ! பட்டத்து ஆடை அணிகள் அணிந்து பள்ளக்கில் நீங்கள் வரும் பாங்கை நாங்கள் பார்த்துப் பரவசப் பட வேண்டும் ! தொலபெல்லா ! வாசலில் காத்திருந்து மகாராணியின் பள்ளக்கை வழிநடத்தி வா !

(அக்டேவியஸ் தன் படைகளுடன் வெளியேறுகிறான்)

கிளியோபாத்ரா: (தொலபெல்லாவைப் பார்த்து) தொலபெல்லா ! உண்மையைச் சொல் ! அக்டேவியஸ் எங்கே அவசரமாகப் போகிறார் ?

Fig. 3
Cleo Talking to the Snake

தொலபெல்லா: (மெதுவாக) மகாராணி ! உங்கள் மீதுள்ள அன்பால், பரிவால், மதிப்பால் இதைச் சொல்கிறேன். யாருக்கும் தெரியக் கூடாது ! அக்டேவியஸ் சிரியாவுக்கு மூன்று நாள் செல்கிறார் ! இதுதான் தக்க தருணம் ! நீங்களும் உங்கள் சகாக்களும் குழந்தைகளுடன் எங்காவது தப்பிச் செல்லுங்கள் ! தெய்வமே இப்படி ஒரு வழியைக் காட்டுகிறது ! எங்காவது கண்காணா பாலைவனக் குடிசையில் பதுங்கிக் கொள்வீர் ! ஆண்டனிக்குப் பணிபுரிந்து உங்கள் அரண்மை மதுவைப் பருகிய எனது நன்றிக் கடனைத் தீர்த்துக் கொள்கிறேன். ஆண்டனியைக் காக்க முடியாவிட்டாலும், இறுதிக் காலத்தில் உங்களைக் காப்பாற்றினேன் என்று மனச்சாந்தி அடைவேன்.

கிளியோபாத்ரா: (கண்ணீர் பொங்க) பரிவு உள்ளம் படைத்த ரோமானியனும் இருக்கிறான் என்று பரவசப் படுகிறேன், தொலபெல்லா ! மறக்க முடியாது இந்த உதவியை, நன்றி, வந்தனம்.

தொலபெல்லா: உங்களுக்கு எந்த விபத்தும் நேராதபடி வெளியே நின்று வாசலில் காவல் புரிகிறேன் ! வேறு வழியாகச் சென்று எங்காவது தப்பியோடிப் பிழைத்துக் கொள்வீர் மகாராணி !

(தொலபெல்லா வெளியேறுகிறான்)

கிளியோபாத்ரா: தொலபெல்லா ! எங்கள் உயிரைக் காப்பாற்ற நீ செய்யும் உதவி மகத்தானது ! வெளியே காத்திருங்கள். (தொலபெல்லா தலை மறைந்ததும், அவசரமாக) ஈராஸ் ! அக்டேவியஸ் தேன் மொழிகளை நம்பக்கூடாது ! கொஞ்சு தெல்லாம் வஞ்சகப் பேச்சுகள் ! நாமென்ன செய்யலாம் ? நீ என்ன நினைக்கிறாய் ? நாமிங்கு தாமதிக்கக் கூடாது. ரோமுக்கு நம்மைப் பிடித்துக் கொண்டு போய் தெருவிலே கழுதைமேல் ஏற்றி ஊர்வலம் நடத்தப் போகிறார் ! கூலிக்கார ஊழியர் வேசியென்று கேலி செய்து நம்மீது கல்லெடுத்து வீசுவார் ! குருதி சிந்தச் சிந்த விலங்குகளாய் நடத்தி
வீதிகளில் அவமானமாய்ப் பேசுவார்.

ஈராஸ்: நாம் பாலைவனத்தில் தப்பி ஓடி உயிர் வாழலாம் ! உங்கள் தம்பி டாலமி ஆண்ட போது நீங்கள் பாலையில் தப்பி வாழவில்லையா ?

கிளியோபாத்ரா: (சற்றுக் கவலையோடு) அது அந்தக் காலம் ! டாலமி என்னைத் துரத்தி விட்டான். ஆனால் பாலைவனத்தில் என்னைத் தேடி வரவில்லை ! அக்டேவியஸ் அப்படிப் பட்டவர் அல்லர். நாமெங்கு ஒளிந்தாலும் ரோமானியப் படை நம்மைக் கண்டுபிடித்துக் கழுத்தைத் துண்டித்து விடும். (அப்போது சார்மியான் வருகிறாள்) சார்மியான் ! போ எனது கிரீடத்தை எடுத்து வா ! பட்டம் சூடிய போது அணிந்த ஆடைகளைக் கொண்டு வா ! பொன் ஆபரணப் பேழையைத் தூக்கி வா ! தப்பி ஓடும் முன்பாக ஈராஸ், சார்மியான் இருவரும் எனக்கு இறுதி அலங்காரம் செய்ய வேண்டும் ! என் ஒப்பனையில் அக்டேவியஸ் மயங்கி விழ §ண்டும் ! சீக்கிரம் போ !

(சார்மியான் உள்ளே போகிறாள்)

Fig. 4
Death of Cleo, Iras & Charmian

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]

10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]

11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (Aug 8, 2007)]

Series Navigation

(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -2 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)

This entry is part [part not set] of 33 in the series 20070802_Issue

சி. ஜெயபாரதன், கனடா


சிறையில் கிடப்பேன் என்று எண்ணாதீர் !
மதுவருந்த மாட்டேன் அங்கு !
புலால் உண்ண மாட்டேன் அங்கு !
வைக்கோல் மெத்தையில் நான் துயிலேன் !
ரோமானிய மன்றக் கூண்டில் என்னை
ஏற்றலாம் என்று கனவு காணாதீர் !
ரோமானிய வீதிகளில் எல்லாம் என்னை
வெற்றிச் சிறை மாதாய்க் காட்டிச்
சுற்றிடலாம் என்று மட்டும் எண்ணாதீர் !
அதற்குப் பதில் எகிப்தின் குப்பைக் கிடங்கில்
புதைந்து போவதில் பூரிப்ப டைவேன் !
என்னாட்டில் மாபெரும் பிரமிட் ஆலயம்
எழுந்து நிற்குது என்னை ஏற்றுக் கொள்ள ! (கிளியோபாத்ரா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

எனக்குள்ள தெய்வ நியதி இது:
என் வேந்தருக்கும் என் பிரபுவுக்கும் அடி பணிவது !
எனது காரணங்களைத் தெளிவு படுத்துவேன்.
என் காம இச்சைக் குறைகள், மிகைகள்
என் பலவீனமாய் ஒப்புக் கொள்வேன் ! …
ஈதோ என் நிதியாளர், எடுத்துக் கொடுப்பார்
எனது சொத்து, நகை, பொன் நாணயம்
அனைத்தும் கொடுப்பார் உமக்கு !
என்னிறுதி உறுதி மொழி அது ! …. (கிளியோபாத்ரா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

+++++++++++++++

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ்: ரோமின் மூன்றாம் தளபதி
எனோபர்பாஸ்: ஆண்டனியின் ஆலோசகன், பாதுகாவலன்
கானிடியஸ்: ஆண்டனியின் போர்த் தளபதி
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
•பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன், இளைய பாம்ப்பி)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -2

ரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள்.

எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீண்டு மனைவியை மறந்து கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்து மயங்கிக் கிடக்கிறான். ஆண்டனியைத் தண்டிக்க அக்டேவியஸ் ரோமானியப் படையுடன் ஆக்டியக் கடற் பகுதியில் போரிட்டு வெற்றி அடைகிறான். தோற்றுப் போன ஆண்டனி ஆக்டேவியஸ் தூதரை விட்டு அனுப்பிய நிபந்தனைகளில் கையொப்பமிடுகிறான். ஆயினும் இருவருக்குள்ளும் நிரந்தரப் பகை உண்டாகி, ஆண்டனி எகிப்தில் அடைபட்டுப் போகிறான். போரில் தோல்வியுற்று அவமானப் பட்டு வேதனையில் உள்ள போது, கிளியோபாத்ரா அவன் கவனத்தைக் கவரத் தான் செத்து விட்டதாகச் செய்தி அனுப்புகிறாள். ஆண்டனி மரணத் தகவல் கேட்டு மனமுடைந்து, தன் கத்திமேல் பாய்ந்து தன்னுயிரை மாய்த்துக் கொள்கிறான். உயிர் பிரிவதற்குள் கிளியோபாத்ராவைக் கண்டு பேசி அவள் முன்பாக ஆண்டனி உயிரை விடுகிறான். அக்டேவியஸ் ஆண்டனி இறந்த செய்தியைக் கேட்டு, கிளியோபாத்ராவைக் காண தூதனை அனுப்புகிறான். சாமர்த்தியமாகப் பேசி கிளியோபாத்ராவைச் சிறைப்படுத்துகிறார் ரோமானியப் படையினர்.

++++++++++++++++++

கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -1

நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ராவின் தனியறை. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, ஈராஸ், சார்மியான், புரோகியூலியஸ், அக்டேவியஸ், தொலபெல்லா, மற்றும் ரோமானியப் படையினர்.

