This entry is in the series 20101114_Issue

ராம்ப்ரசாத்


வாசங்களைத் துரத்திவரும்
வண்டுக்கூட்டங்களில்
இடம்பெயர்தலின் சூட்சுமங்களைத்
தொலைத்துவிடுகின்றன பூக்கள்…

வாசங்களின் எல்லைகளைக் கடந்து
பயணிக்கும் வல்லமைகொண்ட‌
வண்டுகளின் முகவரிகள்
பூக்களிடம் இருப்பதில்லை…

தொலைக்கப்பட்ட சூட்சுமங்கள்
மறைத்துவிடுகின்றன சில கோணங்களை…
தொலைக்கப்பட்ட சூட்சுமங்கள்
மறைத்துவிடுகின்றன சில அறிமுகங்களை…

கிணற்றுத்தவளையின் உலகில்
சங்கமிக்கிறது வாசங்களை விரவும்
பூக்களின் கண்ணோட்டங்கள்…

– ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)

Series Navigation