பூ வண்ணம்

This entry is part of 47 in the series 20040304_Issue

வேதா மஹாலஷ்மி


‘சட் ‘டெனத் தெரிகிறாய்..
சடுதியில் மறைகிறாய்!

வண்ணங்களாய்,
வசந்தம் வாரித் தெளுக்கிறாய்!

மலர்ந்து ரசிக்க,
கலவியை நிமிடத்தில் கலைக்கிறாய்!

காணாமல் எத்தனிக்க,
கவிதையாய்… இருந்து கலக்கிறாய்!

அழகைக் காட்டி
கொஞ்சம் அலைய வைக்கிறாய்!

தொடர்ந்து அழைத்தென்னை
தொலைய வைக்கிறாய்!

தொட்டுப் பேசி,
பெண்மை மென்மை நிறைக்கிறாய்!

விட்டுப் பிரிந்து,
சின்னதாய் விளையாட்டுக் காட்டுகிறாய்!

விடாமல் தொடர்ந்து,
மனதின் மகரந்தம் மாற்றுகிறாய்!

என் உயிர்த்தேன் உண்டு,
உன் உள்ளமெல்லாம் நிறைக்கிறாய்!

இதழின் ஓரமாய்,
இதைப்போல் ஈரத்தில் இளைப்பாறி,
வசந்த காலத்தை வருவித்துப் பார்த்திருக்க..
நீயென்ன… வண்ணத்துப்பூச்சியா ?!

veda
piraati@hotmail.com

Series Navigation