காட்சி அமைப்பு: அக்டேவியஸின் தூதன் புரோகியூலிஸ் ரோமானியப் படையுடன் நுழைந்து தந்திரமாகப் பேசிக் கிளியோபாத்ராவைச் சிறைப்படுத்துகிறான்.

கிளியோபாத்ரா: [கோபத்துடன்] அயோக்கியர்களே ! அருகில் நிற்காதீர் ! சிறைப்பட்டாலும், நான் சிறையில் கிடப்பேன் என்று மட்டும் எண்ணாதீர் ! புலால் உண்ண மாட்டேன் நான் ! மதுவருந்த மாட்டேன் நான் ! வைக்கோல் மெத்தையில் துயில மாட்டேன் நான் ! பட்டினி கிடந்து சாவேன் ! ரோமானிய மன்றக் கூண்டில் என்னை ஏற்றலாம் என்று கனவு காணாதீர் ! ரோமானிய வீதிகளில் என்னைச் சிறை மாதாய் இழுத்துச் சென்று அவமானம் செய்யலாம் என்று கோட்டை கட்டாதீர் ! அதற்குப் பதிலாக எகிப்த் குப்பைக் கிடங்கில் புதைந்து போவதில் பூரிப்படைவேன் ! பிரம்மாண்டமான பிரமிட் புதை ஆலயம் எழுந்து நிற்கிறது என்னை ஏற்றுக் கொள்ள ! தள்ளி நிற்பீர் ! உங்கள் மூச்சுக் காற்று கூட என்மீது படக் கூடாது ! உமது வாய் எச்சில் என் மீது சிதறக் கூடாது ! தூரமாய்த் தள்ளி நிற்பீர் ! நான் எகிப்த் மகாராணி !

புரோகியூலியஸ்: மனதைத் தளர விடாதீர் மகாராணி ! உங்கள் உயிருக்குப் பங்கம் விளையாது !

கிளியோபாத்ரா: [ஆத்திரமுடன்] என்னை மான பங்கப் படுத்த உங்கள் படை தயாராக இருப்பது எனக்குத் தெரியாமல் போகவில்லை !

[அப்போது தொலபெல்லா உள்ளே நுழைகிறான்]

தொலபெல்லா: புரோகியூலியஸ் ! நீ என்ன பண்ணி விட்டாய் ? மகாராணி கோபத்துடன் தோன்றுகிறார் ! தளபதி அக்டேவியஸ் ஆணைப்படி செய்தாயா ? அல்லது அவமானப் படுத்தினாயா ? அக்டேவியஸ் உன்னை அழைக்கிறார், போ நான் மகாராணியைப் பாதுகாக்கிறேன்.

புரோகியூலியஸ்: போகிறேன். மகராணியை மதிப்புடன்தான் நடத்தினேன் அவ்விதமே நீயும் நடத்து. பரிவுடன் பேசு. பண்புடன் பேசு. பாசமுடன் பேசு [கிளியோபாத்ராவைப் பார்த்து] மகராணி ! உங்கள் சார்பாக அக்டேவியஸிடம் நான் என்ன சொல்ல வேண்டும் ?

கிளியோபாத்ரா: [ஆங்காரமாக] செத்துப் போவேன் என்று சொல் !

புரோகியூலிஸ்: [அதிர்ச்சி அடைந்து] மகாராணி ! எப்படிச் சொல்வேன் அதை ? அவராட்சியைத் தாங்கள் ஏற்றுக் கொள்வதாய்ச் சொல்கிறேன். போய் வருகிறேன். [போகிறான்]

தொலபெல்லா: மதிப்புக்குரிய மகாராணி ! நான் சொன்னதைக் கேட்டீர் அல்லவா ! என் கடன் உங்களைப் காப்பதே ! அஞ்ச வேண்டாம் !

கிளியோபாத்ரா: அப்படிச் சொல்லித்தான் என்னைச் சிறைப்படுத்தி யுள்ளார். சிறைப்பட்ட எனது உறுப்புகள் யாவும் செயலற்றுப் போயுள்ளன ! என்ன சொன்னாய் நீ என்பது செவியில் படவில்லை எனக்கு.

தொலபெல்லா: [பரிவுடன்] உங்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். நான் மோசடி செய்பவன் அல்லன். முழு நம்பிக்கை வைக்கலாம் என்மேல் !

கிளியோபாத்ரா: [ஆத்திரமாக] ரோமானியக் களிமண் எல்லாம் ஒன்றுதான் ! நிறம் வேறாகத் தெரிந்தாலும் குணம் ஒன்றுதான் ! உன் பையில் என்ன சூட்சம் ஒளிந்துள்ளது ? இப்போது போனாரே உமது முதல் தூதர் அவர் சாமர்த்தியமாகப் பேசி என்னைச் சிறைப்படுத்திச் சென்றார். சுற்றி வந்து வஞ்சகமாய்ச் சதி செய்யாமல் நேராகவே உங்கள் திட்டத்தை வெளியிடலாம். நான் அடைபட்டுப் போன மான் ! என் கனவைச் சொன்னால் நீ சிரிப்பாய் !

தொலபெல்லா: நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை மகாராணி !

கிளியோபாத்ரா: நான் மனத்துயரில் கிடக்கிறேன். எனது முதற்கனவின் விளைவாக ரோமாபுரிச் சக்கரவர்த்தி ஜூலியஸ் சீஸரின் மனைவியாக மாறினேன். அவர் கொல்லப்பட்ட பிறகு அடுத்த என் கனவில் ஆண்டனி மூவரில் ஒரு சக்கரவர்த்தியாக எனக்குத் துணை இருந்தார். இனி அப்படி ஒரு கனவு, தூக்கம் வராத எனக்குத் தோன்றுமா ? கனவு வந்தாலும் அப்படி ஒரு மாவீரரை நான் இனிக் காண்பேனா ?

தொலபெல்லா: நிச்சயம் காண்பீர் மகாராணி ! உங்கள் புதுக்கனவு பலிக்கும் ! அடுத்து வருகிறார் அக்டேவியஸ் !

கிளியோபாத்ரா: ஓக் மரம்போல் உறுதியான ஆண்டனி தேவலோகம் சென்று விட்டார். ஆங்கு
சூரிய சந்திரரைப் பாதையில் சீராகத் தூண்டி விட்டு, இச்சிறிய பூமிக்கு விளக்கேற்றினார் ! அந்த விளக்கொளியை அணைக்க இப்போது புயல் அடிக்கப் போகிறது !

தொலபெல்லா: முற்றிலும் உண்மை மகாராணி !

கிளியோபாத்ரா: [சற்று கூர்மையாகப் பார்த்து] எனக்கு அந்தப் புயலைப் பற்றிச் சொல்வாயா ?

தொலபெல்லா: நீங்கள் கேட்பது புதிர்போல உள்ளது ! புரியும்படிச் சொல்வீரா ?

கிளியோபாத்ரா: [மிக்கக் கவலையுடன்] அக்டேவியஸ் என்னை என்ன செய்யப் போகிறார் என்பது
உனக்குத் தெரியுமா ?

தொலபெல்லா: எனக்குத் தெரிந்ததைச் சொல்ல அச்சம் உண்டாகுது ! ஆனால் அஞ்ச வேண்டிய தில்லை மகாராணி ! என்வாயால் நான் அதைச் சொல்லக் கூடாது ! சொன்னால் என் தலை துண்டாகும் !

கிளியோபாத்ரா: [கனிவுடன்] நான் படும் இன்னலை அறிவாய் நீ ! தயவு செய்து சொல் ! என் மீது பரிவு காட்டு ! உன் அன்பு மனதைத் திறந்து காட்டு !

தொலபெல்லா: [தடுமாறிக் கொண்டு] மகாராணி ! அக்டேவியஸ் உங்களைக் கண்ணியமாகவே நடத்துவார் ! கவலைப் படாதீர் !

கிளியோபாத்ரா: [ஆங்காரமாக] பொய் சொல்கிறாய் நீயும் ! அறிவு கெட்டவனே சொல் ! ரோமாபுரித் தெரு வீதிகளில் விலங்கிட்டு என்னை வெற்றிச் சின்னமாய் நடத்திச் செல்லப் போகிறார், இல்லையா ?

தொலபெல்லா: ஈதோ தளபதியே வருகிறார். கேளுங்கள். தன் சகாக்களுடன் உங்களைக் காண வருகிறார்.

[ரோமானியக் காவலன் முன்னறிவிக்க அக்டேவியஸ் இராணுவ உடையில் தனது சகாக்களான காலஸ், மாசொனஸ் உடன்வர முன்னே வருகிறார். காவலர் யாவரும் இரைச்சலின்றி அமைதியாக அணியில் நிற்கிறார்.]

காவலன்: [பலத்த குரலில்] ஓதுங்கி நிற்பீர் ! ரோமாபுரித் தளபதி மாண்புமிகு அக்டேவியஸ் வருகிறார்.

அக்டேவியஸ்: [ஆர்வமாக] எங்கே எகிப்த் பேரரசி ?

