அப்பாபோல

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

சுந்தரா


அப்பாபோல நானும் பெரியவனாகி…
என்று
அக்காவிடம் ஆரம்பித்தவன்,

அப்பாவைப் பார்த்ததும்
வார்த்தைகளை ஒளித்துக்கொண்டான்…

அருகழைத்துக் கேட்டார் அப்பா…

நீயும் அப்பா போல,

வாத்தியார் ஆவியா?

….

புல்லட் பைக் ஓட்டுவியா?

…..

வேஷ்டி சட்டை போட்டுப்பியா?

….

சொல்லுடா என் செல்லமவனே…

‘அம்மாவை அடிச்சு
அழ வைக்கமாட்டேன் ‘ என்றபடி,
அழுதபடி நகர்ந்துபோனான் மகன்.

Series Navigation

சுந்தரா

சுந்தரா