This entry is in the series 20040101_Issue

அருண்பிரசாத்.


தனிமையழகுடன் வரவேற்கிறது
கடைக்கோடி பயணியர் இருக்கை
இரயில் நிறுத்தத்தில்.

பொய்யான உன் நேர்கோட்டு
நடையுடன்
சிலநொடி தாண்டி பக்கவாட்டில்
திரும்பி போலியாய் அதிசயித்து
பின் அருகமரும்
உன் வேடிக்கைகளைத் தாங்கியபடி.

இரயிலுக்கும் இருக்கைக்குமாய்,
அடுத்தது என ஒவ்வொரு முறையும்.

நினைவுறுத்தும் இந்த இடைவேளைகள்
நான் இசைத்த பாடல்களுடன்
இரயிலோசையையும் மீறி
நீ இழைந்த மாலைகளை.

everminnal@yahoo.com

Series Navigation