திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040122_Issue

அரசியலும் சமூகமும்

கடிதங்கள் – ஜனவரி 22, 2004

பரிமளம் - K.ரவி ஸ்ரீநிவாஸ் - பித்தன் - அரவிந்தன் நீலகண்டன் கலவை வெங்கட் அவர்களுக்கு உங்களுடைய கட்டுரைத் தலைப்பும் அதையொட்டிய கட்டுரையின் விவரங்களும் (மார்க் ட்வெய்ன் உட்பட) 19ம் நூற்றாண்டைப் பற்றியிருக்கின்றன. ஆனால்…

வாரபலன் – புத்தக யோகம்

மத்தளராயன் காணும் பொங்கலன்று புத்தகக் கண்காட்சியில் ஆக்ஸ்ஃபோர்ட் டிக்ஷ்னரியைப் போட்டால் ஆ.டி அடுத்தவர் தலையில் விழுந்து ரணகாயமாகி ஆம்புலன்ஸ் வருமளவு கூட்டம். புத்தகம் வெளியிடுகிறவர்கள் எல்லோரும் தற்போது சோனிப் புத்தகங்களையும் எலும்பும் தோலுமான எழுத்தாளர்களையும்…

சிறந்த குறும்படங்களுக்குப் பரிசு-சக்தி 2003 இலக்கிய விருது

திருப்பூர் மத்திய அரிமா சங்கம் கடந்த மூன்றாண்டுகளில் வெளி வந்த சிறந்த குறும்படங்களை குறுந்தகட்டில்(CD) அனுப்பலாம். சிறந்த மூன்று குறும்படங்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். குறும்பட வடிவம் பெறாத திரைக் கதைகளையும் பரிசுக்காக எதிர்…

கேப்ராவின் ‘புலப்படாத உறவுகள் ‘ (Hidden Connections)

அரவிந்தன் நீலகண்டன் கேப்ராவின் இந்நூல் ஒருவிதத்தில் அவரது முந்தைய நூலான 'Web of Life ' இன் பரிணாம தொடர்ச்சி என்றே கூறலாம். முதல் 80 பக்கங்கள் உயிர் மனம் மற்றும் சமுதாயம் ஆகியவற்றின்…

குழந்தைகளின் உலகம்

சந்திரலேகா வாமதேவ் குழந்தைகளின் உலகம் அற்புதமானது. தொட்டிலில் உள்ள போதே கேட்க ஆரம்பிக்கும் பாலா பாடல்கள் அதாவது Nursery Rhymes அவாகளது கற்பனையைத் தூண்ட ஆரம்பிக்கின்றன. மிகச் சின்னஞ் சிறு குழந்தைப் பருவத்திலேயே அதாவது…

திருமணமாம் திருமணம்

சந்திரலேகா வாமதேவ் எமது பண்பாட்டில் திருமணம் என்ற நிறுவனம் இன்னும் முழுமையாக நிலைத்துள்ளது. திருமணம் செய்யாது கூடி வாழ்தல் (living together) என்ற முறை மேலைநாட்டில் பெருமளவு செல்வாக்குப் பெற்றுள்ள போதும் வெளிநாடுகளில் வாழும்…

உலகமயமாக்கத்திற்கு மனிதமுகம் பொருத்தும் முயற்சி

சி.மதிவாணன் உலக சமூக மாமன்றம் என்று அறியப்படுகின்ற World Social Forum -WSF இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்றுவருகின்றது. உலகமயமாக்கத்திற்கு எதிரான நடவடிக்கை என்று அறிவிக்கப்பட்டிருக்கும் இந்நிகழ்வு முதன்முறையாக அது துவங்கப்பட்ட பிரேசிலுக்கு வெளுயே,…

அறிவுக்கே போடப்படும் முக்காடு

கவிஞர் அடோனிஸ் (தமிழில்: ஆசாரகீனன்) [தன் அரசியல் சட்ட அமைப்பின் மையமாக இருக்கும் மதச் சார்பின்மை குறித்து மறுபரிசீலனை செய்யும் பொருட்டு சில ஆயத்தங்களை பிரான்ஸ் நாடு முன்வைத்துள்ள நிலையில், பள்ளிகள் மற்றும் பல்கலைக்…

இவர்களைத் தெரிந்து கொள்வோம்.

