திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030809_Issue

அரசியலும் சமூகமும்

நல்லது நாடும் கிறுஸ்துவ மதமாற்றக்காரர்களே : எங்களை விட்டுவிடுங்கள்

யோகிந்தர் சிகந்த் 'Crusading ' Do-Gooders : Why They Should Leave Us Alone Yoginder Sikand (மேலை நாடுகளில் இஸ்லாம் சைத்தானின் தூண்டுதல் பெற்ற மதமாகவும், மனிதகுலத்தை அச்சுறுத்தும் பயங்கரவாதத்தைப் பரப்பும்…

பெண்களுக்கு வரதட்சிணை கொடுத்துத்தான் திருமணம் செய்யவேண்டும்.

சின்னக்கருப்பன் பெண்களுக்கு வரதட்சிணை கொடுக்கக்கூடாது என்ற கொள்கையைப் போல ஒரு பெரிய ஆணாதிக்கச் சிந்தனை இருக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. வரதட்சிணையை எதிர்த்து பேசுபவர்கள் எல்லோரும் பொலிடிகலி கரெக்ட் ஆன ஆசாமியாக ஆகிவிடுகிறார்கள். மேடையில்…

அல்லி-மல்லி அலசல் (பாகம் 4)

பவளமணி பிரகாசம் அல்லி: என்ன மல்லி, முகமெல்லாம் வாடிக்கிடக்கு ? வீட்டுல சண்டையா ? மல்லி: அதெப்படி அவ்வளவு சரியா கண்டுபிடிச்சிட்றே ? அல்லி: இதுக்கு பெரிய திறமையெல்லாம் தேவையில்ல. குறி சொல்றவங்களும், கோடாங்கி…

கடிதங்கள்

ஆகஸ்ட் 08, 2003 வேதசகாயகுமாரின் கடிதத்திற்கு எதிர்வினை 'அசட்டு ' வரியும் அசட்டுத் துணிச்சலும் ஜெயகாந்தனின் சிறுகதைகள் பற்றிய என் கட்டுரை குறித்து வேதசகாயகுமார் எழுதிய கடிதத்தைப் படித்தேன். சிறிதும் கூச்சமோ தயக்கமோ அற்ற…

உரையாடும் கலை

கோமதி நடராஜன். மனிதனுக்கு அத்தியாவசியத் தேவைகளான உணவு உடை இருப்பிடம் பூர்த்தியடைந்த பின்,அவனது நான்காவது தேடல்,பணம்.பணம் கையில் வந்து, ஒரு அந்தஸ்தான இடம் பிடித்தபின்,கேளிக்கைகள்,பொழுதுபோக்கு அம்சங்கள் என்று, கலைகள் சம்பந்தப்பட்டவைகளாக வரிசையில் நிற்கும். கலைகள்…

வாரபலன் ஆகஸ்ட் 2, 2003 ( ஆர்ச்சர், பொது சிவில் சட்டம், விவரணப்படம், இடாகினிப் பேய்)

மத்தளராயன் தமிழ்நாட்டுத் தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளில் தமிழ் எழுத்தாளர் பெயர் வருவது உத்தேசமாக, இரண்டு சந்தர்ப்பங்களில் தான். ஒன்று சொல்லிக் கொள்ள ஏதுவாகக் கொஞ்சம் பெரிய விருது ஏதாவது கிடைத்தால். மற்றது அன்னாருக்கு நல்லூழ்…

வேர்களைத் தேடி…. பயணக் குறிப்புகள் -2

PS நரேந்திரன் விழுப்புரத்திலிருந்து கடலூர் போகும் வழியில், பெண்ணையாற்றுப் பாலத்தைக் கடக்கும் போது கண்ட காட்சி என்னைத் திடுக்கிட வைத்தது. தற்போது புதிதாகக் கட்டப் பட்டிருக்கும் பாலத்திலிருந்து சிறிது தொலைவில், இன்னும் நின்று கொண்டிருக்கும்…

