ஸ்ரீபன்
இந்த நெடிய நீண்ட இருள்
ஏனக்கு பழகிப்போய்விட்டது
வுhழ்தலின் அர்த்தம் புரியாவிட்டாலும்
உயிர் வாழ்தலின்மேல் உள்ள சிறிய பற்று
ஏன்னையும் பதுங்கு குளிக்குள் தள்ளிவிட்டது
மரண ஓலங்களும்
மனிதரின் இழப்பும் கூட
எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை
இப்போதெல்லாம்
தீர்ப்பு மரணமென எழுதியபின்
எதற்காகத் தாமதிக்கிறீர்கள்
தினம் தினம் மெல்ல மெல்ல
கொல்லவேண்டாமே
கொடிய சர்ப்பமொன்று
வானத்திலிருந்து
தனது தீ நாக்கால்
எனது பிரதேசமெல்லாம்
வாரிப்போகும் அந்த நாளுக்காய்
காத்திருக்கத்தொடங்கிவிட்டேன்
மரணதண்டனைக்கு முன்
ஒரு முறை கேட்பார்களாம்
கடைசி ஆசை என்னவென்று
அது நான் மீண்டும் பிறந்தால்
என் வயதுக்குரிய என் வாழ்க்கையை
தந்துவிடுங்கள்
எப்போதும் சிரித்த முகம்கொண்ட
மனிதர்களிடையே
மரணபயமற்ற தெருக்களினுடாக
குதூகலமாய் ஓடவேண்டும்
சாப்பிட இருந்தும் மறுக்கும் குழந்தை
நிலாச் சோறூட்டும் அம்மா
பறவைகள் மட்டுமே பறக்கின்ற வானம்
திருவிழா காலத்துக்கு மட்டும் வெடிச்சத்தம்
எல்லைகளற்று பறந்துNபுhகும் வானம்பாடி போல
பாடசாலைவிட்டு பாய்ந்து போகும் சிறிய மனிதர்கள்
பயமென்ற வார்த்தையும்
பசியென்ற வார்த்தையும்
கேட்காத பூமியில் நான் பிறக்கவேண்டும்
மீண்டும் தமிழனாய்
நிலாவைப் பிடிப்பதோ முகில்களுக்குள் பறப்பதோ
வானவில்லில் கலந்து கரைந்து போவதோ
எனது ஆசை இல்லை
சாதாரண வாழ்க்கைகூட கனவுதான் எனக்கு
கொடிய சர்ப்பத்துக்காய்
காத்திருக்கத் தொடங்குகிறேன்
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! பூகோளத்தின் நுண்ணிய ஈர்ப்பியல் தளப்படம் வரையும் ஈசாவின் விண்ணுளவி
- வார்த்தை மார்ச் 2009 இதழில்
- டாக்டர் அண்ணா பரிமளம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள்
- 2004ல் சிவகாமி சிங்கை வந்தபோது
- வரலாற்றில் பெண்கள்
- மீண்டும் ஒருமுறை
- ஷாஜகானும் மும்தாஜும் காமெடியும்
- தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதவுவோம்: (எந்தத் தேர்தலாயிருந்தால் என்ன?)
- சங்கச் சுரங்கம் – 6 : பொருநர் ஆற்றுப்படை
- சை.பீர்முகம்மது அவர்களின் பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் சிறுகதை நூல் வெளியீடு
- ரமேஷ் பிரேம் இணைந்து வெளியிட்டிருக்கும் “உப்பு” கவிதைத் தொகுப்பு
- நான் கடவுள் – உலகப் பார்வையில்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -28 << உன்னைப் புண்படுத்தினேன் ! >>
- கடவுளின் பசி/பகட்டு நாகரிகமும் சன்னாசி கிழவனும்
- ஒரு கார்ட்டூன் சித்திரக்காரனின் திட்டமிட்ட மரணம்
- நீளும் விரல்கள்…
- நிமிடக்கதைகள்
- கலில் கிப்ரான் கவிதைகள் << அலைகளின் கீதங்கள் >> கவிதை -3 (பாகம் -2)
- வேத வனம் விருட்சம் 28
- அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 5- ஆ. இரா. வேங்கடாசலபதி
- பாரதி மணி என்னும் பன்முக ஆளுமை
- ஆத்ம சக்தி ஓங்க வேண்டும்!!
- தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள் – (2)
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தேழு
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865)காட்சி -5 பாகம் -1
- பிங்கி
- வெளிச்சம்
- எதிர்கொள்ளுதல்