உடலின் மொழியும் மொழியின் உடலும் – குட்டி ரேவதியின் கவிதைகள் குறித்து

This entry is part [part not set] of 46 in the series 20030822_Issue

எச் பீர்முகம்மது


தமிழ் இலக்கிய சூழலில் பெண்மையின் உக்கிரம் அதிகாித்து வருகிறது. காலம் காலமாக அடக்கி வைக்கப்பட்ட அவள் உடல் மீதான மறுவாசிப்பு தொடங்கியிருக்கிறது. பெண்ணின் உடலின் ஒவ்வொரு அங்கமுமே பு[னிதத்திற்குள்ளும்/ கற்பு கட்டுமானத்திற்குள்ளும் கொண்டு வரப்பட்டன. பெண்ணின் மார்பும் அதில் ஒன்று. ஆரம்பக்காலங்களில் வெறும் தாய்மை உறுப்பாக பார்க்கப்பட்ட அது காலப்பாிணாமத்தில் அடக்குதல் வடிவமாக்கப்பட்டது. அதன் புனிதம் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. இரண்டாவது முகம். முகத்தின் வசீகரம் மட்டுமே அடையாளப்படுத்தப்படுகிறது. பாதுகாத்தல் எல்லாமே மத அடையாளத்தின் கூறாக்கப்படுகிறது. பெண்ணின் உடலின் மீதான சுதந்திரமே முழுமையான அவளின் பெண்ணின் மீதான சுதந்திரம் எனலாம்.

குட்டி ரேவதியின் கவிதைகள் பெண்ணின் உடல் ாீதியான மறுவாசிப்பாகவே இருக்கிறது. மொழி பெண் உடலின் மீது வரைந்திருக்கும் அடையாள கோடுகள் மற்றும் அதன் வடிவங்கள்/ (அழகி/ எடுப்பு/ கருமை கண்கள்/ செவ்வாழை உதடுகள். ) பெண்ணை தனிமைப்படுத்துகின்றன. இதன் இடத்தில் மொழியின் செயல்பாடே உடலின் செயல்பாடாகிறது.

பெண்ணின் நிசப்தம் ஒரு குறியீடாக இருக்கிறது. சில சமயங்களில் செய்கையை குறிப்பிடுகிறது. நிசப்தம் அவள் மீது மட்டுமே குறியீடாக வைக்கப்படுகிறது.

அந்த பெண் மெளனத்தை சுமந்து கொண்டு என்னை திரும்பிப்

பார்த்தவாறே எப்பொழுதோ சென்று விட்டாள். கண்ணீராய் வழியத்துவங்கி விட்டது.

இருள் பூத்தபெய்தத் தயாரான உடலின் பரவசத்துடன் மிரட்சியுடன் காத்திருக்கிறேன்.

…………………………………………………………………………………….

மரமோ சாம்பல் பறவையைப் போல் அமர்ந்திருக்கிறது எச்சலனமின்றி

பெண்ணின் மார்பின் மீதான வறட்டு பார்வை நாகாீக காலகட்டத்தில் உருவானதாகும். பின்னர் அதுவே புனிதமாக்கப்பட்டது. இவற்றிற்கு மாறாக அவை வெறும் சுரப்பிகளே என்பது இக்கவிதை

முலைகள் சதுப்புநிலக் குமிழிகள் பருவத்தின் வரப்புகள்ில் மெல்ல அவை பொங்கி

மலர்வதை அதிசயித்து காத்தேன். எவரோடும் ஏதும் பேசாமல் என்னோடே எப்போதும்

பாடுகின்றன விம்மலை காதலை/ போதையை………………

…………………………………………………………………………………….

ஒரு நிறைவேறாத காதலில் துடைத்தகற்ற முடியாத

இரு கண்ணீர் துளிகளாய்த் தேங்கித் தளும்புகின்றன

பெண்ணின் வெளியேறாத வாசல் ஒவ்வொரு வெளியிலும் அவளை அடைக்க முயல்கின்றன. அடைப்பின் குரூரமும்/ அதன் வலியும் அவளுக்கான உடைமையாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வெளியேற முடியாத வாசல் அவளை சுற்றி வலம் வந்து கொண்டிருக்கிறது.

எப்படி வெளியேறுவது காற்றை போலவா அறையை கழுவிய நீரைப்போலவோ

அறைகள் நெற்கதிரென திமிர்ந்திருக்க

…………………………………………………………………………………….