கோவாவில் பொது சிவில் சட்டம்

தேவிதாஸ் குப்தா (அவுட்லுக்) அரசாங்க கொள்கையின் வழிநடத்தும் கோட்பாடுகள் (Directive Principles of State Policy)-இன் ஷரத்து 44 'அரசாங்கம் ஒரு பொது சிவில் சட்டத்தை இந்தியா முழுமைக்கும் வாழும் அனைத்து மக்களுக்கும் கொண்டுதர…

எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் குடும்ப நிதி அளித்தோர் பட்டியல்

தற்சமயப் பட்டியல் இதுவரை எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் குடும்ப நிதிக்கு உதவியளித்த கீழ்க்கண்ட அன்பர்களுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து உதவியளிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளவும்: Veli Rangarajan 1415 Second Street…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியல் மேதைகள் என்ரிகோ ஃபெர்மி (Enrico Fermi)

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி என்ரிகோ ஃபெர்மி அணுக்கரு இயற்பியலின் தந்தை எனப் போற்றப்படுபவர். இயற்பியலில் தொடர்வினைகளைப் (chain reactions) பற்றிக் கண்டுபிடித்ததனால் அவர் இவ்வாறு பாராட்டப்படுகிறார். இவர்…

காஸ்ஸினி விண்வெளிக் கப்பலின் புளுடோனிய வெப்பமின் கலனுக்கு எதிர்ப்புகள்! [Protest against Plutonium Powered Cassini Spaceship]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 'சூரிய மண்டலம் எப்போது தோன்றியது, உயிரினங்கள் எவ்விதம் உதயமாகின போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கும் ஓர் அபூர்வ வாய்ப்பை விஞ்ஞானிகளுக்கு அளிக்கப் போகிறது, காஸ்ஸினி விண்கப்பலின்…

இலக்கிய கட்டுரைகள்

சரிவின் சித்திரங்கள் (பாலச்சந்திரன் சுள்ளிக்காடுவின் சுயசரிதை நூல் அறிமுகம்)

பாவண்ணன் (சிதம்பர நினைவுகள்-மலையாள மூலம்: பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, தமிழாக்கம்: ஷைலஜா, காவ்யா வெளியீடு, 14, முதல் குறுக்குத் தெரு, டிரஸ்டுபுரம், கோடம்பாக்கம், சென்னை-24) மலையாள மொழியின் முக்கியக் கவிஞரான பாலச்சந்திரன் சுள்ளிக்காடு மிக இளம்…

சுஜாதாவின் ‘இரண்டாவது காதல் கதை ‘ – நாவல். ஒரு வாசகனின் குறிப்புகள்.

ரெ.கார்த்திகேசு அண்மையில்தான் சுஜாதாவின் 'இரண்டாவது காதல் கதை ' படித்து முடித்தேன். ஆனந்த விகடனில் தொடராக வந்து திருமகள் நிலைய வெளியீடாக 2002-இல் வெளிவந்தது. (அட்டையில் மட்டும் 'விசா ' என்று போட்டிருக்கிறார்கள். இரண்டும்…

கலைச்சொற்களைப்பற்றி

ஜெயமோகன் ரவி சீனிவாஸ் என் கட்டுரையைப்பற்றி எழுதியிருந்த எதிர்வினையை படித்தேன். அவர் பயன்படுத்தும் அபத்தம், அசட்டுத்தனம் போன்ற வார்த்தைகளை நானும் பயன்படுத்த முடியாதென்பதனால் பதிலளிப்பது சிரமமானது. ஆனால் அந்த கட்டுரைக்கு ஒரு பிரதிநிதித்துவ குணம்…

ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1

ஜெயமோகன் ஜெயகாந்தனைப் பற்றிப் பேசும் முன்பு அவர்மீதான விமரிசனங்களைப்பற்றிபேச வேண்டிய நிலையில் இருக்கிறோம். அவரது படைப்புகளை மர்மமழிப்பு செய்யுமுன்பு அவரது விமரிசகர்களை அதற்கு ஆளாக்கவேண்டியுள்ளது. நவீன இலக்கிய வாசகனைப் பொறுத்தவரை அவர் நவீனத்துவ அழகியலின்…

