மதிய உணவு

This entry is part of 46 in the series 20040701_Issue

வேதா மஹாலஷ்மி


பிறந்த நாள் விழாவில்
பிய்த்து பிய்த்து
பலகாரம் தின்னும் மாணவர் கூட்டம்…

பிழைப்புக்கே பிச்சையெடுக்கும்
அவலம் சொல்லி அங்கலாய்க்கும்
பேதை மகளிர்…

அக்கா, மாமா..
ஆனந்தத்தை கும்மியடிக்கும்
அடுத்து அமர்ந்த சக தோழி!

வேலை கிடைத்துவிடும்!!
உற்சாகத்தில்,
அங்கங்கே நம்பிக்கையாய்
சில நல்ல விழிகள்..

ஒவ்வொரு மதிய உணவு இடைவேளையிலும்…
ஏமாற்றம் மட்டுமே மிச்சமாய்,
ஏதோ கிடைத்ததை தின்றபடி
எதற்கோ ஏங்கிக்காத்திருக்கும்
ஏழையாய்…
ஒரு மூலையில்,
உனக்குப் பிடித்த நாயும், நானும்!!—-
piraati@hotmail.com

Series Navigation