பி எஸ் நரேந்திரன் 2004-ஆம் வருடத்திய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் 'சுற்று மூலையில் ' (around the corner என்பதின் தமிழ் முழி பெயர்ப்பு) இருக்கிறது. எதிர் வரும் காலங்களில் இந்தியப் பொருளாதாரம், அமெரிக்க…

அறிவியலும் தொழில்நுட்பமும்

தமிழ் லினக்ஸ் – எழுத்தாளர் சுஜாதா, குழுவினரின் அறிவுத் திருட்டு

வெங்கட்ரமணன் லினக்ஸ் இன்றைய கணினி உலகத்தின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுவது. உலகத்தின் பெரும் பணக்காரரான மைக்ரோஸாப்ட் அதிபர் பில் கேட்ஸ்க்குத் தூக்கத்தைப் போக்கும் ஒரே விஷயமாக லினக்ஸ் சொல்லப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள…

குடியரசுக் கொண்டாட்ட தினத்தில் குஜராத்தில் கோரப் பூகம்பம்! [2001 ஜனவரி 26]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா உலுக்கிச் செல்லும் இறைவன் கை உலுக்கி, உலுக்கி மேற் செல்லும்! அழுதாலும், தொழுதாலும் அயரா தவன்கை! உலுக்கியபின் மீண்டும் உலுக்க வரும்! உமர் கையாம் II…

சில மாற்றுச் சிந்தனைகள்

நா.இரா. குழலினி 'மழை இம்முறையும் பொய்த்துப் போனது. இன்னும் சில பத்து நாட்களுக்குத் தண்ணீர் இருந்தால் போதும் இம்முறையாவது பயிரைக் காப்பாற்றி விடலாமே '. காவிரியின் இருகரை ஓரத்திலுமான பாசனப் பகுதி விவசாயிகளின் ஓலத்தின்…

இலக்கிய கட்டுரைகள்

வண்ணாத்திக்குளம்

பாவண்ணன் நோயல் நடேசன் எழுதிய இக்கதையைப் படித்து முடித்ததும் எங்கள் ஊரான புதுச்சேரியில் கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியொன்று நினைவுக்கு வந்தது. புதுச்சேரியில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புகைவண்டி நிலையத்தை நோக்கிச் செல்லும் கிளைப்பாதையொன்றில்…

தமிழ் இலக்கியம் – 2004

இரா முருகன் கோவை ஞானி எஸ்.பொவின் 'வரலாற்றில் வாழ்தல் ' இரண்டு பாகங்கள் கொண்ட சுயசரிதத்தை வெளியிட்டுப் பேச வந்தபோது, நான் நினைத்துப் பார்த்தது எஸ்.பொ பற்றித்தான். எஸ் பொவின் பேத்தி, எஸ் பொ,…

ஈரநிலம்

பாலாஜி ----------- ஓடாத படம்; பாரதிராஜா இயக்கம்; ஹீரோவாக மனோஜ் கே பாரதி; என்று பல பயங்களுடன் பார்க்கத் துவங்கினேன். பாடல்கள் பலமுறை கேட்டு மனதில் நின்றிருந்தது. ஆர்ப்பாட்டமில்லாத ஆரம்பம். அட்வைஸ் கொடுக்காத நகைச்சுவை.…

நந்தன் சரித்திரக் கீர்த்தனைகள்

இரா முருகன் ------------------------------- கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தன் சரித்திரக் கீர்த்தனைகளுக்குள் நுழைவதற்கு முன் சில 'அதான் எனக்குத் தெரியுமே 'க்களோடு வலது காலை (மார்க்சீய கோத்ரம் என்றால் இடது கால்) எடுத்து வைப்பது நல்லது.…

