நினைவினிலே நிறைந்தவள்

This entry is part of 41 in the series 20030904_Issue

சத்தி சக்திதாசன்


இதயத்தின் இரத்தநாளங்கள் அனைத்தும்
இரைக்கும் மொழியெல்லாம் அவள் பெயர்தான்
இன்பத்தின் வரைவிலக்கணம் நிச்சயமாய் என்றும்
இளயவளின் எண்ணங்களின் சிறகடிப்புத்தான்
அன்பின் உச்ச கட்டம் வாழ்வினிலே என்றும்
அழகி அவள் மீது கொண்ட காதல் தான்
அதிசயத்தின் பிறப்பிடமே தேன்குழலி அவளின்
அம்புமழை பொழியும் பார்வைக்கணைதான்
இமயத்தின் உச்சியிலே கொடியேற்றியவன் உணர்வு
இதயத்தில் அவள் இடம் கொடுத்த அன்றே அடைந்தேன் நான்
சங்கீதத்தின் இனிமை என்று ஒன்று இல்லை என
சத்தியமாய் நானுணர்ந்தேன் அவள் மொழி கேட்டுத் தான்
நினைவெல்லாம் நிறைந்து விட்ட அக்கன்னி ஏனோ
நித்தியமும் என்னைச் சிறையிலிட்டாள் தான்
பத்திரமாய் அவள் நினைவை என்நெஞ்சில் பூட்டியே
பலநாளாய் பாதுகாத்து வைத்திட்டேன் நான்
பிறப்பிங்கே ஏழென்று சொல்வார்கள் இங்கே என்னுடனே
பிரியாமல் அவளிருப்பாள் எழுமுறையும் தானே

sathnel.sakthithasan@bt.com

Series Navigation