தொலபெல்லா: ஈதோ இருக்கிறார் மகாராணி எமது பாதுகாப்பில் !

கிளியோபாத்ரா: [முன்வந்து மண்டியிட்டு] வந்தனம். வருக, வருக மாவீரர் அக்டேவியஸ் ! உங்கள் தடம்பட்டு எனது எகிப்த் நாடு புனிதம் அடைகிறது ! உங்கள் ஆட்சிக்கு அடிபணிகிறது ! உங்கள் ஆணைக்குக் கீழ்ப்படிய எகிப்தரசி இங்கே காத்திருக்கிறாள் !

அக்டேவியஸ் [கண்ணியமாக] மண்டியிடத் தேவையில்லை மகாராணி ! எழுந்து உனது ஆசனத்தில் உட்காருவீர் !

கிளியோபாத்ரா: [எழுந்த வண்ணம்] அப்படித்தான் எங்கள் தெய்வ நியதியில் எழுதப்பட்டிருக்கிறது. என் பிரபுவுக்கும், என் தெய்வத்துக்கும் நான் கீழ்ப்படிந்து வணங்கக் கடமைப் பட்டவள் !

அக்டேவியஸ்: உனது செயல்கள் எனக்குப் பிடிக்கா விட்டாலும் எகிப்த் நாட்டின் ஆட்சிப் பொறுப்பு ரோமைச் சார்ந்தது. எமக்கு நீ உண்டாக்கிய காயங்கள் ஆறவில்லை ஆயினும், சந்தர்ப்பத்தால் நேர்ந்தன என்று அவற்றை ஒதுக்கி வைக்கிறேன்.

கிளியோபாத்ரா: [தலை தூக்கி] நான் என்ன காயங்கள் உமக்கு உண்டாக்கினேன் ? எப்போது உண்டாக்கினேன் ?

அக்டேவியஸ்: முதலில் சீஸரின் மனைவி கல்பூர்ணியாவை நீ காயப்படுத்தினாய் ! இரண்டாவது ஆண்டனியின் மனைவி அக்டேவியாவை நீ புண்படுத்தினாய் ! அக்டேவியா என்னருமைச் சகோதரி ! அடுத்து சீஸருக்கு ஆண்வாரிசை அளித்து ரோமாபுரி செனட்டாரைக் காயப்படுத்தினாய் ! ஒரு கீழ்நாட்டரசியின் மகன் ரோமாபுரிக்குப் பட்டத்து அரசனாய் வரலாம் என்னும் பயத்தை உண்டாக்கி விட்டாய் ! எகிப்துக்குக் கப்பம் வாங்க வரும் அத்தனை தளபதிகளையும் வசீகரப் படுத்தி விடுகிறாய் ! ரோமானிய மாதரிடம் இல்லாத ஒரு மந்திர சக்தி ஏதோ எகிப்த் மகாராணிக்கு உள்ளது !

கிளியோபாத்ரா: ரோமாபுரியின் குளிர்ச்சியை வெறுத்து எகிப்தின் வெப்பத்தை நாடி வருபவர் உமது படைத் தளபதிகள் ! நான் அவரைத் தேடிப் போகவில்லை ! எகிப்தில் அவருக்குச் சுதந்திரம் அதிகம் ! சுகபோகம் அதிகம் ! உபசரிப்பு அதிகம் ! மதுவும், மாதரும், மன மகிழ்ச்சியும் அதிகம் ! ரோமாபுரியில் ஏன் அவை எல்லாம் மலிவாகக் கிடைப்பதில்லை ?

அக்டேவியஸ்: எகிப்தில் திறமையாகப் பேசும் மாதர் அதிகம் என்பது நன்கு தெரிகிறது ! மகாராணி ! இப்போது நான் சொல்வதைக் கேட்பீர் ! என் நிபந்தனைக்கு உட்பட்டால் உமக்குச் சலுகைகள் அளிப்பேன். ஒப்பா விட்டால் …. !

கிளியோபாத்ரா: என் நிபந்தனைக்கு உடன்பட்டால், உங்கள் நிபந்தனைக்கு நான் உடன்படுவேன். சரி நான் ஒப்பா விட்டால் … என்னை என்ன செய்வீர் ?

அக்டேவியஸ்: [ஆச்சரியமுடன்] ஓ ! உங்கள் நிபந்தனை ? சொல்வீர் ! ஒப்பா விடாலும், அதைக் கேட்கிறேன், சொல்வீர் !

கிளியோபாத்ரா: எனது சொத்து, நகை, பொன் நாணயங்கள் அத்தனையும் உங்களுக்குத் தருகிறேன். எகிப்த் முழுவதையும் ரோமுக்குத் தந்து விடுகிறேன் ! ஆனால் எகிப்த் நாட்டுக்கு என் மகன் சிஸேரியனை மன்னனாக ஆக்க வேண்டும் ! அதுவே என் வேண்டுகோள், பரிவான நிபந்தனை.

அக்டேவியஸ்: [சற்று சிந்தித்து] அதற்கு நான் உடனே பதில் அளிக்க இயலாது. ஆனால் அதற்கொரு நிபந்தனை விடுகிறேன் ! சிஸேரியனை முதலில் நீ எங்களிடம் விட்டுவிட வேண்டும். ரோமில் அவனை அழைத்துச் சென்று நாங்கள் அரசாளப் பயிற்சிகள் அளிக்க வேண்டும் !

கிளியோபாத்ரா: [ஆழ்ந்து சிந்தித்து] நானிதை எப்படி நம்புவது ? சிஸேரியனை ரோம் செனட்டார் எவருக்குமே பிடிக்காது ! சீஸருக்கு நேர்ந்த அதே கதிதான் அவரது மகனுக்கும் கிடைக்கும். ஓநாயிடம் எப்படி முயல் குட்டியை ஒப்படைப்பது ? சிஸேரியனுக்கு ரோமில் யார் பாதுகாப்பு அளிப்பது என்று கூறுவீரா ? என்னருமை மகனை உங்கள் கையில் ஒப்படைக்க மனம் ஒப்பவில்லை !

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]

10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]

11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (Aug 1, 2007)]

Series Navigation

(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -1 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)

This entry is part [part not set] of 30 in the series 20070726_Issue

சி. ஜெயபாரதன், கனடா


உன்னைப் பற்றி உரைத்துள்ளார் ஆண்டனி,
நம்பத் தகுந்த நபரென்று ! உமது தளபதி
என்னை ஏமாற்றி னாலும் ஏற்புடைத்தே !
எகிப்த் அரசியைப் பிச்சை எடுக்க வைத்தால்
இப்படிக் கேட்பாள் என்று அவரிடம் சொல் !
“எகிப்த் நாட்டுக்கு மீண்டும் என்னையே
பட்டத்து ராணி யாக்கு என்றுதான் !
என் வசப்பட்ட நாடுகளை மகனுக்கு நான்
ஈவதுபோல், அளிக்க வேண்டும் அக்டேவியஸ் !
முன்னால் அவருக்கு மண்டி யிட்டு
நன்றி சொல்லத் தயார் என்றும் சொல் ! … (புரோகியூலியஸிடம் கிளியோபாத்ரா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

சிறையில் கிடப்பேன் என்று எண்ணாதீர் !
மதுவருந்த மாட்டேன் நான் அங்கு !
புலால் உண்ண மாட்டேன் நான் அங்கு !
வைக்கோல் மெத்தையில் துயில மாட்டேன் !
ரோமானிய மன்றக் கூண்டில் என்னை
ஏற்றலாம் என்று கனவு காணாதீர் !
ரோமானிய வீதிகளில் என்னை
வெற்றிச் சிறை மாதாய்க் காட்டி
சுற்றிடலாம் என்று எண்ணாதீர் !
அதற்குப் பதிலாக எகிப்த் குப்பைக் கிடங்கில்
புதைந்து போவதில் பூரிப்ப டைவேன் !
என்னாட்டில் மாபெரும் பிரமிட் ஆலயம்
எழுந்து நிற்குது என்னை ஏற்றுக் கொள்ள ! (கிளியோபாத்ரா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

Fig. 1
Cleopatra in Agony

+++++++++++++++

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ்: ரோமின் மூன்றாம் தளபதி
எனோபர்பாஸ்: ஆண்டனியின் ஆலோசகன், பாதுகாவலன்
கானிடியஸ்: ஆண்டனியின் போர்த் தளபதி
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
·பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன், இளைய பாம்ப்பி)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -1

ரோமா புரியின் நிலைமை: ·பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி ·புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள்.

எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீண்டு மனைவியை மறந்து கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்து மயங்கிக் கிடக்கிறான். ஆண்டனியைத் தண்டிக்க அக்டேவியஸ் ரோமானியப் படையுடன் ஆக்டியக் கடற் பகுதியில் போரிட்டு வெற்றி அடைகிறான். தோற்றுப் போன ஆண்டனி ஆக்டேவியஸ் தூதரை விட்டு அனுப்பிய நிபந்தனைகளில் கையொப்பமிடுகிறான். ஆயினும் இருவருக்குள்ளும் நிரந்தரப் பகை உண்டாகி, ஆண்டனி எகிப்தில் அடைபட்டுப் போகிறான். போரில் தோல்வியுற்று அவமானப் பட்டு வேதனையில் உள்ள போது, கிளியோபாத்ரா அவன் கவனத்தைக் கவரத் தான் செத்து விட்டதாகச் செய்தி அனுப்புகிறாள். ஆண்டனி மரணத் தகவல் கேட்டு மனமுடைந்து, தன் கத்திமேல் பாய்ந்து தன்னுயிரை மாய்த்துக் கொள்கிறான். உயிர் பிரிவதற்குள் கிளியோபாத்ராவைக் கண்டு பேசி அவள் முன்பாக ஆண்டனி உயிரை விடுகிறான். அக்டேவியஸ் ஆண்டனி இறந்த செய்தியைக் கேட்டு, கிளியோபாத்ராவுக்குத் தூதனை அனுப்புகிறான்.

++++++++++++++++++


Fig. 2
Cleopatra with her Son

கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -1

நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ராவின் தனியறை. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, மகன் சிஸேரியன் (எட்டு வயது), ஈராஸ், சார்மியான், புரோகியூலியஸ், அக்டேவியஸ், தொலபெல்லா, மற்றும் ரோமானியப் படையினர்.

காட்சி அமைப்பு: கிளியோபாத்ரா ஆண்டனி மரித்த துக்கத்தில் சோகமாய்க் கண்ணீருடன் வீற்றிருக்கிறாள். பக்கத்தில் மகன் சிஸேரியன் தாயின் சோகத்தைக் கண்டு வருந்துகிறான். அப்போது அக்டேவியஸின் தூதன் புரோகியூலிஸ் நுழைகிறான்.

சிஸேரியன்: [தாயின் கண்ணீரைத் துடைத்து] அன்னையே ! ஏன் உங்கள் கண்கள் சிவந்துபோய் உள்ளன ? கண்கள் என்றும் இல்லாதபடி ஏனின்று கண்ணீரைப் பொழிகிறது ?

கிளியோபாத்ரா: [வருத்தமுடன் மகன் சிஸேரியனை பார்த்து] மகனே ! மனப்புண் ஆறாமல் போகும் போது அது கண்களில் ஆறாகப் பெருகுகிறது. மனத்தின் கொதிப்பே கனல் நீராகக் கண்களில் சிந்துகின்றன.

சிஸேரியன்: அன்னையே ! மனப் புண்ணுக்கு மருந்தில்லையா ?

கிளியோபாத்ரா: ரணப் புண்ணுக்குத்தான் மருந்துண்டு ! மனப் புண்ணுக்கு மருந்தில்லை மகனே ! தீராக் கவலையே ஆறா மனப் புண்ணை உண்டாக்கும்.

சிஸேரியன்: தீராக் கவலை எப்படி உண்டானது அன்னையே ?

கிளியோபாத்ரா: தீராக் கவலை முதலில் உன்னைப் பற்றி ! ஆறாக் கவலைப் பிறகு என்னைப் பற்றி ! என்னை முதலில் பாதுகாத்த உன் மாவீரத் தந்தை சீஸர் கொல்லப்பட்டு மாண்டார் ! பிறகு என்னைக் காப்பாற்றி வந்த ஆருயிர்க் காதலர் ஆண்டனி உயிரை மாய்த்துக் கொண்டார் ! இனி நமக்குத் துணைவர் யாருமில்லை ! அதனால் எனக்கு ஆறாக் கவலை ! உன்னைக் காத்து வந்த எனக்கு இப்போது அபாய எச்சரிக்கை வந்திருக்கிறது ! உன்னை இனிமேல் யார் பாதுகாப்பது என்பது எனக்குத் தீராக் கவலை !


Fig. 3
Son Caesarian

சிஸேரியன்: அன்னையே நீங்கள் இப்படி அஞ்சியதை நான் இதுவரைக் கண்டதில்லையே ! என்ன அபாயம் உங்களுக்கு வரப் போகிறது ? நமது எகிப்த் படைகள் இருக்க ஏன் பயப்பட வேண்டும் ?

கிளியோபாத்ரா: நீ ரோமாபுரிக்கு வேந்தன் ஆவாய் என்னும் கனவு உன் தந்தை சீஸர் செத்ததும் அழிந்து போனது ! நீ எகிப்துக்கு பாரோ பரம்பரை வேந்தனாய் ஆளுவாய் என்னும் கனவு ஆண்டனி மரித்ததும் அழிந்து போனது ! இப்போது உன் உயிரைக் காப்பது எப்படி என்பதே பிரச்சனையாகி விட்டது ! நமது பகைவரின் படைப்பலம் நம்மை விடப் பலமடங்கு மிகையானது !

சிஸேரியன்: நான் எங்கே போக வேண்டும் அன்னையே ? எகிப்த்துக்கு என்ன நேரிடப் போகுது ?

கிளியோபாத்ரா: என்ன நடக்கும் என்று எனக்கே தெரியாது மகனே ! நம் நாட்டுக்குப் பாதுகாப்பாக இருந்த வேலி முறிந்து போனது ! எந்த நேரத்திலும் எகிப்தைக் கைப்பற்றிப் பகைவர் நம்மை மீண்டும் அடிமைப் படுத்தலாம். ஆதலால் என்னுடன் வாழ்ந்த நீ இப்போது வேறு இல்லத்தில் வாழப் போகிறாய். அன்னியருடன் நீ வாழப் போகும் தருணம் வந்து விட்டது ! என்னை மீண்டும் காணும் தருணம் எப்போது என்பது தெரியாது ! நான் உன்னைப் பிரியும் வேளை வந்து விட்டது மகனே ! [கண்ணீருடன் கட்டிப் பிடித்து முத்தமிடுகிறாள்] [சார்மியானைப் பார்த்து] சார்மியான் சிஸேரியனை அழைத்துச் செல் ! நான் ஏற்பாடு செய்த நபரிடம் அடைக்கலம் செய்திடு ! சீக்கிரம் போ ! யாரோ வருகிறார் [மகனைத் தழுவி மீண்டும் முத்தமிடுகிறாள். சார்மியான் சிஸேரியனை அழைத்து விரைவாகச் செல்கிறாள்.]

[அப்போது வேறு திசையிலிருந்து அக்டேவியஸின் தூதன் புரோகியூலியஸ் நுழைகிறான்]

புரோகியூலியஸ்: [மகாராணிக்கு வந்தனம் செய்து] மகாராணி ! என்பெயர் புரோகியூலியஸ். ரோமாபுரித் தளபதி அக்டேவியஸ் அனுப்பிய தூதன் நான் ! நல்ல தகவலைக் கொண்டு வந்திருக்கிறேன் ! உங்களுக்கு அக்டேவியஸ் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறார் ! ரோமாபுரித் தளபதி ஆண்டனி உங்கள் நாட்டிலே உயிர் மரித்ததற்கு வருத்தம் தெரிவிக்கிறார் !

கிளியோபாத்ரா: ஓ ! நீதான் புரோகியூலியஸா ? நினைவிருக்கிறது எனக்கு. ஆண்டனி உன்னைப் பற்றி என்னிடம் சொல்லி இருக்கிறார். உன்னை நம்பலாம் என்றும் என்னிடம் சொல்லி இருக்கிறார். என்னை நீ ஏமாற்றினாலும் அதுவும் ஏற்புடையதே. உங்கள் தளபதி எகிப்த் மகாராணியைப் பிச்சைக்காரி ஆக்க நினைத்தால் அவரிடம் நீ சொல் ! எகிப்த் நாட்டைக் கொடுத்து என்னை மீண்டும் பட்டத்து ராணியாக்கு என்றுதான் பிச்சை கேட்பேன் என்று சொல் ! இன்னும் சொல்லப் போனால், எகிப்தைச் சேர்ந்த நாடுகளுக்கு என் மகனை வேந்தனாக்கு என்று பிச்சை கேட்பேன் என்று சொல் ! என் கைவசமுள்ள நாடுகளை மகனுக்கு நான் அளிப்பதுபோல், அக்டேவியஸ் அவனுக்குத் தரவேண்டும். அதற்கு அவர் முன்னால் நான் மண்டியிட்டுக் கேட்கவும் தயார் என்று சொல் !


Fig. 4
Cleopatra Surrenders to
Proculeius

புரோகியூலியஸ்: [மகிழ்ச்சியோடு] அஞ்ச வேண்டாம் மகாராணி ! தளபதி அக்டேவியஸ் உங்களைப் பரிவுடன் நடத்துவார் ! ஆசைப் பட்டதை அவரிடம் கேளுங்கள் ! அளிப்பார் அவர் ! உங்கள் கோரிக்கையை அவரிடம் சொல்கிறேன் ! அவரை அன்புடன் நாடும் உங்களைப் பற்றி எடுத்துச் சொல்வேன் உறுதியாக ! எங்கள் வெற்றிப் பிரபு உங்களை மதிப்புடன் வரவேற்பார்.

கிளியோபாத்ரா: [மிக்கப் பணிவுடன்] அக்டேவியஸின் ஆணைக்குக் கட்டுப்படும் மகாராணி நான். அவரை எகிப்த் நாட்டின் தலைவராக ஏற்றுக் கொண்டு என் வாழ்த்துக்களை அனுப்புகிறேன்.

