காதலனின் எதிர்பார்ப்புகள்

This entry is part [part not set] of 40 in the series 20101114_Issue

சின்னப்பயல்காதலனின்
எதிர்பார்ப்புகள்
அதிகம் ஒன்றுமில்லை..

என்னை
மட்டும் நேசிப்பாயா ?
என்னை
அதிகம் காக்கவைக்காமலிருப்பாயா ?
என்னை நோக்கி
மையமாக சிரிக்காமலிருப்பாயா ?
என்னைப்பற்றி
சந்தேகப்படாமல் இருப்பாயா ?
நான் பிற பெண்களுடன்
சிரித்துப்பேசுவதை சாதாரணமாக
எடுத்துக்கொள்வாயா ?
நான் கொடுத்த
பரிசுப்பொருட்களை பத்திரமாக வைத்திருப்பாயா ?
சின்னஞ்சிறு ஊடல்களை
பெரிதாக்காமல் இருப்பாயா ?
என்னுடன் பட்டும் படாமல்
இருப்பதை தவிர்ப்பாயா ?
என்னால் இயலாதவற்றை
என்னில் சுட்டிக்காட்டாமலிருப்பாயா ?
என் காதலை
காமத்திற்கு மட்டுமென நினைக்காமலிருப்பாயா ?
என் சங்கேதக்குறியீடுகளை
சரிவரப் புரிந்து கொள்வாயா ?
எனது ரகசியங்களை
உன்னில் பாதுகாப்பாயா ?
என் தன்மானத்தை
சீண்டாமலிருப்பாயா ?
எனது நடவடிக்கைகளுக்கு
வேறு அர்த்தம் கற்பித்துக்கொள்ளாமலிருப்பாயா ?

கடைசியாக ஒன்று
என் அப்பா பார்த்த
மாப்பிள்ளையை கல்யாணம்
செய்து கொள்ளப்போகிறேன்
என்று என்னிடம்
சொல்லாமலிருப்பாயா..?!

– சின்னப்பயல்
chinnappayal@gmail.com

Series Navigation

சின்னப்பயல்

சின்னப்பயல்