எனக்குப் பிடித்த கதைகள் – 95 – வெறுப்பும் அன்பும்- சாந்தனின் ‘முளைகள் ‘

பாவண்ணன் அவர் பெயர் சலபதிராவ். எங்கள் துறையில் உட்கோட்ட அதிகாரியாக வேலை செய்தவர். எண்பதுகளில் சில மாதங்கள் நான் அவரிடம் இளநிலைப் பொறியாளராக வேலை செய்தேன். கசங்கிய சட்டையைத்தான் அவர் எப்போதும் போட்டிருப்பார். எந்த…

கதைஞர்களும் கவிஞர்களும்

சோதிப் பிரகாசம் ஒரு சிலரைக் காணுகின்ற பொழுது நமக்கு வியப்பு ஏற்படுவது உண்டு. ஏதேனும் ஒரு துறையில் நாம் வியக்கின்ற வகையில் சாதனைகளைப் புரிந்து அவர்கள் ஏற்றம் பெற்று இருப்பார்கள். தங்களைப் பற்றி இவர்கள்…

வெங்கட்சாமிநாதனின் விமரிசனப் பயணம்

எம். வேதசகாயகுமார் எழுபதுகளில் தமிழ்ப்படைப்புச் சூழலுக்கு அறிமுகமான இளந்தலைமுறை வாசகனுக்கு அவனைக் கவர்ந்திழுக்கும் மின்காந்தமாகவே வெங்கட்சாமிநாதன் என்ற பெயர் திகழ்ந்தது. அவன் முன்னால் இரண்டு வழிகள்தான் அன்று இருந்தன. ஒன்றில் அம்மின்காந்தத்துடன் தன்னை ஐக்கியப்படுத்தி…

விருமாண்டி – தேவர்மகன் – சாதிஅரசியல்

யமுனா ராஜேந்திரன் கிராமிய சமூகத்தில் சாதிய முரண்களும் நிலம் சார்ந்த சொத்துடமையும் மிகமுக்கியமான பிரச்சினைகளாக இருக்கின்றன. அவர்களது அன்றாட பேச்சுவழக்குகளிலும் உரையாடல்களிலும் சாதியப் பெருமிதம் வெளிப்படும் அளவு வட்டாரச் சொற்களும் வசவுகளும் மிகச் சாதாரணமாக…

மொழிச் சிக்கல்கள்

நா. இரா. குழலினி வெகு நேரமாகப் படித்துக்கொண்டிருந்த போதான ஒரு நாளின் பிற்பகுதியில் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு காத்துக் கொண்டிருப்பதாக என் அம்மா என்னை அழைத்தாள். 'ஏம்மா உனக்கு ஃபோன், அண்ணன் லைன்ல…

கதைகள்

அவன்

ஆனந்த் ராகவ்,பாங்காக் அவன் பெயர் யாருக்கும் தெரியாது. அழுக்கு ஆடைகளும், சிக்குப் பிடித்த தலையும், ஷவரம் கண்டிராத முகமுமாய், வியர்வை நாற்றமுமாய் பிச்சைக்காரனைப் போலத் தோற்றமும் உடையவனை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் அந்தப்…

யுத்தம்

லூகி பிராண்டெலோ (தமிழில் : நாகூர் ரூமி) ரோம் நகரிலிருந்து இரவு எக்ஸ்பிரஸில் வந்த பிரயாணிகள் சுல்மானாவுடன் மெயின்லைனில் இணையும் 'ந்தக் காலத்து பாணி சின்ன லோக்கல் ரயிலில் தங்கள் பிரயாணத்தைத் தொடர்வதற்கு சின்ன…

அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திரெண்டு

இரா முருகன் ராஜா என்ன சொல்லிப் பார்த்தாலும் ஜோசியர் விடுகிற வழியாக இல்லை. இதை நிர்மாணம் செய்யப் பக்கபலமா இருந்து சகல ஆதரவும் கொடுத்தது சமூகம்தான். லோக க்ஷேமத்துக்காக யந்திரத்தை ஸ்தாபனம் பண்ணியாச்சு. அங்குரார்ப்பணம்…

விடியும்! – நாவல் – (32)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் கண்களை மேவிப் பொங்கிய கண்ணீர் கடிதத்தின் கடைசிவரியில் விழுந்து பேப்பரில் ஊறிப் பிடித்த மாத்திரத்தில் அவனுக்கு ஒன்று மட்டும் உறுதியாயிற்று - தம்பிக்கும் தனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. எங்கேயோ…