அரங்கம் நிறைந்த கூட்டத்தில் மெளனம் சொல்லிக் கொள்வது

வெளியேறுவது போலவா மண முடியாத பெண்

தன் கற்ப்பத்துக்கு ரகசியமாய் வாசல் திறப்பது போலா>

திறக்கப்படாத வாசல்கள் இன்னும் எத்தையோ இருக்கின்றன. அவற்றின் திறப்பே உடனடி அவசியமானது. பெண்ணின் வயது குறித்தும்/ வயதான பெண் குறித்தும் நம் பார்வை வக்கிரமானதாக இருக்கின்றது. அவளின் வயதே படிநிலையாக்கலில் கொண்டு போய்விடுகிறது. கிழவிகளின் தேடுதல் எதையோ அடைவதற்கானது.

தொங்கும் முலைப்பைகளில் பலகாரங்களும் மிட்டாய்களும் சுமந்து பரத்தையின்

தீவிரத்துடன் தன் பேரன் திாியும் வீதிகளைத் தேடுகிறாள்

கிழவியின் உடலுக்குள் நீந்திய உடலில் பைத்தியத்தின்

குழப்பமற்ற கண்களுடன் தோன்றிய அவனோ ஏழு கடல்கள்

தாண்டி கூடு கட்டிய மந்திரகிளியின் உயிர் தேடி சென்றிருந்தான்.

சமூகம் ஏற்படுத்தி இருக்கிற உழைப்பு பிாிவினையானது பெண்ணை வீட்டின் மீதான சித்திரமாக மாற்றியமைத்திருக்கிறது. வீடு சார்ந்தே அவள் வடிவமைக்கப்படுகிறாள். இங்கு ஹவுஸ் – வைப் என்பதெல்லாம் மரபான வடிவம் தான். வீட்டின் வடிவம் சார்ந்து அவளின் அனுபவங்கள் கொடூரங்களின் சுவடுகளாக இருக்கின்றது.

நூறு ஆடுகளை மேயவிட்டு பொழுது கரைய குந்தியிருக்கும்

கிழவனின் மண்டைக்குள் கூடு கட்டிக் கொண்டிருக்கிறது வெட்டுண்ட மகனின் உயிரற்ற பார்வை

…………………………………………………………………………………….

படித்தாலும் எனக்கு அறிவே இல்லை என்றும்/ தனியாக பேசிக்கொண்டே

இருந்தால் கிறுக்கு என்றும் சொல்கின்றனர்.

மல நாற்றம் மாமிச நாற்றம் இரத்த நாற்றங்களுக்கு பழகி போன

கிறுக்கிகள் எப்போது பேசுவதை நிறுத்தும்

தற்கொலை செயல்பாடு இன்னும் பெண் மீதே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. உலகின் நிகழ்வுகள்/ அவதிகள் மற்றும் அதன் துயரங்கள் ஆகியவற்றிலிருந்து தப்பிக்க நிர்பந்திக்கப்படுகிறாள். தப்பித்தலின் வடிவமே தற்கொலை. தன்னை மாய்த்து கொள்வதன் மூலம் தனக்கான சுதந்திரம் என்பதாக அர்த்தப்படுத்தப்படுகிறது.

செவ்வனே முடிந்து விட்டது தற்கொலைக்கான ஏற்பாடுகளும் தற்கொலையும்

விழுங்க எளிதான மாத்திரைகளோ எடை தாங்கும் திடமான கயிறோ தேவையின்றி

……..

வலியின்றி உடலை அறுக்கும் கண்ணாடி பாளங்கள் போல் காமமும்

கனவுகளும் உடலை துண்டங்களாக்கியிருந்தன தற்கொலை தான்

உடலை செம்மைப்படுத்தியது.

குட்டி ரேவதியின் கவிதைகள் பெண்ணிய மொழியின் வெளிப்பாடு. உடலின் மீதான அதிகார தகர்ப்பே பெண்ணுக்கு சாியான தீர்வாகும். அந்த அதிகாரம் உறைந்துள்ள தளங்களை இனங்காணுவது இவாின் கவிதைகளில் காண முடிகிறது. உக்கிரமான மொழியின் மறுவாசிப்பும் மரபின் உடைவும்/ தப்பித்தலுக்கான மாற்று வழிகளை கண்டறிதலும் இவாின் கவிதைச் செயல்பாடு. ஒரு வகையில் இதனை எதிர்-உடல்மொழி கவிதைகள் என குறிப்பிடலாம்.

peer13@asean-mail.com

Series Navigation

எச். பீர் முகம்மது

எச். பீர் முகம்மது