மூன்று கனேடியக் கவிதைகள் (கோடைப்பல்லி, பனி உறைந்த ஆற்றின் மீது நடத்தல், முதல்)

This entry is part [part not set] of 23 in the series 20010902_Issue

தமிழில்: வ.ந.கிாிதரன்


கோடைப் பல்லி

ரேய்மன் சொஸ்டர் (Raymond Souster)

வெம்மை

கிளைவிட்டுப் பரந்து கிடக்கும் நாக்கு.

இந்தக்

கோடைப் பல்லி

எம்முடலின்

ஒவ்வொரு அங்குலத்தையும்

ஏறக்குறைய காதலுடன்

நக்கும்.

********

பனி உறைந்த ஆற்றின் மீது நடத்தல்

ரேய்மன் சொஸ்டர் (Raymond Souster)

எனக்கும்

கண்ணிற்குப் புலப்படாத

இந்த தண்ணீாின் ‘சளசள ‘ப்பிற்குமிடையில்

ஆறு அங்குல பனிக்கட்டி இடைவெளி.

நான் இன்னும்

மிகவும் அவதானத்துடன்

குற்றம் சாட்டும்

பயத்துடன் கூடிய

குதிகளுடன்

நடக்கின்றேன்.

ஆறு அங்குலத்திற்கும்

கீழ்

இந்த ஆறும்

என்னைப் போல்

தனது உறைந்துவிட்ட

பெருமைகளை

மீறாமாலிருப்பதில்

இரகசியமெதுவுமில்லை.

******

முதல்

மூலம்: மார்கரெட் அவிசன் (Margaret Avision)

மிகவும் அதிகமான ஆனந்தம்

இந்த முப்பாிமாண,பாிதியற்ற

வட்டத்தை

கடந்தகாலமும்

பச்சாதாபமும்

அதனைச் சுற்றி

எல்லையாக

விாிந்திருக்காவிடின்

அதன் உயர்ச்சியான

உண்மையிலிருந்து

வெளியே

இழுத்து வந்துவிடும்.

கடவுளின்

கணக்கில்

நூறிற்கும் மேலும்

சதவீதமுண்டு.

அவருடைய

புதியபடைப்பு

முழுமையானது.

ஒன்றானது.

ஆரம்பம் மிக்கது.

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்