எழுத்தாளர் கோபிகிருஷ்ணனை நினைவு கூர்வோம்

This entry is part of 26 in the series 20050722_Issue

லதா ராமகிருஷ்ணன்


எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் மறைந்து இரண்டு வருடங்களாகின்றன, ஒவ்வாத உணர்வுகள். முடியாத சமன். உணர்வுகள் உறங்குவதில்லை. மானுட வாழ்வு தரும் ஆனந்தம். தூயோன். இடாகினிப் பேய்களும் – நடைப்பிணங்களும். சில உதிரி இடைத்தரகர்களும் முதலான சிறுகதைத் தொகுதிகள் (இதில் உணர்வுகள் உறங்குவதில்லை – குறுநாவல் தொகுதி). உள்ளேயிருந்து சில குரல்கள். என்ற நாவல் மற்றும் பல கட்டுரைகளும். மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் எழுதியிருக்கும் திரு, கோபிகிருஷ்ணன் பல்வேறு சமூக நல நிறுவனங்களில் பணியாற்றியவர், அவற்றின் வழி எளிய மக்களுக்கு உதவிகள் கிடைப்பதில் எத்தனை இடர்ப்பாடுகள் இருக்கின்றன என்பதை அனுபவ ரிதியாகத் தெரிந்து கொண்டவர், அவர் படைப்புலகின் பிரதான இரண்டு கருப்பொருட்களாக சமூக நல நிறுவனங்களில் நிலவி வரும் பாசாங்குகளும். சீர்கேடுகளும். மற்றும் உளவியல் மருத்துவத் துறையில் நிலவி வரும் குறைபாடுகளும். மனித விரோத அணுகுமுறைகளும் தொடர்ந்து இயங்கி வருகின்றன,

எனவே இந்த வருடம் ஜீன் முதல் வாரத்தில் சென்னையில் நடந்தேறிய எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நினைவு நாள் கூட்டத்தில் ஏறத்தாழ 30 வருடங்களாக. ளுpநஉயைட ஊhடைனசநn எனப்படும் மூளைவளர்ச்சியற்ற குழந்தைகளின் நலனுக்குப் பணியாற்றி வரும் திரு, ஜலாலுதீன் அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவருக்கு ஒரு எளிய நினைவுப் பரிசு வழங்கப்பட்டது, ஹோமியோபதி மருத்துவம் தெரிந்த திரு, ஜலாலுதீன் அதைக் கொண்டு ஏழை எளிய மனிதர்களுக்கு உதவி வருகிறார், வசந்தம். Pathway போன்ற பல அமைப்புகள் உருவாகக் காரணமானவர் இவர், அந்த அமைப்புகளைச் சேர்ந்த பலரும். மற்றும் திரு, ஜலாலுதீன் உதவியில் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையில் மலர்ச்சி ஏற்பட்டிருப்பதை கண் கூடாகப் பார்க்கும் பெற்றேhர்கள் பலரும் கூட்டத்திற்குத் திரளாக வந்திருந்தார்கள், அவர்களில் சிலர் திரு, ஜலாலுதீன் விளம்பரமின்றி இத்தனை வருடங்கள் செய்து வரும் சீரிய சேவையைப் பற்றி மனம் நெகிழப் பேசினார்கள், தமிழின் குறிப்பிடத் தக்க மொழி பெயர்ப்பாளர்களில் ஒருவரும். பல சமூக நல இயக்கங்களில் முனைப்புடன் பங்கெடுத்து வருபவருமான அமரந்த்தா ஜலாலுதீனை அறிமுகப்படுத்தி உரையாற்றினார்,

கடந்த பதினைந்து வருடங்களாக கூத்துப் பட்டறைக் கலைஞராகவும். வீதி நாடகக் கலைஞராகவும் இயங்கி வரும் திரு, ஜெயராவ் கோபிகிருஷ்ணனின் ‘முடியாத சமன்’ என்ற சிறுகதையை மேடையில் உணர்ச்சிகரமாக நடித்தார், நாடகத்தை குறுகிய காலத்தில் திறம்பட இயக்கியிருந்தவர் வெளி ரங்கராஜன், எழுத்து வடிவிலான ஒரு படைப்பு நாடக வடிவம் ஏற்கும் போது அதன் வாசக வட்டம் பன்மடங்காக விரிவடைகிறது என்பதை அன்று உணர முடிந்தது, கோபிகிருஷ்ணன் எழுதிய ‘சமூகப் பணி. அ – சமூகப்பணி. எதிர் – சமூகப் பணி’ என்ற சமூகப் பணியாளர்களின் கையேடாகக் கொள்ளத்தக்க’. சிறு நூலின் ஆங்கில வடிவம் அன்று எழுத்தாளர் மா,அரங்கநாதன் அவர்களால் வெளியிடப்பட்டது, அந்த மூல நூலை அவர் தலைமையில் இயங்கி வந்த மூன்றில் பதிப்பகம் தான் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது,

எளிய மனிதர்களையே தன் கதைமாந்தர்களாகக் கொண்டு. தோழமை மிக்க மனிதராக வாழ்ந்து மறைந்த எழுத்தாளர் கோபிகிருஷ்ணனுடைய நினைவு நாள் கூட்டத்திற்கு வாசகர்களும். சக எழுத்தாளர்களும் திரளாக வந்திருந்தனர்,

Series Navigation