குப்பைத்தொட்டி கவிதைகள்

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue

மீ.வசந்த்,டென்மார்க்


—————————-

எனக்கேனோ
அச்சுக்கு வந்த
கவிதைகளை விட,
அதிகமாய் பிடிக்கும்
குப்பைத்தொட்டி கவிதைகள்!! ?.

கண்கள் மூடி
மெளனமாய் இருக்க,
உள்ளுக்குள் ரத்தம்
வேகமாய் கொதிக்க,
சின்ன சின்ன வி ‘யங்கள்,
அத்தனையும் எழுத
மனதுக்கு பிடிக்கும்.
உள்ளதை சொல்ல
சமூகம் எதிர்க்கும்.
மீறி வரும் வார்த்தைகளை
இலக்கணம் தடுக்கும்.

முதலும் கடைசியுமாய்,
மங்கிய வெளிச்சத்தில்,
மனமிளக்கிய இசைக்கு,
அசிங்கமாய் நடனமாடிய,
அமெரிக்க பெண்னுக்கு,
அறுபது டாலர் கொடுத்ததை
அப்பட்டமாய் சொன்னால்,
அயோக்யனாய் தெரியலாம்!.

அன்றிரவு உறங்காமல்
ஏன் குடித்தாய் ? ? ?
எதற்காய் கொடுத்தாய் ? ? ?,
என்றென்னை கொன்ற
மனச்சாட்சி காண்பித்தால்,
காந்திக்கு தம்பியாய்
நடிப்பதாய் நம்பலாம்!.

இயற்கை ரசிக்க,
அறிவியல் வளர்க்க,
ஆழமாய் சிந்தித்து
அவசரமாய் முடிவெடுக்க,
எனக்கு வேண்டும்
தனிமையெனச் சொன்னால்,
?ார்மோன்கள் குறைவென்று
உலகம் என்னை
ஏளனம் செய்யலாம்!.

நித்தம் சிம்ரன்
கனவில் வருவதை,
ெfனிபர் லோப ?
அழகை ரசிப்பதை,
…………… ?
அத்தனையும் மறைக்காமல்
பகிரங்கமாய் அறிவித்தால்,
அயோக்யன் என்ற
முத்திரை குத்தலாம்.

ஆணினம் முழுவதையும்
வெறுத்திகழும் பெண்களை,
?முராபி முறையில்
கடுமையாய் கண்டித்தால்,
இவனும்
அரக்கன் தான்,
குற்றமுள்ள நெஞசு
குமுறுகிறது எனலாம்!.

பெண்கள் பாவமென்று
கண்ணீரை சிந்தினால்,
பேருந்தில் எழுந்து
உட்கார இடம் தந்தால்,
பித்தன்….எப்படி
அலைகிறான் பார் எனலாம்!.

து ?டரை கண்டு
தூர ஓடினால்,
படித்தவன் என்பதால்
பயப்படுகிறான் எனலாம்!.

மோதி மிதித்து
மூர்க்கனாய் நின்றால்,
டார்வின் தியரிக்கு
உதாரணம் சொல்லலாம்!.

பேச்சுக்கு பயந்து
பெயர்கள் மாற்றி…,
முகங்கள் மாற்றி…,
எழுதுவதில் விருப்பமில்லை.

எதிர்மறை விமர்சனங்கள்
வந்தால் வரட்டுமென்று..,
எதிர்கொள்ளும் கவிஞனாய்,
பக்குவப்படவும் பழகவில்லை.

இளரத்தம் சுடுமென்ற
இயற்கைவிதி பொய்யாக்கி…,
சரியென்று தலையாட்டி
பல்லிளிக்கவும் முடியவில்லை.

இதனால்தான் என்னவோ!,
அச்சுக்கு வந்த
கவிதைகளை விட,
அதிகமாய் பிடிக்கும்,
எழுதி முடித்து
கிழித்து எறிந்த…
குப்பைத்தொட்டி கவிதைகள்.
செத்துப்போன என்
கருத்துச் சுதந்திரங்கள்.
————————————————-
MSV001@MAERSKCREW.COM

Series Navigation

மீ.வசந்த்,டென்மார்க்

மீ.வசந்த்,டென்மார்க்