புரோகியூலியஸ்: உங்கள் பணிவான வாழ்த்துக்களைத் தளபதிக்கு வழங்குகிறேன் மகாராணி ! ஆண்டனி மரித்துத் தனியாகப் போன உங்கள் பரிதாப வாழ்வுக்கு வருந்துகிறேன் !

[அப்போது பெருத்த ஆரவாரம் கேட்கிறது. திடீரென பத்துப் பதினைந்து ரோமானியப் படையினர் உள்ளே புகுந்து கிளியோபாத்ராவைக் கைது செய்கிறார்]

ஈராஸ்: [ஓவென்று அலறிக்கொண்டு] மகாராணி ! என்ன வஞ்சம் இது ?

[சார்மியான் தனியாக ஓடி வருகிறாள்]

சார்மியான்: [கோபத்துடன்] மூர்க்கர் ! முரடர் ! வஞ்சகர் !

புரோகியூலியஸ்: [தாழ்மையுடன்] மன்னிக்க வேண்டும் மகாராணி ! ரோமானியச் சம்பிரதாயம் இது ! ரோமானியப் படையினர் உங்களை இனிமேல் பாதுகாப்பார் ! பயப்பட வேண்டாம் ! எங்கே உங்கள் மகன் சிஸேரியன் ? அவனுக்கும் தனியாக ரோமானியப் பாதுகாப்பு உண்டு. [ரோமானியப் படைகளிடம்] அக்டேவியஸ் வரும்வரை கிளியோபாத்ராவைப் பாதுகாப்பீர் !

கிளியோபாத்ரா: [திடீரென்று தன் வாளை உருவிப் படைகளை நோக்கி] தொடாதீர் என்னை ! என் மகன் எங்குள்ளான் என்பது தெரியாது. [புரோகியூலியஸைப் பார்த்து] தேனாகப் பேசிய தெல்லாம் தேளாகக் கொட்டுவதற்கா ? ரோமானியர் யோக்கியர் என்று தவறாக எடை போட்டு விட்டேன் ! உங்களிடம் சிறைப்படும் முன்பு நான் உயிருக்கு விடுதலை அளிப்பேன் !


Fig. 5
Cleopatra under House-Arrest

புரோகியூலியஸ்: [வேகமாய் நெருங்கி] மகாராணி ! வேண்டாம் ! அது தவறு ! உங்கள் உயிரைப் போக்கிக் கொள்ள முனையாதீர் ! அஞ்ச வேண்டாம் ! அக்டேவியஸ் உங்களுடன் நேராக உரையாடப் போகிறார் ! ரோமானியப் பாதுகாப்பு அதற்குத்தான். [கிளியோபாத்ராவின் கைவாளைப் பிடுங்கிக் கொள்கிறான்]

கிளியோபாத்ரா: [கோபத்துடன்] உங்கள் தளபதியைக் காண எனக்கு விருப்ப மில்லை இப்போது ! வஞ்சகருடன் உரையாட விருப்ப மில்லை எனக்கு ! ஆண்டனி மரித்த நாளே நானும் மரணம் அடைந்திருக்க வேண்டும் ! காலம் தாமதித்தது தவறாகப் போனது.

புரோகியூலியஸ்: ரோமானியப் பாதுகாப்பில் மகாராணிக்கு எந்த மானபங்கமும் நேராது ! அஞ்ச வேண்டாம் ! அக்டேவியஸ் பரிவு மிக்கவர் ! உங்களையும், உங்கள் அருமைப் புதல்வனையும் ரோமாபுரிக்கு அழைத்துச் செல்ல அக்டேவியஸே நேராக வரப் போகிறார் !

கிளியோபாத்ரா: [கோபத்துடன்] அயோக்கியர்களே ! அருகில் நிற்காதீர் ! நான் சிறையில் கிடப்பேன் என்று எண்ணாதீர் ! புலால் உண்ண மாட்டேன் நான் ! மதுவருந்த மாட்டேன் நான் ! வைக்கோல் மெத்தையில் துயில மாட்டேன் ! பட்டினி கிடந்து சாவேன் ! ரோமானிய மன்றக் கூண்டில் என்னை ஏற்றலாம் என்று கனவு காணாதீர் ! ரோமானிய வீதிகளில் என்னைச் சிறை மாதாய் இழுத்துச் சென்று சித்திரவதை செய்யலாம் என்று கோட்டை கட்டாதீர் ! அதற்குப் பதிலாக எகிப்த் குப்பைக் கிடங்கில் புதைந்து போவதில் பூரிப்படைவேன் ! பிரம்மாண்டமான பிரமிட் புதை ஆலயம் எழுந்து நிற்கிறது என்னை ஏற்றுக் கொள்ள ! தள்ளி நிற்பீர் ! உங்கள் மூச்சுக் காற்று கூட என்மீது படக் கூடாது ! உமது வாய் எச்சில் என் மீது சிதறக் கூடாது ! தள்ளி நிற்பீர் !

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]

10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]

11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (July 24, 2007)]

Series Navigation

(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 10 ஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம்

This entry is part [part not set] of 24 in the series 20070719_Issue

சி. ஜெயபாரதன், கனடா


அதிர்ச்சி தரும் அத்தகவல் பெரிதாய்ப் பிளக்கும்
உருண்டை உலகு சிங்கங்களை அவிழ்த்து விட்டுத்
தெருக்கள் வழியே குடிமக்களைத் துரத்திடும்
வீட்டுக் குள்ளே ! ஆண்டனியின் மரண
அறிவிப்பு ஒரு பேரிடி ! அது மட்டு மில்லை !
அவரது பெயரில் பாதி ரோம் உலகு உள்ளது ! (அக்டேவியஸ்)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

ஓ ஆண்டனி ! உன் இறப்புக்கு காரணம் நான் !
உனக்குத் தேயும் நாளாக நான் செய்ய நேரிட்டது !
வெளி உலகில் சேர்ந்திருக்க முடியாமல் போனது !
வருந்திக் கண்ணீர் வடிக்கிறேன் நானுனக்கு,
குருதி நெஞ்சு போல் நமக்கு அரச உறவு !
சகோதரன் நீ ! போட்டி எனக்கு நீ ! ஆயினும்
ரோமானியப் போரில் துணைவன் எனக்கு நீ !
படைப்பிலே உயர்ந்தவன் ! பார்க்கப் போனால்
ரோம்சாம் ராஜியத்தில் எனது தோழன் நீ, (அக்டேவியஸ்)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

புரோகியூலியஸ் ! போ ! (கிளியோபாத்ராவிடம்)
மானபங்கம் செய்யோம், மதிப்போம் என்று சொல் !
ஆறுதல் படுத்த அவளது பண்பாடுக்கு ஏற்ப
ஆசா பாசங்களுடன் பேசிடு இனிக்க !
இன்றேல் ஏதேனும் மானிட வலுவால் அவள்
கீர்த்தியே நம்மை வீழ்த்திடலாம் ! நமது
வெற்றிப் பரிசாய்க் கொண்டு போய் ரோமில்
கெட்டி வைக்கலாம் நிரந்தர மாக !
விரைவாய்ச் செல் அவள் உரைப்பதைச் சொல்ல வா !

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

+++++++++++++++

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ்: ரோமின் மூன்றாம் தளபதி
எனோபர்பாஸ்: ஆண்டனியின் ஆலோசகன், பாதுகாவலன்
கானிடியஸ்: ஆண்டனியின் போர்த் தளபதி
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
•பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன், இளைய பாம்ப்பி)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 10

ரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள்.

எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீண்டு மனைவியை மறந்து கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்து மயங்கிக் கிடக்கிறான். ஆண்டனியைத் தண்டிக்க அக்டேவியஸ் ரோமானியப் படையுடன் ஆக்டியக் கடற் பகுதியில் போரிட்டு வெற்றி அடைகிறான். தோற்றுப் போன ஆண்டனி ஆக்டேவியஸ் தூதரை விட்டு அனுப்பிய நிபந்தனைகளில் கையொப்பமிடுகிறான். ஆயினும் இருவருக்குள்ளும் நிரந்தரப் பகை உண்டாகி, ஆண்டனி எகிப்தில் அடைபட்டுப் போகிறான். போரில் தோல்வியுற்று அவமானப் பட்டு வேதனையில் உள்ள போது, கிளியோபாத்ரா அவன் கவனத்தைக் கவரத் தான் செத்து விட்டதாகச் செய்தி அனுப்புகிறாள். ஆண்டனி மரணத் தகவல் கேட்டு மனமுடைந்து, தன் கத்திமேல் பாய்ந்து தன்னுயிரை மாய்த்துக் கொள்கிறான். உயிர் பிரிவதற்குள் கிளியோபாத்ராவைக் காண விரும்பி, தன்னைத் தூக்கிச் செல்ல காவலரை வேண்டுகிறான்.

++++++++++++++++++

கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 10

நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் ரோமாபுரித் தளபதி அக்டேவியஸின் கூடாரம். பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: அக்டேவியஸ், அக்கிரிப்பா, தொலபெல்லா, புரோகியூலியஸ் மற்றும் ரோமானியப் படைக் காவலளர்கள், ஆண்டனியின் தூதன் டெர்செட்டஸ்.

காட்சி அமைப்பு: அக்டேவியஸ் ஆசனத்தில் அமர்ந்து தனது போர் ஆலோசகருடன் உரையாடிக் கொண்டிருக்கிறான். ஆண்டனியைப் பார்த்துப் பேசி வரத் தூதன் தொலபெல்லாவை அனுப்பிட அழைக்கிறான்.

அக்டேவியஸ்: ஆண்டனி எங்கே ஒளிந்துள்ளார் என்று தெரிய வேண்டும் எனக்கு. கிளியோபாத்ரா அவருடன் இருக்கிறாளா அல்லது தனியே கிடக்கிறாளா என்று தெரிய வேண்டும் எனக்கு. தொலபெல்லா ! நீ ஆண்டனிக்கு முன்பு பணி புரிந்தவன் ஒரு சமயம் ! எகிப்தின் மறைவிடங்கள் தெரியும் உனக்கு ! கிளியோபாத்ராவின் அந்தரங்க அறைகளும் தெரியும் உனக்கு ! நீதான் தகுதியானவன். அதனால்தான் ஆண்டனியைக் கண்டு பேச உன்னை அனுப்புகிறேன் தொலபெல்லா !

தொலபெல்லா: ஆண்டனிடன் முடிவில் உடன்படிக்கை செய்து கொள்ளவா ?

அக்டேவியஸ்: ஆண்டனி என் மைத்துனர். தங்கை அக்டேவியாவை ரோமாபுரி மாந்தர் அறிய திருமணம் புரிந்தவர். மேலும் ஆண்டனி ஒரு ரோமன் ! எதிப்த் வேசி கிளியோபாத்ரா ஆண்டனியின் மனைவியாகத் தகுதியற்றவள். ரோமில் காத்துக் கொண்டிருக்கிறாள் தங்கை அக்டேவியா. ரோமுக்கு மீளும் போது நான் ஆண்டனியோடுதான் செல்வேன்.

தொலபெல்லா: ஆண்டனி வர மறுத்தால் என்ன செய்ய வேண்டும் தளபதி ?

அக்டேவியஸ்: [கோபமாக] என் தங்கை இதயம் பிளந்து விடும் தொலபெல்லா ! வெறுங்கையாகப் போனால் அக்டேவியா என் கையை நறுக்கித் துண்டாக்கி விடுவாள் ! சிறை செய்வேன் நிச்சயம் ஆண்டனியை ! சிங்கத்தைக் கூண்டில் அடைப்பதுபோல் அவரைப் பிடித்துத் தங்கை அக்டேவியா வசம் ஒப்படைத்த பிறகுதான் என் வேலை முடியும் எகிப்தில் !

தொலபெல்லா: முதல் பிரச்சனை சிங்கத்தை எப்படிப் பிடிப்பது ? பிடிக்க முடிந்தால்தானே பிறகு கூண்டில் அடைக்கலாம்.

அக்டேவியஸ்: அதற்குத்தான் நான் உன்னை அனுப்புகிறேன். மாறு வேடத்தில் படை வீரர்களைக் கூட்டிச் செல். தந்திரமாகப் பேசி, தனியாகப் பேசி ஆண்டனியைக் கைப்பற்ற வேண்டும்.

அக்கிரிப்பா: யாரோ வரும் அரவம் கேட்கிறது ! [அப்போது கையில் உடைவாளுடன் தூதன் டெர்செட்டஸ். நுழைகிறான்] யார் நீ ? எங்கிருந்து வருகிறாய் ? குருதி உலர்ந்த வாளை ஏன் கையில் வைத்திருக்கிறாய் ?

டெர்செட்டஸ்: [அக்டேவியஸை வணங்கி] மேன்மை மிகு தளபதி அவர்களே ! இந்த வாள் எனது தளபதி ஆண்டனியின் உடைவாள் ! நான் ஆண்டனிக்குப் பணிசெய்த படைத் தூதன் ! அவரே என் தலைவராக இருந்தார் ! தன்னிகரில்லா தகுதி உள்ளவர் ! அவருக்குப் பணிசெய்த ரோமானியன் இப்போது உங்கள் படையில் சேர விரும்புகிறேன் !

அக்டேவியஸ்: [தூதனைக் கூர்ந்து நோக்கி] ஏன் உடைவாளில் குருதி உலர்ந்துபோய் உள்ளது ? ஆண்டனியின் உடைவாள் உன் கையிக்கு எப்படி வந்தது ? நீ அவரைக் குத்தினாயா ?

டெர்செட்டஸ்: மதிப்புக்குரிய மகாப்பிரபு ஆண்டனி மரித்து விட்டார் ! ஆனால் நான் அவரைக் கொல்ல வில்லை. அந்த தகவலை முதலில் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். அடுத்து உங்கள் ரோமானியப் படையில் என்னைச் சேர்த்துக் கொள்வீரா ?

அக்டேவியஸ்: [ஆவேசமாக எழுத்து] என்ன சொன்னாய் ? ஆண்டனி மரித்து விட்டாரா ? நம்ப முடியவில்லையே என்னால் ! நீ கொல்ல வில்லை என்றால், பிறகு எப்படி மரித்தார் என்று உடனே சொல். எதையோ நீ மறைக்க விரும்புகிறாய்.

டெர்செட்டஸ்: உண்மைதான் தளபதி ! உன்னதக் குருதி தோய்ந்த இந்த உடைவாளே அதற்குச் சாட்சி. தரையில் இந்த வாளை ஊன்றி அதன்மேல் பாய்ந்து தன்னுயிரை மாய்த்துக் கொண்டார். சாகும் போது இந்த வாளை உங்களுக்கு அடையாளச் சின்னமாகக் காட்ட வேண்டுமென என்னை வேண்டிக் கொண்டார் ! [உடைவாளை அக்டேவியஸ் கையில் தருகிறான்]

அக்டேவியஸ்: [வருத்தமுடன் வாளைக் கையில் வாங்கிக் கொண்டு] அக்டேவியா விதவையாகிப் போனாள் மீண்டும் ! எப்படி அவள் முகத்தில் விழிப்பேன் ? ஆண்டனியை உயிருடன் ரோமுக்குக் கொண்டு வருவதாக அவளுக்கு வாக்களித்தேன் ! இப்போது அவர் செத்த உடலைக் கூட எடுத்துச் செல்ல வழியின்றிப் போனது ! இந்த உடைவாளை அக்டேவியா கையில் எப்படி நான் கொடுப்பேன் ?

அக்கிரிப்பா: உத்தம ரோமாபுரித் தளபதியின் உன்னத வாளிது ! ஆண்டனிக்குத் தரும் மரியாதை அவரது உடைவாளுக்கு அளிக்கப்படும்.

அக்டேவியஸ்: அதிர்ச்சி தரும் அத்தகவல் ஆழமாகத் துளைக்கும் என் நெஞ்சை ! ஆண்டனியின் மரணம் அறிவிப்பு ஒரு பேரிடி எனக்கு ! ரோமுக்கு ! முத்தலைவரில் ஒருவர் செத்து விட்டார் ! அதுவும் முத்தலைவரில் மூத்தவர் ! ஆண்டனியில் பெயரில் ஒப்பந்தப்படிப் பாதி ரோம் உலகு உள்ளது ! ஜூலியஸ் சீஸருக்குப் பிறகு பேரும் புகழும் பெற்றது அந்தப் பெயர் ! சீஸரைக் குத்திக் கொலை செய்த கொடும் பகைவரை விரட்டியது அந்த உடைவாள் ! அது ஒரு வரலாற்றுச் சின்னமாக ரோமில் பாதுகாப்பாய் வைக்கக்படும்.

டெர்செட்டஸ்: அந்த வாளைக் கொண்டு வந்த எனக்கு உங்கள் படையில் பணிபுரிய ஒரு வாய்ப்பைத் தருவீரா ?

அக்டேவியஸ்: [மனம் நொந்து, கண்ணீருடன்] நான்தான் காரணம் ஆண்டனி மரிப்பதற்கு ! கடற்படையைத் திரட்டி அவரை விரட்டிச் சென்றேன். தோற்கடித்து அவரது கப்பல்களை மூழ்கச் செய்தேன் ! விரட்டி விரட்டி வேங்கையை மூலையில் துரத்தி முடமாக்கினேன் ! மரிக்கச் செய்தேன் ! அரச வம்ச உறவு நீ ! சகோதரன் நீ ! எனக்கு போட்டி நீ ! ஆயினும் ரோமானியப் போரில் எனக்குத் துணைவன் நீ ! கடவுள் படைப்பிலே உயர்ந்தவன் ! பார்க்கப் போனால் ரோம் சாம்ராஜியத்தில் எனக்குத் தோழன் நீ,

அக்கிரிப்பா: [ஆச்சரியமுடன்] அக்டேவியஸ் ! இத்தனை மென்மையான மனதை உடையவர்
நீவீர் என்பது இப்போதுதான் எனக்குத் தெரிந்தது ! …. யாரோ வரும் அரவம் கேட்கிறது ! யாரது வருவது ? எங்கிருந்து வருகிறாய் ?

