மகள்…

This entry is part of 41 in the series 20050415_Issue

மோகனா. தி


நான் உன்னைப்
மடியில் தாங்குவதில்லை
மனதில் தாங்குகிறேன்.

உன் சிரிப்பில்,
என் கவலைகள்
புதைக்கிறேன்.

என் சந்தோஷம், துக்கம்
யாவும் உந்தன்
கைக்காட்டும் திசையில்.

அம்மா என்னும்
உன் ஒரு வார்த்தையில்
பிறக்கிறேன் மறுபடியும்.

உன் சிறு காயத்திற்கும்,
கலங்கி நிற்கிறேன்
சிறு குழந்தையாக.

உன் மழலையில்
என்னை மறக்கிறேன்.

உன் தோழிகள், எனக்கும் தோழியர்
நீ சொல்ல,
நான் ரசிக்கிறேன்.

இத்தனையும் செய்கிறேன்,
கனவில் மட்டும் –
மகளே, நீ மலடியின் மகளாய்
கற்பனை கருவறையில் பிரசவித்ததால்..

____

Series Navigation