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -8)

எஸ். ஷங்கரநாராயணன் /4/ அழுது, உள்ளே கலங்கித் தெளிந்தாள் அவள். கண்ணீர் புனிதமானது. உள்ப் புண்ணை அழுகை ஆற்றவல்லது. உள்க்காயங்களை அது விரைந்து ஆற்றுகிறது. இடுக்கண் வருங்கால் வாய்விட்டு அழுக. அழுகை- கிணறைக் கலக்கித்…

நீலக்கடல் – (தொடர்) அத்தியாயம் – 3

நாகரத்தினம் கிருஷ்ணா சென்-மாலோவிலிருந்து சென்றோம் -ஒரு சிங்காரப் போர்க்கப்பலொன்றில் ஆங்கிலக் கால்வாய்க்காக -பிறகு அங்கிருந்து பிரிஸ்டல் பயணம் ஆங்கிலேயரை அழிப்பதற்காக (1) 'லெ பொந்திஷேரி ' என்றப் பிரெஞ்சு கப்பல். எப்போதும்போல பயணக் களைப்பை…

மனசும் மாங்கல்யமும்

கவிநயா மாலை மணி ஐந்து ஆகி விட்டது. சமையலை ஆரம்பிக்க வேண்டியதுதான். கண்ணனும், அபியும் காலேஜில் இருந்து வந்து விடுவார்கள். யோசித்தபடி, பிரிட்ஜைத் திறந்து என்ன காய் இருக்கிறது என்று ஆராய்ந்தாள், சிவகாமி. கண்ணனுக்கு…

எங்கள் வீட்டுக் காளைக்கன்று

செங்காளி (என் தாயார் அவர்களின் நினைவாக) நாங்கள் கிராமத்திலுள்ள எங்கள் தோட்டத்திற்குப் போய் கிட்டத்தட்ட நான்கு வாரங்களுக்குமேல் ஆகிவிட்டன. கடைசியாகச் சென்றது எங்கள் பசுமாடு கன்றுபோட்டு ஒரு வாரம் ஆனபோது. இந்தத் தடவை பசு…

அறிவிப்பு

சுப்ரபாரதிமணியன் என் இருக்கையில் இருந்த பொத்தான்களை இயக்குவதற்காக சரியான தேர்ச்சி பெற்றிருந்தேன்.என் முதல் விமானப் பயணத்தில்தான் எத்தனை தடுமாற்றம். விமானப்பணிப்பெண்ணை அழைப்பதற்கானபொத்தானை தெரியாமல் அழுத்தி வரவழைத்துக் கொண்டிருந்தேன்.இசை வரிக்கான பொத்தான் என நினைத்து அழுத்தியபடி.…

கலைகள்

இயற்கைத்தோட்டம் – 2 களை பிடுங்குதலும், பூச்சி அழிப்பும்

இரா மதுவந்தி மக்கல் (Mulch) நல்ல தடிமனான மக்கல் படுகை போடுவது, களைகளுக்கு வெளிச்சம் வராத படி பார்த்துக்கொள்ளும். சரியான வெளிச்சம் இல்லாதிருந்தால், அவைகளால் குளோரோபில் உற்பத்தி செய்யவோ அதன் மூலம் வளரவோ இயலாது.…

கவிதைகள்

சென்னை..என்னை…

கற்பகம் -------------------- கோலமிடும் பனிக்காலை மயில்களும் மார்கழியின் மாலைக் கச்சேரிகளும் பண்பும் அன்பும் நிறைந்த உள்ளங்களும் பலப் பல வண்ணங்களில் காலிக் குடங்களும். நடாஜன் அங்கிள் என்று அபிராமி அன்பாய் அழைக்கும் ஓட்டுனரும். அக்கா…

தீர்ப்பு சொல்கிறேன்

பா.சத்தியமோகன் ஒருபுறம் - ரகசியத்தைப் புலப்படுத்தியபடியே உள்ளன மக்களின் சொற்களும் பெண்களின் அலங்காரங்களும் மறுபுறமோ - மூடுதல் எனும் திரையை அகலமாக்கவே திறக்கின்றன மக்கள் வாய்கள் உண்மை உண்மையென்று சொல்லும்போதே தயாராகின்றன பொய்கள் உலகில்…