கதைகள்

உன்னால் முடியும் தம்பி

பொன்னி வளவன் பொழுது விடிவதற்க்கு இன்னும் அதிக நேரமில்லை என்பதை யார் வீட்டிலிருந்தோ கூவிய சேவலொன்று வெட்டிக்காடு கிராமத்திற்கு தெரியப்படுத்தியது. சேவலின் சத்தம் கேட்டு எழுந்து கொண்டார் மாணிக்கம். 'இதோ அணைந்து விடப்போகின்றேன் '…

ஃபீனிக்ஸ்

ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர். கடந்த சில நாட்களாய் மனம் ஒரு நிலையில் நில்லாமல் பேயாய் அலைந்தது. பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கையா என்று தான் சாதாரணமாக எல்லோரும் கேட்பர். ஆனால் பிரச்சனையே வாழ்க்கையாகிப் போன எனக்கும்…

விடியும்! நாவல் – (8)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் (8) செல்வம் குழம்பிப் போனான். அவசரத்துக்கு இப்படித்தான் சுருக்கமாக பக்ஸ் அடிப்பாள் சின்னம்மா. அவள் சிக்கனமானவள். அப்படியிருந்திராவிட்டால் அவனால் இந்த அளவிற்கு குடும்பத்தை கொண்டிழுத்திருக்க முடியாது. எப்போது பக்ஸ் கிடைத்தாலும்…

ஆண் விபசாரிகள்

ஜோதிர்லதா கிரிஜா 'விவாகமா, விபசாரமா ? ' என்கிற தலைப்பைப் பார்த்ததும், மீரா முதுகை நிமிர்த்திக் கொண்டு நேராக உட்கார்ந்தாள். அவளுக்குப் பிடித்த எழுத்தாளரின் புதிய கதை பற்றிய விளம்பரம் அது. அதை உடனே…

அம்மா இங்கே வா வா…

நாகரத்தினம் கிருஷ்ணா அவன் நடந்து கொண்டிருக்கிறான். கடந்த அரைமணி நேரமாக நடந்து கொண்டிருக்கிறான். இரவு பத்துமணிக்கு மேல் என்பதால் சாலைகள் கூடியவரை மெளனத்தைக் காத்தன. பகலெல்லாம் பனி பேய்ந்து அவற்றால் வேர்த்த சாலை. பனி…

அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினெட்டு

இரா முருகன் கூடம் எல்லாம் நனைந்து வெள்ளம் போல் தெப்பக்குளத் தண்ணீர். மீன் வாடையும், நாணல் வாடையும் பிணவாடையுமாக அது புஸ்தி மீசைக் கிழவனை தலையோடு பாதம் கழுவி பெருக்கெடுத்துப் போனது. ஒவ்வொரு பெண்ணும்…

கவிதைகள்

மான மிருந்தால், மங்கையரே!

ஜோதிர்லதா கிரிஜா 'மனைவியல்லா மற்ற பெண்கள் மாதாவென நினைக்கின்றோம் - ஆனதனால் அயல் பெண்கள் தமை நாங்கள் அம்மாவென் றழைக்கின்றோம் இது எங்கள் இனிய பண்பாடு - இதனைப் பொதுமறையாய்க் கொண்டதெம் நாடு! '…

பாதியில் ஒரு கவிதை

வேதா 'ஏன் பொறந்தா ? ' வளர்த்தெடுக்க மலைத்துநின்ற தந்தை! 'ஏன் வளர்ந்தா ? ' சீர் செய்ய சங்கடமாய் மாமன்! ' 'ஏன் இருக்கா ? ' இழந்துவிட்ட பொட்டின் ஒரே காரணமாய்,…

மகுடம் சரிந்தது

ராமலக்ஷ்மி மங்கையர் குலத்தின் மகாராணியாக தனக்குத் தானே மகுடம் சூட்டியிருந்தாள். மாப்பிள்ளை வீட்டு மகா ஜனங்கள்-திரு மண வீட்டில் கை நனைக்க வெள்ளிச் செம்பு கேட்ட போதுதான்- அரசிக்கு அவரது பொக்கிஷ அறையின் பொருளாதாரம்…

பணமில்லா அழகு பாழ்

அனந்த் o தளதள எனவுடல் தங்க நிறம்பெறத் தகதக எனஎழில் தேங்கி உரம்பெறத் திகழும் அவள்மதுக் கிண்ணம் - அவள் செவியில் தினம்விழும் வண்ணம் சளசள வெனஅவர் தெருவினில், திண்ணையில் 'கொடுபண மெதுமிலா ஏழைஇப்…

சுதந்திர தினம்.

