புணரி

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

நெப்போலியன்


முடிந்தபின்
படுக்கையில்
விழித்துக் கிடந்தன
நம் தலையணைகள்.

வெண்மேல் விரிப்புகளிள்
என் நீள் கூந்தல்
ஒற்றைகள்
இன்னமும்
ஒட்டிக் கிடந்தன
உன்னை என்னுள்
உதிர்த்தபடி.

உதட்டுச்சாயமோ
உச்சிக் குங்குமமோ
போர்வையின் ஓரத்தில்
நாம்
கரைந்த கணங்களை
கதைத்தபடி.

இங்கே
வருபவர்களுக்கு
வாசனையாகிக்
கருகும்
எந்தன் தருணம்
உன் நுகர்தல்களில்
மட்டுமே
உயிர் பொங்கும்.

சதைகளின்
அனிச்சையால்
சரிந்த
என் தேகம்
உன் கூடலால்
மட்டுமே
குணப்படும்.

இயந்திர
விசைகளால்
இற்றுப்போன
நான்
இயல்பாய்
அடங்குவது
உன்
இயக்கத்தில்தான்.

வா
நான்
சலிக்கும்வரை வா
சலித்தபின்பும் வா
சாகும்வரை
என்னைச் சலிக்க….
—- நெப்போலியன் சிங்கப்பூர்
—-
kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation

நெப்போலியன்

நெப்போலியன்