வறுமையின் நிராகரிப்பில்

ரஜினி பெத்துராஜா. =========================== குப்பைத் தொட்டிகள் சுத்தமாக்கப்பட்டபடியால் நெருங்கி வந்தது சொர்க்கம் நற்கதி கிடைத்ததில் நாவறண்ட வல்லூறுகள் நகைப்புடனே நர்த்தனம் நம் விருந்தைப் பகிர்ந்துண்ண நமக்குமட்டுமே தெரியும். ============== rajini_raja80@rediffmail.com

ஒரு உச்சிப்பனிக்காலத்தில்

அருண்பிரசாத் ஒரு உச்சிப்பனிக்காலத்தில் இடம்பெயர்ந்தன பறவைகள் இலை இழந்த கிளைகளுக்கு வெற்றுக்கூடுகளை மட்டும் தந்துவிட்டு. போர்த்திய பனியுறையின் கீழ் மட்கும் சருகுகளோடு வலியுடன்புதையுண்டன துரோகங்கள். தூரத்தே வரவேற்கும் வசந்தத்தின் புத்துயிர்ப்பு இன்றுகளை மென்றபடி. everminnal@yahoo.com

காதலன்

பசுபதி வாலையின் கண்ணிமை மென்மையைப் போல, . மங்கையின் முத்துப்பல் வெண்மையைப் போலக் காலை உதித்திடக் கட்டளை இட்டவன் . கட்டாயம் அவனொரு காதலன் தானய்யா! (1) குறைகளும் குற்றமும் கொண்டவோர் அன்பன்மேல் .…

உண்மையொன்று சொல்வேன்

சத்தி சக்திதாசன் உள்ளத்தைத் திறந்தின்று உன்னிடம் உண்மையொன்று உரைத்திடுவேன் நெஞ்சத்திரையொலொரு நிழற்படம் நேற்றோடு தூக்கம் மறந்து சிவந்தன - விழிகள் உணவை மறந்த காரணமே இன்றோடு உணர்ச்சிகள் நிலையற்று போன நிலை கனவுகளை மூட்டையாய்…

விளையாட்டு

பவளமணி பிரகாசம் எங்கெங்கோ உன்னைத் தேடினேன் தேடித் தேடி அலைமோதினேன் திகைத்து நின்றுவிட்ட கணத்திலே தேனாய் உன் குரல் என் காதிலே கால்கள் ஓசை வந்த திசையிலே கண்ணால் காணும் காட்சியானாய் கைக்கு எட்டாமலே…

உருளும் உலகே

சத்தி சக்திதாசன் மனத்திலிருத்தும் உண்மை எனும் இறை மாட்சிமைகொள் மனித வாழ்க்கை இறந்தும் வாழும் உத்தமர் ஓர் நூறும் இருந்தும் இறக்கும் சுயநலர் ஒரு கோடியாம் இதயம் என்றொரு பாறை இடிகளைத் தாங்கியும் தவறியும்…

நானும் நானும்

நெப்போலியன்,சிங்கப்பூர் நிலாக் கனவுகளைத் துரத்தியபடி முடிவில்லா பரவெளியில் என் பயணம்... வலைகளை அவிழ்க்கச் சொல்லி படபடக்கும் மனக் கெளதாரி... விட்டு விடு இனி ஒரு போதும் நீ உனக்கில்லை... கிளை பிரிந்த இலை எழுதும்…

அன்புடன் இதயம் – 4 – அழிவில் வாழ்வா

புகாரி கலவரம் அது இங்கே தினம் வரும் அது வரும்போதெல்லாம் வெறுமனே நிற்கும் சிலைகளின் உயிரும் பிடுங்கப்படும் O தவறொன்றும் செய்யாமலேயே தரையோடு தரையாக இரத்தச் சகதியாய்ச் சிதைந்து கிடக்கும் சகோதரா திடார்த் துவேசம்…