தொழில்

This entry is part of 18 in the series 20010729_Issue

பாரதிராமன்


எதிர் வீட்டில் எடுபிடி வேலை செய்தால்
எட்டணா கொடுப்பாள் மாமி
என் தம்பி முந்திக்கொண்டதால்
எனக்கு வேலை கிடைக்கவில்லை
— அப்போது எனக்கு சின்ன வயது.

மூன்றாம் வகுப்புக்கு ஆசிாியர் தேவையாம்
முந்தலாம் என்று முனைந்தேன்
‘ அவன் ‘களுக்கு இல்லையாம்
‘ அவள் ‘களுக்குத்தானாம் ஐந்தாவதுவரை
அரசு ஆணை என்றார்கள்
நான் ‘ அவன்ா ஆனதால்
எனக்கு வேலை கிடைக்கவில்லை
— அப்போது எனக்கு வாலிப வயது

அரசாங்க வேலைக்கும் பதிந்து வைத்திருந்தேன்
ஒதுக்கீடு பிரச்சனை ஒரு வழியாய் தீர்ந்தபோது
‘உச்ச வயதைத் தாண்டிவிட்டது உன் வயதுா என்றார்கள்
எனக்கு வேலை கிடைக்கவில்லை
— அப்போது எனக்கு நடுத்தர வயது

பின்னும் பல முயற்சிகள்
சினிமா கொட்டகை, வீடியோ லைப்ராி,
பால் பூத், பலசரக்குக் கடை,
கறிகாய்க்கடை, பலகாரக்கடை,
ஏன் பத்திாிகையும்கூட,
எல்லாவற்றுக்கும் தனித்தனி தந்திரங்கள் தேவையாம்
எதுவும் தொிந்துகொள்ளாததால்
எனக்கு வேலை கிடைக்கவில்லை
இன்னமும்தான்
—ஏறிக்கொண்டே போனது என் வயது

இறுடியில் ஒரு நாள்
சினிமாக் கவிஞருக்கு உதவி வேண்டுமாம்
கேல்விப்பட்டதும் கைப்பட மனு எழுதி அனுப்பினேன்
கையெழுத்து நன்றாக இருக்கிறதென்று
காப்பி எடுக்க அமர்த்திக்கொண்டார்
எனக்கு வேலை கிடைத்துவிட்டது!
—வயதானால்தான் என்ன ?

எனக்குத் தொழில் கவிதை
படி எடுத்தாலும்!

Series Navigation