[ஓர் எகிப்தியன் நுழைகிறான்]

எகிப்தியன்: நானோர் எளிய எகிப்தியன். எங்கள் மகாராணி என்னை இங்கே அனுப்பியுள்ளார். மறைவாக அவர் தன் மரண அரணில் தனியாக இருக்கிறார். தங்கள் ஆணைக்குக் கட்டுப்படத் தயாராக உள்ளார். அவளது சிற்சில அற்ப வேண்டுகோளுக்கு நீங்கள் உடன்படுவதாய் இருந்தால் நேரில் சந்திக்க வருவார் ! மகாராணிக்குரிய மதிப்பையும், பாதுகாப்பையும் அளித்தால், அவர் உங்களுடன் நேரில் உரையாட வருவார்.

அக்டேவியஸ்: [மகிழ்ச்சியுடன்] ஓ கிளியோபாத்ராவின் தூதனா நீ ! அஞ்ச வேண்டாம் ! ரோமானியர் கண்ணியமானவர், பரிவு மிக்கவர், பெண்ணை மதிப்பவர் ! ஆயுதம் ஏந்தாமல் எம்மைக் காணவரும் எந்த அரசியாரும் எமது மரியாதைக் குரியர்.

எகிப்தியன்: எங்கள் எகிப்த் தெய்வம் உங்களை ஆசிர்வதிக்கும் !

அக்டேவியஸ்: பூரிப்படைகிறேன். [புரொகியூலியஸைப் பார்த்து] புரொகியூலியஸ் ! வா இங்கே. இந்த எகிப்தியன் கூடச் செல் ! அக்டேவியஸ் அனுப்பிய தூதன் என்று சொல் ! கிளியோபாத்ரா, நமது விருந்தாளி என்று ஏற்றுக் கொள் ! மகாராணிக்குரிய மரியாதை அளிக்கப்படும் என்று வாக்கு அளித்திடு. அவளை ரோமுக்கு நமது வெற்றிச் சின்னமாய் அழைத்துச் செல்வோம் என்று சொல். போ விரைவில் போ ! நான் சொல்லிய தகவலைச் சொல்லி, கிளியோபாத்ராவின் பதிலையும் எனக்குக் கூறிடச் சீக்கிரம் வா ! ஆண்டனி மரித்த பிறகு கிளியோபாத்ரா எப்படி இருக்கிறாள் என்று அறிந்து வா !

[புரோகியூலிஸ் போகிறான்.]

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]

10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]

11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (July 17, 2007)]

Series Navigation

(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 9 ஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம்

This entry is part [part not set] of 27 in the series 20070712_Issue

சி. ஜெயபாரதன், கனடா


மரித்துக் கொண்டி ருக்கிறேன் நான் !
மடிகிறேன் எகிப்த் நாடே !
எளியோன் விழைவது
நொடிப் பொழுது தாமதம்,
ஆயிரம் முத்தங்கள் உன்னுதடுகள்
அளிக்கும் வரை எனக்கு ! .. (ஆண்டனி)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

இடருடன் மாறிப் போகும் என் முடிவு !
முந்தைய பெருமைகள் எண்ணி மகிழ்ந்திடு !
வருந்த வேண்டாம் ! துக்கம் வேண்டாம் !
உன்னத மாதே ! ஒளிந்து சாகாதே !
ஒரு சமயம் இளவேந்தாய் உலகாண்டேன் !
ரோமனே ஒரு ரோமனை ஒழிக்கிறான் !
என் ஆத்மா நீங்குது ! என்னால் இனி
ஏதும் இயலாது மாதே ! (ஆண்டனி)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

எனக்கு இடர் விளைத்த தெய்வங்கள் மீது
என் செங்கோலை எறிவது என் கடன் !
நம் களஞ்சியத்தைத் தெய்வங்கள் திருடும் வரை
நம்முலகும் வானுக்குச் சமம் எனச் சொல்வேன் ! …..
மரணம் வரும்முன் ஒருவர் கட்டிய
மரண அரணுக்குள் வருவது தவறு !
மகிழ்வா ? எப்படி வரும் சார்மியான் ?
மாதரே ! மாதரே! அணைந்தது நம் விளக்கு !
வெளியேறும் நம்மொளி ! பரிவுடன் வாரீர் !
புதைப்போம் அவரை, ரோமின் முறைப்படி !
பெருமை அளித்து மரணம் மதிப்போம் !
உன்னத இவ்வுடல் குளிர்ந்து போனது !
மாதரே ! மாதரே ! வாரீர் ! நமக்கு
ஆதரவிலை வேதனை முடிவைத் தவிர ! … (கிளியோபாத்ரா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

பொய்யினைச் சொல்லிக் காரிகை
புத்தரையும் பிடிப்பாள் !
மெய்யினைச் சொல்லா வாலிபன்
மேனகாவை இழப்பான் !

+++++++++++++++

Fig. 1
Antony Dies

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ்: ரோமின் மூன்றாம் தளபதி
எனோபர்பாஸ்: ஆண்டனியின் ஆலோசகன், பாதுகாவலன்
கானிடியஸ்: ஆண்டனியின் போர்த் தளபதி
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
·பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன், இளைய பாம்ப்பி)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 9

ரோமா புரியின் நிலைமை: ·பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி ·புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள்.

எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீண்டு மனைவியை மறந்து கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்து மயங்கிக் கிடக்கிறான். ஆண்டனியைத் தண்டிக்க அக்டேவியஸ் ரோமானியப் படையுடன் ஆக்டியக் கடற் பகுதியில் போரிட்டு வெற்றி அடைகிறான். தோற்றுப் போன ஆண்டனி ஆக்டேவியஸ் தூதரை விட்டு அனுப்பிய நிபந்தனைகளில் கையொப்பமிடுகிறான். ஆயினும் இருவருக்குள்ளும் நிரந்தரப் பகை உண்டாகி, ஆண்டனி எகிப்தில் அடைபட்டுப் போகிறான். போரில் தோல்வியுற்று அவமானப் பட்டு வேதனையில் உள்ள போது, கிளியோபாத்ரா அவன் கவனத்தைக் கவரத் தான் செத்து விட்டதாகச் செய்தி அனுப்புகிறாள். ஆண்டனி மரணத் தகவல் கேட்டு மனமுடைந்து, தன் கத்திமேல் பாய்ந்து தன்னுயிரை மாய்த்துக் கொள்கிறான். உயிர் பிரிவதற்குள் கிளியோபாத்ராவைக் காண விரும்பி, தன்னைத் தூக்கிச் செல்ல காவலரை வேண்டுகிறான்.

++++++++++++++++++

Fig. 2
Antony’s Death & Cleopatra
Collapses

கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 9

நேரம், இடம்: கிளியோபாத்ராவின் பிரமிட் மரண அரண். பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, சார்மியான், ஈராஸ் மற்றும் சேடியர், தூதன் டையமீடிஸ், குற்றுயிருடன் பாடையில் ஆண்டனி. மற்றும் காவலளர்கள்,

காட்சி அமைப்பு: அக்டேவியஸ் தன்னைச் சிறைப்படுத்தி விடுவான் என்னும் அச்சமுடன் கிளியோபாத்ரா தனது மரண அரணில் ஒளிந்திருக்கிறாள். கிளியோபாத்ரா தன்னைத் தேடி ஆண்டனி வர வேண்டும் என்று காத்திருக்கிறாள். டையமீடிஸ் முன்வரக் காவலளர் குற்றுயிரான ஆண்டனியைப் பாடையில் தூக்கி வருகிறார்.

சார்மியான்: [கவலையுடன்] மகாராணி ! எத்தனை நாட்களுக்கு நாமினி மரண அரணில் இப்படி உயிரோடு அடங்கிக் கிடப்பது ? செத்தவரைப் புதைக்கும் கோட்டையில் உயிருடன் இருக்கும் நமக்கு வேலை இல்லை !

கிளியோபாத்ரா: நான் வெளியேறப் போவதில்லை சார்மியான் ! மரண அரணுக்கு வெளியே அக்டேவியஸின் ஓநாய்கள் காத்து நிற்கின்றன ! ஓநாய்களுக்கு உணவாகக் கிளியோபாத்ரா ஒருபோதும் ஆகமாட்டாள் ! இந்த மரண அரணை யாரும் அண்ட முடியாது ! என்னை அபகரிக்கவும் முடியாது ! சாகும் வரை பாதுகாப்பாக வாழும் அரணிது ! செத்த பின்னும் பாதுகாப்பாக அடங்கும் அரணிது ! என்னைப் பாதுகாக்க வந்த என்னரும் ஆண்டனியும் எங்கோ ஒளிந்திருக்கிறார். அவரது உயிருக்கும் ஆபத்துள்ளது. அதனால் ஆண்டனி என்னை இப்போது காப்பாற்ற இயலாது ! என்னைக் காத்துக் கொள்வது இனிமேல் நான்தான் !