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை. பாரதம் பார்த்த ரத்தம் தியாகிகள் பட்ட கஷ்டம் காந்தியம் செய்த யுத்தம் கடைசியில் வெற்றி பெற்றோம். ஊனமாய் இருந்த நாடு ஊமையாய் வாழ்ந்த மக்கள் கல்லாக இருந்த கடவுள் கடையில் வெற்றியின்…

ஊக்கமருந்து

சங்கன் ஒவ்வொரு முறை நிராகரிக்கப்படும் போதும் நினைத்துக் கொள்கிறேன்... அவர்கள் என்னை தவற விட்டதற்கு வருத்தப்படும்படி சாதித்துக் காட்ட வேண்டுமென்று... --------------------------------------- - சங்கன் Nov 17 2002 sangan@junglemate.com

புதிய பரிணாமம்

புஷ்பா கிரிஸ்டி அடர்ந்த புல்வெளித் தொடராய் புல்வெளி விலகிய இடைவெளியில் மண்வீதிப் பாதை பரிணாமிக்க அழைத்துச் செல்கிறது கால்கள் பயணத்தின் வேகம் கூடுகிறது மரங்களின் இலைகளினூடே ஒளிக்கற்றைகள் தெறிக்கின்றன. புத்தகங்களின் பக்கங்களாய் மரங்கள் மறைகின்றன.…

கடவுளே காதலா…

நெப்போலியன், சிங்கப்பூர் கடவுள் காதலிக்க முடிவு செய்தார் காதலிக்கு முதல் கடிதம் எழுத அமர்ந்தார் ஆதியானவளே... பாதியானவளே... அண்டமானவளே... கண்டமானவளே... என எழுதிய ஆரம்பமே அவளுக்குப் பொருந்தாது என்றுணர ஹாய்... டார்லிங்... ஸ்வீட்டி... டேஸ்ட்டி...…

கூந்தலை முன்புறம் போடாதே!..

கவிமாமணி மதிவண்ணன் வியர்த்த நெஞ்ச வெளிக்குள் ளேஒரு ..விசிறியைச் சுழற்றிய(து) உன்விழிகள்!-அடா, உயிர்த்தன ஆயிரம் கற்பனைகள்!-நீ ..உரைத்ததோ என்னிடம் சிலமொழிகள்! .. அரும்புகள் நொடிக்குள் அவிழ்ந்ததைப் போலவே-(உன்) ..அதரம் மீதிலோர் புன்சிரிப்பு! இரும்பை இளகிய…

பசிக்கட்டும்

மராத்தியக் கவிஞர் அருண் கொலட்கர் - தமிழில் - இரா.முருகன் நல்ல பசி எடுக்க என் என் வாழ்த்துகள் மெலிந்த அந்த செம்படவக் கிழவிக்கு. வயதால் மெலிந்து சுருக்கங்களின் வலையில் சிக்கிச் சின்னஞ் சிறியவளாக…

நகைச்சுவை

கொள்கை ஒன்றே கூட்டணி தான் வேறு வேறு

சொதப்பப்பா திமுக தலைவர் கருணாநிதி பாஜகவுடன் கூட்டு என்னும்போது: ஜாதி மதம் இனம் போன்ற மனமாச்சர்யங்களிலிருந்து விடுபட தந்தை பெரியார் காட்டிய வழியில், அண்ணா நீட்டிய விரலில் இருந்து தோன்றும் எங்கள் கொள்கை என்றைக்கும்…