நீ வருவாய் என..

This entry is part of 37 in the series 20030104_Issue

வேதா


உன் தரிசனம் தேடி
துவண்டு போனதோ,
சின்னஞ்சிறு அலையும் ?

உன்னைக் காணாமல்
இங்கேயும் அங்கேயும் அலையும்
நண்டுகளின் பரபரப்பு!!

அதோ, மேகத்தின் மேனியில்
மறைந்தபடி மஞ்சள் நிலா!
ஒருவேளை,
நீ வரக்கூடுமோ ?
எட்டி எட்டிப் பார்த்ததாலேயே
ஒரு பக்கமாய் தேய்ந்தபடி!

எங்கோ புள்ளியாய்
தெரியும் ஓடத்தின் பயணம்,
உன் அன்பைத் தேடித்
தத்தளிக்கும் என்னைப் போலவே!

உன் பாதங்களுக்காய்
பார்த்திருந்த புல்வெளுகள்,
உன் கால் தடத்தை
இன்னமும் கலைக்காத
கடற்கரை மணல்…
இயற்கையே காத்திருக்க,

நான் என்ன விதிவிலக்கு ?

நீ இல்லாத காற்று வந்து
என் இரவைக் கிழிக்கிறது!

நாளைக்காவது ஏதேனும்
நடக்கக் கூடும்!
இன்று மட்டும் வாழ்ந்திருக்க,
உன் நினைவுக் கடலில்
நானும் மெல்ல இறங்கி
நடக்க ஆரம்பித்தேன்…
tamilmano@rediffmail.com

Series Navigation