சார்மியான்: எகிப்தின் மகாராணி நீங்கள் ! உங்கள் திருமுகத்தைக் காணாது மக்கள் புரட்சி எழும் எகிப்த் தேசத்தில் ! நீங்களின்றி அரசாங்கம் எப்படி நடக்கும் ?

கிளியோபாத்ரா: அக்டேவியஸ் எகிப்தின் எல்லையில் வேட்டை நாய்போல் நிற்கும் போது நமது அரசாங்கம் சீராய் நடக்காது. வேண்டாம் சார்மியான். என்னைக் கட்டாயப் படுத்தாதே. நமக்கு வரும் இடர்கள் கணக்கில் அடங்கா ! வெளியேறுவதால் நமக்கு இடர்கள் அதிகமாகும். எதற்கு நாம் பழியாக வேண்டும் ? ஆண்டனிக்கு என்ன வாயிற்று என்று தெரியவில்லை ? என்னைக் காண வருவாரா ?

[குற்றுயிரான ஆண்டனியைப் பாடையில் தூக்கிக் காவலர் வர, டையமீடிஸ் உள்ளே நுழைகிறான்]

Fig. 3
Death of Antony

சார்மியான்: மகாராணி ! யாரோ கூட்டமாய் கோட்டைக் குள்ளே நுழைகிறார். [அதட்டலுடன்] யார் உள்ளே நுழைவது ? … மகாராணி ! அக்டேவியஸ் படைகளாய் இருக்குமா ?

டையமீடிஸ்: நான்தான் டையமீடிஸ் ! அனுமதியுடன் நுழைகிறேன். ஆண்டனியைத் தூக்கி வருகிறோம். மரண வேதனையில் கிடக்கிறார் ! ஆண்டனியின் உயிரின்னும் ஒட்டி இருக்கிறது ! மகாராணியைக் காண ஆசைப்படுகிறார். இறுதியாக ஒருமுறை !

கிளியோபாத்ரா: [கோவெனக் கதறி] ஆண்டனி ! என்னருமை ஆண்டனி ! இந்த நிலையில் பார்க்கவா இன்னும் நான் உயிரோடு இருக்கிறேன் ? எனது பொய் மரணத்தை அறிவிக்க நான் தூதனுப்ப, உமது மெய் மரணத்தைச் சொல்ல நேராக வந்து விட்டீர் ! சூரியக் கடவுளே ! எரித்திடு எமது வானியல் கோளத்தை ! காலத்தின் கோலத்தை நானினிக் கண்டறிந்து என்ன பயன் ? கால மாற்றத்தை நம்மால் தடுக்க முடிய வில்லையே ! ஆண்டனி ! என்னுயிர் ஆண்டனி ! யாரும்மை இப்படிக் குத்தியது ? அக்டேவியஸின் ஒற்றரா ? பாதுகாப்புள்ள உமக்கு எப்படி இது நேர்ந்தது ?

டையோமீடிஸ்: இல்லை ! ஆண்டனியைக் குத்தியது அக்டேவியஸின் ஓற்றரில்லை. மகாராணி செத்து மரண அரணில் புதைக்கப் பட்ட செய்தியை மெய்யென்று நம்பி விட்டார் ஆண்டனி ! மகாராணியைப் பின்தொடர தானே தன்னைக் குத்திக் கொண்டார் !

ஆண்டனி: [தலையைத் திருப்பி] செத்துக் கொண்டிருக்கிறேன் கிளியோபாத்ரா ! உன்னை விட்டு நீங்கிக் கொண்டிருக்கிறேன் ! எகிப்தை விட்டுப் போகிறேன் ! .. போகும் முன் என் இச்சை இது ! இந்த உயிர் பிரியும் முன் எனக்கு, உன்னினிய உதடுகளில் ஆயிரம் முத்தங்களைக் கொடு ! உன் முத்தங்கள் என் ஆயுளைச் சிறிது நீடிக்கும் ! அதற்குத்தான் இந்த உயிர் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது ! முத்தமிடு என்னை !

Fig. 4
The Final Moments with Antony

கிளியோபாத்ரா: [பயத்துடன்] வேண்டாம் என்னிள வேந்தே ! ஆயிரம் முத்தமா ? வேண்டாம் ஆண்டனி ! நான் வெளியே வந்தால் அக்டேவியஸ் என்னைப் பற்றிக் கொள்வான் ! ரோமாபுரி வீதிகளில் அடிமையாய் இழுத்துச் சென்று என்னை அவமானப் படுத்துவான் ! என் அரணில் பாதுகாப்பாய் இருப்பது போதும். உங்களுக்காக இப்போது என் கண்ணீர்த் துளிகளை விடுகிறேன் !

ஆண்டனி: அச்சத்தின் பிடியில் உள்ளாய் கண்ணே ! ஆனால் அக்டேவியஸ் இங்கில்லை ! என் ஆத்மா பிரிவதற்குள் முத்தம் அளிப்பாய் ! இல்லையேல் விடை பெறுகிறேன் !

கிளியோபாத்ரா: [அரணிலிருந்து வெளியேறி ஓடி வந்து] ஈதோ வருகிறேன் என் பிரபு ! (மடியில் ஆண்டனியின் தலையை வைத்து) என் கண்ணீர் துளிகள் விடை கொடுக்கும். என் முத்தங்களும் விடை கொடுக்கும். முதல் முத்தம் தந்த என் உதடுகள் இறுதி முத்தமும் தர வேண்டும் [படுத்துள்ள ஆண்டனியின் கன்னங்களைத் தடவி விடாமல் முத்தமிடுகிறாள்]

ஆண்டனி: மகிழ்ச்சியுடன் சாகிறேன் மகாராணி ! விடை கொடு ! தாகத்திற்குச் சிறிது மதுரசம் தா. [சார்மியான் மதுரசம் கொடுக்கிறாள்] நான் குடிக்கும் இறுதிக் குவளை மது ! நான் பேசும் கடைசி வார்த்தை இது ! கண்களில் ஒளி மங்கி வருகிறது ! குரலில் ஓசை தடுமாறிப் போகிறது. நினைவுகள் என்னிடம் விடை பெறுகின்றன ! என்னுலகம் இருள் பூசி வருகிறது ! [கண்களை மூடி] வருந்தாதே கண்ணே! வரலாற்றுச் சின்னமாகி விடுவேன் ! …… [ஆண்டனியின் உயிர் பிரிகிறது]

கிளியோபாத்ரா: [கண்ணீருடன்] என்னுயிர்க் காதலர் மறைந்தார் ! ஆண்டனியை இழந்த பின் எனக்கு ஏதினி வாழ்வு ? நானொரு மூட மாது ! என் மரணத்தை காட்டித் துணைவர் மரணத்துக்கு வழி வகுத்தேன் ! விளையாட்டுத்தனத்தால் பெரும் பழியைத் தேடிக் கொண்டேன் ! பூமியில் தங்கக் கோலமிடும் பொன்னிலவு எனக்கில்லை இனி! பாலைவனப் புயலைத் தவிர எனக்கினித் தென்றல் வீசாது ! என்னினிய ஆண்டனி ! எப்படி விடை கொடுப்பேன் ?

ஈராஸ்: [கண்ணீருடன்] மகாராணி ! ஆண்டனியின் உயிர் பிரிந்து விட்டது !

சார்மியான்: [கண்ணீருடன்] ஆம் மகாராணி ! ரோமாபுரிச் சிங்கத்தின் உயிர் பிரிந்து விட்டது !

டையமீடிஸ்: ஆண்டனியின் இறுதி இச்சை நிறைவேறியது.

Fig. 5
Widowed Cleopatra

கிளியோபாத்ரா: மறுபடியும் விதவையாகி விட்டேன் ! என்னை மெய்யாக நேசித்த உன்னத வீரர் ! தனிமையில் நோக விட்டார் ! சீஸர் செத்தபின் என் சிறகுகள் ஒடிந்தன ! இப்போது ஆண்டனி மரித்தபின் என் கால்கள் முறிந்தன ! முடமாகிப் போனேன் ! சார்மியான் ! எனக்குச் செங்கோல் இனி எதற்கு ? [வீசி எறிகிறாள். சார்மியான் அதை எடுத்துப் பாதுகாப்பாய் வைக்கிறாள்] எனக்குக் கிரீடம் இனி எதற்கு ? [வீசி எறிகிறாள். சார்மியான் அதை எடுத்துப் பாதுகாப்பாய் வைக்கிறாள்] எனது இதயமான எகிப்த் நாடு இனி எதற்கு ? உயிருடன் மரண அரணுக்கு நான் ஓடி வந்ததது மாபெரும் தவறு ! பாபச் செயல் ! அதற்குக் கிடைத்த தண்டனை இது ! மாளிகையில் என் விளக்கொளி அணைந்தது ! என்னுலகம் இருள் பூசி வருகிறது ! சார்மியான் எனக்கினி யாருமில்லை துணைக்கு ! தனித்தினி வாழ முடியாது நான் ! எனக்கினி வாழ்க்கை இல்லை ! எனக்கொரு முடிவை நானே தீர்மானிப்பேன் !

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]

10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]

11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (July 11, 2007)]

Series Navigation