சிகரட்டில் புகை

This entry is part of 46 in the series 20030822_Issue

புஷ்பா கிறிஸ்ரி


புகையும் சிகரட்டிலே
புதிதாய்த் தோன்றும்
புதிய புகையும்
(தார், நிக்கோடின், காபன் மோனொக்சைட்)
யாவும் கெடுதல் தரும்
பரவும் புற்று நோயும்
நுரையீரல், சிறுநீர்ப்பை,
தொண்டை, தோல், கருப்பை,
மார்பு, வாய், உணவுக்குழல்…என்றே தொடரும்..
பார்த்துப் புகையில் பழுதாகும்
உடற் பாகங்கள் பாங்காக..
இரத்த அழுத்தம் அதிகரித்தே
இறக்கும் நிலைக்கும் அரங்கேறும்
போதையூட்டும் நல்ல புல்லாங்குழல்
புகை ஏற்றித் தரும் புகைக் குழல்
வெள்ளை நிறத்து சமாதானக்குழல் – உயிர்க்
கொள்ளை செய்திடும் மரணத்து அனல்
மானிடப் பிறப்பில் வரவாகி
ஜீவனில் இழப்பில் செலவாகிடும்
கணக்கு…

pushpa_christy@yahoo.com

Series Navigation