வேத வனம் விருட்சம் -55

This entry is part [part not set] of 38 in the series 20091015_Issue

எஸ்ஸார்சி


அசுவினிகளே உங்கள் தேரிலே
மூன்று பீடம்
பொன்வடம் கொண்டு
இயங்கும் தேர் உமது

விண்ணுக்கும் மண்ணுக்கும்
அழகு தருவது
உமது தேர்
நீரே வானத்திலிருந்து
மழை நீர்க் கொணர்ந்திட
மநு நிலம் உழுதான்
அறுவடை ஆனது மண்ணில் ( ரிக் 8/22)

இந்திரா வருணர்களே
செடி கொடிகளும்
தண்ணீ£ரும்
அவுஷதங்கள்
ஆற்றலின் உறைவிடம்
ஆக பகையற்றோர் நீவிர்
யாம் சொல்வது மெய்

ஏழு குரல்கள் இணைந்து
இனிமை பிரவாகிக்கின்றது
நீரின் அதிபதி நீவிர்
துதிக்கும் எம்மைக்
காப்பது நும் கடன்

நீவிரே ஆதியில்
முனிகட்கு மனனம்
மொழி யொடு அறிதிறன்
சுருதி யின் சூக்குமம்
வேள்வி செய் இடங்கள்
அளித்தவை அறிந்தனம்

ஈகை நடத்துவோர்
மமதை தொலைத்து
மகிழ் மனம் பெறுக
செல்வமே கூட்டுக

எமக்கு வலிமை வளமை
மக்கட்பேறுடன்
நீண்ட ஆயுள் தாரும் ( ரிக் / 59-11)

அக்கினியே வருக
கவிஞன் நீ
சுத்திகரிப்போன் நீ
முனிபுங்கவன் நீ
முன்னோடி நீ
இன்பம் தருவோன் நீ
ஈந்து காப்போன் நீ
ஒளி வழங்கி நீ
வேள்வியில் திதிக்கப்படுவோன் நீ
திறமையோர் என்றும் போற்றும் நீ ( ரிக் 8/60 )

இந்திரனே நின் வீரச்செயல்கள்
பேசப்படுகின்றன
பகைவனின் பிறப்புருப்பை
வச்சிராயுதத்தால் துணித்தவன் நீ

தேவர்கள் வாக்தேவியைத்தந்தார்கள்
பசுக்கள் அவ் வாக்தேவியை
அம்மா வென்று அழைக்கின்றன
பசுக்கள் எம் பசி தீர்ப்பவை

விஷ்ணுவே என் பிரியனே
பரந்த நடை பயின்று வாரும்
விண்ணகமே மின்னலுக்கிங்குத்
தகு இடம் தாரும்
நீர் சிறைபிடிக்கும் விருத்திரனை ஒடுக்கி
நதிகளை விடுதலை செய்வோம்
செம்மையாய்ப்பாய்க அவை ப்பெருகியே ( ரிக் 8/100)

பசு ருத்திரர்களின் தாய்
வசுக்களின் செல்வி
ஆதித்யனின் சோதரி
அமிருதத்தின் நாபி
பாவமற்றதே பசு
அறிவுள்ளோர் பசுவை இம்சிக்காதீர் ( ரிக் 8/101 )

ஆரிய வளமைக்கு
ஆதாரம் அக்கினி
கடமை முடிப்போரைக்கண்டு
சனங்கள் அஞ்சுகிறார்கள்
ஆய்ந்திடில் ஆயிரம் அள்ளித்தரும்
அக்கினியை வழுத்துவோம். ( ரிக் 8/103)
————————————————————————————–

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி