தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கலந்துரையாடல்

This entry is part [part not set] of 33 in the series 20030317_Issue

ம. நடேசன்


20/2/ 2003 அன்று சூளேசுவரன்பட்டி, தாய்த் தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஒருநாள் நிகழ்வாக முதுநிலை விரிவுரையாளர் ம. நடேசன் அவர்களால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திலுள்ள 20 பள்ளிகளின்

(சிங்காநல்லூர், குஞ்சிபாளையம், ஊஞ்சவேலாம்பட்டி, எசு.சந்திராபுரம், மாக்கினாம்பட்டி, நம்பியமுத்தூர், கோலார்பட்டி, கே. நாகூர், சமத்தூர் கிழக்கு மற்றும் மேற்கு, ரங்கசமுத்திரம், சூளேசுவரன்பட்டி, பொள்ளாச்சியிலுள்ள மரப்பேட்டை, டி.ஈ.எல்.சி, குப்பாண்டக் கவுண்டர்பள்ளி, பாலகோபாலபுரம் பள்ளி, புனிது லூர்தன்னை பள்ளி, பாரதிகலாநிலையம், கோட்டூர் வழிப் பள்ளி, செம்பாக் கவுண்டர் காலனி பள்ளி) தொடக்கப் பள்ளி மாணவர்கள் அறிவியல் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டனர்.

ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை வகுப்பிற்கு 2 பேர் வீதம் ஒரு பள்ளிக்குப் பத்து மாணவர்கள் அழைக்கப் பட்டனர். பழனியிலுள்ள தவத்திரு சாதுசாமிகள் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, பல்லடத்திலுள்ள தாய்த் தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, சூளேசுவரன்பட்டி தாய்த் தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி யிலும்

மாணவர்களும் அழைக்கப்பட்டனர்.

கலந்து கொண்ட ஒவ்வொரு பள்ளியின் ஆசிரியர்களும், கொடுக்கப்பட்ட தலைப்புகளுக்கு ஏற்றவாறு கற்பித்தல் கருவிகளைச் செய்துகொண்டு வந்து கண்காட்சியில் வைத்தனர், கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு பொருளும் மாணவர்கள் தாங்களாகவே செய்து பார்த்து, கருத்துணர்ந்து உள்வாங்கிக் கொள்வதற்கு ஏற்றவகையில் வடிவமைக்கப் பட்டிருந்தது. ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரையுள்ள மாணவர்கள் தாங்கள் கண்டவற்றை குறிப்பேட்டில் எழுதிப் பதிவு செய்தனா. மாணவர்கள் தடுமாறிய பொழுது ஆசிரியர்கள் கருத்துரைத்து உதவி செய்தனா.

கோவைமாவட்ட அறிவியல் கழகம் பத்தின் மடங்கு என்கிற குறுந்தகடு ஒளிஒலிக்காட்சி நடத்தியது. மேலும்

திருப்பூர் விஜயகுமாா தந்திரக் காட்சிகளை நிகழ்த்தி அதற்கான அறிவியல் விளக்கத்தையும் தந்தார்.

கோவை மாவட்ட ஆசிரியர் பயிற்சிக் கல்வி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் சு. நடராசன், விரிவுரையாளர் பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டனா. கோவைமாவட்ட அறிவியல் கழகத்தின் சாாபில் ரமேஷன் அவர்கள் தனது குழுவினர்களோடு கலந்து கொண்டார். மாலை நிகழ்வில் மாணவர்களது கலைநிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

கோவை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திருமிகு சண்முகவடிவேல் அவர்களும், பொள்ளாச்சி தெற்கு, பொள்ளாச்சி வடக்கு, பேரூர் ஒன்றிய உதவித் தொடக்க மற்றும் கூடுதல் உதவித் தொடக்க அலுவலர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரைத்தனர். பொள்ளாச்சி நகராட்சித் தலைவர் திருமிகு வெங்கடாசலம் அவர்களும் கலந்து கொண்டார். பகுத்தறிவாளர் கழக பொ.வ.ராதாவும் கலந்து கொண்டார்

செய்து பார், கண்டுபிடி என்கிற செல்லுமிடமெல்லாம் மாணவர்களை அழைத்துப் பேசுசிற வளர்தெடுக்க விரும்புகிற முதல்குடிமகன் திருமிகு அப்துல் கலாம் அவர்களது கருத்தையொட்டி 1 முதல் 5 வகுப்பு வரையுள்ள தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் அடித்தளம் இக்கலந்துரையாடலின்வழி வித்திட்டப் பட்டது.

அன்புடன் ம. நடேசன், 1, சம்பத்நகர், சூளேசுவரன்பட்டி, பொள்ளாச்சி 6 642 006

vijaygct@yahoo.com

Series Navigation

ம. நடேசன்

ம. நடேசன்